Jump to content

ஜெனீவா: அடுத்துவரும் தினங்களில் நடைபெறப்போகும் காட்சிகள்! (சமகாலப் பார்வை)


Recommended Posts

unhrc_09.jpg

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் நகல் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரேரணையின் வரைவு வியாழக்கிழமை வெளியாகியுள்ள நிலையில் ஜெனீவா இராஜதந்திரக் களம் சூடுபிடித்திருக்கின்றது.  வெள்ளிக்கிழமை மாலை வரைவு உத்தியோகபூர்வமாக ஐ.நா. சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபின் இறுதி வடிவம் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னதாக பேரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த நிலையில் இராஜதந்திரக் களத்தில் சூடான நகர்வுகள் திரைமறைவில் ஆரம்பமாகியுள்ளன. இந்த நிலையில் இந்தப் பிரேரணையின் அம்சங்கள் மேலும் பலவீனப்படுத்தப்படுமா அல்லது இப்போதுள்ள நிலையிலேயே சமர்ப்பிக்கப்படுமா என்பதுதான் தற்போது எழுந்திருக்கும் கேள்வி!

மனித உரிமைகள் பேரவையிலுள்ள ஒவ்வொரு நாடும் இலங்கை தொட்பில் தமது நிலைப்பாட்டை  பகிரங்கமாக வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளன. இதன்மூலம் இலங்கை விவகாரத்தில் மனித உரிமைகள் பேரவை இரண்டாகப் பிளவுபட்டுப்போயிருப்பது வெளிப்படையாகியிருக்கின்றது. இந்தியா மட்டும் தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் தயங்கிக்கொண்டுள்ளது. அமெரிக்காவின் யோசனைகள் தொடர்பில் ஆராய்வதற்காக வெள்ளிக்கிழமை உப மகாநாடு ஒன்று ஜெனீவாவில் நடத்தப்பட்ட போது இலங்கைக்கான ஆதரவு குறைவாகவே காணப்பட்டது. ஆதரவளித்த நாடுகளில் பெரும்பாலானவை வாக்களிக்கத் தகுதியற்றவை என்பது கவனிக்கத்தக்கது.

அமெரிக்கா முன்வைக்கப்போகும் பிரேரணையின் பிரதிகள் ஜெனீவாவில் இராஜதந்திர வட்டாரங்களில் விவாதங்களுக்காக விநியோகிக்கப்பட்டுள்ளது. இதில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த உருவாக்கப்பட்ட தேசிய செயல் திட்டம் திருப்தி அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, பத்திரிகை மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவை குறித்து உரிய கவனம் செலுத்துமாறு இலங்கை அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

mahinda-samar.jpg

 

மேலும், இலங்கையில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடைபெறுவது கவலையளிப்பதாக உள்ளது என அந்த வரைவுத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழர் பகுதிகளுக்கு அரசியல் அதிகாரம் அளிப்பதில் இலங்கை அரசு தோல்வி அடைந்துவிட்டது என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் ஐ.நா மன்ற மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை இலங்கையில் நல்லிணக்கத்தையும், பொறுப்புகூறலையும் மேம்படுத்த ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவி தருவது குறித்து வெளியிட்ட அறிக்கையை வரவேற்கும் இந்த தீர்மான வரைவு, சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தையும், மனித நேய சட்டத்தையும் மீறிய செயல்கள் குறித்து ஒரு நம்பகமான, சுயாதீனமான, சர்வதேச விசாரணைய கோரி ஆணையர் விடுத்த அழைப்பையும் கவனத்தில் எடுத்துக்கொள்கிறது.

 

இந்த ஆணையரின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் பரிந்துரைகளை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் அந்த தீர்மான வரைவு கோருகிறது. அதேவேளையில், இலங்கை அரசு, ”ஐ.நா மன்ற நீதிபதிகள் சுதந்திரத்துக்கான சிறப்புத்தூதர்” மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் போன்ற குழுக்கள் இலங்கைக்கு வந்து செல்ல தங்குதடையற்ற அனுமதி தருமாறும் இந்த வரைவுத் தீர்மானம் கோருகிறது.

