Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போருக்குப்பின் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் சந்தர்ப்பத்தை அரசாங்கம் காலால் உதைக்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
போருக்குப்பின் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் சந்தர்ப்பத்தை அரசாங்கம் காலால் உதைக்கிறது
15 மார்ச் 2013
 
 

போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களின் மனங்களில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து போடவேண்டும் - கரு

Karu-6_CI.jpg

 

போருக்கு பின்னர், இலங்கைக்குள் ஜனநாயகம் மற்றும் மதங்களுக்கு இடையில் உண்மையான நல்லிணக்கம், இணைப்பு ஆகியவற்றை ஏற்படுத்த இருக்கும் சந்தர்ப்பத்தை காலால் உதைப்பதை இனியாவது நிறுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கிருளப்பனையில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இலங்கையில் சுமார் மூன்று தாசப்தங்கள் நடைபெற்ற இருண்ட பயங்கரவாத்தை முடிவுக்கு கொண்டு வந்து தற்போது 04 வருடங்கள் கடந்து விட்டன.  எனினும் போருக்கு பின்னர், மக்கள் மீண்டும் ஒரு முறை அடக்குமுறைக்கும், வன்மமான நிர்வாகத்திற்கும் உள்ளாவதை எதிர்பார்க்கவில்லை.

போர் வெற்றி குறித்து, அரசாங்கம் பெருமை பாராட்டிக் கொள்வது போல், அந்த போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களின் மனங்களில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து போடுவதும் முக்கியமானது.  அண்மையில் ஒருநாள் 16 பேருந்துகளில் கொழும்பு நோக்கி வந்தவர்கள் வவுனியாவில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.  போரில் காணாமல் போன தமது உறவினர்களை தேடித்தருமாறு கோரவே அவர்கள் கொழும்புக்கு வரவிருந்தனர்.

இவர்களில் பெருபாலானவர்கள் பெண்கள்,  அவர்களின் மன குமுறலை ஜனநாயக ரீதியாக கூறவிருந்த சந்தர்ப்பத்தையே இந்த அரசாங்கம் இராணுவத்தை பயன்படுத்தி நிறுத்தியது.

நாம் அனைத்து விடயங்கள் குறித்தும் அரசியல் கோணத்தில் பார்க்கக் கூடாது.  ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு உந்துசக்தியை கொடுக்க அவர்கள் வரவில்லை.  அது அப்படியாக இருந்தாலும் பலவந்தத்தை பயன்படுத்தி அரசாங்கம், அதற்கு தீர்வுகாண கூடாது.  ஏதேனும் எதிர்ப்பு வருமாயின் அதனை சிந்தனையுடன் கூடிய முகாமைத்துவத்துடன் அணுக வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு.  இதனை தொடர்ந்தும் அரசாங்கம் மறந்து வருகிறது.

வடபகுதி மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.  ஜனாதிபதி தேர்தல், உள்ளுராட்சி தேர்தல் ஆகியவற்றில் வாக்களிக்க அந்த மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்த போதும், இன்னும் வடமாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

போர் காரணமாக முழு நாட்டு மக்களுக்கும் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து போட ஜனாதிபதி கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தார். எனினும் இதுவரை அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் முனைப்புகளை மேற்கொள்ளவில்லை.

 நாட்டின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை காரணமாகவே,  பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போது, இந்திய ஒதுங்கி இருந்து பார்த்து கொண்டிருந்தது.   13வது அரசியல் அமைப்புத் திருத்ததிற்கு அப்பால் சென்ற அதிகாரத்தை பரலாக்குவதாக அரசாங்கம், இந்தியாவுக்கு உறுதியளித்துள்ளது.

இந்த உறுதிமொழியை மாத்திரமல்ல, சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளையும்  அரசாங்கம் மீறி வருகிறது.  இதனால் நாடு தொடர்பாக சர்வதேசத்தின் நம்பிக்கையும், கௌரவமும் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleID/89663/Default.aspx

மகிந்த கூட்டம் காலால் உதைக்க அதற்கும் ஆதரவையும் துணிவையும் தரும் கூட்டமே நீங்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.