Jump to content

தோலின் நிறமும் அது செய்யும் மாயங்களும்


Recommended Posts

தோலின் நிறத்தை வைத்து வெள்ளை, கறுப்பு , மஞ்சள், பிரவுண் (கபிலம் ) இப்படி மனிதர்களை பிரிப்பதும், அது சார்பாக ஒருவரை மேலானவர்/நல்லவர் அல்லது கிழானவர் / கேட்டவர் என ஒருவரின் நடை, உடை, பழக்க வழக்கம் , தொழில் பற்றி தெரியாமலே எம்முள் சிறுவயதில் இருந்து விதைக்கப்பட்ட எண்ணக்கருக்கள் வீறுகொண்டெழுந்து மனிதரை பற்றி முன் முடிவுகள் எடுப்பதிலும் முடிகிறது. இங்கும் யாழ் களத்திலும் மக்களின் நிறம் / தோற்றத்தை வைத்து ஒவ்வொரு இன குழுமத்தையும் தரங்குறைந்த பெயர்களால் சர்வ சாதரணமாக அழைப்பதை பார்த்திருக்கிறேன்.

 

ஊரில் முன்னர் அழகு சாதன பொருளகள் கிடைக்காத தன்மை/ அல்லது வசதியீனம் காரணமாக பெண்கள் பூசு மஞ்சளை முகம் முழுக்க பூசி, அழகு பார்ப்பது வழக்கம் (20- 25 வருடம் முன்) . இப்போது அது போய் , fair and lovely, fairever .......போன்ற முகப்பூச்சு களுக்கு அடிமையாவதும், அவர்களது நிறம் சார்ந்த தாழ்வு மனப்பான்மை, அவர்களது self-esteem (தன்னம்பிக்கை? ) ஐ பாதிக்கும் அளவுக்கு போவதும் உண்டு. முன்னர் ஆண்களுக்கு தனியே தோலை வெளிர்ப்படைய செய்யும் முகபூச்சுகள்  பெரிதாக கிடைப்பதில்லை (7- 8 வருடங்கள் முன் ). தமது தோல் நிறத்தில் திருப்தி அற்ற ஆண்கள் பெண்களின் முக பூச்சுகளை  வாங்கி தமது குறையை போக்குவது உண்டு. இப்போ ஆண்களுக்கும் fair and lovely MAX fairness for men, Fair and Handsome என்ற பெயர்களில் ஆண்களின் insecurity ஐ போக்க முக பூச்சுகள் வந்துவிட்டன.

 

தோலின் நிறம் பற்றிய ஏற்ற தாழ்வுகள் எமக்கு மிகச்சிறுவயதிலேயே எம்மை அறியாமலே எமக்குள் விதைக்கபடுகிறன . அது நாம் வளர வளர பேரு விருட்சமாக வளர்ந்து ஒருவரின் self-esteem பதிக்கவும், அல்லது தன்னிலும் நிறம் குறைந்தவராக தெரிபவரை தரக்குறைவாக பேசவும், நடத்தவும், (bullying ) செய்யலாம். அல்லது வயதோடு வரும் பட்டறிவு நிறம் சார்ந்த ஏற்ற தாழ்வை சுழற்றி எறிந்துவிட்டு மனிதரை மனிதராக ஏற்கவும், பழகவும் வைக்கலாம்.  

 

இது பற்றி ஒவ்வொருவரும் சுய பரிசோதனை செய்து கொள்ளலாம். வெளி பகட்டுக்கு எல்லாரும் சமம் என்று சொல்வதும், நடை முறை வாழ்க்கையில் வேறு விதமாக இருப்பதும் பலரிடம்  காணக்கூடிய பழக்கம்.

 

நிறம் பற்றிய ஏற்ற தாழ்வுகள், ஒருவரின் நிறத்தை வைத்து கொண்டே ஒருவரை/ அது நிஜ மனிதராக கூட இருக்க தேவையில்லை, வெறும் படத்தை பார்த்த பின், எப்படியான முன் முடிவுகளுக்கு சிறுவர்கள் வருகிறார்கள் என்பதை இந்த காணொளிகள் சொல்கிறன.

 

 

 

http://www.youtube.com/watch?v=opULrjQv0Kg

 

 

 

http://www.youtube.com/watch?v=REZ9NDrpSqE&list=PL5545E6553E5B8D1C

 

 

http://www.youtube.com/watch?v=lENJzjpWznU&list=PL5545E6553E5B8D1C

 

http://www.youtube.com/watch?v=P_X-cm6Iqxg&list=PL5545E6553E5B8D1C

 

http://www.youtube.com/watch?v=ANoNZBe5J4s&list=PL5545E6553E5B8D1C

 

 

எழுத்து பிழைகள் திருத்தபட்டுள்ளது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.