Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

Posted

நேர்காணல்: மாணவர் ஒருங்கிணைப்பாளர் சிபி லக்ஸ்மன் - March 26, 2013

 

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

நேர்காணல்: பேராசிரியர் கன. குறிஞ்சி

 

Posted

மாணவர் போராட்டம் பற்றி குபேந்திரன் கணேசன் அவர்களுடனான நேர்காணல்- Tamil Leader இணைய செய்தித் தளத்தின் முதன்மை ஆசிரியர்

 

Posted

மாணவர்களே, திருச்சியில் காங்கிரஸ்யின் தலைவர் ஞானதேசிகன் காரை முற்றுகையிட்ட 50 மாணவர்களை, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். நாம் மாணவர்களை தடிக்கொண்டு தக்கியதில் 30 பேர் காயம், 7 பேர் காவலைகிடமாக உள்ளார்கள்.

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

அற வழியில் போராடிய மாணவர்கள் மீது முன்னாள் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ராஜசேகர் மற்றும் சில காங்கிரஸ் கட்சி குண்டர்கள் சுமார் 50 பேர்கள் கத்தி , கம்பு , அருவா போன்ற பயங்கர கருவிகளால் தாக்கி உள்ளனர் . இதில் 10 மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது . மூன்று மாணவர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது . அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உள்ளனர். இது வரை எந்த காங்கிரஸ் தொண்டரையும் காவல் துறை கைது செய்யவில்லை . இந்த கொலை வெறி தாக்குதல் நடத்திய குண்டர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சிக்கு கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதாகவும் மாணவர்கள் கூறி உள்ளனர் .
 

575658_598864166792279_1913492914_n.jpg

 

(முகநூல் : loyolahungerstrike)



---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

சென்னை அருகே வேல்டெக் பல்கலை மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் தனி ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் போராட்டத்தால் பல்லாவரம்- துரைப்பாக்கம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 

(முகநூல் : loyolahungerstrike)

Posted

ஆல் இந்தியா றேடியோ/all india radio
மாணவர்கள் முற்றுகை/
காவல்துறை பலத்த பாதுகாப்பு.

 

535880_598815526797143_2114939288_n.jpg

 

(முகநூல் : loyolahungerstrike)



----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

Tomorrow TYO (Tamil Youth Org.) Students Protest in Hannover, Germany
4pm - 6 pm
27.03.2013
Place: Kröpcke (near railwaystation) , Hannover

 

(முகநூல் : loyolahungerstrike)



----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் “ஓயாது இனி ஓயாது மாணவர் போராட்டம் ஓயாது!!! தனி ஈழம் அமையும் வரை எங்கள் போராட்டம் குறையாது. மத்திய அரசே! மாநில அரசே! உனக்கு எனக்கு போராட்டமா? தமிழனுக்கான போராட்டமா?” என்று வானதிர மயிலாடுதுறை நகரமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு கரவொலியை எழுப்பி அஞ்சலகத்திற்கு பூட்டுப்போட பேரணி ஊர்வலமாக சென்ற மாணவர் கூட்டமைப்பினர் கைதாகியுள்ளனர்.

 

(முகநூல் : loyolahungerstrike)



------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

மாணவர்களே! கவனம்! உங்களை வன்முறைப் பாதையில் திருப்ப சதி நடக்கிறது. அறப் போராட்டத்தை மட்டுமே தொடருங்கள்! காங்கிரஸ் கட்சியின் அடாவடித்தனத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். தங்கள் பிள்ளைகளை அடித்தவர்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

 

(முகநூல்)



-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காங்கிரஸ் புதைக்கப்பட வேண்டிய களம் மற்றும் காலம் இதுதான் !  அதையும் அறவழியிலேயே செய்கிறோம்.

 

(முகநூல் : loyolahungerstrike)
 



------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

அகில இந்திய வானொலி நிலையத்தை இழுத்து மூடும் அற வழிப் போராட்டத்தை நடத்திய 200க்கும் மேற்பட்ட பல கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளை தமிழக காவல்துறை கண்மூடிதனமாக தாக்கி வண்டியில் ஏற்றி உள்ளனர்.. மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகில் சமுதாயக் கூடத்தில் அடைக்கப் பட்டு உள்ளனர்.. மாணவ-மாணவிகள் பலர் காயமடைந்துள்ளனர்
தொடர்புக்கு 09500044452

 

(முகநூல்)

Posted

நண்பர்களே !

இந்த பக்கம் , ஈழம் அடையும் வரை , ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு என்று ஐக்கிய நாடுகள் சபையில் ஏதேனும் ஒரு நாடு சரத்தை பதியும் வரை , தமிழகத்தில் வராது வந்த மாமணி போல எழுந்த தன்னெழுச்சியான மாணவர் போராட்டத்தை எப்படி ஒவ்வொரு அடுத்த கட்டதி
ற்க்குள்ளும் கொண்டு செல்லவேண்டும் என்பற்கு உதவியாக , களத்தில் உள்ள மாணவர்களிற்கு தகவல் அளித்து உதவும் ஒரு இடமாக மட்டுமே இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

தங்களது தனிப்பட்ட கோபங்களை, எதற்கும் பயன்படாத 'திட்டு' வார்த்தைகளை கொண்டு பதிய ; தங்களது ஆத்திரங்களை இங்கே எழுத்துகளில் காட்ட ; ஒரு அமைப்பை அல்லது இயக்கத்தை குறைசொல்லும் பிறிதோர் அமைப்பு அல்லது இயக்கம் அல்லது தனி நபர் என்று ; எந்த பழக்கத்தையும் இந்த பக்கத்தில் தயவு செய்து பதிய வேண்டாம் .

ஒற்றை நோக்கம் ஒரே நோக்கம் ஈழம் மட்டுமே , தமிழகத்தில் எழும் மாணவர் எழுச்சி இந்தியாவின் மன நிலையை , இந்தியாவின் இலங்கைக்கான அயலுறவு கொள்கையை மாற்றம் கொள்ள செய்யவேண்டும் என்பதுவே மாணவர் போராட்டத்தின் அச்சாணி கொள்கை.

ஈழ தமிழர்களிற்கு இந்தியாவில் (தமிழகத்தில்) எவ்வளவு ஆதரவு உள்ளது என்பதை உலகம் முழுக்க உள்ள எல்லா நாடுகள் உணர வேண்டும் .

அதற்க்கு ஒவ்வொரு போராட்டத்தையும் பதிந்து வையுங்கள் வீடியோ , போடோக்கள் முக்கியம் .


இப்போதைக்கு காமன் வெல்த் நாடுகளில் அங்கம் வகிக்கும் ஐம்பத்து நான்கு நாடுகளிற்கும் நாம் இலங்கை படுகொலை ஆவணங்களை அனுப்பி , இனபடுகொலை செய்த இலங்கையை ராஜபக்சேவை அங்கீகரிக்காதீர்கள் என்ற முக்கிய பணியை, இணையத்தில் உள்ளாவாறே செய்ய வேண்டும்.

அதற்க்கு ஒரு சரியான ஆவண படம் தயாரிக்க வேண்டும் அதற்க்கு உதவும் நண்பர்கள் இங்கே உள்ளார்களா ? இருந்தால் பதியவும்.

அடுத்து முக்கியமாக , இந்திய அரசு உணரும் பொருட்டு அதே நேரம் தமிழகத்தில் மக்கள் ஆதரவு பெற்று , மத்திய அரசு அலுவலக முடக்க பணிகளை முன்னெடுப்பது எப்படி என்று மாணவர்கள் தம் உள்ளூர் சூழலுக்கு ஏற்ப திட்டமிட்டு கொண்டு பணிகளை செய்து வருகிறார்கள்.

எதிர்பார்த்தபடியே,இந்த பக்கத்தில் சிங்களவர்கள், ஒட்டுக்குழுக்கள் பலர் ஊடுருவி உள்ளார்கள் அவர்கள் இதை, இந்த பக்கத்தை தடை செய்ய கோரிக்கை அளிக்கலாம் , (ஏற்கனவே இரண்டு லக்ஷம் பேர் பார்த்த , நமது பக்கத்தின் ,ஒரு படத்தை தடை செய்து உள்ளார்கள்) நாமும் நாளை அல்லது நாளை மறுநாள் , இந்த பக்கத்தின் பிரதியான ஒரு இணைய தளத்தை உருவாக்க போகிறோம் . அந்த தளம் பற்றிய பதிவுகளை வெகு விரைவில் அறிவிக்கிறோம்.

நாள் ஒன்றிற்கு இருபத்தி இரண்டு மணி நேரம் இயங்கி இந்த பக்கத்தை உயிர்ப்புடன் வைத்து வருகிறோம் , இதே பணியை ஈழத்திற்காக ஈழம் அடையும் வரை எங்களது குழு செய்யும்.

