Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் மகன் காலேஜுல படிக்குறான்.... போடா போய் போராடு அப்படின்னு அனுப்பிட்டேன் - முச்சக்கர வண்டிச் சாரதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
auto-driver-protest_CI.jpg

 

மதுரையில் நடந்த மாணவர் போராட்டத்தின்போது ஒரு முச்சக்கர வண்டிச் சாரதி அனைவரையும் கவர்ந்திழுத்தார்.

 

மிகத்தீவிரமாக தமிழ் ஈழத்தை ஆதரித்தும், இலங்கையைக் கண்டித்தும் கோஷம் எழுப்பிய அவர் பேசிய பேச்சுதான் அட்டகாசமானது.

 

அவரது பெயர் நாகராஜ். பெரியார் பேருந்து நிலையத்திற்கு சவாரி சென்றவர். சென்ற இடத்தில் நடந்த தமிழ் ஈழ ஆதரவு போராட்டத்தைப் பார்த்து அதில் இணைந்து கொண்டார். சுமார் 5 மணி நேரம் போராட்டத்தில் அவர் பங்கேற்றார்.

 

அப்போது அவர் திரண்டிருந்த மாணவர்களிடம் தனது ஆட்டோ மீது ஏறியபடி பேசுகையில், தம்பிகளா இத்தனை வருஷமா மனசுக்குள்ள வச்சிக்கிட்டு குமுறிகிட்டு இருந்தேன்பா..... நீங்கல்லாம் போராட ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தாம்ப்பா நிம்மதியா இருக்கு.

 

என் மகன் காலேஜுல படிக்குறான்.... போடா போய் போராடு அப்படின்னு அனுப்பிட்டேன்...

இனிமேல் மதுரைல உங்க போராட்டம் நடக்கும் போது போன் போடுங்க .. நேரம் கிடைக்கும் போது கலந்துக்குறேன். எப்பாடு பட்டாவது ஈழ மக்களுக்கு நல்லது ஏதாவது நடக்க வைக்கணும்யா"என்றாரே பார்க்கலாம்.

 

நாகராஜ் தனது முச்சக்கர வண்டியின் பின் புறத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரன் துப்பாக்கியால் சுடுவது போல் படம் வைத்து மதுரை வீதிகளை பல ஆண்டு காலமக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

 

நெல்லை மாவட்டத்தில் தென்காசி ,செங்கோட்டை வட்டாரப் பகுதிகளில் இன்று இவரைப்போல் மனம் படைத்த சுமார் 750. முச்சக்கர வண்டிச் சாரதிகள்  வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

 

தொடரும் போராட்டங்கள் ஈழ விடுதலைக்கான மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள சின்னங்குடி மீனவர்கள் 300 பேர் 60 படகுகளில் கடலுக்குள் உண்ணாவிரதம் இருந்தனர்.

 

மீனவர்கள் கரையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலையில் படகுகளை நிறுத்தி அங்கு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மீனவ பெண்கள் 500 பேர் சின்னங்குடி கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தனர்.

 

வருமான வரி அலுவலகம் முற்றுகை

இன்று (22.03.2013) தூத்துக்குடியில் மாணவர் கூட்டமைப்பு சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களால் தூத்துக்குடி வருமானவரி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது பொதுவாக்கெடுப்பு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினர் பொது வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதுகுறித்துஅவர்கள் கூறுகையில், தமிழ் ஈழம் உருவாக்க இந்தியா பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கான முயற்சிகளை ஐ.நா. சபை மூலம் எடுக்க வேண்டும். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சர்வதேச குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும், கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து திரும்பப் பெறவேண்டும் என்று கூறினர். oneindia

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/89955/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.