Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பின் தவறுக்காக இந்தியாவுக்கு வரும் சாதாரண மக்களை பழிவாங்கக்கூடாது

Featured Replies

இலங்கை அரசாங்கம் செய்யும் தவறுகளுக்காக இந்தியாவுக்குச் செல்லும் சாதாரண மக்களைப் பழிவாங்கவேண்டாமெனத் தமிழகத்தைக் கேட்டுக் கொள்வதாக  மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தெரிவித்துள்ளது.

 

 

இதேவேளை, தமிழகத்தில் இலங்கையர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதனைத் தடுக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் கதைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்துவதாகவும் ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக ஜே.வி.பி. பிரசார செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவிக்கையில்; இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அரை இராணுவ ஆட்சியை மேற்கொள்ளும் அரசாங்கம் அங்கு தமிழர்களின் உரிமைகளை மீறிக்கொண்டிருக்கின்றது. இதற்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

 

இந்நிலையில் இலங்கை  அரசாங்கம் செய்யும் தவறுகளுக்காக தமிழ்நாட்டுக்கு செல்லும் சாதாரண மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதுடன் அவர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன. இவ்வாறு பௌத்த பிக்கு ஒருவர் மீது தாக்குதல்  நடத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் செய்யும் தவறுகளுக்காக இவ்வாறு சாதாரண மக்களை பழிவாங்குவதனை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.


தமிழகத்தின் இவ்வாறான செயற்பாடுகள் சிலவேளை இங்கு இனவாதத்தைத் தூண்டிவிடக்கூடும். இதனால் தமிழ்நாட்டு  மக்கள் இலங்கைக்கு வரமுடியாத  நிலையேற்படலாம். இதன் காரணமாக அரசாங்கம் செய்யும் தவறுகளுக்காக சாதாரண மக்களுக்கு இடையூறு ஏற்படுவதனைத் தவிர்த்துக் கொள்ளுமாறு நாம் தமிழ்நாட்டு மக்களிடம்  கேட்டுக் கொள்கின்றோம்.

 

இதேவேளை, இந்த பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் கதைக்க நடவடிக்கையெடுக்க வேண்டும். அத்தோடு  அரசாங்கம் நாட்டில் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.

 

http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=3518:2013-03-18-17-39-31&catid=54:local&Itemid=458

  • தொடங்கியவர்

அன்பும் பாசமும் மிக்க தமிழக உறவுகளே!

 

 

எமது மக்களின் விடுதலைக்காக குரல் நீங்கள் குரல் கொடுப்பதை இட்டு மிகவும் பெறுமைப்படுகின்றோம்.எம் பொக்குழ் கொடிகள் என்பதை உலகுக்கு உறுதி செய்கிறீர்கள்.உங்கள் வீரமிகு போராட்டத்திற்கு தலை வணங்கின்றோம்.

 

உறவுகளே !

 

தயவுசெய்து அங்கு வரும் சிங்களவர்களை தாக்காதீர்கள்.ஆனால் வரவிடாதீர்கள்.வரும் சிங்களர்களுக்கு ஏன் நாம் போராடுகின்றோம் என எடுத்துக்கூறுங்கள்.இன அழிப்புப்படங்களைக்காட்டுங்கள்.பல சிங்களவர்களுக்கு உண்மை தெரியாது.நீங்கள் வன்முறையில் இறங்கினால் நாம் பட்ட கஸ்டம் எல்லாம் வீணாகிவிடும்.நம்மை அடக்க அதுவே வழிகாட்டிவிடும்.மீண்டும் ஆயுதம் ஏந்தும் நிலை ஏற்படின் நம் வலிமையைக்காட்டுவோம்.


நன்றி.

 

பூ வரசு (முகநூல்)



போர்நிறுத்தம் தேசத்துரோகம்...

