Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்மவர் அறிவியலுக்கு அளவீடு கூறும் அளவீட்டுச் சொற்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர் அறிவியலுக்கு அளவீடு கூறும் அளவீட்டுச் சொற்கள்!

 

தமிழர் நாகரிகம் இன்று இருப்பதைவிட பல ஆயிரம்ஆண்டுகளுக்கு முன்னர் சிறப்பாகவும்பல்வேறுமொழி பேசும் மக்களின் நாகரீகங்களோடு ஒட்டிஉறவாடி அம்மக்களிடமிருந்து கலைகலாசாரம்,அறிவியல் போன்ற பல துறைகளிலும்பலவற்றையும் பெற்றுக்கொண்டு ஒரு உன்னதநிலையில் இருந்து வந்திருப்பதை பல ஆய்வுகளும்சுட்டிக்காட்டியுள்ளனஆனாலும் இன்றுஎம்மிடையே பலரும் "நாம் அறிவியலில் போதியவளர்ச்சி அடையவில்லைஎன்றுகூறிக்கொள்வதைக் கேட்கின்றோம்இக்கூற்றின்உண்மைத்தன்மை எத்தனை சதவீதம்நாம்அறிவியலில் வளர்ச்சியடையவில்லையா?அல்லது வளர்ச்சி நிலையிலிருந்துதேய்வுப்பாதைக்குச் சென்றிருக்கின்றோமா?

ஒரு நீண்ட பாதையிலே பயணம் செய்துவரும் நாம்எமது பயணப் பாதையின் முன்னேற்றம் என்னஎன்பதை அளவிட கடந்து வந்த பாதையைத்திரும்பிப் பார்ப்பதும் அவசியமாகின்றது.அதுபோன்றே எமது அறிவியல் முன்னேற்றம் பற்றிகருத்துரைக்கும் நாம் பழங்காலததைய எமதுஅறிவியல் வளர்ச்சி நிலை பற்றி ஆராய்ந்துகருத்துரைத்தலே நலம் பயக்கும்

ஒரு ஆய்வில் மொழியும் பிரதான பங்கு வகிக்கிறதுஎன்பதை எவரும் மறுக்க முடியாதுஅந்தவகையில்எம்மிடையே பயன்படுத்தப்பட்டு வந்துள்ள எமதுமொழி மற்றும் அயல்மொழி அறிவியல்சொற்களின் செறிவு மற்றும் பயன்பாடு என்பனஎந்தளவிற்கு இருந்துள்ளன என்பதைஆராய்வதனுடாக எமது அறிவியல் வளர்ச்சி என்னஎன்பது பற்றி சிந்திக்கலாம்

அந்தவகையில் எம்மவர் அறிவியல் என்றுகூறத்தக்கதும தற்காலத்தில் நாம் "சுதேசமருத்துவம் " என்று அடையாளப்படுதுகின்றதுமான"நாட்டு வைத்தியத்திலே " (இங்கு நாட்டுவைத்தியம் =சித்த வைத்தியம் +ஆயுர்வேதம் )பயன்படுத்தப்பட்டுள்ள , பயன்படுத்தப் பட்டுவருகின்ற அளவைச் சொற்களை மட்டும் இங்கேபதச் சோறாக எடுத்துக்காட்டப் படுகின்றது.ஏனையவற்றை நீங்களேகணக்கிட்டுக்கொள்ளலாம்அளவைச் சொற்களுக்குபொருள்விளக்கம் கருதி இயலுமானவரை சர்வதேசஅலகில் சமப்படுத்திக் காட்டப்பட்டுள்ளதுஎம்மவர்அறிவியல் வளர்ச்சி என்ன ? நீங்களேஅளவிடுங்கள்

நிறுத்தலளவைதொடர்பானவை.

அஞ்சலி: சர்வதேச அலகில் 240 கிராமுக்குசமனான ஓர் அளவை அலகு.

அர்த்தசராவ: சர்வதேச அலகில் 240கிராமுக்குசமனான ஓர் அளவை அலகு.

அர்த்தபலம்: சர்வதேச அலகில் 30 கிராமுக்குசமனான ஓர் அளவை அலகு.