விரைவில் , புதிய தளம் பற்றி அறிவிப்பை வெளியிடுகிறோம்.
Mr.KChennai

 

(முகநூல் : loyolahungerstrike)

Posted

திருச்சியில் காங்கிரஸ் குண்டர்களால் தாக்கப்பட்டு கால் உடைத்த நிலையில் இந்த மாணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் பல மாணவர்கள் கவலைக்கிடம். :(

 

600259_598878933457469_2047181519_n.jpg

 

 

(முகநூல் : loyolahungerstrike)

Posted

வேல் பல்கலைக்கழக மாணவர்கள் 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

 

527580_598885400123489_2134932440_n.jpg

 

(முகநூல் : loyolahungerstrike)

Posted

சென்னையில் நடக்க இருக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் விளையாட்டை பார்க்கச் செல்லும் ரசிகர்களே , மாணவர்களே தயவு செய்து இது போன்ற பதாகைகள் , வாசகங்கள் எழுதிய அட்டைகளை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். அதை விளையாட்டின் போது காட்டுங்கள். இதன் மூலம் இந்தியாவில் உள்ள மற்ற மக்களுக்கும் நமது செய்தியை கொண்டு போகலாம் !

 

164281_598874230124606_1398549717_n.jpg

 

(முகநூல் : loyolahungerstrike)

 

Posted

அண்மைச்செய்தி.
இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம். இலங்கை நட்பு நாடு என்ற வாதத்தை நிறுத்த வேண்டும் எனவும்
முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தல்.
(முகநூல்)

 

பி.கு: யாராவது இது தொடர்பான இணைப்பை கண்டால் யாழில் இணையுங்கள். :rolleyes:


----------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

அவசரம் ! கேளம்பாக்கம் ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஆனந்த் இன்ஸ்டியுட் ஆப் ஹையர் ஸ்டடிஸ் கல்லூரியை சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர் , மேலும் அவர்களின் போராட்டத்தை வழி நடத்த ஆள் இல்லாத காரணத்தினால் அடுத்து என்ன செய்வது என்று தெரியமால் சோர்வாக உள்ளனர் , அப்பகுதியில் உள்ள கட்சி சார்பற்ற தோழர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அவர்களை சந்தித்து சரியாக வழிநடத்துங்கள் , மேலும் இணைய நண்பர்கள் அவர்களை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவியுங்கள் , அது அவர்களை மேலும் போராட ஊக்கமளிக்கும்

தொடர்புக்கு :-
தினேஷ் 9543845283
யூசுப் 9688260209
ஜோஸ் 9942340047

 

403002_598886040123425_707384738_n.jpg

(முகநூல் : loyolahungerstrike)



------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

இன்று காவல்துறையின் கடும் பாதுகாப்பை மீறி மாணவர்கள் சென்னையில் இருக்கும் அகில இந்திய வானொலி நிலையத்தை இழுத்து மூடும் போராட்டத்தை நடத்தினர்.

 

550009_598887463456616_655383466_n.jpg

 

(முகநூல் : loyolahungerstrike)

Posted

இலங்கையில் நடைபெற்ற தமிழர் இனப்படுகொலையை கண்டித்தும் குற்றவாளி ராஜபாட்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வலியுறுத்தியும் தமிழ் ஈழம் தழைக்கவும் தமிழன் என்ற உணர்வோடு நம்மையெலாம் ஒன்றுபடுத்தி தமிழர்களுக்கு ஆதரவாக தனி ஈழத்திற்கு ஆதரவாக போராடிவரும் மாணவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக சாதி கட்சி கலப்படமின்றி தமிழ் இன உணர்வோடு ஐடிசி தொழிலாளர்கள் நடத்தும் பிரமாண்ட ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நானும் கலந்துக் கொண்டு முழக்கமிட உள்ளேன் என்பதை இவ்வேளையில் மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்
தமிழ் இன உணர்வாளர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளலாம்

நாள்: 29-03-2013
இடம்: காரமடை பேருந்து நிலையம்
மேட்டுப்பாளையம், கோவை

 

253761_512475108798655_677201153_n.jpg

 

(முகநூல் : loyolahungerstrike)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கத்தி , கம்புகளால் மாணவர்களை தாக்கி காங்கிரஸ் காட்சி: 30 பேர் காயம், 7 பேர் காவலைகிடம்.[படங்கள்]

manavarkal-attack1.JPG

காங்கிரஸ் கட்சியின் திருச்சி, கரூர், தஞ்சாவூர் தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் திருச்சி அரிஸ்டோ ஹோட்டலில்  நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் கலந்து கொள்ள இருந்தார். இதற்காக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

இந்த பேனர்களை   மாணவர்கள்  சேதப்படுத்தினர். ஞானதேசிகன் திருச்சியை விட்டு வெளியேற வேண்டும், காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மாணவர்கள் கோஷம் எழுப்பி   அற வழியில் போராடிய மாணவர்கள் மீது முன்னாள் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ராஜசேகர் மற்றும் சில காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் சுமார் 50 பேர்கள் கத்தி , கம்பு , அருவா போன்ற பயங்கர கருவிகளால் மாணவர்களை தாக்கி உள்ளனர் .

இதில் 30 மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது . 7 மாணவர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது . அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உள்ளனர். இது வரை எந்த காங்கிரஸ் தொண்டரையும் காவல் துறை கைது செய்யவில்லை என் மாணவர்கள் தெரிவித்துல்ல்லானர்  . இந்த  தாக்குதல் நடத்திய காங்கிரஸ் காட்சியை சேர்ந்தவர்களை  உடனே கைது செய்ய வேண்டும் என்றும் இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சிக்கு கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதாகவும் மாணவர்கள் கூறி உள்ளனர் .

manavarkal-attack.JPG

Posted

மதுரையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், திருச்சியில் காங்கிரசாரால் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் அனைத்து கல்லூரி மாணவர் சங்கம் சார்பாக நாளை 28-03-2013 அன்று தொடர் முழக்க போராட்டம் நடைபெற உள்ளது.

 

இடம் : மதுரை காளவாசல்
நேரம் : காலை 9.30 மணிக்கு

 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் :
தினேஷ் பாண்டியன் : 9994693356
ராமச்சந்திரன் : 8870384777
விக்னேஷ் : 9600422192

 

35037_598901016788594_1826145001_n.jpg

 

(முகநூல் : loyolahungerstrike)
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரொறன்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்காபரோ வளாக மாணவர் உண்ணாவிரதம்!

 

 

v-canadiyanmansvareunnaa%20%281%29.jpgphoto.gifதமிழக மாணவ உடன்பிறப்புகள் நடத்திவரும் தமிழீழத்துக்கான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கனடாவிலுள்ள ரொறன்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்காபரோ வளாக தமிழ் மாணவர் அமைப்பு அடையாள உண்ணாவிரதத்தினை இன்று காலை 10 மணியிலிருந்து ஆரம்பித்துள்ளனர்.

சிறிலங்கா இனவாத அரசின் கொடூரங்களுக்கு எதிராக கோசங்களை எழுப்பியதுடன் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பை நடத்த வேண்டும்இ சிறிலங்காவில் நடைபெற்ற இன அழிப்பு தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்இ தமிழர்களின் தாயகப் பகுதியில் இடைக்கால நிர்வாக அலகு ஒன்று உருவாக்கப்பட்டு தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்தனர். 

ஈழ விடுதலைக்காக கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிவரும் தமிழக மாணவர்களுடன் இணைந்து அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை முற்றுமுழுதாக ஆதரித்தே இப்போராட்டம் நடந்து வருகின்றது.v-canadiyanmansvareunnaa%20%282%29.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted


அஞ்சலகத்திற்கு பூட்டுப் போட வந்த மாணவர்கள் கைது

srilanka-7773.jpg

 

 

“ஓயாது  இனி ஓயாது மாணவர் போராட்டம் ஓயாது!!! தனி ஈழம் அமையும் வரை எங்கள் போராட்டம் குறையாது. மத்திய அரசே! மாநில அரசே! உனக்கு எனக்கு போராட்டமா? தமிழனுக்கான போராட்டமா?” என்று வானதிர மயிலாடுதுறை நகரமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு கரவொலியை எழுப்பி அஞ்சலகத்திற்கு பூட்டுப்போட பேரணி ஊர்வலமாக மாணவர் கூட்டமைப்பினர் கைதாகியுள்ளனர்.

 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள 8 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்திற்கு பூட்டுப்போடும் போராட்டம் செய்வதாக திட்டமிட்டு காலை பத்து மணிக்கு நகரத்தின் மையப்பகுதியில் இருக்கும் ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பு பேரணியாக திரண்டு கரவொலியை முழங்கி வர்த்தகர்கள் மட்டுமின்றி பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வந்தனர். 

 

ஏற்கனவே மாணவர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என முடிவு செய்திருந்த காவல்துறை நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்களை குவித்திருந்தனர். 

 

அஞ்சலகத்திற்கு முன்பே இரும்பு தடுப்புகளை வைத்து காவல்துறையினரை வரிசையாக நிறுத்தி 50 அடிக்கு முன்பே மாணவர்களை தடுத்து நிறுத்தி விட்டனர். மாணவர்களோ காவல்துறையினரை அத்துமீறி பூட்டுப்போட நுழையும் போது காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

செய்தி, படங்கள்: செல்வகுமார்

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=95378

Posted

தயவுசெய்து இதனை SHARE செய்யுங்கள்..

பார்த்து பார்க்காமல் போகாமல் பகிரவும் - Must Share
தயவு செய்து பகிர்ந்து உலகுக்கு தெரிய படுத்தவும்

திருச்சியில் மாணவர்களை அடிக்கும் காங்கிரஸ்காரர்கள் - வேடிக்கை பார்க்கும் போலீஸ் ....