 

எனினும், இது இறுதித் தீர்மானம் அல்ல. தற்போது இடம்பெற்றுவரும் ஆலோசனைகளையடுத்து இதில் மாற்றங்கள் இடம்பெறலாம். அந்த மாற்றங்களுடன் எதிர்வரும் 13 அல்லது 14 ஆம் திகதி இறுதி வரைவு முன்வைக்கப்படும். அது தொடர்பான விவாதம் 20 ஆம் திகதி நடைபெற்று வாக்களிப்பும் அன்றைய தினமே இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றங்களைச் செய்வதற்கு குறிப்பிட்ட கால அவகாசமே இருப்பதால் இலங்கை அரசாங்கம் ஜெனீவாவிலும், சர்வதேச அரங்கிலும் தமது இராஜதந்திர நகர்வுகளை விரைவுபடுத்தியிருக்கின்றது.

 

”ஐ.நா மன்ற நீதிபதிகள் சுதந்திரத்துக்கான சிறப்புத்தூதர்” மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் போன்ற குழுக்கள் இலங்கைக்கு வந்து செல்ல தங்குதடையற்ற அனுமதி வழங்க வேண்டும் என வரைபில் தெரிவிக்கப்பட்டிருப்பதுதான் இலங்கைக்குப் பெரும் அதிர்ச்சியைக்கொடுக்கும் விடயமாக உள்ளது. இது தமக்கு ஆபத்தானதாக அமையும் என இலங்கை அரசு அஞ்சுவதற்கும் காரணம் உள்ளது. அமெரிக்காவின் நகல் தீர்மானம் கடுமையானது என மனித உரிமை அமைப்புக்கள் பலவும் குறிப்பிடுவதற்கு இதுதான் காரணம்.

navi-pillai.jpg

இது இலங்கை அரசு எதிர்பார்க்காத ஒன்றல்ல. ஆனால், இறுதிவரையில் வரட்டும் பார்க்கலாம் என்ற நிலையிலிருந்த அரசு இப்போதுதான் களத்தில் இறங்கியிருக்கின்றது. ஒருவகையில் இலங்கை அரசின் நகர்வுகள் காலங்கடந்தவையாகவே உள்ளன. அதேவேளையில் இந்தச் சரத்தை நீக்குவதற்காக எதனைச் செய்வதற்கும் இலங்கை இப்போது தயாராகவுள்ளது.  இதற்கான பதில் ஒன்றை அரசாங்கம் தயாரித்துக்கொண்டிருப்பதாகவும், இந்த விரிவான பதில் எதிர்வரும் தினங்களில் முன்வைக்கப்படலாம் எனவும் தெரிகின்றது.

 

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற உப மகாநாட்டில் சீனா, ரஷ்யா, கியூபா, பாகிஸ்தான், தாய்லாந்து, இந்தோனேஷியா மற்றும் எகிப்து என்பன இலங்கைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருந்தன. அமெரிக்காவின் இரண்டாவது வரைவு எதிர்பார்க்கப்பட்டதைவிட கடுமையானதாகவுள்ளதால் இதனை முறியடிக்க வேண்டும், அல்லது அதன் காரத்தைக் குறைக்க வேண்டும் என்ற நிலையில் இலங்கையும் தமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருக்கின்றது. மேலே குறிப்பிட்ட நாடுகளுடன் ஆபிரிக்க நாடுகள் சிலவற்றின் ஆதரவையும் பெற்று பிரேரணையில் முக்கிய மாற்றங்களைச் செய்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளும் எனத் தெரிகின்றது.

 

மறுபுறத்தில் அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகளுடன் கனடாவும் இணைந்துள்ளது. இந்தப் பிரேரணை போதுமானதல்ல இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை கனடாவும், ஐரோப்பிய ஒன்றியமும் தெரிவித்ததாகத் தெரிகின்றது.

