Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண சபையை ஸ்தாபிக்கும் அதிவிசேட வர்த்தமானியை மகிந்த ராஜபக்ஸ வெளியிடுவார்-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடதத அரசாங்கம் திட்டமிட்டுள்ளதால், வடமாகாண சபையை ஸ்தாபிக்கும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதர்வரும் ஜூலை மாதம் வெளியிட்டுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் உள்ள எட்டு மாகாண சபைகள் இயங்கி வருகின்ற போதிலும் வடமாகாண சபை இதுவரை இயங்கவில்லை என்பதால், வடமாகாணத்தின் நிர்வாகம் அளுநரின் கீழ் இருந்து வருகிறது.

வடமாகாண சபையின் தேர்தலை நடத்துவதற்காக அரசியல் அமைப்புச் சட்டத்தின் 154 (1) பிரிவின் கீழ் ஜனாதிபதியினால் மாகாண சபையை ஸ்தாபிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும்.

1987 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 13வது அரசியல் அமைப்புத் திருத்தச்சட்டத்தின் மூலம் மாகாண சபைகள் ஏற்படுத்தப்பட்டதுடன், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு மாகாணமாக இருந்து வந்தது.

வடக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த வரதராஜ பெருமாள் தனி நாட்டை அறிவித்து விட்டு, ஈழ தேசியக் கொடியை ஏற்றியதால், அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச வடக்கு கிழக்கு மாகாண சபையை 1990 ஆம் ஆண்டு கலைத்தார். அன்று முதல் வடக்கு, கிழக்கு மாகாணம் ஆளுநரின் நிர்வாகத்தின் கீழ் இயங்கியது.

2006 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து, வடக்கு, கிழக்கு மாகாணம் தனித்தனி மாகாணங்களாக பிரிக்கப்பட்டன. கிழக்கு மாகாணம் விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பின்னர், 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/90130/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.