 

தமிழின மக்களே என்ன செய்ய போகிறீர்கள் ???

 

28184397321214889081295.jpg

 

 

இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா?
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே!
நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே!

யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல இடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே!
என்ன இல்லை உன்னோடு!
ஏக்கம் என்ன கண்ணோடு!
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே.

வந்தால் அலையாய் வருவோம்!
வீழ்ந்தால் விதையாய் விழுவோம்!
மீண்டும் மீண்டும் எழுவோம்! , எழுவோம்!
இன்னும் இன்னும் இறுக!
உள்ளே உயிரும் உருக!
இளமை படையே வருக!
எழுக!!!!

இன்னும் என்ன தோழா, , எத்தனையோ நாளா?
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே!
நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே!

மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்!
தொடு வானம் இனி தொடும் தூரம்!
பலர் கைகளை சேர்க்கலாம்!

விதை விதைத்தால்
நெல்லை விதை விதைத்தால்
அதில் கள்ளி பூ முளைக்குமா?
நம் தலைமுறைகள்
நூறு கடந்தாலும்
தந்த வீரங்கள் மறக்குமா?

ஒரே பலம் ஒரே குணம்
ஒரே தடம் எதிர் காலத்தில்
அதே பலம் அதே இடம்
அகம் புறம் நம் தேகத்தில்

கழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
தினம் களங்களில் சுமக்கிறோம்
எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
எங்கள் மொழியினில் சுவைகிறோம்

பனி மூட்டம் வந்து படிந்தென்ன
சுடும் பகலவன் மறையுமா?
அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்
எங்கள் இரு விழி உறங்குமா?

இதோ இதோ இணைந்ததோ
இனம் இனம் நம் கையோடு!
அதோ அதோ தெரிந்ததோ
இடம் இடம் நம் கண்ணோடு!

யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல இடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே!
என்ன இல்லை உன்னோடு!
ஏக்கம் என்ன கண்ணோடு!
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே!

வந்தால் அலையாய் வருவோம்!
வீழ்ந்தால் விதையாய் விழுவோம்!
மீண்டும் மீண்டும் எழுவோம்! , எழுவோம்!
இன்னும் இன்னும் இறுக!
உள்ளே உயிரும் உருக!
இளமை படையே வருக!
எழுக!!!!

Posted

தோழர்களே!!!

சொன்னால் புரிந்து கொள்வதற்கு சூடு, சொரணை உள்ளவனா சிங்களவன்?!!!

தமிழரின் உயிர் குடித்து, ரத்தவெறி பிடித்து, கொலைகாரக்கூத்தாடுகின்றான்!!!

அவனிடம் போய் நீதியை எதிர்பார்க்கலாமா?!!!
அறிவு, பண்பு உள்ளவனிடம் அஹிம்சையை பற்றி பேசலாம்!!!
பினந்தின்னிக்கழுகுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியுமா?!!!

பேசிப்பார்க்காமலா ஆயுதம் ஏந்தினார் எம் தலைவர்?!!!
ஆயுதம் எடுத்த பின்னரும் அமைதி வேண்டி பேச்சுவார்த்தை நடத்தினாரே?!!!

"காட்டுமிராண்டி" காடயனிடம் கருணையை எதிர்பார்க்கலாமா?!!!

சிங்களவனைப்பற்றி என்ன சொல்வது, எங்களவனே எமக்கு துரோகம் செய்யும்போது?!!!

தோழர்களே!!! உங்களை நம்பியே எமது ஈழத்தை விட்டுச்சென்றார் எம் தலைவர்!!!

ஒவ்வொரு மாணவனும் அவரின் மறுபிறப்பு!!!
ஒவ்வொரு குரலும் புலிகளின் போர்க்குரல்!!!
ஒவ்வொரு கண்ணிலும் ஈழத்தின் தாகம்!!!
ஒவ்வொரு இதயத்திலும் ஈழத்தின் வேர்கள்!!!

கனவு கண்டேன் ஈழத்தின் விடுதலைக்காய்!!!
கனவு மெய்ப்படவேண்டும்!!!

தமிழரின் தாகம்!!! தமிழீழ தாயகம்!!!

 

-முகநூல்-

 

-------------------------------------------------------------------------------------------------------
 

சட்டசபையில் பொது வாக்கெடுப்பு தீர்மானம்
மாணவர்களிற்கு கிடைத்த வெற்றி ; அவர்களின் போராட்ட அழுத்தத்திற்கு கிடைத்த
வெற்றி என்பதில் துளி அளவு கூட சந்தேகம் இல்லை ஆனால் மாணவர்கள் நாங்கள் ,
எங்களை பாராட்ட வேண்டும் என்று ஆசை கொள்ளவில்லை . எங்கள் அனைவரின் நோக்கம்
தமிழர்கள் இனி மேலும் கண்ணீர் விட்டு அழாதபடிக்கு ஒரு நிம்மதியான,
சுதந்திரமான, உரிமையான, அவர்களிர்க்குண்டான தேசம்; அது ஈழம் ; அதை பெரும்
வரை எங்கள் அறவழி பணி தொடரும் .

இப்போதைய தமிழக அரசின்
தீர்மானத்தை இந்திய மத்திய அரசு பரிசீலித்து , தமிழக சட்ட மன்றத்தை
மதித்து , இலங்கையுடனான தமது வெளியுறவு கொள்கையை மாற்ற வேண்டும் .

அந்த மாற்றம் வேண்டும் அதுவே எங்களிற்கான வெற்றியாக இருக்கும். எங்களிற்கு தேவை வெற்று பாராட்டல்ல
.

 

-முகநூல்-

  • கருத்துக்கள உறவுகள்
Posted

530190_549968955033758_1060193077_n.jpg

 

WE WILL WALK AND FIGHT TOGETHER AS " STUDENT "..
தயவுசெய்து இதனை SHARE செய்யுங்கள்..
COME AND JOIN OUR HANDS ==> World Wide Tamil People

 

-முகநூல்-

  • கருத்துக்கள உறவுகள்
Posted
தனி தமிழ் ஈழம் வலியுறுத்தியும் ,,திருச்சியில் மாணவர்கள் காங்கிரஸ் ரவுடிகளால் தாக்கபட்டதை கண்டித்தும் ,காங்கிரஸ் குண்டர்களை கைது செய்ய கோரியும் மதுரை மாணவர்களின் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது
 
388548_598940780117951_1774326402_n.jpg

Loyolahungerstrike

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழ விடுதைலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சீ.தினேஷ் மற்றும் ஜோ.பிரிட்டோ ஆகியோரின் கூட்டறிக்கை

கடந்த மூன்று வார காலமாக “தமிழீழமே தீர்வு” என்ற ஒற்றை கோரிக்கையை மையமாக வைத்து நடைபெற்று வரும் தமிழக மாணவர்களின் போராட்டத்தை தமிழக சட்டமன்றம் அங்கீகரித்ததுடன், தமிழக மாணவர்கள் மற்றும் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் தாங்கள் நிறைவேற்றிய தீர்மானமான; “இலங்கை வாழ் தமிழர்களுக்கு” நல்வாழ்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, இலங்கை நாட்டை “நட்பு நாடு” என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இலங்கை இனப்போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதே புலன் விசாரணை நடத்திடவும், இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில், போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும், தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும், ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு “தனி ஈழம்” குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக்குழுவில் தீர்மானத்தினை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டு என்றும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

மேற்கண்ட தீர்மானத்தை “தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு” முழு மனதோடும், நன்றியோடும் வரவேற்கிறது. இக்கோரிக்கையை வென்றெடுக்க மாணவர் சமூகம் தமிழக அரசுக்கு இணைந்து பங்காற்ற வேண்டும் என அழைக்கிறோம்.

இவண்,
ஒருங்கிணைப்பாளர்கள், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு

(சீ.தினேஷ்)
97911 62911

(ஜோ.பிரிட்டோ)
86789 62611

 

Loyolahungerstrike

Posted

83035989482267838731692.jpg

 

வாழ்த்துகள்....................!!!

மாணவர் போராட்டம் தொடரட்டும்.............

தமிழ்நாட்டுத் தமிழர் ஒன்று திரளட்டும்................

தரணியெங்கும் தமிழீழ விடுதலைக் குரல் ஒலிக்கட்டும்.............

பகைவர் புறமுதுகோட..............

நம் தமிழர் தாயகம் " தமிழீழம் மலரட்டும்.......................!!!

