Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மாணவர்களுக்கு பலம் சேர்க்கும் வகையில் புலம் பெயந்த தேசங்களில் எம்மவர்களின் போராட்டங்கள் ....!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் அமைந்துள்ள அமேரிக்கத் தூதரகத்திற்கு முன் நடைபெற்ற புரட்சிப் போராட்டம்.‏

 

v-americallrcnews.jpg

photo.gifதமிழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழீழத்திற்கான புரட்சிப் போராட்டத்திற்க்கு ஆதரவாக இன்று மாலை பிருத்தானியத் தமிழ் மாணவர்களால் இன்னுமோர் புரட்சிப்போர் முன்னெடுக்கப்பட்டது. இப்பொராட்டம் மாலை நான்கு மணியளவில் Grosvenor Square பகுதியில் அமைந்துள்ள அமேரிக்கத் தூதரகத்திற்கு முன்னிலையில் நடபெற்றது. 

v-americallrcnews%20%283%29.jpg

இதில் பெரும்பாலான தமிழ் மக்களும் கலந்து கொண்டதுடன் "நாங்கள் தமிழக மணவர்களை ஆதரிக்கின்றோம், அமேரிக்காவே இன அளிப்பை ஆதரிக்காதே, உலக நாடுகளே LLRC அறிக்கையை நிராகரி மற்றும் தமிழர்களுக்கு தமிழீழம்தான் ஒரே தீர்வு" போன்ற வசனங்களையும் தாங்கியவண்ணம் இப்போராட்டம் நடைபெற்றது. 

போராடத்தின் இறுதிவரையில் கலந்துகொண்ட மணவர்கள் இப்போராட்டம் ஒரு சாதாரன ஆரம்பந்தான் தமிழருக்கான தீர்வான தனித் தமிழீழம் அமையும் வரையில்  இனி உலகம் முழுவதும்  தொடர்ந்தும் மாணவர் புரட்சி வெடித்துக்கொண்டே இருக்கும் என்று சபதம் எடுத்து  கலைந்துசென்றனர்.v-americallrcnews%20%282%29.jpgv-americallrcnews%20%285%29.jpgv-americallrcnews%20%286%29.jpgv-americallrcnews%20%284%29.jpg

 

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19698:2013-03-21-07-58-54&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

 

australia%20flag-270113-seithy-150.jpg

சிறிலங்கா அரசுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையிலே சமர்ப்பிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கையில் காணப்படும் வலுவற்ற வாசகங்களை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்திலே குதித்துள்ள தமிழ் நாட்டு மாணவர்களுடன் இணைந்து அவுஸ்திரேலியா இளையோர்கள் 21.03.2013 வியாழக்கிழமை பி.ப 6.00 மணிக்கு Prince Alfred Park, Parramatta எனும் இடத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளார்கள். சுதந்திரமான தமிழீழத்தை அமைப்பதற்காக அடிப்படை உரிமையும் நீதியும் வேண்டிப் போராடும் தமிழ் நாட்டு மாணவருடன் நாமும் தோளோடு தோள் சேர்ந்துள்ளோம். என்பதை எமது உண்ணாவிரதப் போராட்டம் உணர்த்துவதாக இருக்கின்றது. சிறிலங்காவில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் வெறும் மனித உரிமை மீறல்களுக்கும் போர்க்குற்றங்களுக்கும் மேலாக அது ஓர் இன அழிப்பு நிகழ்வு என்றே நாம் கூறுகின்றோம்.

  

ஐக்கிய நாடுகள் UNHCR தனது அறிக்கையிலே இப்பொழுது சிறிலங்காவில் நடைபெற்றுக்கொண்டிருப்பது படிப்படியான இன அழிப்பு என்று குறிப்பிடவில்லை என தமிழ் நாட்டு மக்கள் கூறுவதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம். உண்ணாவிரதப் போராட்டத்திலே ஈடுபட்டுள்ள தமிழ் நாட்டு மாணவர்களின் கோரிக்கைகளை நாங்களும் ஆதரிக்கின்றோம்.

அவையாவன

1 ஈழத்தமிழர்களின் இன அழிப்பிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் "சர்வதேச சுயாதீன விசாரணை"

2 தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பினையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

3 ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் சிறிலங்கா அரசு மீது 'பொருளாதாரத் தடை விதித்தல்.

இக் கோரிக்கைகளோடு நாமும் எமது கோரிக்கைகளை இணைத்துக் கொள்கிறோம்.