 

இதேவேளையில், இந்தப் பிரேரணை தொடர்பில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதில் இந்தியா தொடர்ந்தும் தயக்கம் காட்டிவருகின்றது. இந்தியப் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதங்களின் போது, தீர்மானம் வரட்டும், அதன் வாசகங்களைப் பார்த்தபின்னர் எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவோம் எனக் குறிப்பிட்ட இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், அமெரிக்க பிரேரணையின் நகல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மௌனமாக இருப்பது தமிழகத்தில் சீற்றத்தை அதிகரித்திருக்கின்றது.  இப்போது மாணவர்கள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இந்திய அரசுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதில் முக்கிய பங்கை வகிக்கும் எனத் தெரிகின்றது.

 

அமெரிக்கா முன்வைத்துள்ள நகல் பிரேரணையில் மாற்றங்கள் செய்யப்படுமா என்பதும் இவ்விடயத்தில் இந்தியா எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கும் என்பதும்தான் இந்த வாரத்தில் எழும்கேள்விகளாக உள்ளன. தீர்மானம் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னதாக இறுதியாக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டியதாக இருப்பதால் அடுத்துவரும் சில தினங்கள் மிகவும் முக்கியமானதாக அமையும்.

 

- கொழும்பிலிருந்து தமிழ்லீடருக்காக பார்த்தீபன்.

 

http://tamilleader.com/?p=7406

Link to comment
Share on other sites

இலங்கைக்கு ஆதரவு திரட்டும் பாகிஸ்தானின் முயற்சி தோல்வி

 

ஜெனிவா இராஜதந்திரச் சமரில் கடும் நெருக்கடிகளைச் சந்தித்துள்ள இலங்கை அரசுக்கு ஆதரவாக பிரேரணையொன்றைக் கொண்டுவருவதற்கு பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.

தொழில்நுட்பக் காரணிகள், காலதாமதம் உட்பட முக்கிய சில விடயங்களைக் கருத்திற்கொண்டே பாகிஸ்தானின்
பிரேரணையை ஐ.நா. மனித உரிமைகள் சபை ஏற்க மறுத்துவிட்டது என அறிய முடிகின்றது.

பாகிஸ்தானின் இறுதிக் கட்ட முயற்சி கைகூடாமையானது இலங்கைக்குப் பெரும் ஏமாற்றத்தையளித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சுழற்சி முறையிலான அங்கத்துவத்தின் அடிப்படையில் இலங்கையின் நெருங்கிய நட்பு நாடுகளான சீனா, கியூபா, ரஷ்யா போன்ற நாடுகள் இம்முறை வாக்களிக்கும் தகுதியை இழக்கின்றன.

எனவே, பாகிஸ்தான், ஜப்பான் போன்ற நாடுகளையே இலங்கை இந்த முறை முழுமையாக நம்பியிருக்கின்றது.

இதனடிப்படையிலேயே இலங்கைக்கு ஆதரவாக மேற்படி நாடுகள் ஜெனிவாவில் களமிறங்கி தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றன.

இதன் பிரகாரம் இலங்கையைப் பாதுகாக்கும் வகையில் பிரேரணையொன்றை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் முன்மொழிவதற்கு பாகிஸ்தான் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இலங்கை அரசு நல்லிணக்கத்தை நோக்கி வேகமாகப் பயணிக்கின்றது.

எனவே, இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படவேண்டும். இலங்கை இறையாண்மைமிக்கதொரு நாடு. எனவே, அதன் உள் விவகாரங்களில் சர்வதேச தலையீடு இருக்கக்கூடாது ஆகிய சரத்துகள் உட்பட மேலும் பல விடயங்கள் பாகிஸ்தானின் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டிருந்தன என அறியமுகின்றது.

இருப்பினும், பாகிஸ்தானின் பிரேரணையை மனித உரிமைகள் சபை தொழில்நுட்பக் காரணங்களால் ஏற்க மறுத்துவிட்டது.

 

http://onlineuthayan.com/News_More.php?id=864741891911642621

Link to comment
Share on other sites

ஓ.. அப்ப இதுதான் இலங்கை வைத்திருந்த கடைசி இராமபாணமா?

