Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்திரிக்காவின் தேசிய அரசுக் கனவின் பின்னணி என்ன?

Featured Replies

சந்திரிக்காவின் தேசிய அரசுக் கனவின் பின்னணி என்ன?

ஒன்றுமே இல்லாத இடத்தில், இது பரவாயில்லை என்கிற விதத்தில், அமெரிக்காவின் தீர்மானம் குறித்து, சில அமைப்புக்கள் ஆறுதலடைகின்றன .

 

'இதில் ஒன்றுமே இல்லை' என்பதை இவர்கள் எப்போதும் புரிந்து கொள்ளப்போவதுமில்லை.
இலங்கை மீது தீர்மானம் கொண்டு வந்தாலே போதும் என்று திருப்திப்பட்டுக் கொள்பவர்கள், பூகோள அரசியலைப் புரிந்து கொள்ள விரும்பாத நாற்காலிக் கனவான்கள் என்று இலகுவில் சொல்லிவிடலாம்.
அமெரிக்கா சமர்ப்பித்த நகல் தீர்மானத்தில், நவநீதம் பிள்ளை அம்மையாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சொல்லப்படும் 'சர்வதேச சுயாதீன விசாரணை' என்கிற சொல்லாடலை இணைத்தவுடன், அமெரிக்கா அதனை ஏற்றுக்கொண்டுவிட்டது என சில நுனிப்புல் மேய்வோர் ஆர்ப்பரிக்கத் தொடங்கியுள்ளனர்.

 

சர்வதேச விசாரணை செய்யப்படவேண்டுமென அமெரிக்கா எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அம்மையார் குறிப்பிட்டுள்ளார் என்றுதான் அமெரிக்க வரைபு கூறுகிறது.

 

அமெரிக்கா ஊடாக சிங்களத்தை தண்டித்துவிடலாம் என்கிற பெருத்த நம்பிக்கையோடு வாழ்பவர்கள், தமது நம்பிக்கை தோற்றுப்போய் விடக்கூடாது என்பதற்காக ,இல்லாததை இருப்பது போல் காண்பிக்க முயல்கின்றார்கள்.

 

இலங்கை இராணுவத்திற்கு அமெரிக்கா பயிற்சி கொடுப்பதை பற்றி இந்தத் தரகர்கள் மூச்சு விடமாட்டார்கள். இராஜபக்சவின் இந்தியத்தரகர் சு.சுவாமி , அமெரிக்கா சென்று அந்நாட்டின் தலைவர்களையும், தென்கிழக்கு ஆசியப் பிராந்தியப் பொறுப்பதிகாரிகளையும் சந்தித்தது குறித்து பேசமாட்டார்கள். எல்லாமே எமக்குச் சாதகமாக நடப்பது போல் காட்டுபவர்கள் , தமது பலவீனமான இராஜதந்திரப் பக்கங்களை மிக நேர்த்தியாக மறைத்து விடுகின்றார்கள்.


இது குறித்த ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைத்தால், இவர்களையும் விட்டால் 'இனம் அழிந்துவிடும்' என்று கவலை கொள்வதுபோல் பாசாங்கு செய்கின்றார்கள்.

 

இந்த அமெரிக்க மீட்பர்களின் ,சமகால பின் நவீனத்துவ [ இலக்கியத்தில் மட்டுமே இச்சொல்லை பாவிக்க முடியுமென்று யார் சொன்னது?] முகத்தினை , இத் தரகர்கள் கண்டு கொள்ள மறுத்தாலும், அதனை வெளிக்கொணர வேண்டியது ஊடகங்களின் கடமை.

 

அண்மைக்காலமாக ஒரு முன்னாள் பேரினவாத அதிபர் ஒருவரின் பெயர் பலமாக அடிபடுவதை அறிந்திருப்பீர்கள். அவர் வேறு யாருமல்ல. நாமறிந்த, நாடறிந்த, செம்மணியறிந்த, யாழில் சிங்கக் கொடியேற்றிய ரத்வத்தையின் மருமகள் சந்திரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்கா என்பவரே.
இவர் இந்தியா செல்கின்றார். இந்த முன்னாளை , இந்திய வெளிவிகார அமைச்சர், அவரின் செயலாளர் ரஞ்சன் மாதாய் , மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோர் கூட்டாகச் சந்திக்கின்றனர்.

