Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப் பிரச்சினையில் காங்கிரஸ் நிலைப்பாட்டை இனியும் மவுனமாகப் பார்க்க முடியாது! – டெசோ

Featured Replies

ஈழப் பிரச்சினையில் காங்கிரஸ் நிலைப்பாட்டை இனியும் மவுனமாகப் பார்க்க முடியாது! – டெசோ

— 


 

teso-delhi-300x171.png

 

09/03/2013 at 5:42 pm

 

ஈழப் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியும் இந்திய அரசும் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்து வருவது கவலை தருவதாக உள்ளது என்றும் காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய அரசின் இப்போக்கினைத் தொடர்ந்து மவுனமாக பார்த்துக் கொண்டிருக்க இயலாத நிலை நெருங்கிக் கொண்டுள்ளது என்றும் தமிழீழ விடுதலை ஆதரவு அமைப்பான “டெசோ” தெரிவித்துள்ளது.

டெசோ அமைப்பு சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு:

டெல்லி கருத்தரங்கு பின்னடைவு அல்ல

7.3.2013 அன்று புதுதில்லியில் நடைபெற்ற டெசோ கருத்தரங்கிற்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகச் சில ஊடகங்கள் திட்டமிட்டு எழுதி வருகின்றன. நாம் முன்வைத்த எந்தக் கோரிக்கையிலிருந்தும் பின்வாங்காத வரை நமக்கு எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை. நாம் பல்வேறு கட்சிகளை அக்கருத்தரங்கிற்கு அழைத்திருந்தோம். இந்திய தேசிய காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் கருத்தரங்கில் பங்கேற்றன. இவர்கள் அனைவரும் சென்னையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 12ஆம் நாள் நடைபெற்ற டெசோ மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதுதில்லி கருத்தரங்கில் சர்வதேச பொதுமன்னிப்பு அவையின் இந்தியச் சார்பாளர் அனந்தபத்மநாபன் கலந்து கொண்டார். கூடுதலாக மனித உரிமை ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் அவர்களும் கலந்து கொண்டு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உரையாற்றினார். உண்மை இவ்வாறிருக்க டெசோ கருத்தரங்கத்திற்குப் பின்னடைவு என்பது எவ்விதத்தில் பொருந்தும்?

காங்கிரஸ், இந்திய அரசு வெவ்வேறு நிலை

எனினும் காங்கிரஸ் கட்சியும் இந்திய அரசும் ஒவ்வொரு நாளும் ஈழப் பிரச்சனையில் வெவ்வேறு மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்து வருவது கவலை தருவதாக உள்ளது. 7.3.2013 அன்று மக்களவையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர், ஐ.நா. அவையில் வரவிருக்கும் அமெரிக்க தீர்மானம் குறித்து உறுதியாகவும் தெளிவாகவும் யாதொன்றும் கூறவில்லை. இதனை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தைத் தொடர்ந்து பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் வெளிநடப்பு செய்தன. ஆனால் அன்று மாலை டெசோ கருத்தரங்கில் கலந்து கொண்ட இந்திய தேசிய காங்கிரஸின் பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத், அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்போம் என்பதாக உரையாற்றினார். ஆனால் 8-3-2013 அன்று மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைமீது நன்றி தெரிவித்து உரையாற்றிய, இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் எந்த உறுதியும் வழங்காமல், தமிழ்ஈழத் தலைவர்களோடு சிறீலங்கா அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

பொறுக்க இயலாத நிலை நெருங்குகிறது

காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய அரசின் இப்போக்கினைத் தொடர்ந்து மவுனமாக பார்த்துக் கொண்டிருக்க இயலாத நிலை நெருங்கிக் கொண்டுள்ளது. எக்காரணம் கொண்டும் டெசோ தன் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காது என்பதையும் இத்தருணத்தில் வெளிப்படுத்துகின்றோம். எனவே இந்திய அரசுக்கு மேலும் அழுத்தம் தர பொது வேலை நிறுத்தம் வருகிற 12-ம் நாள் நடைபெற்றே தீரும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.அவ்வேளை நிறுத்தத்திற்கு ஒட்டுமொத்தத் தமிழினமும் ஆதரவு தர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அன்போடு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

http://tamilleader.com/?p=7314

Edited by மல்லையூரான்

திமுக பேசாமல் இருந்தால் என்ன ?