 

அல்லது இன்னும் ஏதாவது மறைவில் அவிகிறதா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாரிய கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம்; சமன் ரத்னப்பிரிய! 27 SEP, 2024 | 05:07 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வரலாற்றிலேயே  மிகப்பெரிய கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலும் சாதகமான நிலைக்கு வந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.   இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,  பாராளுமன்ற தேர்தலுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கே எதிர்பார்க்கிறோம்.   நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அவ்வாறு இருப்பதாகவே எமக்கு தோன்றுகிறது. அவ்வாறான பரந்துபட்ட கூட்டணியை அமைக்குமாறே அனைவரும் வற்புறுத்தி வருகின்றனர்.   அதனால் இந்த கூட்டணியை அமைப்பதற்காக தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலை ஆரம்பித்திருக்கிறோம்.    அதேபோன்று மொட்டு கட்சியின் பெரும்பான்மை பிரிவினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.    ஓரிரு தினங்களில் இந்த கலந்துரையாடல்களை முடிவுக்கு கொண்டுவர முடியுமாகும். அதனால் வரலாற்றில் பெரிய கூட்டணி அமைத்து இந்த பாராளுமன்ற தேர்தலில் பாேட்டியிட முடியுமாகும் என எதிர்பார்க்கிறோம். பல்வேறு தரப்பினர்கள் கட்சிகளுடன் கலந்துரையாடிய விடயங்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.    ரணில் விக்ரமசிங்கவின் ஆலாேசனையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இரண்டு தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடினோம். நேற்றும் கலந்துரையாடினோம்.    அந்த கலந்துரையாடல் சாதகமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த பேச்சுவார்த்தைக்கு பின்வாங்கியபோதும் தற்போது அவர்கள் கலந்துரையாடல்களுக்கு இணக்கம் தெரிவித்து, ஆராேக்கியமான பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.    அதனால் தொடர்ந்தும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி எப்படியாவது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியாக போட்டியிடவே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.   கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலமே எமக்கு தேர்தலில் எதிர்பார்ப்பொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியும். எமது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும் என்றார். https://www.virakesari.lk/article/194920
    • நிலாமதியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. கிறுக்க முயற்சிக்கிறேன்.  நாம்தானே ஓடிவந்துவிட்டோம். எங்கோ ஒதுங்கி ஓடிய காலங்களைத் திரும்பிப்பார்க்கும் போது வெறுமையாய் தெரிகிறது.    நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி சுவியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. நீங்களே ஒரு சிறந்த படைப்புகளைப் தருபவர். உங்கள் வரிகள் உற்சாகம் தருவனவாக உள்ளன.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி ஈழப்பிரியனவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. உண்மைதான். ஆனால், சிங்களத்தின் சிந்தனையல்லவா எம்மை ஆக்கிரமித்துள்ளது.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • ஸ்துமாரி (Stumari) ஸ்துமாரி (Stumari) என்கிற ஜார்ஜியா மொழி வார்த்தைக்கு விருந்தினர் என்ற பொருள்.  இன்றைக்கு இந்த வார்த்தையை நான் தெரிந்து கொள்ள காரணமாக இருந்தது இன்றைய சிறப்பு தினம்! ஆம் இன்றைக்கு உலக சுற்றுலா தினம் - 27 செப்டம்பர் - ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தினை உலக சுற்றுலா தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள்.  இந்தப் பழக்கம் ஆரம்பித்தது எப்போது தெரியுமா? 