 

அதிகாரத்தில் இல்லாத ஒருவரை , ஏன் இந்த முன்னணி அரசியல் அதிகாரவாசிகள் சந்திக்கின்றனர்?. இதையிட்டு மகிந்த கம்பனி குழப்பமடைகிறது. ஆனால் இந்தியாவோடு முரண்பட விரும்பாத காரணத்தால் கறுவிக்கொண்டு நிற்கிறது.

 

ஒரே நேரத்தில் இரண்டு எதிர்களோடு மோதக்கூடாது என்கிற தந்திரோபாய உத்தியைக் கடைப்பிடித்து, பேசாமல் இருக்கிறது சிங்களம்.

 

ஆனால் மகிந்த சகோதரர்களின் தற்போதைய பெருங்கவலை என்னவென்றால், தமது சிறி லங்கா சுதந்திரக் கட்சியை ,பண்டாரநாயக்காவின் வாரிசு உடைத்து பலவீனமானதாக மாற்றிவிடு
வார் என்பதுதான்.

 

மைத்திரிபால சிறிசேன என்பவர் ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் . இவர் பண்டாரநாயக்கா குடும்பத்தின் நிரந்தர ஆதரவாளர். இவர் ஊடாக கட்சியை உடைத்துவிடுவார் சந்திரிக்கா என்று மகிந்தர் உணர்ந்ததால், சிரிசேனா மீது கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அண்மையில் செய்தியொன்று வெளிவந்தது. இத்தகைய நடப்புச் செய்திகளின் பின்புலத்தில், ஒரு ஆட்சிமாற்ற நகர்விற்கான சதியொன்று உண்டென, சர்வாதிகாரத்தை நோக்கி நடைபோடும் மகிந்த சகோதரர்கள் உணர்ந்து விட்டார்கள்.

 

உலக வலம்வரும் சந்திரிக்கா , 'தேசிய அரசாங்கம் ஒன்று உடனடியாக அமைக்கப்பட வேண்டும் ' என்று அடிக்கடி கூறிவரும் நிலையில், இது எவ்வாறு சாத்தியமாகும் என்கிற கேள்வி எம்மிடம் எழுவது இயல்பு .

 

இருந்தாலும் ,அதனை ரணிலை மட்டும் வைத்துக் கொண்டு உருவாக்க முடியாது என்பதை மகிந்தர் புரிந்து கொள்வார்.ஆகவேதான் சுதந்திரக் கட்சிக்குள் உடைப்பு வேலையை சந்திரிக்கா செய்ய முயற்சிக்கின்றார் என்று சந்தேகிக்கின்றார்.

 

மகிந்தர் இல்லாமல்,தேசிய அரசாங்கத்தை எப்படி அமைக்க முடியும் என்கிற கேள்விற்கு , உடைக்கப்பட்ட ஸ்ரீ.சு.கவும் ,யு.என்.பி யும், தமிழ் கூட்டமைப்பும்,இணைந்துதான் அதனை நிஜமாக்க முடியும் என்பதாக பதில் அமையும்.

 

அதேவேளை, மேற்குலகப் பின்புலத்தில் உருவாகும் இந்நகர்வில் , தானொரு பலவீனமானதொரு பங்காளியாக இருக்கப்போகிறேன் என்பதை யூகித்துக் கொண்டதால்தான், 'இராணுவத்தின் மீது போர்க்குற்ற விசாரணை நடாத்தவிடமாட்டேன். தலைமை வகித்த நானே அதற்கான பொறுப்பினை ஏற்கிறேன்' என்று வீரவசனங்களை உதிர்க்க ஆரம்பித்துள்ளார் சரத் பொன்சேக்கா.
பொன்சேக்காவை உள்வாங்காமல் விட்டால், சந்திரிக்காவின் தேசிய அரசாங்கக் கனவிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கப் போகும் நபரும் அவர்தான்.