 

 

2007ல் போரைத் தொடங்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்த புத்த பிட்சுக்கள். -

 

164242_10200732990865407_707369374_n.jpg

  • தொடங்கியவர்

தாக்குதல்களை நிறுத்துங்கள்: மனோ ஜெயாவிற்கு மின்னஞ்சல்

 

இலங்கை யாத்திரீகர்கள் மீதான தாக்குதல்களை உடன் தடுத்து நிறுத்துங்கள்  என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனோ கணேசன் அனுப்பியுள்ள அவசர மின்னஞ்சலியோ மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரினால் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் கடிதத்தின் பிரதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல் கடிதத்தில் மேலும்

தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

"இலங்கையிலிருந்து இந்தியா சென்ற சிங்கள யாத்திரீகர்கள் மற்றும் பெளத்த தேரர்கள் மீது தமிழகத்தின் தஞ்சை, திருச்சி மற்றும்  சென்னை நகரங்களில் வன்முறை தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இத்தகைய வன்முறை சம்பவங்கள் தொடரா வண்ணம் இரும்பு கரங்கொண்டு உடன் தடுத்து நிறுத்துங்கள்.  இதன் மூலமே இலங்கை தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளை பெற்றிட உங்கள் அரசாங்கம் கொடுத்திடும் குரலுக்கு மென்மேலும் வலு ஏற்படும் என நான் நம்புகிறேன்.


தமிழகத்தில் நடைபெறும் இலங்கை தமிழர் தொடர்பான போராட்டங்கள் இலங்கையில் சொல்லொனா துன்பங்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்கள் தொடர்பாக உங்களது அரசாங்கம் முன்னெடுத்து வரும் முன்னேற்றகரமான நடவடிக்கைகளுக்காக எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். 

 

தற்போது நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை பேரவை கூட்ட பின்னணியில்  தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்களை நடத்திட தமிழக அரசியல் மற்றும் சமூக அமைப்புகளுக்கு இருக்கின்ற உரிமைகளை நாம் மதிக்கின்றோம். இலங்கையிலும் இந்திய நாட்டுக்கும் உங்களது அரசுக்கும் எதிராக அரசியல் போராட்டங்கள் இங்குள்ள சில அரசியல் கட்சியினரால் நடத்தப்படுகின்றன. 


ஆனால் இந்த போராட்டங்கள் சில சந்தர்ப்பங்களில் சட்ட வரம்பை மீறி அப்பாவி மக்கள் தாக்கப்படுவதிலும்  சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதிலும் சென்று முடிவது தொடர்பான எங்களது கவலையை நீங்கள் பகிர்ந்துகொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.

 

கடந்த தினங்களில் தஞ்சை, திருச்சி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் இலங்கையை சேர்ந்த பெளத்த துறவிகள் தாக்கப்பட்டுள்ளனர்.  தஞ்சை பெரிய கோவிலிலும் தஞ்சை-திருச்சி நெடுஞ்சாலையிலும் சென்னை மத்திய ரயில் நிலையத்திலும் இந்த தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.


இவற்றை நாம் மிக கடுமையாக கண்டிக்கின்றோம். எமது இந்த உணர்வுகளை நீங்களும் பகிர்ந்து கொள்கிறீர்கள் என நாம் நம்புகிறோம். இந்திய சட்டங்களின் அடிப்படையில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் ஒரு தடைசெய்யப்பட்ட இயக்கமாக பல்லாண்டுகளாக அறிவிக்கப்பட்டு வருகின்றது.

 

இந்த அரசியல் சட்ட பின்னணியில் விடுதலை புலிகள் தொடர்பான சட்டவிரோத  தன்மையை கடுமையாக பேணும் அதேவேளையில் உங்களது அரசாங்கம் இலங்கை வாழ் அப்பாவி தமிழ் மக்களின் நியாயமான அரசியல் எதிர்பார்ப்புகளுக்கும் பாதுகாப்பான நல்வாழ்வுக்கும் இயன்ற அனைத்தையும் செய்து வருகின்றது.


இதற்கமைய இலங்கை வாழ் தமிழ் மக்களின் நல்வாழ்வு தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு உரிய அழுத்தங்களை தருவதும் தமிழகம் வரும் அப்பாவி சிங்கள யாத்திரீகர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதும் இரண்டு வெவ்வேறு விடயங்களாக பகுத்தறிந்து மிகுந்த தூரநோக்குடன் உங்களது அ.இ.அ.தி.மு.க அரசாங்கம் கையாள்வதை நாம் அறிவோம்.