 

-முகநூல்-

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எம் தாயக தேசத்தில் எம் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையைக் கண்டித்து அதற்கான நீதி விசாரணை கோரி தாய் தமிழகத்தில் தமிழக மாணவரால் நடத்தப்படும் போராட்டங்களை ஆதரித்தும் , ஈழ ஆதரவுக் குரலுக்கு நன்றி தெரிவித்தும் ,புலம்பெயர் நாடுகளில் போராட்டங்களை நடத்துதற்கான காலத்தின் தேவை புலம்பெயர் சமூகத்திற்கு இருக்கின்றது.
அந்த வகையில் வரும் 28.03.2013 பிரான்ஸ் வாழ் புல‌ம்பெயர் ஈழக் கலைஞர்கள் (LIFT)அடையாள உண்ணாவிரதப் போரட்டத்தை நடத்த உள்ளார்கள்.இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் école milataire.21 place joffre,75007 paris(metro école militaire ligne ) என்ற இடத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகும்
நீண்ட உறக்கத்தில் இருக்கும் எம் புலம்பெயர் சமூகம், துயில் முடித்து எழுந்து போராட வேண்டும். இனியும் தூங்கினோம் வரலாற்றில் தூக்கி எறியப் படுவோம்.
அங்கே தனித்து போராடும் உறவுகளுக்கும் எம் குரல்களும் , எம் போராட்டங்களும் தான் வலுச் சேர்க்கும்.
எங்களின் விடிவுக்காய் தமிழ் நாட்டில் மட்டும் போராடாது, தரணி எங்கும் போராடும் போது தான் உலக நாடுகளின் கவனத்தை நாங்கள் ஈர்க்க முடியும்.
அந்த வகையில் புலம்பெயர் சினிமாக் கலைஞர்களாகிய எமக்கு , போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் தார்ப்பரியம் இருக்கிறது. பொது மக்களாகிய உங்களிடம் நாம் கேட்பது உங்கள் ஆதரவை மட்டுமே. எம் மக்களுக்காய் , நாமே போராட வேண்டும் என்பதை மறக்கக் கூடாது.எம் ஒற்றுமையான போராட்டம் தான் எமக்கான விடிய‌லைத் தரும். , அந்த வகையில் நடைபெறும் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் தொடர்புகளுக்கு 0668811330
0651469892
இவ் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்,http://www.youtube.com/channel/UCjQqOJWa8pG0CtOS6c6a6tw?feature=mheeஎன்ற இணைய முகவரியில் நேரடியாக ஒளிபரப்பாகும்

 

Loyolahungerstrike

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழத்தில் சிதைக்கப்பட்டது உன் இனமாக இருந்திருந்தால் அங்கு பாலியல் வன்கொடுமைக்கு சிதைக்கப்பட்டது உன் சகோதரியாக இருந்திருந்தால்,

 

அங்கு நிர்வாணமாக சுடப்பட்டு சாவடிக்கப்பட்டது உன் அண்ணாக இருந்திருத்தால்,

 

அங்கு ஏதுமறியா பாலகன் இறந்தானே அது உன் தம்பியாக இருந்திருந்தால்,

 

அங்கு தாரில் முக்கி எடுத்துக் கொன்றானே அது உன் அக்காவின் குழந்தையாக இருந்திருந்தால்,

 

நிறைமாத கர்ப்பிணியை வயிற்றைக் குற்றி குழந்தையின் விரலை எடுத்தானே வலியால் துடித்து இறந்தாலே அவள் உன் அக்காவாக இருந்திருந்தால்,

 

அங்கு இனப் படுகொலைக்கு துணை போன இந்நாட்டில் நீயும் இதைத் தான் கூறியிருப்பாய்,

 

அங்கு சிதைந்தது என் இனம் அங்கு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது என் அக்கா தங்கை,

 

அங்கு இறந்த பச்சிளம் குழந்தை என் அக்காளின் குழந்தை,

 

அங்கே நிர்வாணமாக சுடப்பட்டு இறந்தானே அவன் என் அண்ணன்,

 

ஏதுமறியாது 5 குண்டுகளை நெஞ்சில் வாங்கி சாய்ந்தனே அவன் என் தம்பி,

 

என் உறவுகளை அழிக்க உதவியது இந்த நாடு அந்நாட்டில் நானெப்படி இந்தியனாவேன்,

 

உனக்கு வேண்டுமானால் உன் குடும்பத்தை சிதைத்தால் அவனுடன் கூத்தடிக்க முடியும் என்னால் முடியாது!

நான் தமிழன்...

 
 
599350_560720127283310_2044053251_n.jpg
 
-முகநூல்-
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Trichy maanavarkal thakuthall... Tomorrow mrng.
8.00am ku,pdkt old bus standla ontru kuduvom maaperum poorattam. Pl's forwd to all college student's.#திருச்சி சட்ட கல்லூரி மாணவர்களை போலி கதர் குழுவினர் தாக்கியதை கண்டித்து புதுக்கோட்டையில் நாளை காலை 8 மணிக்கு பழைய பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டனம்.

 

Loyolahungerstrike



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தஞ்சையில் பழைய பேருந்து நிலையம் முன் மாணவர் கூட்டமைப்பினர் திருச்சியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியுள்ளனர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Loyolahungerstrike