 

கடந்த நான்கு வருடங்களில் ஆட்சிமாற்றத்திக்கான முயற்சிகளைப் பார்த்தால், முதல் தோல்வி ஆரம்பமாகிறது சரத் பொன்சேக்காவின் வீழ்ச்சியில் இருந்துதான்.

 

பொது எதிரணித் தலைமையை யார் பொறுப்பேற்பது என்கிற போட்டி வந்தபோது, சனாதிபதி தேர்தலில் ஓரணியில் நின்றவர்கள் பிரிந்து விட்டார்கள். ரணிலின் தலைமையால் , உள்ளூராட்சி சபைத்தேர்தல்களில் தமது பலத்தினை நிரூபிக்க முடியவில்லை.

 

இந்நிலையில் மகிந்தரின் அதிகார மையத்துள் பிளவினை ஏற்படுத்தாமல், பலமான எதிரணியை கட்டமைக்க முடியாது என்கிற முடிவுக்கு வருகின்றார்கள் ஆட்சி மாற்றமொன்றினை விரும்புவோர்.
ஆகவே , தீர்மானங்கள் ஊடாக சர்வதேச அளவில் மகிந்த சர்வாதிகார ஆட்சியை தனிமைப்படுத்துவது, பொருளாதார நிதி உதவிகளை வழங்கும் நிறுவனங்களை கட்டுப்படுத்துவது, சந்திரிக்கா ஊடாக அமெரிக்க எதிர்ப்பு நாடுகளை மகிந்தருக்கு எதிராக திருப்புவது, இரண்டு பலமற்ற அரசியல் சக்திகளை [இரணில் + சந்திரிக்கா] இணைத்து ஓரளவு பலமான எதிரணியை உருவாக்குவது என்பதுதான் ஆட்சிமாற்றத்தை விரும்பும் வல்லரசாளர்கள் மேற்கொள்ளும் தந்திரோபாய நகர்வாக இருக்கிறது.
ஆளும் கட்சியினுள் உடைப்பு வேலை தீவிரமடைந்தால், அடுத்த சனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஆட்சி மாற்றம் சாத்தியமாகும் வாய்ப்புண்டு.

 

இல்லையேல், அடுத்த தேர்தல்வரை இம்முயற்சிகள் தொடரும். சர்வதேச சுயாதீன விசாரணையை முன்வைக்காத தீர்மானங்களும் ஐ.நா.வில் வந்து போகும்.

 

ஆனால், 'பொது பல சேனா' பலமடையும் அதேவேளை, பிரதமர் பதவி தருவேனென சரத் பொன்செக்காவிற்கு மகிந்தர் வாக்குறுதி கொடுத்தால், ஆட்சிமாற்றம் கானல் நீராக மாறும்.
பொன்சேக்காவை எவ்வாறு கையாள்வது என்பதில்தான் ஆட்சி மாற்றத்தின் தலைவிதி தீர்மானிக்கப்படுமென எதிர்பார்க்கலாம்.

 

ஆனாலும் இதில் எந்தக் கூட்டு வந்தாலும் தமிழ் மக்களுக்கு உரிமைகள் கிடைக்கப்போவதில்லை. அதனை வழங்குவோமெனக் கூறி எவரும் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற முடியாது. ஏனெனில் அவர்கள் எல்லோரும், 'புலிகளை போரில் வென்று விட்டோம்' என்கிற மமதையில் வாழ்கின்றார்கள் என்பதே நிஜம்.

 

தமிழ் மக்களின் உரிமைகளை கொடுங்கள் என்று அழுத்தினால், ஆட்சி மாற்றம் நிகழாது. அத்தோடு, இராணுவத்திற்கெதிராக சர்வதேச விசாரணை தேவை என்று கூறினால், ஒட்டுமொத்த சிங்கள மக்களும் எதிர்ப்பார்கள் என்பதையும் அமெரிக்கா புரிந்து கொள்ளும்.

 

இந்த நிஜங்களை மறைப்பதால் யாருக்கு என்ன நன்மை?

