Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மாணவர்களுக்காக புலம்பெயர் தேசங்களில் ஆதரவு நிகழ்வுகள்

Featured Replies

559724_570198769666211_338881102_n.jpg

  • தொடங்கியவர்

577315_10151824750269128_1589418102_n.jp

  • தொடங்கியவர்

 

 

வணக்கம்

எனது பெயர் பாரதி , சொந்த நாடு கையில் இல்லாததால் தற்பொழுது பிருத்தானியாவில் வசித்து வரும் ஈழப் பெண்மணி. இங்குள்ள பிருத்தானியா தமிழ்இளையோர் அமைப்பில் அங்கத்தவராக இருக்கும் முறையில் அவர்கள் சார்பிலும் சேர்த்து உங்கள் போராடத்திற்கு எங்கள் முழு ஆதரவை தெரிவித்து கொள்வதோடு நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றேன்

 

இத்தனை காலமாக புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர் எவ்வளவோ போராட்டங்கள் செய்து வந்த போதிலும் தாய் தமிழ் நாடு மக்கள் அமைதியாகவும் பாராமுகமாகவும் இருந்தது ஒரு குறையாகவே இருந்து வந்தது. எங்கள் அவலத்தை பற்றிய விழிப்புணர்வோ அதை ஒட்டிய எழுச்சியோ கோடி கணக்கிலுள்ள தாய் தமிழ் நாட்டு மக்கள் இடையில் இல்லாமை என்பது ஏமாற்றத்தையே இத் தனை காலமும் தந்தது.

 

அனால் அக் குறையை தீர்த்து தமிழ் நாடு முழுவதும் ஈழ உணர்வு பற்றி எரியும் பொருட்டு உங்கள் போராட்டங்கள் அமைந்துள்ளது. இதைத் தான் இத்தனை காலம்மும் புலம்பெயர் ஈழத் தமிழர்களும் தாயகத்தில் வாழும் உடன் பிறப்புகளும் எதிர் பார்த்தோம்.

தாய் மண்ணின் விடிவிற்கான போரட்டத்தை எங்கள் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் இளையோர் கையில் 2008ஆம் ஆண்டு மாவீரர் உரையின் மூலம் ஒப்படைத்தார். அதை நன்கு புரிந்து புலம்பெயர்ந்து வாழும் இளையோரும், குறிப்பாக 'தமிழ் இளையயோர் அமைப்பு'ம் செயல் பட்டு வருகிறது.

 

இவர்களுடன் தாய்த் தமிழ் நாட்டு மாணவர்களும் கைகோர்க்கும் வண்ணம் வீறுகொண்டு எழுந்து புரட்சியுடன் போராடுவது புலம்பெயர் ஈழ தமிழர்களிற்கும் தாயக உறவுகளிற்கும் புத்துணர்வும் உற்சாகமும் அளித்துள்ளது.

உங்களுடைய வேலை பாடுகளையும் சிறுதுளி பெருவெள்ளம் என பெருகியுள்ள மாணவர் புரசியையும் பார்க்கும் போது எனக்கு தோன்றுவதாவது;

 

அக்கினி குஞ்சொன்று கண்டேன் - அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

வெந்து தணிந்தது காடு - தழல்

வீரத்தில் குஞ்சென்றும் மூபோன்றும் உண்டோ ...

மாணவர் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழ அரசு பிறக்கட்டும்!

 

தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்

நன்றி

பாரதி மகேஸ்வரன்

  • தொடங்கியவர்

லயோலா மூட்டிய லங்கா தீ! தமிழகம் முழுவதும் பரவிவிட்டது

எத்தனை நாள் போராட்டம் என்ற வரையறை கிடையாது, தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்....

 

இந்த பதிவை கண்டும் காணாமல் செல்லும் சகோதர்களே கொஞ்சம் கவனியுங்கள் :

 

தமிழகம் கல்லூரி மாணவர்கள் நடத்தும் பட்டினி போராட்டம் அரசியலுக்காகவோ , பணத்திற்காகவோ இல்லை ..

அவர்களிடம் இருக்கும் தமிழின உணர்வில் கொஞ்சமாவது வேண்டாமா நமக்கு ..

 

அவர்களுக்கு இணையத்தின் மூலமாவது உங்கள் ஆதரவை அளியுங்கள் .. எகிப்தில், துனுசியாவில் இனையதின் மூலமாக ஒரு மாற்றதை ஏற்படுத்தும் போது நம்மால் ஏற்படுத்த முடியாதா..?


இன்னும் தூங்கினால் ஈழ தமிழர்கள் சித்ரவதைகளை அனுபவித்துகொண்டும் தான் இருப்பார்கள் .. தயவுசெய்து share பட்டனை அழுத்துங்கள் . மாணவர் சக்தி வெற்றி பெற்றே தீரும் ..

