Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொல்ல வேண்டாம் என்று கெஞ்சிய நடேசனின் மனைவியை சுட்டுக்கொன்ற சிறிலங்கா இராணுவ மேஜர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Nadesan.jpg

தான் ஒரு சிங்களவர் என்றும் தன்னை கொல்ல வேண்டாம் என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் மனைவி வினிதா உரக்கக் குரல் எழுப்பிய போதும், சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவின் மேஜர் ஒருவர் அவரைச் சுட்டுக் கொன்றார். 

இதனை நேரில் பார்த்த சாட்சிகள் தன்னிடம் கூறியதாக பிபிசியின் முன்னாள் செய்தியாளர் பிரான்செஸ் ஹரிசன் ‘மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன‘ என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். 

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மற்றும் ஏனையோர் வெள்ளைக்கொடிகளுடன் சிறிலங்கா படையினரிடம் சரணடைய முற்பட்டபோது, பொல்லுகளால் தாக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டதாக நேரில் பார்த்த சாட்சிகள் கூறினர். 

“நான் சிங்களவர், தயவுசெய்து என்னைக் கொல்லாதீர்கள்” என்று கூறிய பா.நடேசனின் மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்டார். 

இந்தப் படுகொலைகளை இடம்பெற்ற போது அதை நேரில் பார்த்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களும், பொதுமக்களில் ஒருவரும் இதுதொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளனர்.  இவர்கள் தற்போது லண்டனில் உள்ளனர். 

சிறிலங்கா படையினர் சுட்டுக்கொல்ல முற்பட்டபோது, வினிதா சிங்களத்தில் கத்தினார். 

தான் ஒரு சிங்களவர் என்றும் தன்னைக் கொல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

ஆனால் சிறப்புப் படைப்பிரிவின் மேஜர் ஒருவர், இப்போது மட்டுமா உனக்கு சிங்களப் பாரம்பரியம் நினைவுக்கு வருகிறது என்று கேட்டவாறே வினிதாவை சுட்டுக் கொன்றார் என்று நேரில் பார்த்தசாட்சிகள் தெரிவித்துள்ளனர். 

பொல்லுகளால் தாக்கப்பட்ட பின்னர் நடேசன் கொல்லப்பட்டார். 

ஒட்டுமொத்த சம்பவத்தையும் இந்த சாட்சிகள் வெளிப்படுத்தியுள்ளதுடன், இதைச் செய்த சிறிலங்காப் படை அதிகாரிகளைத் தம்மால் அடையாளம் காட்டமுடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

 
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் காற்றடைத்த பந்து.. நீரினுள் தள்ளினாலும் மேலிழுந்து வரும்..! காலம் கடந்தாலும்..

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் காற்றடைத்த பந்து.. நீரினுள் தள்ளினாலும் மேலிழுந்து வரும்..! காலம் கடந்தாலும்..

 

உண்மைகள் எப்பொழுதோ வெளி  வந்து விட்டன

அவை  உண்மைகள் என்றும் எல்லோருக்கும் தெரிந்தும் விட்டன

தற்பொழுது அது அடுத்த கட்டத்துக்கு போக எத்தனிக்கும் போது அதனால்  முகம் துகிலுரியப்படப்போகின்ற சிலர் தமது கடைசி  முயற்சிகளை எதையும் கொடுத்து தடுக்க நினைப்பதே நடக்கிறது

ஆனாலும் உண்மை தொடர்ந்து  போராடும். தர்மம் வெல்லும்.

இல்லாது விட்டால் இனி  உலகம்  ஒரு ஒழுங்குப்பாதையில் நகர்வது கடினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.