Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிரான போராட்டத்தில் பாதிக்கப்படுவது மீனவர்கள்தான்: சங்கத் தலைவர் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராமேஸ்வரம்: ""இலங்கைக்கு எதிராக, தமிழக அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதால், மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்குவது, கைது செய்வது அதிகரித்துள்ளது,'' என, ராமேஸ்வரம் மீனவர் சங்க நிர்வாகி குற்றம்சாட்டி உள்ளார்.

விசைப்படகு மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் கூறியதாவது: சில நாட்களாக, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை எதிர்த்து, தமிழக அரசியல் கட்சிகள், "நாடக போராட்டம்' நடத்தி வருகின்றன. இதனால், ஆத்திரமடையும் இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை, காட்டுமிரண்டித்தனமாக தாக்கி கைது செய்கின்றனர். நலிவடையும் தமிழக மீனவர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, குரல் கொடுக்க வேண்டும். இலங்கை பிரச்னைக்கு இப்போது குரல் கொடுப்பது, வெட்கக்கேடானது. இலங்கை அரசின் கோபத்திற்கு, தமிழக மீனவர்கள்தான் பலிகடா ஆகின்றனர். மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண, இலங்கை அரசுடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்த, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

பா.ஜ., தேசியக்குழு உறுப்பினர் முரளீதரன் கூறியதாவது: தமிழக மீனவர், உலக தமிழர்களை பாதுகாக்க, உரிமைக்காக போராடுவதுதான், தமிழக கட்சிகளின் பணி. மத்திய அரசின் கையாளாகா செயலால், மீனவர்கள் தாக்கப்பட்டு, கைது செய்யப்படுகின்றனர். இலங்கையிடம், மத்திய அரசு இணக்கமான உறவு வைத்துள்ளதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. மத்திய அரசு கண்டிப்புடன் நடந்து கொண்டால் தாக்குதல் சம்பவங்கள் நடக்காது, என்றார்.

Dinamalar

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்றால் சிறிலங்காவிற்கு சென்று ராஜபக்ஸவுக்கு சேவகம் செய்து காலம்பூராவும் அடிமை மீனவர்களாக வாழலாம் என்று சொல்ல வருகின்றார விசைப்படகு மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் ? 

இந்திய மீனவர்கள் 60 பேர் கைது


                                                         ff7c351c5d4018614eaa4b6884d9e9f1.jpg
                            
                                                        

கச்சதீவில் வைத்து இந்திய மீனவர்கள் 60 பேர் இன்று காலை இலங்கை கடற்படையினரால் கைது
செய்யப்பட்டுள்ளதாக பம்பன் மீனவர் சங்க தலைவர் யூ. அருளானந்தம் தெரிவித்துள்ளார். 


இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் தங்கச்சி மடத்தைச் சேர்ந்தவர்கள் எனவும்,கைதானவர்கள் அனைவரும் நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

 

இதன்போது இலங்கை கடற்படையினரிடமிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட மீனவர்கள் 20 பேர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் இராமேஸ்வரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மாவட்ட வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை நேற்று இரவு 19 இந்திய மீனவர்கள் தலைமன்னார் கடற்பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   14 மார்ச் 2013, வியாழன் 12:45 பி.ப

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.