 

  • தொடங்கியவர்

ஜெர்மனி வாழ் தமிழர்கள் தமது ஆதரவை தெரிவித்துள்ளார்கள்

 

ஆணும் பெண்ணும் ஆடி மகிழ்ந்து, அமைதியான குடிவாழ்க்கை நடந்து, சங்கம் தமிழ் வளர்த்த தமிழ்த் திருநாட்டை பௌத்தம், சமணம் என்ற ஆரியதுறவு மதங்கள் சூழ்ந்து துன்புறுத்திய போது 14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் நாமார்க்கும் குடியல்லோம் என்று ஆரம்பித்து வைத்தார் திருநாவுக்கரசநாயனார். அது இந்திய உப கண்டம் எங்கும் பற்றி எரிந்தது. அன்பென்ற பெயரால் துவேசம் வளர்த்த துறவு மதங்கள் இந்தியாவை விட்டு ஒழிந்தன.

 

இன்றைய நெருப்பை மூட்டியவர்கள் லையோலா கல்லூரி மாணவர்கள். இது நிச்ச்சயம் கண்டம் முழுவதும் பரவிக் காங்கிரசை எரிக்கும். ஈழத்தமிழருக்கு விடுதலையை வாங்கித்தரும்.

  • தொடங்கியவர்

1868_575029849181936_1996034242_n.jpg



லண்டனில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டம்..

  • தொடங்கியவர்

டென்மார்க்கில் இருந்து ஒரு படைப்பாளியின் ஆதரவு குரல்

 

  • தொடங்கியவர்

சென்னையில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஊடக மாநாடு !


தமிழக ஊடக உறவுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு

 

ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச் சபையில் மையங்கொண்டுள்ள சிறிலங்கா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமானதாக கருதப்படுகின்ற நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது ஊடக மாநாடொன்று தமிழகத்தில் இடம்பெறவுள்ளது.


சமகாலத்தில் தமிழகத்தில் தோற்றம் பெற்றுள்ள உணர்வெழுர்ச்சியான நிலை புலம்பெயர் தமிழர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வரும் சூழலில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது இந்த ஊடக மாநாடு இடம்பெறுகின்றது.

 

எதிர்வரும் மார்ச் 18ம் நாள் திங்கட்கிழமை சென்னையில் இடம்பெறவுள்ள ஊடக மாநாட்டில் தமிழக ஊடக உறவுகைள பங்கெடுத்துக் கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடக அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.


நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச் சபை விவகாரம் குறித்தும் - உலகத் தமிழர்களால் முரசறையப்படவுள்ள தமிழீழ சுதந்திர சாசனம் குறித்தும் பிரமதர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விளக்கமளிக்கவுள்ளார்.

 

இதேவேளை தமிழீழம் நோக்கிய தமிழர்களின் அரசியற் செயற்பாடுகள் குறித்தும் பிரமதர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் எடுத்தியம்பவுள்ளார்.


நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழக தோழமை மையத்தின் ஓருங்கிணைப்பில் இடம்பெறுகின்ற இந்த இந்த ஊடாக மாநாட்டில் அமெரிக்காவில் இருந்தவாறு இணையவழி காணொளியூடாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பங்கெடுக்கவுள்ளார்.

 

Regus Hall / City Centre / 6th Floor /Mylapore/ Chennai.எனும் முகவரியில் 18/03/2013 அன்று மதியம் 1:30 மணிக்கு இந்த ஊடக மாநாடு இடம்பெறுகின்றது.

 

நாதம் ஊடகசேவை

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

புலம் பெயர் மாணவர்களின் காணொளி அல்ஜஸீராவில்

 

உலகத்தின் மிகவும் பிரபலம் பெற்ற தொலைக்காட்சியான அல் ஜஸீராவில் தமிழ் இளையோர் டென்மார்க்கில் இருந்து வெளியீடு செய்த காணொளி ஒளிபரப்பானது.


டென்மார்க், பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, நோர்வே போன்ற பல நாடுகளில் இருந்து தமிழக மாணவர்களுக்கு வழங்க தயாரிக்கப்பட்ட இந்தக் காணொளியை ஒரு முக்கியமான ஆதாரமாக அல் ஜஸீரா வெளியிட்டுள்ளது.

 

மில்லியன் கணக்கான நேயர்கள் மத்திய கிழக்கு உட்பட அமெரிக்கா முதற் கொண்டு உலகம் முழுவதும் இந்தத் தொலைக்காட்சியை பார்க்கிறார்கள்.

 

தமிழக மாணவர்களையும் புலம் பெயர் மாணவர்களையும் இணைத்து அல் ஜஸீரா வெளியிட்ட செய்தியில் செய்திகளும், புகைப்படங்களும் வெளியாகியுள்ளன, இறுதியில் காணொளி இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.
மேலும் லயோலா கல்லூரிமுதல் சட்டக்கல்லூரி மாணவர் வரை அனைத்து மாணவர்களும் இந்தக் காணொளியை பார்வையிட்டு மகிழ்வு தெரிவித்து, தனிப்பட கடிதமும் அனுப்பியுள்ளார்கள்.

 

உலகத் தமிழ் மாணவர்களின் ஒன்றிணைவானதை ஒரு மகத்தான சக்தியாக அல் ஜஸீரா கணித்து வருவது மகிழ்வு தரும் விடயமாகும்.