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதில் என்ன சந்தேகம்,.. கயாலாகாதவர்கலால்  தமிழரசுக் கட்சி நிறைந்திருக்கும்வரை  சும்மும் இருப்பார்.  🤣  
    • படிகள் | அரவிந்தன் ஓவியம்: Gautam Mukherjee   “நல்லவேளை, எலும்பு எதுவும் முறியல. இன்னும் கொஞ்சம் பெசகியிருந்தா கணுக்கால் எலும்பு முறிஞ்சிருக்கும்” என்றார் டாக்டர். நீலகண்டன் அவர் கட்டுப் போடுவதையே பார்த்துக் கொண்டிருந்தான். “குறைஞ்சது மூணு நாளாவது இந்தக் காலுக்கு ரெஸ்ட் குடுங்க. கூடியவரைக்கும் நடக்காதீங்க. நடந்தாலும் இந்தக் கால்ல உடம்பைத் தாங்காதீங்க. உக்காரும்போதும் படுக்கும்போதும் காலை மேல தூக்கி வெச்சிக்கங்க. எவ்வளவுக்கு எவ்வளவு ரெஸ்ட் குடுக்கறீங்களோ அவ்வளவு சீக்கிரம் சரியாகும்.” கட்டு, கால்களை இறுக்கமாகப் பற்றியிருந்தது. நீலகண்டன், டாக்டரிடம் விடைபெற்றுக் கிளம்பினான். உடன் வந்திருந்த சந்திரமோகனின் தோளைப் பற்றியபடி மெதுவாக நடந்து வெளியில் வந்தான். இருவரும் ஆட்டோவில் ஏறிக்கொண்டார்கள். நல்லவேளை என்று டாக்டர் சொன்னது நீலகண்டனின் மனதில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. நல்லவேளைதான். இடுப்பில் அடிபடவில்லை. காலையில் அந்தப் பல்லங்காடிக்குச் சென்றபோது மனம் மிகவும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருந்தது. வழக்கத்தைக் காட்டிலும் வண்டியை வேகமாக ஓட்டினான். வண்டியை நிறுத்திவிட்டு நடந்து வருகையில் வழக்கத்தைக் காட்டிலும் நடை வேகம் கூடியிருந்தது. சொல்லப்போனால் சிறு துள்ளல் இருந்தது. பக்கத்தில் வந்த சந்திரமோகன் வியப்பாகப் பார்த்தாலும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். அங்காடியின் நுழைவாயிலுக்கு முன்பு மூன்று படிகள் இருந்தன. நீலகண்டன் தரையிலிருந்து தன்னையறியாமல் துள்ளி மூன்றாம் படிக்குத் தாவினான். மூன்றாம் படியில் காலை வைக்கும்போது கால் பிரண்டு தடுமாறி விழுந்தான். சந்திரமோகன் பதறிப்போய்த் தாங்கிப் பிடித்தான். நீலகண்டன் சுதாரித்தபடி எழுந்து நின்றான். லேசாக வலித்தது. அங்காடியின் நுழைவாயிலில் இருந்த காவலர் தன்னுடைய நாற்காலியில் உட்காரச் சொன்னார். சந்திரமோகன் உள்ளே சென்று தண்ணீர் வாங்கிவந்து குடிக்கச் சொன்னாள். நேரமாக ஆகக் கால் வலி கூடியபடி இருந்தது. ஏதேனும் பெரிதாக அடிபட்டிருக்குமோ என்று பயந்த நீலகண்டன் கால் எந்த நிலையில் இருக்கிறது என்று பார்க்க எழுந்து நின்றான். மறுகணம் உடல் முழுவதும் உதறலெடுக்க, சடாரென்று உட்கார்ந்துகொண்டான். காலைக் கீழே வைக்கையில் பொறுக்க முடியாத வலி உடல் முழுவதையும் உலுக்கியது. சந்திரமோகன் பயந்துபோனான். “என்ன ஆச்சு நீலா…” என்று அவன் தோள்களைப் பற்றினான். நீலகண்டன் சற்று ஆசுவாசமடைந்ததும் சந்திரமோகன் கீழே மண்டியிட்டு அமர்ந்து நீலகண்டனின் காலைப் பார்த்தான். “செருப்ப கழட்டு” என்றான். நீலகண்டன் கழற்றினான். சந்திரமோகன் அவன் காலைத் தொட்டதும் நீலகண்டன் விறுக்கென்று காலை இழுத்துக்கொண்டான். சந்திமோகன் கவலையுடன் நீலகண்டனின் முகத்தைப் பார்த்தான். “ஃப்ராக்சரா இருக்குமோன்று தோணுது நீலா…” என்றான் தணிந்த குரலில். நீலகண்டனின் முகத்தில் வலியின் வேதனை படர்ந்திருந்தது. இடுப்பில் ஏதாவது ஆகியிருக்கிறதா என்று லேசாக இடுப்பை அசைத்துப் பார்த்தான். நல்லவேளை. ஒன்றுமில்லை. “எதுக்கு சார் ஜம்ப் பண்ணி வந்தீங்க?” என்று காவலர் கவலையோடு கேட்டார். நீலகண்டன் தலையைக் குனிந்துகொண்டான். சந்திரமோகன் கேட்க விரும்பிய கேள்விதான் அது என்றாலும் இந்த நேரத்தில் அதைக் கேட்கக் கூடாது என்று கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். ஆட்டோ பிடித்து இருவரும் மருத்துவமனை சென்றார்கள். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த டாக்டர் எலும்பு முறிவு இல்லை என்று சொன்னார். உள்ளே பலமாக அடிபட்டிருக்கிறது என்றார். அவனை வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போன சந்திரமோகன், நீலகண்டன் மனைவியிடம் விவரத்தைச் சொல்லிவிட்டு, ஓய்வெடுக்கும்படி சொல்லிவிட்டுக் கிளம்பினான். வண்டியை மாலையில் கொண்டுவருவதாகச் சொன்னான். “உங்களுக்கு எதுக்கு இந்த வேலை? படியில ஒழுங்கா ஏற மாட்டீங்களா? அவ்வளவு என்ன அவசரம்?” என்று கேட்டாள் மஞ்சு. நீலகண்டன் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் கழித்து மஞ்சுவே தொடர்ந்தாள். “ரொம்ப பாத்து பாத்துதானே படில ஏறுவீங்க? இன்னிக்கு என்ன ஆச்சு?” என்றாள். நீலகண்டன் பதில் சொல்லவில்லை. அவனுடைய அமைதியைக் கண்டு மஞ்சுவும் அமைதியானாள். அவள் முகத்தில் தெரிந்த வேதனை நீலகண்டனை வருத்தியது. “டீ போட்டு தரயா?” என்றான் நீலகண்டன். மஞ்சு எழுந்து உள்ளே போனாள். நீலகண்டன் தன் கால் கட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அங்காடியின் படிகளில் துள்ளி ஏறிய கணம் திரும்பத் திரும்ப அவன் மனதில் தோன்றியபடி இருந்தது. தெருவின் முனையில் இருந்த பிள்ளையார் கோவிலை ஒட்டித் திரும்பியதும் அவன் கண்கள் ரயில் நிலையத்தின் மதில் சுவருக்கு அப்பால் நீளும் தண்டவாளத்தைப் பார்த்தன. ரயில் வருவது தெரிந்தது. ஓட்டமெடுக்கத் தொடங்கினான். இங்கிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ரயில் நிலைய வாசல். பிறகு 22 படிகள். பிறகு 50 அடி நடைபாதை. அதன் பிறகு 22 படிகள். நடந்துபோனால் ரயில் வந்துவிட்டுப் போய்விடும். வேகமாக ஓடி ரயில் நிலையத்தை அடைந்து, மக்கள் கூட்டத்திடையே புகுந்து ஓடி, மூன்று மூன்று படிகளாகத் தாவி ஏறி, படிகளுக்கிடையில் இருந்த பாதையை வேகமாகக் கடந்து மூன்று மூன்று படிகளாகத் தாவி இறங்குவதற்கும் ரயில் நிலையத்திற்குள் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. ரயிலில் ஏறி ஓரமாக நின்றுகொண்டான். இது அடிக்கடி நடப்பதுதான். 8.36க்கு மாம்பலம் வர வேண்டிய ரயில் இரண்டு மூன்று நிமிடங்கள் தாமதமாக வருவது வழக்கம். நீலகண்டன் 8.35க்குள் ரயில் நிலையத்துக்குள் வந்தால் போதும். ஆனால், அப்படி வருவது அபூர்வம். தாமதமாக வந்து இப்படி ஓடியும் தாவியும் ரயிலைப் பிடிப்பதே வழக்கமாகிவிட்டது. சில சமயம் கணக்குச் சற்றுப் பிசகி ரயில் கிளம்பியிருக்கும். அப்படியும் விடாமல் ஓடி அது ரயில் நிலையத்தைக் கடக்கு முன் தாவி ஏறிவிடுவான். பள்ளியில் படிக்கும்போது நீலகண்டன் எல்லா விளையாட்டுக்களிலும் கலந்துகொள்வான். கபடி, கோகோ, வாலிபால், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம் என்று எல்லாவற்றிலும் தீவிரமாக ஈடுபடுவான். விளையாட்டின் வேகம் விளையாடாதபோதும் உடல் முழுவதும் பரவியிருக்கும். எதையும் மெதுவாகச் செய்யும் வழக்கம் இல்லை. எனவே நடந்து வந்து ஆசுவாசமாக ரயிலில் ஏறவில்லை என்ற குறையே அவனுக்குத் தெரியவில்லை. ஓடி வந்து ஏறுவதையே இயல்பானதாக அவன் மனம் கருதியது. ஓடி வந்து ரயிலில் ஏறுவது, படிகளில் தாவித் தாவி