இராணுவ அதிகாரம் மூலம், தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களிலே சிங்கள மக்களைக் குடியேற்றி, தமிழ்க் கிராமங்களின் பூர்வீகப் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றி சரித்திரப் பிரசித்தி பெற்ற தமிழ் அடையாளங்களை அழித்து, எல்லைகளை மாற்றி அவற்றை சிங்கள பௌத்த நிலங்களாக மாற்றுவதையும் 'இன அழிப்பு' நடவடிக்கை என்றே உறுதி படக் கூறுகின்றோம். சிறிலங்கா அரசு நியமித்த (LLRC) கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக் குழு சமர்ப்பித்த அறிக்கையானது, வெறும் கண்துடைப்பே அன்றி மனிதநேயத்துடன் தயாரிக்கப்பட்டதல்ல என்று கூறவிரும்புகிறோம். இன்றும் சிறிலங்காவிலே தொடரும் வன்முறைகளான, ஆள்கடத்தல், கொலை, பாலியல் வல்லுறவு பொலீஸ் பாதுகாவலர், இராணுவத்தினரின், மனித உரிமை அத்து மீறல்கள், மற்றும் சிறிலங்கா கடற்படையினர் தமிழ் நாட்டு மீனவர்களைக் கைது செய்தல், கொலை அச்சுறுத்தல் விடுத்தல், கொலை செய்தல் போன்ற வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுதல் ஆகியன நடைபெறுகின்றன.

 

நீதி நியாயத்தை பின்பற்றி இவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றி, குற்றம் செய்பவர்களைத் தண்டிப்பதில் சிறிலங்கா அரசு அக்கறை காட்டவில்லை என்பது தெளிவாகிறது. சிறிலங்கா அரசு, தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடும் இன அழிப்பு நடவடிக்கையை, சர்வதேச சமூகம் இனியும் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது என்பதை அவுஸ்திரேலியா இளையோர் அமைப்பு கூற முன்வருகின்றோம். தமிழ் நாட்டு மாணவர்களுடன் கூட்டாக இணைந்து இந்த உண்ணாவிரதத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம், இந்திய மத்திய அரசையும், ஐக்கிய நாடுகள் சபையையும் இந்த இன அழிப்பு நடவடிக்கையை நிறுத்த சுதந்திரமான ஒரு 'வாக்கெடுப்பை' நடத்துமாறு வேண்டிநிற்கின்றோம்.

 

'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்'

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=78585&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மாணவர்களுக்கு பலம் சேர்க்கும் வகையில் யேர்மனியில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்

 

v-dusselbermaanavar.jpg

photo.gifvideo123.gif20.03.2013 இன்று யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினால் பெர்லின் தலைநகரத்தில் மற்றும் டுசல்டோர்ப்பில் (Düsseldorf) உள்ள உள்ளுராட்சி

பாராளமன்றம் முன்பாக தமிழக மாணவர்களுக்கு பலம்சேர்க்கும் வகையிலும் தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டும் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினால் கவனயீர்ப்புப் போராட்டம் நிகழ்த்தப்பட்டது.

 

தமிழ் மக்கள் எழுச்சிப்பூர்வமாக தமிழீழ விடுதலைக்கான தமது குரல்களை ஓங்கியொலித்தார்கள். இவ் போராட்டத்தில் யேர்மன் அரசிற்கு கையளிப்பதற்காக தயாரிக்கப்பட்ட மனுவை தமிழ் மக்களுக்கு வாசித்து காட்டி அதன்பிற்பாடு டுசல்டோர்ப் (Düsseldorf) பில் உள்ள உள்ளுராட்சி பாராளமன்றத்திடம் கையளிக்கப்பட்டது.இதே போன்று பெர்லின் நகரத்தில் இந்தியா தூதரகத்திடம் மனு கையளிக்கப்பட்டது .

 

 

student6.jpg

தமிழீழ விடுதலைக்காக பல வெகுஜென போராட்டங்களை முன்னெடுத்த கோபி சிவந்தன் அவர்கள் இவ் போராட்டத்தில் பங்குபற்றி சிறப்பித்து உரையாற்றினார்.

இறுதியாக தமிழ் இளையோர் அமைப்பின் நன்றியுரை நிறைவுப்பெற்றதும் தமிழர்களின் தாரக மந்திரத்தை உரத்துக் கூறி இக் கவனயீர்ப்புப் போராட்டம் எழுச்சிப் பூர்வமாக நிறைவடைந்தது.student12.JPGstudent4.JPGstudent1.JPGstudent2.JPGstudent5.JPGstudent3.JPGstudent6.jpgstudent6.jpgstudent10.jpgstudent8.jpg

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!

தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனி

ஊடகப்பிரிவு

 

 

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19710:2013-03-21-12-06-35&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

UK-southbank200313-news-150.jpg

தமிழீழத்தில் எம் மக்களுக்கு திட்டமிட்டு இளைக்கப்பட்ட இன அழிப்பை உலக சமூகத்தினருக்கு வெளிகொண்டு வரும் காலத்தின் கடமையை கையில் ஏந்திய மாணவர்களுக்கு பக்கபலமாக நேற்று (20/03/2013) பிருத்தானியா சௌத் பாங் பல்கலைகளக மாணவர்களால் தமிழின ஒழிப்பு பற்றியும் எம் உரிமைகள் பற்றியும் எடுத்துரைக்கும் விழிப்புணர்வுப் போராட்டத்தை பிருத்தானிய பல்கலைக்களக மாணவர்கள் முழுவீச்சுடன் முன்னெடுத்தார்கள்.

  

அங்கு பங்கேற்ற மாணவர்கள் மிகவும் தெளிவாக தமிழ்ர்களுக்கு ஒரே தீர்வு தனித் தமிழீழம் என்பதை உறுதியுடன் வலியுறுத்தினார்கள். பல்கலைகளக வளாகம் முழுவதும் எம் இன அழிப்பை பிரதிபளிக்கும் நிழற்படங்களும் , பதாதைகளும் எமக்கு நடந்த அவலங்களை வேற்று சமூகத்திற்கு எடுத்துறைத்தது. LLRC அறிக்கையை நிராகரித்தது மட்டுமல்லாது இலங்கையில் நடைபெறவுள்ள பொது நலவாய மாநாட்டை பிருத்தானிய மகாராணி நிச்சயமாக புறக்கணிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்கள். பல்கலைகளகத்தில் பயிலும் ஏனைய மாணவர்களுக்கு எங்களுக்கு இளைக்கப்பட்ட இன அழிப்பை பற்றி விளக்கி அவர்களின் ஆதரவையும் பெற்றுக்கொண்டார்கள்.

தர்போதைய அரசியல் நகர்வுகளையும் இராஜ தந்திர அறிக்ககளையும் நன்கு அறிந்த மாணவர்கள், "தமிழர்கள்"என்ற வாசகமே அடங்காத , தமிழர்களின் சுய நிர்ணயத்திற்கும் , தமிழர்களின் இறையான்மைக்கும் முற்றிலும் சாதகமற்ற அமெரிக்காவின் மறு பரிசீலனை அறிக்கையை மாணவர்கள் முற்றாக நிராகறித்து, தனித்தமிழீழமே எங்கள் தீர்வு என்று முழங்கினார்கள்.

தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் மாணவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் பிருத்தானியாவில் ஏனைய பல்கலைக்களக மாணவர்களும் களம் இரங்கியுள்ளனர். இன்று (21/03/2013) வெச்ட் மினிச்டெர் பல்கலைகளக மாணவர்களாலும் விழிப்புணர்வு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் மாணவர்களின் போராட்டங்கள் தொடரும் என்றும், தமிழர்களின் இரத்தம் பாய்ந்த மண்ணில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அமர்வில் மதிப்பிற்குரிய பிருத்தானியா மகாராணி செல்வதை தடுப்பதற்கு வெகு விரைவில் மிகப்பெரும் போராட்டம் வெடிக்கும் என்றும் மாணவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

 

UK-southbank200313-news-(1).jpg

 

 

UK-southbank200313-news-(2).jpg

 

 

UK-southbank200313-news-803-(3).jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=78623&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

-Norway-200313-Unna-news-150.jpg

இலங்கைத் தீவில் இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வரும் ஈழத் தமிழ் மக்களின் சுதந்திரத்துக்காக நீதி வேண்டிய தாய்த் தமிழக மாணவர் சமூகம் முன்னெடுக்கும் ஜனநாயக வழியிலான போராட்டங்களுக்கு ஆதரவாகவும், பிரித்தானியாவில் இந்தியத் தூதரகத்தின் முன்னால் கால வரையரையற்ற கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கும், தமிழ் இளையோர்களுக்கு ஆதரவாகவும், அவர்கள் முன்வைத்துள்ள ஆறு கோரிக்கைகளை ஆதரித்தும், அதே கோரிக்கைகளை நோர்வே அரசிடமும் சர்வதேச நாடுகளிடமும் ஐக்கிய நாடுகள் சபையிடமும் இந்திய வல்லரசிடமும் முன்வைத்து ஈழத்தமிழ் மக்களுக்கான நீதி கோரிய கவனயீர்ப்பு அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நோர்வே தமிழ் இளையோர் சமுகம் நேற்று முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளனர்.

  

நோர்வே தமிழ் இளையோர்கள் முன்னெடுக்கும் இந்த கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நேற்று புதன்கிழமை 20.03.13 காலை 10 மணி தொடக்கம் Stortinget , Oslo. எனும் முகவரியில் ஆரம்பமாகியுள்ளது.