 

அதேவேளை உலகத்தின் அதிகூடுதலான நேயர்களை கொண்ட தொலைக்காட்சியில் இடம் பிடித்தது அனைத்து மாணவருக்கும் கிடைத்த பெருமையாகும்.

 

கீழே உள்ள இணைய முகவரியை அழுத்தினால் அல் ஜஸீராவின் செய்தியை காணலாம்…
 

http://stream.aljazeera.com/story/201303190100-0022621



http://www.alaikal.com/news/?p=124857

  • தொடங்கியவர்

ஜப்பானில் தமிழர்கள் போராட்டம்

 

381173_442692835799748_1699810483_n.jpg

  • தொடங்கியவர்

31901_495999013793383_623201147_n.jpg

  • தொடங்கியவர்

இன்று காலை 9 - 11 மணிவரை சான் பிரான்சிஸ்கோ நகரத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் முன் வளைகுடாப் பகுதித் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் தமிழ்ச் சகோதர, சகோதரிகள் வந்து இப்போராட்டத்தை ஆதரித்து முழக்கம் செய்தது நம்பிக்கையை ஊட்டியது.

 

குறைந்த நாட்களில் (ஞாயிறன்றுதான் இந்த ஆர்ப்பாட்ட நடத்த கதைக்கத் துவங்கினோம்) 40-45 தமிழர்கள் அதுவும் வாரநாளில் வந்து ஆர்ப்பாட்டம் செய்தது மனதை நெகிழ்வித்தது.

 

“We support TN Students", "INDIA-SUPPORT HUMAN RIGHTS, INDIA-SAVE TAMILS, INDIA-DONT DILUTE US RESOLUTIONS" போன்ற முழக்கங்கள் தூதரக அதிகாரிகளின் காதில் விழுந்திருக்கும்.

 

துணைத் தூதர் ஒருவரைச் சந்தித்து உலகத் தமிழ் அமைப்பின் சார்பில் கடிதமொன்றை அளித்தோம்.

 

காவல்துறையினரின் ஒத்துழைப்புடனும், பாதுகாப்புடனும் நன்கே இந்த ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.

 

குறைந்த கால அவகாசத்தில் வந்த வளைகுடாப்பகுதித் தமிழர்களுக்கு நன்றி செல்ல வார்த்தை இல்லை. அடுத்தப் போராட்டம் வெகுவலிமையாக நடைபெறும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.


தமிழக மாணவர்கள் வெல்வார்கள்! அவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள்! நிச்சயம் வெல்வோம், நாளை தமிழீழம் காண்போம் !!

 

 

http://www.youtube.com/watch?v=soZMZ8XEE78

  • தொடங்கியவர்

நோர்வேயில் நாளை கவனயீர்ப்பு அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம் – தமிழ் இளையோர்.

 

 

இலங்கைத் தீவில் இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வரும் ஈழத் தமிழ் மக்களின் சுதந்திரத்துக்காக நீதி வேண்டிய தாய்த் தமிழக மாணவர் சமூகம் முன்னெடுக்கும் ஜனநாயக வழியிலான போராட்டங்களுக்கு ஆதரவாகவும் பிரித்தானியாவில் இந்தியத் தூதரகத்தின் முன்னால் கால வரையரையற்ற கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கும் தமிழ் இளையோர்களுக்கு ஆதரவாகவும் அவர்கள் முன்வைத்துள்ள ஆறு கோரிக்கைகளை ஆதரித்தும் அதே கோரிக்கைகளை நோர்வே அரசிடமும் சர்வதேச நாடுகளிடமும் ஐக்கிய நாடுகள் சபையிடமும் இந்திய வல்லரசிடமும் முன்வைத்து ஈழத்தமிழ் மக்களுக்கான நீதி கோரிய கவனயீர்ப்பு அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நோர்வே தமிழ் இளையோர் சமுகம் நாளை முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளனர்.

 

நாளை புதன்கிழமை 20.03.13 தொடக்கம் தொடர்ச்சியாக காலை 10 மணி தொடக்கம் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டமானது Stortinget , Osloஎனும் முகவரியில் நடைபெறவுள்ளது.இந்தியா முதல் ஐரோப்பா வரை தமிழ் மாணவர்களும் இளையோர்களும் இணைந்து முன்னெடுக்கும் இந்த நீதிக்கான உரிமை கோரிய போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில் நோர்வே தமிழ் மாணவர்களும் இளையோர் சமூகமும் முன்னெடுக்கும் இந்தப் போராட்டத்தில் நோர்வே வாழ் தமிழ்மக்கள் அனைவரும் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கி உரிமைக்கு குரல் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

தமிழ் இளையோர் நடுவம் நோர்வே


Tamil Youth Center Norway
தொலைபேசி: 46212121 / 47644063
மின்னஞ்சல்: info@tyc.no

  • தொடங்கியவர்

64128_438025796272789_817569040_n.jpg

  • தொடங்கியவர்

Tamil community will be gathering Friday March 22, 2013 @ 6:00 PM at 4th Floor University Center, Carleton University, Ottawa, Canada to support the Tamil Nadu students by having a symbolic 24 hour hunger strike.

  • தொடங்கியவர்

599079_395988400499356_711882744_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.