ஏறுவது, இறங்குவது, சைக்கிளை வேகமாக ஓட்டுவது, மழைக்காலங்களில் சாலைகளில் இருக்கும் சிறிய நீர்த்தேக்கங்களைத் தாண்டிக் கடப்பது என வேகமான இயக்கம் உடலில் இயல்பாகிவிட்டது. தேநீர் இதமாக இருந்தது. மஞ்சு மீண்டும் எந்தக் கேள்வியும் கேட்காமல் தன் வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டாள். நீலகண்டன் தன் கால் கட்டை வெறித்துப் பார்ததுக் கொண்டிருந்தான். மாத்திரைகள் இன்னும் வேலைசெய்ய ஆரம்பிக்கவில்லை. வலி குறையவில்லை. அவன் கவனம் வலியில் இல்லை. அங்காடியின் முன் படிகளில் தாவி ஏறிய கணம் மனதில் மின்னலடித்துக் கொண்டிருந்தது. மாலதி புன்னகைத்தாள். “என்ன இது, சின்னப் பையன் மாதிரி” என்றாள். “எது!” என்றான் அவள் வீட்டு வாசலில் செருப்பைக் கழற்றியவாறே. அவன் உள்ளே வர ஒதுங்கி வழிவிட்ட மாலதி, “வாசப்படில ஏறி வர்ரதுக்குப் பதிலா தாண்டி வந்தீங்களே அதைச் சொன்னேன்” என்றாள். நீலகண்டன் சிரித்தான். “தாவியா வந்தேன்? எனக்குத் தெரியல. இதையெல்லாம் யோசிச்சா செய்வாங்க?” என்றான். மாலதியும் சிரித்தாள். “பரவால்ல. நீங்க நேச்சுரல் அத்லீட்தான்” என்றாள். நீலகண்டன் அந்தப் பாராட்டைப் புன்னைகையுடன் ஏற்றுக்கொண்டான். “டீயா, காஃபியா?” “ம்… டீ. கொஞ்ச நேரம் கழிச்சு. இப்பதான் காஃபி சாப்ட்டேன்.” “ஓ.கே…. சொல்லுங்க நீலகண்டன்… ஈவன்ட எப்டி ப்ளான் பண்ணியிருக்கீங்க?” நீலகண்டன் விளக்க ஆரம்பித்தான். மாலதி உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய திருத்தமான புருவங்கள், அகன்ற விழிகள், நேர்த்தியான மூக்கு, எப்போதும் புன்னகையைப் பிரதிபலிக்கும் அழகிய உதடுகள், சற்றே துருத்தி நிற்கும் உருண்டையான மோவாய், புஷ்டியான கன்னங்கள், தலையாட்டும்போது அழகாக ஆடும் காதணிகள், அவ்வப்போது முகத்தில் வந்து விழுந்து அழகைக் கூட்டும் மயிர்க் கற்றைகள், அதை விலக்கிவிடும் அவள் விரல்களின் நேர்த்தியான அசைவுகள் என அவளுடைய அழகை ரசித்தபடி நீலகண்டன் பேசிக்கொண்டிருந்தான். “ஜஸ்ட் எ மினிட்” என்று மாலதி எழுந்துகொண்டாள். அவள் வயதுக்குப் பெரிய உடம்புதான். எழுந்திருப்பதில் சிரமம் தெரிந்தது. மெல்ல நடந்து சென்று குளிர்பதனப் பெட்டியிலிருந்து தண்ணீர் எடுத்து வந்தாள். அதை அவன் கையில் கொடுத்துவிட்டு இருக்கையின் மீது இரு கைகளையும் ஊன்றியபடி மிகவும் கவனமாக அமர்ந்துகொண்டாள். நடமாட்டத்தில் அவள் பட்ட சிரமங்களைக் கண்டு நீலகண்டன் வருந்தினான். பாட்டிலைக் கீழே வைத்துவிட்டுக் கேட்டான். “எனக்குத் தண்ணி வேணும்னு ஒங்களுக்கு எப்படித் தெரிஞ்சிது?” மாலதி புன்னகைத்தாள். வசீகரமான அந்தப் புன்னகை நீலகண்டனை மயக்கியது. “நீங்க பேசும்போது உங்க நாக்கு ட்ரையா இருந்தது தெரிஞ்சுது” என்றாள். நன்றியைப் புன்னகையால் தெரிவித்த நீலகண்டன் பாட்டிலைக் கையில் எடுத்தபடி எழுந்துகொண்டான். “இஃப் யூ டோன்ட் மைன்ட், நானே உள்ள போய் நார்மல் வாட்டர் எடுத்துக்கலாமா? கோல்ட் வாட்டர் குடிக்கறதில்ல” என்றான். “ஓ ஸாரி…” என்றபடி எழுந்திருக்க முயன்றாள். அவள் நினைத்தாலும் சட்டென்று எழுந்திருக்க முடியாது என்பதை அறிந்த நீலகண்டன், “ப்ளீஸ்… நீங்க இருங்க. நா எடுத்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே போய் பாட்டிலை மீண்டும் குளிர்பதனப் பெட்டியில் வைத்துவிட்டு வெளியிலிருந்து தண்ணீரை எடுத்துக் குடித்துவிட்டு வந்தான். போகும்போதும் வரும்போதும் தன்னுடைய வழக்கமான வேகத்தைக் கவனமாகக் குறைத்துக்கொண்டான். மீண்டும் பேசத் தொடங்கினான். “வீக் என்ட்ல டி.நகர், நுங்கம்பாக்கம் ஏரியல கூட்டம் அதிகமா இருக்கும்ன்றதால மாம்பலத்துல வெச்சிருக்கோம். நல்லவேளயா பார்க்கிங் ஸ்பேஸோட பெரிய இடம் கிடைச்சிருக்கு…” என்று சொன்னவன் மாலதி தன் உரையாடலைப் பின்தொடரவில்லை என்பதை அறிந்து பேச்சை நிறுத்தினான். அவள் கண்கள் எதிரில் இருந்த சுவரை வெறித்தபடி இருந்தன. அவள் தற்கணத்தில் இல்லை என்பது நீலகண்டனுக்குப் புரிந்தது. அவளது பருத்த மார்புகள் விம்மித் தாழ்ந்தன. மடியின் மீது வைத்திருந்த கைகளின் பருமன் ஒரு கணம் அவனை அச்சுறுத்தியது. சற்று அகலமான அந்த இருக்கையில் தன்னைப் பொருத்திக்கொள்ள அவள் சிரமப்படுவது தெரிந்தது. அதே அளவுள்ள இருக்கை தனக்கு இடம் கொடுத்துக் கிட்டத்தட்டப் பாதி அளவு காலியாக இருப்பது அவனுக்கு உறைத்தது. இந்தப் பருமன் இயல்பானதல்ல என்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. முகத்தின் அழகும் அதில் ததும்பும் குழந்தைத்தனமும் அவள் உடலுக்குச் சற்றும் பொருந்தாமல் இருந்தன. அதிகபட்சம் இவளுக்கு 30 வயது இருக்கலாம். சூமோ பயில்வானைப் போல உடல் இல்லாவிட்டால் அவளைப் பேரழகிகள் பட்டியலில் எளிதாகச் சேர்த்துவிடலாம். நல்ல உயரம். நீளமான விரல்கள். செதுக்கிய சிலை போன்ற முகம். இவளுக்கு ஏன் இப்படிப்பட்ட நிலை என்று நீலகண்டன் வருந்தினான். “நீலன்…” என்றாள். தனிப்பட்ட முறையில் பேசும்போது நீலன் என்றுதான் அழைப்பாள். அவள் பேசவிருப்பது அடுத்த மாத நிகழ்வைப் பற்றியல்ல என்பது நீலகண்டனுக்குப் புரிந்தது. உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தான். “யூ நோ… ஐம் எ க்லாஸிகல் டான்சர். போத் பரதம் அன்ட் வெஸ்டன்…” என்றாள். முகத்தில் விழும் மயிர்க் கற்றைகளை விலக்கிய விரல்களின் நளினத்திலும் தண்ணீர் பாட்லை நீட்டிய விதத்திலும் அவளுக்குள் இருந்த நடனமணியை உணர்ந்திருந்ததால் நீலகண்டனுக்கு இந்தத் தகவல் வியப்பளிக்கவில்லை. தான் கேட்க நினைத்ததை உணர்ந்து அவளே அதைப் பற்றிப் பேசத் தொடங்கியதுதான் வியப்பாக இருந்தது. “காலேஜ் கல்சுரல்ஸ், அவுட்டிங்னு எதுவா இருந்தாலும் என்னோட டான்ஸ் இல்லாம இருக்காது. அதுவும் பஸ்ல ஆடின ஆட்டமெல்லாம் மறக்க முடியாது. சிம்ரன் டான்ஸெயெல்லாம் கேட்டு கேட்டு ஆடச் சொல்லுவாங்க. ஒரு மணிநேரமெல்லாம் சலிக்காம ஆடுவேன்…” என்றாள். நீலகண்டன் பதிலுக்கு எதுவும் சொல்லவில்லை. அதற்குத் தேவையும் இல்லை என்பது அவனுக்குப் புரிந்திருந்தது. மாலதி தனக்குள் ஆழ்ந்திருந்தாள். தன்னியல்பாக அவள் குரல் ஒலித்தது. மார்புகள் விம்மித் தணிந்தபடி இருந்தன. “போன மாசம் நடந்த ஈவன்ட்ல நீங்க எனக்குப் பண்ணின உதவிய மறக்க மாட்டேன். அஞ்சு வருஷத்துக்கு முன்னால ஆம்பளைங்க வயசு வித்தியாசம் இல்லாம என்னை சுத்தி சுத்தி வருவாங்க. நான் எப்பவும் மான்போலத் துள்ளிக்கிட்டே இருப்பேன். காலேஜ் பியூட்டி கன்டெஸ்ட்ல மூணு வருஷமும் நான்தான் வின்னர். பசங்க எங்கூட பேசவும் என்னோட நடந்து வரவும் என்ன வண்டில கூட்டிட்டு போகவும் தவம் கெடப்பாங்க. ஆனா இப்ப ஒருத்தனும் கிட்ட வர்ரதில்ல. என் ஒடம்பு அவங்கள மெரட்டி தொரத்தி அடிக்குது. தூரத்துலருந்தே ஒரு ஹாய், ஒரு ஸ்மைல்னு நிறுத்திக்கறாங்க. அழகில்லாத கேல்ஸ ஆம்பளைங்களுக்குப் பிடிக்கறதில்லன்னு நெனைக்கறேன். க்லோஸ் ஃப்ரென்ஸ்கூட கொஞ்சம் தள்ளிப்போக ஆரம்பிச்சபோதுதான் அந்த க்லோஸ்னஸ்ஸுக்கு