Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா: மக்களின் வாழ்வியல் இராணுவமயமாகிறது - பிரித்தானிய ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

The%20Economist.jpg

சிறிலங்காவைச் சேர்ந்த இளையோர் குறிப்பாக பெரும்பான்மை சிங்கள இளையோர்கள் மத்தியில் இராணுவக் கலாசாரத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இவ்வாறு பிரித்தானிய ஊடகமான The Economist எழுதியுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

நாட்டிலுள்ள பாடசாலைகள் தமது சுதந்திரமான செயற்பாட்டை இழந்துவருவதாக சிறிலங்கா ஆசிரியர் சங்கத்தின் தலைவரான ஜோசப் ஸ்ராலின் கவலை தெரிவித்துள்ளார். 

கடந்த மாதம் National Cadet Corpsல் இடம்பெற்ற நேர்காணல்களில் பங்குபற்றுமாறு 4000 தலைமை ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இவர்களில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரிகள் 45 நாள் பயிற்சியைப் பூர்த்தி செய்யவுள்ளனர். 
இவர்களுக்கான பயிற்சிகள் இராணுவத் துறை சார்ந்ததாகும். ஆனால் பாடசாலைகளில் சிறந்த பழக்கவழக்கங்களை மேலும் முன்னேற்றுவதற்காகவே இந்தப் பயிற்சி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. 

சிறிலங்கர்களின் வாழ்வியலில் தற்போது இந்நாட்டு இராணுவத்தின் தலையீடுகள் அதிகரித்து வருகிறன. 

சிறிலங்காவைச் சேர்ந்த இளையோர் குறிப்பாக பெரும்பான்மை சிங்கள இளையோர்கள் மத்தியில் இராணுவக் கலாசாரத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

2009ல் சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் கூட இங்கு இராணுவ மயமாக்கல் என்பது மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மூத்த கல்விமான்களும் முன்னாள் இராஜதந்திரிகளும் கூறுகின்றனர். போர் முடிவடைந்த பின்னர் சிறிலங்கா இராணுவத்தின் நடமாட்டத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் இவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 

இதற்குப் பதிலாக சிறிலங்கா இராணுவத்தின் தலையீடுகள் ஒவ்வொரு துறையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. சிறிலங்காவின் தலைநகரான கொழும்பின் புறநகர்ப்பகுதியான நாவல பிரதேசத்திலுள்ள பூங்கா ஒன்றிலுள்ள நீர்வீழ்ச்சியும் அதற்கருகில் வைக்கப்பட்டுள்ள யுத்த டாங்கி ஒன்றும் செயலகப் பணியாளர்கள், சிறுவர்கள் என பலதரப்பட்டவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜனவரி மாதத்தில் திறக்கப்பட்ட இந்தப் பூங்கா இராணுவ வீரர்களால் கட்டப்பட்டது. 

தற்போது சிறிலங்காவின் பெரும்பாலான பகுதிகளில் இந்நாட்டு இராணுவத்தினர் வீதிகள் மற்றும் பாலங்களைத் திருத்துதல், வீடுகளை அமைத்தல், நகரங்களை நவீனமயப்படுத்துதல், பயிர்ச்செய்கையில் ஈடுபடுதல் போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

சிறிலங்கா இராணுவத்தினர் பல விடுதிகளை நடாத்தி வருகின்றனர். கடந்த செப்ரெம்பரில் சிறிலங்கா கடற்படையினர் Sober Island என்ற பெயரில் தமக்குச் சொந்தமான விடுதி ஒன்றை திறந்தனர். இங்கு ரம் போன்ற பல்வேறு மதுபான வகைகளும் பரிமாறப்படுகின்றன. 

இவற்றைவிட சிறிலங்கா கடற்படையினர் கால்வாய்களை சுத்தம் செய்தல் மற்றும் படகுச் சேவைகள் போன்ற நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றனர். இதேவேளையில் சிறிலங்கா விமானப் படையானது உலங்குவானூர்திகளில் சுற்றுலாப் பயணச் சேவையை வழங்குவதுடன், கொழும்பில் Airforce Clippers என்ற பெயரில் அழகான சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றையும் நடாத்தி வருகிறது. இந்நிலையத்தில் மணப்பெண் அலங்காரம், சேலை அலங்கரிப்பு மற்றும் தலைமுடிகளை சீராக்குதல் போன்ற இதர சேவைகளும் வழங்கப்படுகின்றன. 

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா பாதுகாப்பு செயலரும் நகர அபிவிருத்தி அமைச்சருமான கோத்தபாய ராஜபக்ச பொறுப்பாக உள்ளார். இந்த மாதம் இவரது மூத்த சகோதரரான அதிபர் மகிந்த ராஜபக்ச, விமானப்படையால் கடல்நீரேரியின் கரையில் கட்டப்பட்ட இரு மாடிகளைக் கொண்ட விருந்தினர் மண்டபம் ஒன்றை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். 

ஆனால் சிறிலங்காவில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் போதியளவு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனவும், இங்கு தற்போதும் சிறிலங்கா இராணுவத்தினர் நடமாட்டம் உள்ளதாகவும் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இந்த மக்கள் பாடசாலைகளை நடாத்துவதற்கும், கருத்தரங்குகளை நடாத்துவதற்கும், சுற்றுலா செல்வதற்கும், முன்பள்ளிகளை நடாத்துவதற்குமான வசதி வாய்ப்புக்களின்றி துன்பப்படுகின்றனர். சிறிலங்கா இராணுவத்தினர் நாட்டின் பொருளாதார செயற்பாடுகளில் அதிகம் ஈடுபடுத்தப்படுவதால் கடந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரம் 1.5 பில்லியன் ரூபாக்களால் பாதுகாக்கப்பட்டதாக விவாதிக்கப்படுகிறது. எதுஎவ்வாறிருந்தாலும் தனியார் தமக்கான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இது தடையாக காணப்படுகின்றது. 

இராணுவத்தினரின் தலையீடுகள் அதிகரித்து வருவதானது ஆபத்தை விளைவிப்பதாக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தற்போது பல்கலைக்கழக நுழைவாண்டு மாணவர்களுக்கு 'தலைமைத்துவப் பயிற்சி' வழங்கப்படுகிறது. ஆனால் இதனை இராணுவ முகாங்களில் வைத்து இராணுவத்தினரால் வழங்கப்படுவதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே.

 

http://www.puthinappalakai.com/view.php?20130322107991

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.