Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்தல விமான நிலையத்தால் கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும் அச்சம்!

Featured Replies

167139018airport.jpg

மத்தல விமான நிலையத்தால் கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும் அச்சம்!

March 14, 2013  04:03 pm

 
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடப்படக்கூடிய அபாயம் நிலவுவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. 

மத்தல சர்வதேச விமான நிலையத்தால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணிபுரியும் சிலர் தற்போது மத்தல விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள உபகரணங்கள் சில மத்தல் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதென ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்தார். 

 
  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் இலங்கை அரசின் விசேட பிரதினிதிகளை ..உடனடியாக கட்டுனாயக்காவிற்கு வரும்படி அழைக்கின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மத்தலவை பயன்படுத்தும் விமானசேவை நிறுவனங்களுக்கு 50% கட்டணக்கழிவு

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2013 15:25    
மத்தல விமான நிலையத்தைப் பயன்படுத்தவுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்களுக்கு சுமார் ஒரு வருட காலத்துக்கு 50 சதவீத கட்டணக் கழிவும் ஏனைய மூன்று வருடங்களுக்கு 25 சதவீத கட்டணக் கழிவும் வழங்குவதற்கான ஒப்பந்தங்கள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. 


அம்பாந்தோட்டை, மத்தல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம், இன்னும் மூன்று தினங்களில் அதாவது எதிர்வரும் 18ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளது. இந்நிலையில், விமான நிலையத்தின் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. 


டுபாய், சார்ஜா, அமெரிக்கா மற்றும் கட்டுநாயக்காவிலிருந்து புறப்படும் 4 விமானங்கள் எதிர்வரும் 18ஆம் திகதி, மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்படவுள்ளன. அதற்கான அனைத்து வேலைகளும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன என்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் பிரதித் தலைவர் கமல் ரத்வத்த தெரிவித்தார். 

எயார் அரேபியா, ஃப்ளை டுபாய், ஸ்ரீலங்கன் விமான சேவை மற்றும் மிஹின் லங்கா ஆகிய விமான சேவை நிறுவனங்கள், மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தங்களது விமானங்களை தரையிறக்குவதற்கான ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளன என்று ஏனைய நாடுகளினுடைய விமானங்களையும் மத்தலையில் தரையிறக்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

மத்தல விமான நிலையத்தைப் பயன்படுத்தவுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்களுக்கு சுமார் ஒரு வருட காலத்துக்கு 50 சதவீத விலைக்கழிவும் ஏனைய மூன்று வருடங்களுக்கு 25 சதவீத விலைக் கழிவும்  வழங்குவதற்கான ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். 

எதிர்வரும் 18ஆம் திகதி மத்தல விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்கவும் அங்கிருந்து விமானங்கள் புறப்படுவதற்குமான ஏற்பாடுகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த அவர், அதற்கான மேற்பார்வைகளை மேற்கொள்வதற்கான விமானப் பயண கட்டுப்பாட்டுக் கோபுரம், விமானப் பயண தகவல் சேவை மத்திய நிலையம் மற்றும் வான்வழி தொலைத்தொடர்பு நிலையத்தினூடாக நாடுகளுடன் தொடர்புகொள்ளல் மற்றும் பயிற்சிகள் தொடர்பான நிலையங்கள் என்பனவும் மத்தல விமான நிலையத்தில் காணப்படுகின்றன. 

சுமார் 45 மீற்றர் உயரமான நவீனமுறை தொலைத்தொடர்பு உபகரணங்கள் அடங்கிய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையமொன்றும் மத்தல விமான நிலையத்தில் காணப்படுவதாக கமல் ரத்வத்த மேலும் தெரிவித்தார்.
DSCF6325.JPG
DSCF6329.JPG
DSCF6343.JPG
DSCF6359.JPG
DSCF6365.JPG
DSCF6371.JPG
DSCF6403.JPG
DSCF6447.JPG
DSCF6483.JPG

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60781--50-.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.