ஆடகம்: சர்வதேச அலகில் 3840 கிராமுக்குசமனான ஓர் அளவை அலகு.

இடப்பு: சர்வதேச அலகில் 16 கிராமுக்கு சமனானஓர் அளவை அலகு.

இறாத்தல்: சர்வதேச அலகில் 480 கிராமுக்குசமனான ஓர் அளவை அலகு.

உளுந்து சர்வதேச அலகில் 65 மில்லி கிராமுக்குசமனான ஓர் அளவை அலகு.

எருஎடை: சர்வதேச அலகில் 60 கிராமுக்குசமனான ஓர் அளவை அலகு.

யவம்: சர்வதேச அலகில் 32.5 மில்லி கிராமுக்குசமனான ஓர் அளவை அலகு.

கஃசு: சர்வதேச அலகில் 15 கிராமுக்கு சமனான ஓர்அளவை அலகு.

கடைப்படி: 16 பலம் கொண்ட ஓர் அளவை அலகு.

கர்ஷ: சர்வதேச அலகில் 16 கிராமுக்கு சமனான ஓர்அளவை அலகு.

கைசா: சர்வதேச அலகில் 15 கிராமுக்கு சமனானஓர் அளவை அலகு. 

கழஞ்சு : சர்வதேச அலகில் 5200 மில்லிகிராமுக்கு(5.2 கிராம்சமனான ஓர் அளவை அலகு.

காசெடை: சர்வதேச அலகில் 240 கிராமுக்குசமனான ஓர் அளவை அலகு. 

கிரேயின்: சர்வதேச அலகில் 65 மில்லி கிராமுக்குசமனான ஓர் அளவை அலகு

குஞ்சா: சர்வதேச அலகில் 125 மில்லி கிராமுக்குசமனான ஓர் அளவை அலகு.

குடுப்பம்: சர்வதேச அலகில் 120 கிராமுக்குசமனான ஓர் அளவை அலகு

குன்றி: சர்வதேச அலகில் 130 மில்லி கிராமுக்குசமனான ஓர் அளவை அலகு.

கோல: சர்வதேச அலகில் 8 கிராமுக்கு சமனான ஓர்அளவை அலகு

சதுர்ப்பலம்: சர்வதேச அலகில் 240 கிராமுக்குசமனான ஓர் அளவை அலகு.

சராவ : சர்வதேச அலகில் 480 கிராமுக்கு சமனானஓர் அளவை அலகு.

சாதுரியபலம்: சர்வதேச அலகில் 240 கிராமுக்குசமனான ஓர் அளவை அலகு.

சாணம்: சர்வதேச அலகில் 4 கிராமுக்கு சமனானஓர் அளவை அலகு.

சூர்ப: சர்வதேச அலகில் 30720 (30 கிலோ 720 கிராம்)கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.

துரோணம்: சர்வதேச அலகில் 15360 (15 கிலோ 360கிராம்)கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.

துரோணி: சர்வதேச அலகில் 61440 கிராமுக்குசமனான ஓர் அளவை அலகு.

துட்டெடை: சர்வதேச அலகில் 488 மில்லிகிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு

துலை: சர்வதேச அலகில் 6 கிலோ கிராமுக்குசமனான ஓர் அளவை அலகு.

தூணி: 4 மரக்கால்(96 சுண்டு).

தூக்கு: சர்வதேச அலகில் 3 கிலோ கிராமுக்குசமனான ஓர் அளவை அலகு.

தொக்கு: சர்வதேச அலகில் 3 கிலோ கிராமுக்குசமனான ஓர் அளவை அலகு.

தொடி: சர்வதேச அலகில் 60 கிராமுக்கு சமனானஓர் அளவை அலகு.

தோலா: சர்வதேச அலகில் 11.25 கிராமுக்குசமனான ஓர் அளவை அலகு.

நிட்கம்: சர்வதேச அலகில் 4 கிராமுக்கு சமனானஓர் அளவை அலகு.

நெல்லி : சர்வதேச அலகில் 960 கிராமுக்குசமனான ஓர் அளவை அலகு.