1980-ஆம் ஆண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த தினத்திற்கான நோக்கம் ஒன்று தான் - அது சுற்றுலா. தவிர ஒவ்வொரு வருடத்திற்கான Theme மட்டும் மாறுபடுகிறது.  இந்த வருடத்திற்கான உலக சுற்றுலா தினத்தின் Theme - Tourism and Peace! இந்த வருடம் உலக சுற்றுலா தினம் கொண்டாட தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் இடம் Georgia! அதனால் தான் எனக்கும் ஜார்ஜியா மொழியில் இருக்கும் ஸ்துமாரி (Stumari) என்கிற வார்த்தை தெரிந்தது.  அவர்கள் விருந்தினரை கடவுளின் அன்பளிப்பாக கருதுகிறார்கள் (Stumari is a gift of God!). ஸ்துமாரி குறித்த ஒரு காணொளியை பாருங்களேன். சுற்றுலா குறித்த எனது ஆர்வம் குறித்து எனது தொடர்பில் இருக்கும் பலரும் அறிந்திருப்பார்கள். நான் சென்ற சுற்றுலாக்கள் பொதுவாக சராசரியை விட அதிகம் என்றாலும் ஒரு சிலருடன் ஒப்பிடும்போது குறைவு தான் 🙂ஹாஹா…  எத்தனை பயணம் செய்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் இன்னும் பயணிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் குறைவதே இல்லை.  பயணம் மீது ஒரு வெறுப்பு வருவதே இல்லை.  எப்போது பயணிக்க வேண்டும் என்று சொன்னாலும் உடனே மனதில் புத்துணர்வு வந்து விடுகிறது.  சூழல்கள் காரணமாக கடந்த சில மாதங்களாக எந்த வித சுற்றுலாவும் செல்லவில்லை என்றாலும் சுற்றுலா மீதான ஆர்வம் இன்னும் குறையவே இல்லை.  வாழ்க்கையில் இருக்கும் ஒரு ஆசை தொடர்ந்து சுற்றுலா செல்வதும், அந்தப் பயணங்கள் வழி பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதும் தான்.  வேறு பெரிய ஆசைகள் எதுவும் இல்லை. பார்த்தது கையளவு என்றால் பார்க்காதது உலகளவு.  உலகம் முழுதும் பார்க்க வேண்டும் என்று கூட இல்லை, பாரதம் முழுவதும் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஒரு ஆசையாக இருக்கிறது.  இந்த வருடத்தின் உலக சுற்றுலா தினம் குறித்த Concept Note UN தளத்தில் பார்க்கக் கிடைத்தது.  உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதனை இங்கே படிக்கலாம். இந்தக் குறிப்பின் படி, 2024-ஆம் ஆண்டின் உலக சுற்றுலா தினம், சுற்றுலா மற்றும் அமைதியை உருவாக்குவதற்கான தொடர்பினை சந்திப்பை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  பயணம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் நிலையான சுற்றுலா நடைமுறைகள், அமைதியை உலகம் முழுவதும் நிலைநிறுத்த எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் நாடுகளுக்கு இடையேயான மோதல்களுக்கு தீர்வு, நாடுகளுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் உலகளவில் அமைதியை மேம்படுத்துதல் ஆகியவற்றை பிரதான நோக்கமாக கொண்டு கொண்டாடப்படுகிறது.  எங்கு பார்த்தாலும் நாடுகளுக்கு இடையே சண்டைகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என்று ஒவ்வொரு நாளும் செய்திகளில் படிக்கையில் சுற்றுலா இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்க முடியும் என்றே தோன்றுகிறது.   நம் நாட்டில் மட்டுமே எத்தனை எத்தனை சுற்றுலா தலங்கள்? ஒரு பிறப்பில் இவை அனைத்தையும் பார்த்து விட முடியுமா என்ன?  அதனால் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு விட வேண்டும்.  சுற்றுலா/பயணம் மூலம் பல இடங்களை பார்க்க முடியும் என்பதோடு விதம் விதமான மனிதர்களையும் சந்திக்க முடிகிறது.  பல வித அனுபவங்களையும் பயணங்கள் நமக்குத் தருகின்றன.  ஆதலினால் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!  இந்த உலக சுற்றுலா தினத்தில் நமக்கு பயணம் செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வோம் என்று தீர்மானம் செய்து கொள்வோம்.  தொடர்ந்து பயணிப்போம்.  பல அனுபவங்களைப் பெறுவோம். பயணம் நல்லது ஆதலினால் பயணம் செய்வீர்! https://venkatnagaraj.blogspot.com/2024/09/World-Tourism-Day-2024.html
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.