 

இந்த அடிப்படையில் இலங்கை மக்கள் குறிப்பாக யாத்திரீகர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதை இரும்புகரம் கொண்டு உடன் தடுத்து நிறுத்தும்படி நான் உங்களை வேண்டுகிறேன். இதுவே இலங்கை தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளை பெற்றிடஇ உங்கள் அரசாங்கம் கொடுத்திடும் குரலுக்கு வலு சேர்க்கும் என நான் நம்புகிறேன்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60975-2013-03-18-12-12-46.html

  • தொடங்கியவர்

தமிழகத்தில் இலங்கையர் மீது தாக்குதல்; மத்திய மாகாண சபையில் கண்டன தீர்மானம்

 

தமிழகத்தில் இலங்கையர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிராக மத்திய மாகாண சபையில் கண்டன தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

 

சென்னையில் நேற்று திங்கட்கிழமை கண்டியைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தே மத்திய மாகாண சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


மத்திய மாகாண சபையின் மாதாந்த கூட்டம் பதில் தலைவர் ஏ.ஜீ. சிறிசேன தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

 

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினரான லக்கி ஜயவர்தனஇ சென்னையிலும் தஞ்சாவூரிலும் பௌத்த பிக்குகள் தாக்கப்பட்ட சம்பவங்கள் கவலையையும் வேதனையையும் அளிப்பதாக குறிப்பிட்டார்.


அத்துடன் 1983 இல் இடம்பெற்ற சம்பவத்தை இது நினைவுபடுத்துவதாகவும் தெரிவித்த லக்கி ஜயவர்தனஇ மத்திய மாகாண சபை இந்த சம்பவங்களை வன்மையாக கண்டிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 

இதேவேளைஇ மத்திய மாகாணத்தில் சகல இன மக்களும் ஒற்றுமையுடன் வாழும் சூழ்நிலையில் தமிழகத்தில் பிக்குகள் தாக்கப்பட்ட சம்பவம் கவலையளிப்பதாக மாகாண தமிழ் கல்வி அமைச்சர் அனுஷியா சிவராஜா தெரிவித்தார்.

அண்மையில் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான்இ தமிழகம் சென்றிருந்தபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர்இ இலங்கையிலிருந்து இந்தியா செல்கின்ற மக்கள் மிக நிதானத்துடன் செயற்பட வேண்டும் என்பதுடன் அவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

 

இதேபோன்று மத்திய மாகாண சபை உறுப்பினர்களான லாபிர் ஹாஜியார்இ ஏ.பீ.ரத்னாயக்கஇ எம்.ஜி.ஜயரட்னஇ எஸ்.சதாசிவம் உட்பட பல மாகாண சபை உறுப்பினர்கள் பிக்குகள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து சபையில் உரையாற்றினர்.


இந்த நிலையில்இ தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனத்தை தெரிவித்து இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு தீர்மானம் சமர்பிக்கும் வகையில் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/61018-2013-03-19-07-07-14.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தவறின் 'உச்ச பட்சம்' தேசவலம் வரும் போது; செங்கம்பளம் விரிக்கின்ற வரவேர்ப்புக்களின் பக்கவிளைவுகளில் ஒன்றுதான் இவை!

தமிழ்நாட்டில் இன உணர்வுகள் மேலோங்கி மக்கள் பெரும் கோபத்தில் இருக்கும் இவ்வேளையில் சிங்களவர்களுக்கு என்ன வேலை தமிழ் நாட்டில்? வன்னி யுத்தம் நடந்த வேளை எப்பிடி யாரையும் உள்ளை விடலையோ அப்பிடியே இதுவும் பிக்குமார் உயிரோடு திரும்பியதற்கு தமிழர்களுக்கு நன்றி சொல்லவேணும்


பாவம் மனித உரிமை எண்டு பாத்துப் பாத்துத்தான் இண்டைக்கு எங்களுக்கு ஒரு உரிமையும் இல்லாமல் இருக்கிறம்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.