பணவெடை: சர்வதேச அலகில் 488 மில்லிகிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு

பத்தெடை: சர்வதேச அலகில் 60 கிலோ கிராமுக்குசமனான ஓர் அளவை அலகு.

பலம்: சர்வதேச அலகில் 60 கிராமுக்கு சமனான ஓர்அளவை அலகு.

படி : 2.5 இறாத்தல்.

பிரஸ்குதி: சர்வதேச அலகில் 120 கிராமுக்குசமனான ஓர் அளவை அலகு

பிரஸ்த : சர்வதேச அலகில் 960 கிராமுக்கு சமனானஓர் அளவை அலகு.

பிரஸுருதி: சர்வதேச அலகில் 120 கிராமுக்குசமனான ஓர் அளவை அலகு.

மஞ்சாடி: சர்வதேச அலகில் 250 மில்லி கிராமுக்குசமனான ஓர் அளவை அலகு.

மணங்கு : 8 வீசை ஒரு மணங்கு.

மணு: சர்வதேச அலகில் 12 கிலோ கிராமுக்குசமனான ஓர் அளவை அலகு.

மவுண்ட்: கண்டி அல்லது பாரம் எனும் அளவையின்இருபதில் ஒரு பங்கு

மாணிக்க: சர்வதேச அலகில் 480 கிராமுக்குசமனான ஓர் அளவை அலகு.

மாஷ: சர்வதேச அலகில் ஒரு கிராமுக்கு சமனானஓர் அளவை அலகு.

வராகன்: சர்வதேச அலகில் 4 கிராமுக்கு சமனானஓர் அளவை அலகு

வீ சை : சர்வதேச அலகில் 1.4 கிலோ கிராமுக்குசமனான ஓர் அளவை அலகு.

ரூபாவிடை : சர்வதேச அலகில் 488 மில்லிகிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.

லாஸ் : சர்வதேச அலகில் 3840 கிராமுக்கு சமனானஓர் அளவை அலகு.

முகத்தலளவைதொடர்பானவை.

அங்குஷ்டபிரமாணம்: பெருவிரல் அளவு

அர்த்தசராவ :சர்வதேச அலகில் 256 மில்லிலீற்றருக்குச் சமனான ஒரு அளவை அலகு. 

அர்த்தபலம்: சர்வதேச அலகில் 32 மில்லிலீற்றருக்குச் சமனான ஒரு அளவை அலகு.

ஆடகம்: சர்வதேச அலகில் 4.096 லீற்றருக்குச்சமனான ஒரு அளவை அலகு.

ஆம்மிரம்: சர்வதேச அலகில் 64 மில்லிலீற்றருக்குச் சமனான ஒரு அளவை அலகு.

ஆழாக்கு: சர்வதேச அலகில் 168 மில்லிலீற்றருக்குச் சமனான ஒரு அளவை அலகு.

இடங்களி: சர்வதேச அலகில் 2500 மில்லிலீற்றருக்குச் சமனான ஒரு அளவை அலகு.

உரி: சர்வதேச அலகில் 312.50 மில்லி லீற்றருக்குச்சமனான ஒரு அளவை அலகு.

உழக்கு: சர்வதேச அலகில் 336 மில்லி லீற்றருக்குச்சமனான ஒரு அளவை அலகு.

கழஞ்சு: சர்வதேச அலகில் 5 மில்லி லீற்றருக்குச்சமனான ஒரு அளவை அலகு.

கர்ஷ: சர்வதேச அலகில் 16 மில்லி லீற்றருக்குச்சமனான ஒரு அளவை அலகு.

கலம்: சர்வதேச அலகில் 64.512 மில்லி லீற்றருக்குச்சமனான ஒரு அளவை அலகு.

ன்: 6 போத்தல்.

குஞ்சா: சர்வதேச அலகில் 125 மில்லி லீற்றருக்குச்சமனான ஒரு அளவை அலகு.

குறுணி: சர்வதேச அலகில் 5.376 லீற்றருக்குச்சமனான ஒரு அளவை அலகு.

