Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப் பிரச்சினையும் விமர்சன மேதாவிகளும் - யமுனா ராஜேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப் பிரச்சினையும் விமர்சன மேதாவிகளும் - யமுனா ராஜேந்திரன்
 

கிரிக்கெட் விளையாட்டு அதனது ரசிகர்களுக்கு 'குதூகலம்' தருவது. திரைப்படம் காட்சி 'இன்பத்துக்கு' ஆனது. நாடகம் மேடைச்சட்டகத்தில் பாத்திரங்களால் 'நடிக்கப்படுவது'. கடந்த முப்பதாண்டுகளில் இலங்கையில் நடைபெற்று வந்தது ஆயுத மோதல். முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு நடைபெற்று வருவது கருத்துக் களத்திலான, பிரச்சாரக் களத்திலான யுத்தம். ஜெனீவா என்பது இதனது களம். இலங்கைத் தமிழர்களின் போராட்டம் என்பதன் களம் மாறியிருக்கிறதேயொழிய யுத்தம் தொடர்கிறது. இந்த யுத்தத்தில் இலட்சக் கணக்கிலான மக்கள் இறந்திருக்கிறார்கள்.

 

தமிழகத்தில் போராடிக் கொண்டிருக்கிறவர்களை ஒரு விமர்சன மேதை 'முட்டாள்கள்' என்று வர்ணித்திருக்கிறார். சில விமர்சன மேதாவிகள் ஜெனீவா களத்தை நாடகம், திரைப்படம், கிரிக்கெட் மைதானம் என்றெல்லாம் வர்ணிக்கிறார்கள். முப்பதாண்டு கால ஆயுத மோதலை, பல இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதை, அதற்கான நீதி கோருதலை இவர்கள் திரைப்படமாக, நாடகமாக, கிரிக்கெட் விளையாட்டாகப் புரிந்து கொள்வார்களானால், இவர்களைத் தமிழகத்துச் 'சோ' ராமசாமியின் ஈழத்துச் சொந்தங்கள் என அழைப்பதல்லால் வேறு சொற்களில் அழைக்க முடியாது. அரசியல் ஒரு சாக்கடை என்பவன் தன்னை அதி மேதாவியாகக் கருதிக் கொள்கிற அகந்தை கொண்டவன். அரசியல் ஒரு தந்திரோபாயம், சாத்தியங்களின் கலை என்று புரிந்து கொள்பவன் மக்கள் சார்பாளன்.

 

அரசியல் விமர்சனம் என்பது, இது இந்தத் திசையில் இருக்கிறது, அது அந்தத்திசையில் இருக்கிறது என்று எழுதுவதோ அல்லது அவன் அங்கே நிற்கிறான், இவன் இங்கே நிற்கிறான் என்று எழுதுவதோ அல்லது இந்த நாடு இதனால் இங்கு நிற்கிறது, இந்த நாடு இதனால் அங்கு நிற்கிறது என்று எழுதுவதோ அல்ல. இந்த முறைக்கு அரைக் கிணறுதாண்டுவது என்று பெயர். அரசியல் மொழியில் இதனைப் பகுப்பாய்வு எனலாம். இந்தப் பகுப்பாய்வு எனும் கட்டம் முழுக்கிணறு தாண்டுகிற தொகுப்பு நிலைபாடு எடுப்பது என்பதில்தான் அர்த்தமுள்ளதாக ஆகிறது. அதுஇது அவன்இவன் அந்தநாடுஇந்தநாடு என்பதற்குப் பிறகு உனது சொந்த நாடு சார்ந்து எழுதுகிறவன் அல்லது விமர்சகன் எதில், எவனில், எங்கு நிற்கிறான் என்பதில்தான் அவனது எழுத்தின் சாரம் பொதிந்திருக்கிறது.

 

தமிழகச் சூழலை நாம் எடுத்துக் கொள்வோம். ஜெனீவா தீர்மானம் தொடர்பாக பல்வேறு மட்டங்களில் அங்கு போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதிமுக அரசு சுயாதீன விசாரணை, பொருளாதாரத்தடை என தீர்மானங்கள் போட்டிருக்கிறது. திமுக சர்வதேசீய சுயாதீன விசாரணையையும் வெகுமக்கள் வாக்கெடுப்பையும் கோருகிறது. இவை இரண்டையும் கொண்டிராத அமெரிக்கத் தீர்மானத்தின் முன்வரைவை வைகோ, சீமான், மணியரசன் போன்றவர்கள் நிராகரிக்கிறார்கள். போராடிக் கொண்டிருக்கும் தமிழக மாணவர்கள் தமிழீழம் என்பதையும் வெகுஜன வாக்கெடுப்பையும் அமெரிக்கத் தீர்மானத்தில் இணைக்கக் கோருகிறார்கள்.