 

இவர்கள் காங்கிரசுடன் சேர்ந்தே எல்லாவற்றையும் நடாத்துகிறார்கள் என்பது பலரின் சந்தேகம். அது நீங்க,  இவர்கள் மௌனம் காப்பதே பெரிய உதவியாக இருக்கும்.

:lol:  :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பதவி, கமிஷன் எல்லாம் நேரத்துக்கு வருதில்ல.. அப்புறமென்ன? :D

"புஸ்வாணம்' ஆன டில்லி "டெசோ' மாநாடு

 

டில்லியில் நடத்தி முடிக்கப்பட்ட, டெசோ மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட, 40 அரசியல் கட்சி தலைவர்களில், ஏழு பேர் மட்டுமே பங்கேற்றனர். பா.ஜ., பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் மாநாட்டை புறக்கணித்ததால், தி.மு.க., தலைவர் கருணாநிதி, அப்செட் அடைந்துள்ளார்.

 

மாநாட்டில், காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றாலும், மத்திய அரசுக்கு அழுத்தம் தரக்கூடிய, இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றாததால், மாநாடு புஸ்வாணமாகியுள்ளது. இதன் எதிரொலியாக, இம்மாதம், 12ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த, பந்த் போராட்டம் ரத்து செய்யப்பட்டு, அன்றைய தினம் பொதுக்கூட்டம் நடத்த தி.மு.க., திட்டமிட்டுள்ளது என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



http://tamil.yahoo.com/ப-ஸ்வ-ணம்-ஆன-ட-ல்ல-ட-ச-231200121.html



டில்லியில் நடந்த, டெசோ மாநாட்டில்,அத்வானி, வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், மம்தா பானர்ஜி, முலாயம் சிங் யாதவ், மாயாவதி, லாலு பிரசாத் யாதவ், ராம்விலாஸ் பஸ்வான், பிரகாஷ்சிங் பாதல், பரூக் அப்துல்லா, சந்திரபாபு நாயுடு உட்பட, 40தலைவர்கள் மற்றும் பல கட்சிகளின் எம்.பி.,க்கள் என, மொத்தம், 250 பேருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டன.


அதில், ஏழு தலைவர்கள் உட்பட மொத்தமே, 32 பேர் மட்டும் கலந்து கொண்டதால், தி.மு.க., தலைவர் கருணாநிதி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். மாநாட்டை ஏற்பாடு செய்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவருக்கு, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், டோஸ் விடுத்துள்ளார்.

 

தி.மு.க.,வினர் ஆறுதல் அடையும் வகையில், காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள், மாநாட்டில் பங்கேற்பதற்கு முன், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை அளிக்கும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது என, சில நிபந்தனைகளை விதித்ததாக கூறப்படுகிறது.

 

இதனால், தேசிய அளவில் புதிய திருப்பத்தை உருவாக்கும் என, எதிர்பார்க்கப்பட்ட, டெசோ மாநாடு, புஸ்வாணம் ஆகியுள்ளது. டெசோ மாநாட்டின் தோல்வி எதிரொலியால், இம்மாதம் 12ம் தேதி நடைபெறவுள்ள, பந்த் போராட்டம் ரத்து செய்யப்பட்டு, அன்றயை தினம், டெசோ மாநாடு விளக்கப் பொதுக்கூட்டத்தை நடத்த, தி.மு.க., ஆலோசித்துள்ளதாக தெரிகிறது.

 

இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:டெசோ மாநாடு, 5:00 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நேரத்தில் முக்கிய தலைவர்கள் யாரும் வரவில்லை. டி.ஆர்.பாலுவிடம், கனிமொழி, யாருமே இன்னும் வரவில்லையே எனக் கேட்டுள்ளார். அதற்கு டி.ஆர்.பாலு, எல்லாரும் வருவார்கள் எனக் கூறினார். அரங்கத்தில் தலைவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நாற்காலிகளில், முக்கிய தலைவர்கள் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அவர்கள் யாருமே வரவில்லை.