அர்த்தம் புரிஞ்சிது. எனக்கு அண்ணன் தம்பி யாருமில்ல. அப்பா நான் சின்னவளா இருக்கும்போதே வீட்ட விட்டு ஓடிப்போயிட்டாரு. அவரை நேர்ல பாத்த ஞாபகம்கூட எனக்கு இல்ல. போட்டோல பாத்துருக்கேன். ரொம்ப அழகா, ஸ்லிம்மா, ஸ்மார்ட்டா இருப்பாரு. அம்மா பிரசவத்துக்கப்பறம் கொஞ்சம் குண்டடிச்சிட்டாங்க. சைல்ட் கேர், ஃபேமலி கேர், ஆஃபீஸ் வேலைன்னு மூழ்கிப்போனதுல அவங்க பழைய ஸ்டேஜுக்கு வரவேயில்ல. ரெண்டு பேருக்கும் அடிக்கடி சண்ட நடக்கும். அப்பா கோபத்துல கத்தி எதையாவது தூக்கி வீசிட்டு போயிடுவாரு. அப்படி ஒருநாள் போனவர் திரும்பி வரவேயில்ல. அப்படியும் எப்பவோ ஒரு பொண்ணோட அவரை அம்மா எங்கயோ பாத்துருக்கா. அந்தப் பொண்ணு பாக்க நக்மா மாதிரி இருந்தான்னு எங்கிட்ட சொல்லும்போது அம்மா குமுறிக் குமுறி அழுதா. நக்மா மாதிரின்னா என்னன்னு புரிஞ்சிக்கற அளவுக்கு அப்ப எனக்கு வயசாயிருந்துது. அதுக்கு மேல எதுவும் பேசல. அம்மா இன்னும் அதிகமா குண்டாயிட்டே போனா. ஆனா என்ன ரொம்ப நல்லா பாத்துக்கிட்டா. டான்ஸ், கராத்தே, மியூஸிக் எல்லாம் கத்துக்க வெச்சா. அவளே கணக்கு, அக்கவுன்ட்ஸ் எல்லாம் சொல்லித் தருவா. ப்ரில்லியன்ட் டீச்சர். ஒரு வருஷத்து சுமையை ஒரே மாசத்துல கொறச்சிட்டா…” மாலதி மூச்சு வாங்கிக்கொண்டாள். கண்களை மூடிக்கொண்டாள். சிறிது நேரம் கழித்துத் தொடர்ந்தாள். “எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டேன்ல? போன மாச ஈவன்ட்ல நான் படி ஏற கஷ்டப்பட்டபோது நீங்கதான் ஓடிவந்து ஹெல்ப் பண்ணினீங்க. உங்க தோள புடிச்கிக்கிட்டு பாதுகாப்பா படி ஏறினேன் இறங்கும்போதும் மறக்காம என்கூட வந்தீங்க. இவ்வளவு பெரிய ஹால்ல ஸ்டெப்ஸுக்குக் கைப்பிடி வெக்கணும்ன்ற அறிவுகூட இல்லாம கட்டியிருக்காங்க. நான் ஏதாவது ஹெல்ப் கேக்க மாட்டனான்னு என்ன பாத்து ஏங்கற ஆம்பளைங்களைப் பாத்து பாத்து சலிச்சிருக்கேன். அதே ஆம்பளைங்க இப்ப சம்பிரதாயமா ஹாய் சொல்லிட்டு ஒதுங்கறதயும் பாக்கறேன். ஆனா நீங்க அப்படி இல்ல. நீங்க பண்ணின உதவிய மறக்கவே மாட்டேன்…” நீலகண்டன் நெகிழ்ந்து போயிருந்தான். “அதெல்லாம் ஒரு ஹெல்ப்பா மாலதி? எனக்கு முதுடியலன்னா நீங்க கை குடுக்க மாட்டீங்களா?” “நானா, இப்ப இருக்கற நெலமைலயா?” என்று விரக்தியாகச் சிரித்த மாலதி, “அஃப்கோர்ஸ். நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியுது. அப்டி ஹெல்ப் பண்றதுதான் ஹ்யூமன் டென்டன்ஸி. அப்படித்தான் நானும் நம்பறேன். ஆனா அழகான பொண்ணுக்குக் கிடைக்கற உதவில நூத்துல ஒரு பங்குகூட அழகில்லாத பொண்ணுக்குக் கிடைக்காதுன்றத புரிஞ்சிகிட்டபோது மனசுல கூர்மையா ஒரு வலி வருது. அந்த வலியதான் தாங்க முடியல. அதுவும் எப்பவும் ஜென்ஸ் எங்கிட்ட கையேந்தி நிக்கறத பாத்து வளந்ததுனால இந்த வலி இன்னும் அதிகமாகுது…” மாலதி கண்களைத் திறக்கவில்லை. அவள் முகம் வாடியிருந்தது. நீலகண்டனால் எதுவும் பேச முடியவில்லை. அங்கு நிலவிய மௌனமே அவஸ்தையாக மாறத் தொடங்கியபோது நீலகண்டன் மௌனத்தைக் கலைத்தான். “எப்படி இந்த மாதிரி ஆச்சு மாலதி?” மாலதி கண்களைத் திறந்தாள். “பொண்ணா பொறந்த சாபம் நீலன். மென்ஸ்டுரல் ப்ராப்ளம்லதான் எல்லாம் ஆரம்பிச்சுது. இர்ரெகுலர் பீரியட்ஸ். சில சமயம் மூணு நாலு மாசம்கூட பீரியட்ஸ் வராது. அதுக்கு ட்ரீட்மென்ட் எடுக்கப்போய் அதோட சைட் எஃப்க்ட்ஸ் ஒடம்பையும் மனசையும் பாதிக்க ஆரம்பிச்சுது. நடுவுல யாரோ சொன்னாங்கன்னு டாக்டர மாத்தி, ஆல்ட்ர்னேட் மெடிசனுக்கு மாறி, மறுபடியும் ஆலோபதிக்கு வந்து அப்டீன்னு ஏகப்பட்ட அலக்கழிப்பு. இந்த வயசுல எப்பவும் மாத்தர சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்னு நெனச்சாலே கொலவெறி வரும். பீரியட்ஸ் வரதுக்காக கான்ட்ராசெப்டிவ் மாத்திரை சாப்பிட்டு அதனால ஒபிசிட்டி வந்து, ஒபிசிட்டியால டிப்ரஷன் வந்து, டிப்ரஷனால அதிகம் சாப்ட்டுன்னு விஷஸ் சர்க்கில்ல மாட்டிக்கிட்டேன். ஒருவழியா மாத்திரைகள்லேந்து விடுதலையாறதுக்குள்ள ஒடம்பு ரொம்ப பெருத்துப் போச்சு. அதைக் குறைக்கணும்னா டயட், எக்சர்சைஸ்னு எல்லாத்தையும் கவனிக்கணும். வேலைக்குப் போய்கிட்டே இதையும் கவனிக்க முடியல. ஒரு ஸ்டேஜ்ல போதுண்டா சாமின்னு எல்லாத்தையும் உட்டுட்டேன். ஒடமபு குண்டானதால கழுத்து வலி, இடுப்பு வலி, முட்டி வலின்னு இலவச இணைப்பா நெறய வலி. இத்தனையும் சுமந்துக்கிட்டு எதுக்காக இன்னும் உயிரோட இருக்கேன்னு எனக்கு நெஜமாகவே தெரியல…” மாலதியின் கண்கள் கலங்கியிருந்தன. கண்களைத் துடைக்க அவள் முயலவில்லை. பார்வை விட்டத்தில் நிலைகுத்தியிருந்தது. அவளுக்கு ஆறுதலாகச் சொல்ல அர்த்தமுள்ள ஒரு சொல்கூடத் தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்த நீலகண்டன் மௌனமாக அமர்ந்திருந்தான். “என் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாம என் பின்னால ஓடிவந்த ஆம்பளைங்க, என் பக்கத்துல நின்னு பேசவே அவ்ளோ ஆசைப்பட்ட ஆம்பளைங்க இப்ப என்னைப் பாத்து அரை சிரிப்பு சிரிச்சிட்டு ஒதுங்கிப் போறததான் என்னால தாங்கவே முடியல…” “அது உண்மையிலேயே அவ்வளோ முக்கியமா மாலதி?” நீலகண்டன் மெல்லிய குரலில் கேட்டான். “ஆக்சுவலா பாத்தா இல்லதான். ஆனா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நான் இருந்த நிலமயோட கம்பேர் பண்ணும்போது மனசு கேக்க மாட்டேங்குது. இதுலேந்து எப்படி வெளில வரதுன்னு தெரியல. மேபி உங்கள மாதிரி இன்னும் ஒண்ணு ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் இருந்தா கொஞ்சம் நல்லா இருக்கும்போல இருக்கு.” அப்படிப்பட்ட நண்பர்கள் கிடைக்காமல் போக மாட்டார்கள் என்று சொல்ல நினைத்து நிறுத்திக்கொண்டான். இதுபோன்ற ஆயத்த பதில்கள் அவளை மேலும் சோர்வடையச் செய்யும் என்று நினைத்தான். “ஸாரி நீலன். ரொம்ப பேசிட்டேன்னு நெனைக்கறேன். ரொம்ப ஸாரி… நீங்க வந்த விஷயத்தையே மறந்துட்டேன். கொஞ்சம் இருங்க டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.” கஷ்டப்பட்டு எழ முயன்றவளுக்குக் கை கொடுத்து உதவிய நீலகண்டன், “வாங்க, ரெண்டு பேரும் சேந்து டீ போடலாம்” என்றான். “டீ போடறதுக்கு ரெண்டு பேரா” என்று சொன்னபடியே எழுந்துகொண்ட மாலதி கலகலவென்று சிரித்தாள். கல்லூரியில் அவள் வாங்கிய அழகிப் பட்டங்களுக்கான அடையாளமாய் இருந்தது அந்தச் சிரிப்பு. அந்த அழகான முகத்திற்குக் கீழே மெலிந்த கட்டுடலையும் அந்த உடல் ‘மனம் விரும்புதே’ பாடலுக்கு நடனமாடுவதையும் நீலகண்டன் ஒருகணம் கற்பனை செய்துபார்த்தான். “வலி இப்ப எப்படி இருக்கு?” என்றாள் மஞ்சு. தூக்கத்திலிருந்து முழுமையாக வெளியே வராத நீலகண்டன் காலை அசைத்துப் பார்த்தான் சுரீரென்று வலித்தது. வலியின் வெளிப்பாடு முகத்தில் தெரிந்ததைக் கண்ட மஞ்சு பதறினாள். “அடிபட்ட கால அசைக்கக் கூடாதுன்னு தெரியாதா? எதுக்கு இந்த வேல உங்களுக்கு” என்றாள். நீலகண்டன் அசையாமல் படுத்திருந்தான். “சாப்பிடறீங்களா?” என்றாள் மஞ்சு. “பாத்ரூம் போகணும்” என்றான். மஞ்சு