 

 

ஆக்கம்: இதயச்சந்திரன்

 

மூலம்: தமிழ் கனேடியன் - பங்குனி 13, 2013
பிரசுரித்த நாள்: Mar 14, 2013 19:31:55 GMT

 

 

சந்திரிக்காவின் தேசிய அரசுக் கனவின் பின்னணி என்ன?

 

சர்வதேச விசாரணை செய்யப்படவேண்டுமென அமெரிக்கா எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அம்மையார் குறிப்பிட்டுள்ளார் என்றுதான் அமெரிக்க வரைபு கூறுகிறது.

 

இரண்டாவது வரைபு இலங்கையில் பிரவேசித்து விசாரணை நடத்த முயகின்றது என்பது சரியானது சட்டதுறையில் முன்னால் இருக்கும் வரைபொன்றை குறிக்கும் பின்னால் வரும் வரைபு குறிப்பிடும் போது அது அங்கீகரிக்கபட்டால் இரண்டும் அங்கீகரிக்கப்பட்டவைதான். 

 

அமெரிக்கா ஊடாக சிங்களத்தை தண்டித்துவிடலாம் என்கிற பெருத்த நம்பிக்கையோடு வாழ்பவர்கள், தமது நம்பிக்கை தோற்றுப்போய் விடக்கூடாது என்பதற்காக ,இல்லாததை இருப்பது போல் காண்பிக்க முயல்கின்றார்கள்.

அமெரிக்காவுக்கு நிச்சயம் தனது நலன்கள் இலங்கையில் இருக்கு.  GSP+ யை இன்னமும் நீக்கவில்லை.

 

ஆனால் இலங்கைக்கு தேவையான உதவிகள் எல்லாவற்றையும் போரின் போது பெற்றுக்கொடுத்த அமெரிக்க அதிகாரி பிளேக் போர் முடிந்தவுடன் கூறிய கூற்று "அரசு பொறுப்பு கூறலை கவனத்தில் எடுக்க வேண்டும்" என்பது. அதை அவர் மட்டும் கூறவில்லை, போரை செய்மதிகளை வைத்து படம் எடுத்துகோண்டு எதுவும் செய்யாமல் பார்த்துக்கொண்டிருந்த ஐ.நா.வின் பிரதம  காரியதரிசி இலங்கையில் வைத்து கூறியதும் அதுவேதான். எனவே இந்த பிரேரணைகள் பொறுப்பு கூறலை நோக்கி கட்டாயம் நகரும். எண்ணை சுடாக இருக்கும்போது தமது வடையையும் சுட்டுக்கொள்ள தமிழ் மக்களுக்கு தேவையான நகர்வுகளை புலம் பெயர் மக்கள்தான் செய்து கொடுக்க வேண்டும். இது சும்மா வாளாவிருந்துகொண்டு "மேற்குநாடுகள் தங்கள் நலனுக்குதான் பிரேரணையை கொண்டுவருகின்றன என்ற சோபேறித்தனமாக கட்டுரைகளை எழுத்துவதல்ல". எல்லோரும் தாங்கள் பொறுத்த தருணத்தில் மேற்கு நாடுகளை அணைத்து எமது தேவைகளையும் நிறிவேற்றிக்கொள்ள முயல வேண்டும்.

 

 

இலங்கை இராணுவத்திற்கு அமெரிக்கா பயிற்சி கொடுப்பதை பற்றி இந்தத் தரகர்கள் மூச்சு விடமாட்டார்கள்.

"அமெரிக்கா பயிற்சி கொடுத்தது என்பது" அடுத்த சோம்பேறிக்கதை. இந்தியா எத்தனையோ இராணுவ பயிற்சிகள் கொடுத்துவிட்டுத்தான் தமிழரை காக்க போவத்தாக நடிக்கிறது. ஆனால் அமெரிக்க கொடுத்தாக கூறிவது இராணுவ பயிற்சி அல்ல. இது அமெரிக்க இராணுவம் இலங்கை இராணுவத்திற்கு கொடுத்தாலும், இதை டென் மார்க், சுவீடன், நோர்வே, அவுஸ்திரேலிய நாட்டு தொண்டு நிறுவனக்கள் தமிழ் பொதுமக்களுக்கும் போரின் பின்னால் வழங்கியுள்ளார்கள். அதில் மூச்சுவிட ஒன்றும் இல்லை.  