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுயாதீன விசாரணையைக் கோருகிறது. ஐநா தீர்மானத்தையும் அது எடுகோளாகக் காட்டியிருக்கிறது. இது அக்கட்சியில் நேர்ந்திருக்கும் மிகப்பெரும் மாற்றம். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சர்வதேச ரீதியிலான சுயாதீன விசாரணையைக் கோருகிறது. திமுக தலைமை தமது கோரிக்கைகளை அமெரிக்கத் தீர்மானத்தில் இணைப்பதில் இந்தியா தவறுமானால் தமது கட்சி மத்திய அரசிலிருந்தும், கூட்டணியில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருக்கிறது. திமுக சொல்வது நடக்குமானால் அது ஆளும் காங்கிரஸ் அரசுக்கு மிகப்பெரும் அரசியல் நெருக்கடியைத் தரும். பதவிகள் ஆட்டம் காணும். மாணவர்களது எழுச்சி இதனை இன்னும் கூர்மையானதாக ஆக்க முடியும். தேர்தல் அரசியலில் போராட்டம் என்பது இவ்வாறுதான் தீர்மானமான பங்கை ஆற்ற முடியும்.

 

இது இப்படி நடந்தே தீரும் என்று எவரும் கணிதச் சூத்திரம் போல் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இந்தச் சாத்தியம் நடைமுறைக்கு வருமானால், அது ஈழத் தமிழ் மக்களுக்கு என்ன நல்விளைவைத் தரும் என்று பார்ப்பதுதான் அரசியல் தரிசனமாக இருக்க முடியும்.

 

ஸ்லோவானிய மார்க்சியரன ஸ்லோவாய் ஜிசாக் கார்ல் மார்க்சின் ஒரு மேற்கோளை திரும்பத் திரும்பப் பாவிப்பதாண்டு. 'வரலாறு திரும்பத் திரும்ப நிகழ்கிறது. முதலில் துயராக இருப்பது பிற்பாடு கேலிக் கூத்தாகத் தோன்றுகிறது'. எந்தவிதமான திட்டவட்டமான அமைப்பு வடிவமும், தெளிவான கொள்கைத் திட்டங்களும் இல்லாமல் நிகழ்ந்த வெகுஜன எழுச்சிகளான அரபுப் புரட்சி, ஸ்பானிய எழுச்சி, வால்ஸ்ட்ரீட் எழுச்சி போன்றவற்றை அவர் இவ்வாறுதான் விமர்சித்தார். போராடுகிறவர்களுக்கு அமைப்பு வடிவமும் கொள்கைத் தெளிவும் இருக்க வேண்டும் என்பதனையே அவர் இந்த மேற்கோளில் வலியுறுத்தினார்.

 

ஈழப் பிரச்சினையிலும் இதனை வலியுறுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அதிகாரமட்டத்தில் தீர்வுகாண வேண்டிய நிர்வாகப் பிரச்சினையாகவே இனப் பிரச்சினையை அணுகும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைபாடு, ஆயுத விடுதலைப் போராட்டத்தின் சாத்தியம் சாத்தியமின்மைகளை பின் சோவியத், பின் செப்டம்பர் யுகத்தில் வைத்து அணுகாமல் மீளவும் ஆயுதப் போராட்ட வடிவம் குறித்துப் பேசுபவர்களின் நிலைபாடு என இவைகளை இவ்வாறு விமர்சனத்துக்கு உட்படுத்தவேண்டிய தேவை இருக்கிறது. இந்த நோக்கு என்பது ஈழத் தமிழர்களின் தன்னாட்சி உரிமைகளையும் மனிதர்களாக அவர்களது பெருமிதத்தையும் மகிந்த ராஜபக்சேவின் காலடியில் சென்று சரணடையவைப்பதாக இருக்க முடியாது.

 

நிகழ்கால ஈழ அரசியல் நிலைபாடுகளை விமர்சிப்பதாகத் தோற்றம் காட்டும் மேதைகள் இந்தத் திசையில்தான் தமது சொற்களை விரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதி தீவிர மேதைகளாகத் தோற்றம் காட்டும் இவர்கள் தமிழகம், புகலிடம் என இரு இடங்களிலும் நடைபெறும் எல்லா விதமான போராட்டங்களையும், எழுச்சிகளையும் திரைப்படம், நாடகம், விளையாட்டு மைதானம் என வகைப்படுத்துகிறார்கள். இவர்களைப் பொறுத்து போராடுகிறவர்கள் அனைவரும் கதாநாயக, கதாநாயகி வேஷம் மறுக்கப்பட்ட எக்ஸ்ட்ராக்கள் அல்லது முகமற்ற முட்டாள்கள். விமர்சன மேதைகள் கடவுளின் இடத்தை எடுத்துக் கொண்டுவிட்டிருக்கிறார்கள். கடவுள் இறந்து விட்டார் என்று நீட்ஷே நூற்றாண்டுக்கு முன்பே சொல்லிச் சென்றுவிட்டார். இது வெகுமக்கள் யுகம் என்பதை நாம் இவர்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது.

 

 

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=ea4c431f-f30a-45f0-adac-eec9c63608f8

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.