கொத்து: 4 சுண்டு (ஒரு milk maid பால் ரின் = ஒருசுண்டு)

கோட்டை: 168 படிசர்வதேச அலகில் 200லீற்றருக்குச் சமனான ஒரு அளவை அலகு.

கோல‌: சர்வதேச அலகில் 8 மில்லி லீற்றருக்குச்சமனான ஒரு அளவை அலகு.

சங்கு : சர்வதேச அலகில் அண்ணளவாக 30 மில்லிலீற்றருக்கு சமனான ஓர் அளவை அலகு

சராவ : சர்வதேச அலகில் 512 மில்லி லீற்றருக்குசமனான ஓர் அளவை அலகு

சாண : சர்வதேச அலகில் 4 மில்லி லீற்றருக்குசமனான ஓர் அளவை அலகு

ிட்டிகைபெருவிரலளவு. 

சிறங்கைஒரு கைக்குள் பொத்திப்பிடிக்கக்கூடியஅளவு

சுண்டைப்பிரமாணம்: சுண்டைக்காயளவு

சூர்ப: சர்வதேச அலகில் 32.768 லீற்றருக்கு சமனானஓர் அளவை அலகு

செவிடு: ஆழாக்கில் ஐந்தில் ஒரு பகுதி . 

சோடு: சர்வதேச அலகில் 33.6 மில்லி லீற்றருக்குசமனான ஓர் அளவை அலகு

திரவடிறாம்: சர்வதேச அலகில் 4 மில்லிலீற்றருக்கு சமனான ஓர் அளவை அலகு

தம்பிடி: ஒரு கைக்குள் பொத்திப்பிடிக்கக்கூடியஅளவு

திரிகடிப்பிரமாணம்: மூன்று விரலளவு

துரோணம்: சர்வதேச அலகில் 14.384 லீற்றருக்குசமனான ஓர் அளவை அலகு

ுரோணிசர்வதேச அலகில் 65.536 லீற்றருக்குசமனான ஓர் அளவை அலகு

துலாம்: சர்வதேச அலகில் 6.04 லீற்றருக்குசமனான ஓர் அளவை அலகு

துாணி: சர்வதேச அலகில் 21.5 லீற்றருக்கு சமனானஓர் அளவை அலகு

நாழி: சர்வதேச அலகில் 625 மில்லி லீற்றருக்குசமனான ஓர் அளவை அலகு

பதக்கு: சர்வதேச அலகில் 10.75 லீற்றருக்குசமனான ஓர் அளவை அலகு

படி: சர்வதேச அலகில் 1250 மில்லி லீற்றருக்குசமனான ஓர் அளவை அலகு

பலம்: சர்வதேச அலகில் 64 மில்லி லீற்றருக்குசமனான ஓர் அளவை அலகு

பாலடை: சர்வதேச அலகில் அண்ணளவாக 30மில்லி லீற்றருக்கு சமனான ஓர் அளவை அலகு

பிரஸ்த: சர்வதேச அலகில் 1024 மில்லி லீற்றருக்குசமனான ஓர் அளவை அலகு

பிரஸுருதி: சர்வதேச அலகில் 128 மில்லிலீற்றருக்கு சமனான ஓர் அளவை அலகு

பேன்பிடி: பேனைப்பிடிப்பது போன்றுபெருவிரலினாலும் சுட்டுவிரலினாலும்கிள்ளியெடுக்கும் அளவு

போத்தல்: சர்வதேச அலகில் 750 மில்லிலீற்றருக்கு சமனான ஓர் அளவை அலகு

மஞ்சாடி: சர்வதேச அலகில் 250 மில்லி லீற்றருக்குசமனான ஓர் அளவை அலகு

மணா: சர்வதேச அலகில் 480 மில்லி லீற்றருக்குசமனான ஓர் அளவை அலகு

மரக்கால்: சர்வதேச அலகில் 5.376 லீற்றருக்குசமனான ஓர் அளவை அலகு

மாணிக்க: சர்வதேச அலகில் 480 மில்லிலீற்றருக்கு சமனான ஓர் அளவை அலகு

மாஷ: சர்வதேச அலகில் ஒரு மில்லி லீற்றருக்குசமனான ஓர் அளவை அலகு

மினிம்: சர்வதேச அலகில் 125 மில்லி லீற்றருக்குசமனான ஓர் அளவை அலகு. 