 

இருந்தாலும் ,அதனை ரணிலை மட்டும் வைத்துக் கொண்டு உருவாக்க முடியாது என்பதை மகிந்தர் புரிந்து கொள்வார்.ஆகவேதான் சுதந்திரக் கட்சிக்குள் உடைப்பு வேலையை சந்திரிக்கா செய்ய முயற்சிக்கின்றார் என்று சந்தேகிக்கின்றார்........................................

 

சந்திரிக்காவின் தேசிய அரசாங்கக் கனவிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கப் போகும் நபரும் அவர்தான்.

...................

.....................

இந்நிலையில் மகிந்தரின் அதிகார மையத்துள் பிளவினை ஏற்படுத்தாமல், பலமான எதிரணியை கட்டமைக்க முடியாது என்கிற முடிவுக்கு வருகின்றார்கள் ஆட்சி மாற்றமொன்றினை விரும்புவோர்.

 

 

 ரணிலும் சந்திரிக்கவும் சேர்ந்ததின் பின்னர் தேசிய அரசாங்கம் பற்றி பேசலாம். பொன்சேக்காவுக்கு வாக்காளர் பினபலம் இருக்கு என்பது இன்னமும் நிரூபிக்கபடவில்லை. அவர் எதிர் கட்சியில் ஒருதடவை வென்றால் இலங்கை முழுவதாக முதலாளித்துவக் கோட்பாடுகளை ஒதுக்கி விட்டதாகத்தான் கருதலாம். அது நடக்கப் போவதில்லை. சந்திரிக்காவுக்கு SLFP யை உடைக்கும் பலம் இருந்தால் அதை காட்ட வேண்டும். மங்கள எதையும் செய்ய முடியவில்லை. ஆனால் மகிந்தா UNPயையும் JVP யையும் சின்னாபின்னப்படுத்திவிட்டார்.

 

 தீர்மானங்கள் ஊடாக சர்வதேச அளவில் மகிந்த சர்வாதிகார ஆட்சியை தனிமைப்படுத்துவது, பொருளாதார நிதி உதவிகளை வழங்கும் நிறுவனங்களை கட்டுப்படுத்துவது,

 

இப்படி ஒரு பொருளாதார தடை வரவேண்டுமாயின் போர்குற்றம்(இனவழிப்பு) சர்வதேச ரீதியில் ஏற்றுககொள்ளப்படத்தக்க விசாரணை அல்லது தீர்மானம்  முதலில் வரவேண்டும். இல்லையேல் அது EU போன்ற தனிப்பட்டதொன்றாகவே இருக்கமுடியும்.

 

 ஆளும் கட்சியினுள் உடைப்பு வேலை தீவிரமடைந்தால், அடுத்த சனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஆட்சி மாற்றம் சாத்தியமாகும் வாய்ப்புண்டு.

 

இது வெறும் ஆசை வார்த்தைகள். அரசு தமிழ் எதிப்பை காட்டும் வரை தேர்தலில் வெல்லல்லம் என்ரதை இப்போ மேற்கு நாடுகள் எற்றுக்கொள்கின்றன. அவர்கள் பொன்சேக்கவை அதை வைத்துதான் தூக்கிவிட முயன்றார்கள். சந்திரிக்க-ரணில்- பொன்சேக்கா கூட்டு வெல்ல வேண்டுமாயின் மேர்குநாடுகள் அவர்கள் தமிழர் எதிர்பை ஆரம்பிக்க்  தமது ஆதரவை கொடுக்க வேண்டும். ஆகவே இது எல்லாம் சும்மா சங்கிலித்தொடர் கற்பனைகள் மட்டுமே..