இந்தியா முதல் ஐரோப்பா வரை தமிழ் மாணவர்களும் இளையோர்களும் இணைந்து முன்னெடுக்கும் இந்த நீதிக்கான உரிமை கோரிய போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில் நோர்வே தமிழ் மாணவர்களும், இளையோர் சமூகமும் முன்னெடுக்கும் இந்தப் போராட்டத்தில் நோர்வே வாழ் தமிழ்மக்கள் அனைவரும் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கி உரிமைக்கு குரல் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

-Norway-200313-Unna-news-(1).jpg

 

 

-Norway-200313-Unna-news-(2).jpg

 

 

-Norway-200313-Unna-news-376-(5).jpg

 

 

-Norway-200313-Unna-news-666-(3).jpg

 

http://seithy.com/breifNews.php?newsID=78633&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Denmark-pro-seithy-1-20130321-150.jpg

ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் இலங்கை தொடர்பான விவாதம் விறு விறுப்பாக நடந்து கொண்டிருக்க, ஈழத்தமிழர் விடியலுக்காய் தமிழகம் எங்கும் மாணவர் போராட்டம் பேரெழிச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமகாலத்தில் டென்மார்க் தலைநகரில், கடும் குளிரையும் பொருட்படுத்தாது பேரெழிச்சியோடு திசைகள் இளையோர் அமைப்பு மாபெரும் ஆர்பாட்டம் ஒன்றை நேற்று 20ம் திகதி நடாத்தியது. இவ் ஆர்பாட்டம், இந்திய அரசு மீது கொண்ட அதிர்ப்தியை வெளிக்காட்டும் முகமாக, இந்திய துதரகத்தின் முன்னால் ஆரம்பிக்கப்பட்டது. 'எமக்கு வேண்டும் நீதி' 'இந்தியா உதவிசெய்' எனும் கோசங்கள் எழுப்பியவாறு எமது மக்கள் இதில் உணர்வுபூர்வமாக இதில் கலந்து கொண்டனர். திசைகள் இளையோர் அமைப்பின் பிரதிநிதிகளால், இந்திய தூதுவர்களிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

  

தொடர்ந்து அமெரிக்க தூதரகத்தின் முன்பும் கோசங்கள் எழுப்பப் பட்டதோடு, மிக எழுச்சியுடன் ஊர்வலமாக பாராளுமன்றத்தை நோக்கி இளையோர்கள் உணர்வு பூர்வமாகவும் உணர்ச்சியாகவும் கோசங்களை எழுப்பிய வண்ணம் பாராளுமன்றத்தை வந்தடைந்தனர். இதனை தொடர்ந்து முதல் நிகழ்வாக அகவணக்கத்தோடு நிகழ்வுகள் ஆரம்பமாகின, தமிழ் இளையோர் அமைப்பினர்களின் உரையுடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரையும், தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவரின் உரையும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Denmark-pro-seithy-1-20130321-400.jpg

Denmark-pro-seithy-2-20130321-400.jpgDenmark-pro-seithy-3-20130321-400.jpgDenmark-pro-seithy-4-20130321-400.jpg

 

http://seithy.com/breifNews.php?newsID=78618&category=TamilNews&language=tamil

Edited by தமிழரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கோடி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக நியூசிலாந்து தமிழ் இளையோர் உரிமைப்போராட்டம்! video_icon.jpeg 


 
new-zealand-flag-seithy-150.jpg

 

ஒரு கோடி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக நேற்று நியூசிலாந்து நாட்டின் தமிழ் இளையோர் அமைப்பினரால் ஓக்லாந்து நகரில் 20.03.2013 புதன்கிழமை மாலை 5.30 உரிமைப்போராட்டம் Potters Park, 173 Balmoral Road (Corner of Balmoral Road & Dominion Road) நடைபெற்றது. இந்தியாவிலே தமிழீழத்திற்கான ஆதரவுக் குரலாக மாணவர்களால் தமிழ்நாட்டில் ஒரு கோடி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாகவும் நன்றி கூறும் முகமாக இந்த உரிமைப் போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பலநுற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

 

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ccr3TDOfGO4

 

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=GTWpHpetcxw

 

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=GTWpHpetcxw

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=78653&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு லட்சம் பேராவது தேவை 2009 பார்லிமெண்ட் முன்னால போராட்டதத்தோட நான் ரிட்டயர் பண்ணீட்டன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாணவர்களத்தான் முதலில கொண்டு வரவேணும். அவங்களுக்கு இல்லாத அறிவே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.