கைத்தாங்கலாக அவனைக் கட்டிலிலிருந்து கீழே இறக்கிக் கழிவறைக்கு அழைத்துச் சொன்றாள். மனைவியாகவே இருந்தாலும் இன்னொருவரின் துணையோடு நடக்க வேண்டியிருப்பதை எண்ணி மனம் வருந்தியது. கல்லூரிகளுக்கிடையிலான வாலிபால் போட்டிக்கான பயிற்சிகளும் பயிற்சி ஆட்டமும் முடிய நெடுநேரம் ஆகிவிட்டது. சாம்பல் போர்வை பூமியின் மீது படர ஆரம்பித்திருந்தது. ஆடுகளத்திலிருந்து வண்டியை ஓடடிக்கொண்டு காலியாக இருந்த கல்லுரி வளாகத்தைத் தாண்டும்போது மதில் சுவரின் ஒரு கோடியில் ஏதோ சலனம் கண்டு திரும்பிப் பார்த்தான். யாரோ ஒருவன் இன்னொருவனைப் பலமாகத் தாக்கியது தெரிந்தது. அடி வாங்கியவன் தடுமாறிப் பின்னால் போனபோது இன்னொருவன் அவனை எட்டி உதைத்தான். அடி வாங்கியவன் பின்புறமாகத் தரையில் விழுந்தான். தடுமாறி எழுந்து ஓடப் பார்த்தவனை மூன்றாமவன் இடுப்பில் எட்டி உதைத்தான். அவன் சுருண்டு கீழே விழுந்தான். நீலகண்டனின் ரத்தம் கொதித்தது. “டேய்…” என்று பெரிதாகச் சத்தம் எழுப்பியவாறே வண்டியை அவர்களை நோக்கித் திருப்பினான். வளாகம் முழுவதும் எதிரொலித்த அந்த கர்ஜனையைக் கேட்டு அவர்கள் மூவரும் இவனை நோக்கித் திரும்பினார்கள். சில நொடிகளில் அந்த இடத்தை அடைந்தவன் வண்டியை நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி வேகமாக முன்னேறினான். கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தது அவன் நண்பன் மூர்த்தி. மூர்த்தியை அடித்த ஆட்களை நீலகண்டன் அந்தக் கல்லூரியில் பார்த்ததில்லை. தங்களை நோக்கி ஒண்டி ஆளாக ஒருவன் தைரியமாக முன்னேறுவதைக் கண்ட அந்த மூவரும் இவனைத் தாக்க ஆயத்தமானார்கள். அவர்களில் ஒருவனை நெருங்கிய நீலகண்டன் சட்டென்று இடது காலைத் தரையோடு முன்புறமாகச் சுழற்றி வலது காலுக்கு வலப்புறமாகக் கொண்டுசென்று அந்தக் காலை ஊன்றியபடி வலது காலைச் சுழற்றிப் பின்புறமாக உதைத்தான். சரியாக மோவாயில் இடிபோல இறங்கியது அந்த உதை. அடிபட்டவன் மல்லாந்து விழுந்தான். கோபத்துடன் தன்னை நெருங்கிய இரண்டாமவனைச் சற்றே குனிந்து இடுப்பில் தோள் கொடுத்துத் தூக்கி அப்படியே கீழே போட்டு இடுப்பில் உதைத்தான். ஒரு கணமும் தாமதிக்காமல் மூன்றாமவனின் தாடையில் எட்டி உதைத்தான். ஓரிரு கணங்களில் மூவரும் தரையில் கிடந்தார்கள். உதைக்கும்போது நீலகண்டன் எழுப்பிய ஹுங்காரங்களைக் கேட்டுச் சாலையிலிருந்து சிலர் எட்டிப் பார்த்தார்கள். அடி வாங்கிய மூவரும் ஆட்களின் தலைகள் தெரிவதைப் பார்த்து எழுந்து ஓடினார்கள். நீலகண்டன் மூர்த்தியைத் தோளில் தூக்கிக்கொண்டு மதில் சுவரைத் தாண்டிச் சாலையில் இறங்கி ஒரு ஆட்டோவை நிறுத்தினான். கழிவறையிலிருந்து படுக்கைக்கு வர ஐந்து தப்படிகள் போதும். நீலகண்டன் 18 தப்படிகள் நடந்து வர வேண்டியிருந்தது. மஞ்சு பிசைந்து தந்திருந்த உணவைப் படுக்கையில் சரிந்து உட்கார்ந்தபடி தேக்கரண்டியில் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினான். அவனுக்குப் பிடித்தமான உணவாக இருந்தும் சாப்பாடு இறங்கவில்லை. வண்டியை வேகமாக ஓட்டும் பழக்கம் இருந்தாலும் விவஸ்தையில்லாமல் ஓட்டுவதில்லை. தவறு நேரக்கூடிய இடங்களிலும் சந்தர்ப்பங்களிலும் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்வான். என்றாலும் ஒரு சந்திலிருந்து வேகமாக வந்த வண்டி தன்மீது மோதாமல் இருப்பதற்காக வேகமாகத் திருப்பியவன் பின்னால் வந்த வண்டியின் மீது மோதிக்கொண்டான். மோதிய வேகத்தில் வண்டி ஒரு புறமும் அவன் ஒரு புறமுமாகக் கீழே விழுந்ததில் வண்டியின் ஒரு பக்கம் பலத்த சேதம். இவனால் எழுந்திருக்க முடியவில்லை. விளையாட்டிலும் சண்டைகளின்போதும் பலமுறை விழுந்து உடனே துள்ளி எழுந்திருக்கிறான். இப்போது அசைய முடியவில்லை ஆம்புலன்ஸ் வந்துதான் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. இடுப்பெலும்பு முறிந்ததில் அறுவை சிகிச்சை, சிகிச்சைக்குப் பிந்தைய மருத்துவம் என எழுந்து நடக்க எட்டு மாதங்கள் ஆயின. சேமிப்பெல்லாம் கரைந்துபோனது. சம்பள இழப்பும் சேர்ந்துகொண்டது. அதையெல்லாம்விடப் பெரிய வலியை டாக்டரின் அறிவுரைகள் தந்தன. உங்களுக்கு இடுப்பில் கம்பி வைத்திருக்கிறோம். மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேகமாக நடக்கக் கூடாது. அதிக தூரம் நடக்கக் கூடாது. ஓடவே கூடாது. காலில் இயக்கும் கியர் வைத்த வண்டியை விட்டுவிட்டுத் தானியங்கி கியர் வண்டியை வாங்கிக்கொள்ளுங்கள். படி ஏறும்போதும் இறங்கும்போதும் கவனம் தேவை. கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது. யோகாசனம் செய்தால் முன்னால் வளையும் ஆசனங்களைத் தவிர்த்துவிடுங்கள். பேருந்தில் உட்கார்ந்தபடி நீண்ட பயணங்களைச் செய்யாதீர்கள். மாடி வீட்டில் இருந்தால் கீழ்த்தளத்துக்கு மாறிவிடுங்கள் அல்லது எப்போதும் லிஃப்ட் பயன்படுத்துங்கள். பளு தூக்காதீர்கள். உணவில் கட்டுப்பாடு தேவை. எடை கூடினால் இடுப்பில் வலி எடுக்கும். டாக்டர் சொல்லச் சொல்ல நீலகண்டன் உறைந்துபோய் உட்கார்ந்திருந்தான். பதில் தெரிந்திருந்தும் தவிர்க்க முடியாமல் அந்தக் கேள்வியைக் கேட்டான். “ஸ்போர்ட்ஸ்…?” டாக்டர் கருணையே இல்லாமல் தலையை இடவலமாக ஆட்டினார். “கேரம்போர்டு, செஸ் இதெல்லாம் ஆடலாம். அதிலும் ரொம்ப நேரம் உட்கார்ந்திருக்கக் கூடாது.” சாப்பிட்ட தட்டை மஞ்சு எடுத்துக்கொண்டு போனாள். நீலகண்டன் மாத்திரை சாப்பிட்டான். வேகத்தைக் குறைப்பதற்கான ஐந்து ஆண்டுக் காலப் போராட்டத்தில் கிட்டத்தட்ட வெற்றியடைந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் காலையில் எங்கிருந்து அந்த வேகம் வந்தது? ஐந்து ஆண்டுக் காலப் பயிற்சி அந்த ஒரு கணத்தில் என்ன ஆயிற்று? அன்றாடம் எத்தனையோ படிகளைப் பொறுமையாக, மெதுவாக, ஒவ்வொரு படியாக ஏறி இறங்கும் பழக்கம் வந்துவிட்டது. அப்படியும் இந்தப் படியைப் பார்த்ததும் அந்தத் துள்ளல் ஏன் வந்தது? நல்லவேளை, பட்ட இடத்திலேயே படவில்லை. காலிலும் எலும்பு முறிவு இல்லை. ஒருவேளை அப்படி ஏதாவது நடந்து மீண்டும் படுத்த படுக்கையாகும் நிலை வந்திருந்தால் என்று நினைக்கும்போதே மனம் நடுங்கியது. நீலகண்டனுக்கு மாலதி இப்போது எங்கே இருக்கிறாளோ எப்படி இருக்கிறாளோ என்ற எண்ணம் தோன்றியது. ‘மனம் விரும்புதே’ பாடல் நினைவுக்கு வந்தது. தொலைவில் ரயில் சத்தம் கேட்டது. மாலதிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். https://amruthamagazine.com/2024/11/29/281-aravindan-short-story/  
    • சிலரின் அமைதி திமிர் அல்ல அது அவர்களுக்குள் இருக்கும் வலி..
    • வைரமுத்துவின் இரங்கல் பா...   10 பேர் கூட இல்லாத கடைசி ஊர்வலம் இளங்கோவன் செய்த கேவலமான செயல்களுக்கு இதுவே சாட்சி! ஒருவன் இறப்பில் தான் தெரியும் அவன் நல்லவனா கெட்டவனா என்று இதிலிருந்து தெரிகிறது இந்த இளங்கோவன் யார் என்று!    
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.