 

 சர்வதேச சுயாதீன விசாரணையை முன்வைக்காத தீர்மானங்களும் ஐ.நா.வில் வந்து போகும்.

 

இது ஆதாரமில்லாத எதிவு கூறல். போக போக பிரேரணைகள் இறுக்கமதை தவிர வேறு வழி இல்லை.

 

 

 பிரதமர் பதவி தருவேனென சரத் பொன்செக்காவிற்கு மகிந்தர் வாக்குறுதி கொடுத்தால், ஆட்சிமாற்றம் கானல் நீராக மாறும்................

......................பிரதமர் பதவி தருவேனென சரத் பொன்செக்காவிற்கு மகிந்தர் வாக்குறுதி கொடுத்தால், ஆட்சிமாற்றம் கானல் நீராக மாறும்

 

பொன்சேக்கவை பிரதமர் ஆக்க வேண்டுமாயின் கோட்டு தீர்ப்பை ரத்துசெய்ய வேண்டும்.  அது புலியை கூண்டுக்கு வெளியே அவிட்டு விட்டு சார்க்கஸ் காட்டுவது போல. பொன்சேக்கா என்ற புலி பிரதமர் பதவியை விட ஜனாதிபதி என்ற பதவிக்காக மகிந்தவை அடிக்கும். மகிந்தா கையாள வேண்டியது சிராணி சரத் சில்வா போன்றவர்களே. பொன்சேக்காவுக்கு தூதுவர் பதவிக்கு மேல் கொடுப்பது மகிந்தாமீது பழிவாங்க இடம் அளிக்கும். இராணுவத்தினர் பற்றி(சவேந்திரா) அண்மையில் மகிந்தா கோத்தாவுக்கு பாடம் கொடுத்திருந்தார்.  

 

 ஆனாலும் இதில் எந்தக் கூட்டு வந்தாலும் தமிழ் மக்களுக்கு உரிமைகள் கிடைக்கப்போவதில்லை. அதனை வழங்குவோமெனக் கூறி எவரும் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற முடியாது. ஏனெனில் அவர்கள் எல்லோரும், 'புலிகளை போரில் வென்று விட்டோம்' என்கிற மமதையில் வாழ்கின்றார்கள் என்பதே நிஜம்.

 

தமிழ் மக்களின் உரிமைகளை கொடுங்கள் என்று அழுத்தினால், ஆட்சி மாற்றம் நிகழாது. அத்தோடு, இராணுவத்திற்கெதிராக சர்வதேச விசாரணை தேவை என்று கூறினால், ஒட்டுமொத்த சிங்கள மக்களும் எதிர்ப்பார்கள் என்பதையும் அமெரிக்கா புரிந்து கொள்ளும்.

 

இந்த நிஜங்களை மறைப்பதால் யாருக்கு என்ன நன்மை?

 

திடுதிப்பென்று இதயசந்திரன் தான் என்ன சொல்ல வந்தேன் என்று மறந்து குழப்பிபோய்விட்டார். இதை யார் எங்கு மறுத்தார்கள். இதனால்தானே தீர்வு வேண்டும் என்றால் விசர்ரணை வரட்டும் என்று புல்ம் பெயர் மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

 தீர்வு ஒன்று இல்லாமல் ஆமிதன்னும் வடக்கு கிழக்கை விட்டு வெளியேற வேண்டுமாயின் விசாரணை வேண்டும். அது இல்லாமல் இலங்கையில் எதுவும் நடக்காது. அதாவது அமெரிக்காவின் கேள்வியான பொறுப்பு கூறலிற்கு என்ன பதில்?

 

இந்த கேள்விக்கு அமெரிக்கா பதில் கண்டால் மட்டுமே எதையாவது முன்னால் நகர்த்தலாம். இல்லாமல் அமெரிக்கா இலங்கையில் முதலிடத்தன்னும் முயன்றால் அது திரும்பவும் டோல் கம்பனி கதையாகத்தான் முடியலாம். இல்லையேல் ஆடைத்தொழில் நடப்பது போல இலங்கை கம்பனிகளைத்தான் கட்டி எழுப்பமுடியும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.