 

குலாம்நபி ஆசாத் தன் பேச்சை ஐந்து நிமிடத்தில் முடித்து விட்டு பறந்து விட்டார். தேசியவாத காங்கிரஸ் எம்.பி., சுப்ரியாவும் சில நிமிடங்களே இருந்தார். கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்ட ஒரு சில எம்.பி.,க்களின் ஆங்கில உரை குறிப்பிடும்படி அமைந்துள்ளது. தி.மு.க., எம்.பி.,க்கள், டில்லி தலைவர்களிடம் முறையான அனுமதி பெறாத காரணத்தினால், மாநாட்டை வெற்றிகரமாக நடத்த முடியவில்லை.மதுரையில், 1986ல் நடந்த, டெசோ மாநாட்டில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டு அம்மாநாட்டை வெற்றி பெற வைத்தனர்.

 

ஆனால், டில்லி மாநாட்டை தி.மு.க., எம்.பி.,க்கள் திட்டமிட்டு நடத்தாமல், கோட்டை விட்டு விட்டனர். பார்லிமென்ட் கூட்டத் தொடரில் தி.மு.க., எம்.பி.,க்கள் பேசுகையில், பொது வாக்கெடுப்பு நடத்துவது குறித்தும், ராஜபக்ஷேவை சர்வதேச போர்க்குற்றவாளியாக நிறுத்தி விசாரிக்க வேண்டும் என, குறிப்பிடவில்லை.

 

மாறாக, போருக்கு பின் கற்றுக் கொண்ட பாடங்களும், படிப்பினைகளும் என்ற அறிக்கையை மையப்படுத்தி பேசியது, இலங்கை அரசுக்கு சாதகமாகத்தான் அமையும் என, இலங்கை தமிழர்கள் கருதுகின்றனர். மொத்தத்தில், டில்லி டெசோ மாநாடு, இலங்கை தமிழர்களை ஏமாற்றும் நாடகமாகத்தான் அமைந்துள்ளது. இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

- நமது நிருபர் -


...

WR_20130308235826.jpeg

  • தொடங்கியவர்

போராட்டம் தொடங்க முதல் அது தோல்வி என்று வகைப்படுத்தப்படுவது மிகப்பெரியப் அவமானம். இனித்தன்னும் கருணாநிதி நாடகத்தைவிட்டுவிட்டு ஒதுங்க வேண்டும். கடையடைப்பு என்றால் கடையடைபாக இருக்க வேண்டும். அது இல்லாமால் சுப்பிரமணியசாமியுடன் சேர்ந்து மகிந்தாவுக்கு வலு சேர்ப்பது போல் தோல்வி போராட்டங்கள் நடத்துவதை கருணாநிதி தவிர்க்க வேண்டும்.

522521_224454431026865_2115272044_n.jpg



தனிமனித ஒழுக்கம் அனைவருக்கும் தேவை யாகும்!

 

 

ஒருவரது பொது வாழ்க்கைக்கும் அவரது தனிமனித வாழக்கைக்கும் தொடர்பில்லை, அதனால், பொது வாழ்க்கைக்கு வந்த ஒருவரது தனிமனித வாழக்கையை விமர்சிக்கக் கூடாதென்று சொல்வதை என்றுமே நான் ஏற்றுக் கொண்டதில்லை. பொது வாழ்க்கைக்கு வருபவர், தனது சொந்த வாழ்விலும் குறைபாடில்லாமல் இருப்பது அவசியம்.


நாட்டை நிர்வாகம் செய்பவன் பல தவறுகளை நேரிடையாகவும், அந்தரங்கமாகவும் செய்தால், அவனுக்கு கீழ் இருப்பவர்கள் ஆளாளுக்கு திருட ஆரம்பித்து விடுவார்கள். அதை தான் சாணக்கியர் "அரசன் கெடுமதியாளனாக இருந்தால் சக்கரையும் உப்பும் கூட தன சுவையை இழந்துவிடும்" என்று அழகாக சொல்லி இருக்கிறார்.

 

பல மனைவிகளை வைத்திருப்பதும், ஆபாசமாக பேசுவதும், ஊழல்களை செய்வதும் ஒரு தலைவனுக்கு அழகல்ல

திருக்குறளை பற்றி பேசும் தலைவர், மூன்று மனைவிகளை வைத்திருப்பது தமிழ் பண்பாடு என்று எந்த குறளில் உள்ளது என்பதை சொன்னால் நன்றாக இருக்கும்.

 

-முகநூல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.