முக்குறுணி: சர்வதேச அலகில் 16.1 லீற்றருக்குசமனான ஓர் அளவை அலகு

வீசை: சர்வதேச அலகில் 1562.5 மில்லி லீற்றருக்குசமனான ஓர் அளவை அலகு

வெருகடிஒரு புனையின் காலடி அளவு அல்லதுமூன்று விரல்களால் கிள்ளியெடுக்கும் அளவு

கால அளவைதொடரபானவை

அகோராத்ர: 24 மணி நேரம்

அத்தப்பிரகரம்:நாலரை நாளிகை நேரம்

அத்தயாமம்:ஒரு நாளில் பதினாறில் ஒரு பாகம்

அயனம்: 6 மாதங்கள்

அக்கினிமேட்சம்:8/25 வினாடி

கடிகை:24 நிமிடம்

கடீ:மணி

கலா: 2 நிமிடம்

காஸ்டா: 4 4/5 வினாடி

சங்வர்சர: ஒரு வருடம்

சாமம்: 3 மணித்தியாலங்கள் கொண்ட காலஇடைவேளை

தண்டம்: ஒரு நாளிகை அல்லது 24 நிமிடம்

தாசு: 60 நிமிடம் அல்லது இரண்டரை நாழிகை

நாழிகை: 24 நிமிடம்

நிமிடம்: 60 செக்கன்ட்

பட்சம்: 15 நாட்கள்

பிரகர: 3 மணித்தியாலம்

மண்டலம்:40 நாள். 48 நாள் என்பாரும் உண்டு

மணி: 60 நிமிடம்

மாத்திரை: கண்ணிமைப்பொழுது அல்லதுகைநொடிப்பொழுது

மாதம்:30 அல்லது 31 நாட்கள்

மினித்து: 60 செக்கன்ட்

முகூர்த்தம்: 90 நிமிடம்

யாமம்: இரவு 10 நாளிகை முதல் இரவு 20நாளிகை வரையான காலம்

யுகம்: 5 வருடம்

ருது: 60 நாட்கள்

விகலை: வினாடியில் எட்டில் ஒரு கூறு

வினாடி: நிமிடத்தில் அறுபதில் ஒரு பகுதி

நீட்டலளவை தொடரபானவை

அங்குலம்: அடியில் பன்னிரண்டில் ஒரு பங்கு

அங்குலி: சர்வதேச அலகில் 1.5 சென்ரி மீற்றர்

அறத்தி:சர்வதேச அலகில் 41.91 சென்ரி மீற்றர்

இராஜ: சர்வதேச அலகில்55.88 சென்ரி மீற்றர்

கஸ்த: சர்வதேச அலகில்55.88 சென்ரி மீற்றர்

சாண்:சர்வதேச அலகில் 22.86 சென்ரி மீற்றர்

துறுப்ப: 22 அங்குலம். 55.88 சென்ரி மீற்றர்

பம்ப: சர்வதேச அலகில்182.88 சென்ரி மீற்றர்

பாகம்:சர்வதேச அலகில் 182.88 சென்ரி மீற்றர்

மிடிறியன்: அறத்திசர்வதேச அலகில் 41.91சென்ரி மீற்றர் 

முழம்:சர்வதேச அலகில்45.72 சென்ரி மீற்றர்

யவமத்திய:சர்வதேச அலகில் 0.3 சென்ரி மீற்றர்

யவோதர:சர்வதேச அலகில் 0.24 சென்ரி மீற்றர்

வியத்:சர்வதேச அலகில்22.86 சென்ரி மீற்றர்

விரற்கடை:சர்வதேச அலகில் 1.95 சென்ரிமீற்றர்

விட்சதி:சர்வதேச அலகில் 22.86 சென்ரி மீற்றர்

றியன்: சர்வதேச அலகில்45.72 சென்ரி மீற்றர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.