Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரசாத் கரியவாசத்தை கைது செய்து சிறையில் அடைக்குமாறு வைகோ மன்மோகனுக்கு கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

149542089images.jpg

பிரசாத் கரியவாசத்தை கைது செய்து சிறையில் அடைக்குமாறு வைகோ மன்மோகனுக்கு கடிதம்

இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசத்தைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். 

இது குறித்து மதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில்... 

இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம், தன்னுடைய மின்னஞ்சல் மூலம் ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும், சிங்களக் கொடியோருக்கு ஆதரவாகவும், இந்தியாவில் உள்ள ஒரிசா, வங்காளம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்கள் செயல்பட வேண்டும் என்று, அக்கிரமமான ஆலகால விடம் தோய்ந்த ஒரு அறிக்கையை, மார்ச் 19 ஆம் திகதி தயாரித்து, கொழும்பில் உள்ள ஊடக மையத்தின் மூலம், இந்தியாவில் உள்ள ஊடகங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் அனுப்பி உள்ளார். 

அதில், சிங்களவர்கள் இந்தியாவின் கலிங்கம், வங்கம் பகுதிகளின் பூர்வீக மக்கள் என்றும், சிங்கள மொழி, சமஸ்கிருதம், இந்தி மொழியோடு தொடர்பு உள்ளது என்றும், ஈழத்தமிழர்கள் வெறும் 12 சதவீதம்தான் என்றும், அவர்களின் பயங்கரவாதத்தை ஒடுக்கிய ராஜபக்ஷ அரசைப் பாராட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார். சிங்கள அரசன் ஸ்ரீ விஜயன், ஒரிசாவில் இருந்து வந்தவன் என்றும், இந்தியாவின் புத்த மதத்தை சிங்களர்கள் பின்பற்றுவதாகவும் எனவே தமிழ்நாடு தவிர்த்த இந்திய மக்கள் சிங்களர்களுக்கு உதவ வேண்டும் என்றும் கூறி உள்ளார். 

இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்து, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, வைகோ இன்று அனுப்பி உள்ள கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டு உள்ளார். 

இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதர் கரியவாசம், தன் அதிகார வரம்பை மீறி, இராஜீய உறவுகளின் எல்லைகளைத் தாண்டி, இந்தியாவில் வாழ்கிற ஒரிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநில மக்களிடம் தமிழர்களுக்கு எதிராகக் குரோதத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தும் நோக்கில், நச்சுக் கருத்துகளை விதைத்து உள்ளார். சிங்களர்களின் அரசனான ஸ்ரீ விஜயன் கலிங்கம் எனும் ஒரிசாவில் இருந்து வந்தவன் என இலங்கையின் மகாவம்சம் நூல் தெரிவிக்கிறது என்கிறார். இந்த மகாவம்சம் எனும் நூல், அபாண்டப் பொய்களும், அருவறுக்கத்தக்க ஆபாசக் கற்பனைக் கதைகளும் கொண்டது ஆகும். 

குறிப்பிடப்படும் ஸ்ரீ விஜயனின் தாயும் தகப்பனும், கதையின்படி உடன் பிறந்த அண்ணன் தங்கை ஆவார்கள். அவர்களின் தந்தை தாய் இருவரும், காட்டில் இருந்த ஒரு சிங்கத்திற்கும் கலிங்க தேசத்து அரச குமாரிக்கும் பிறந்தவர்கள் என்பதுதான் கரியவாசம் சுட்டிக்காட்டும் பூர்வீகம் ஆகும். 

ஆனால், இலங்கைத் தூதர் ஓர் உண்மையை மறைக்க முடியவில்லை. அதுதான் இலங்கைத் தீவில் தமிழர்கள்தான் பூர்வீகக் குடிமக்கள் எனும் உண்மை ஆகும். 

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வரலாற்றின் வைகறை முதல் சுதந்திரமான அரசுகள் அமைத்து, உயர்ந்த நாகரிகத்துடன் வளமாக வாழ்ந்த ஈழத் தமிழர்கள், ஐரோப்பியர் வருகையால் ஆட்சியை இழந்தனர். பிரித்தானியர் 1948 இல் வெளியேறியபோது, சிங்கள இனவாத அரசின் கீழ் ஈழத்தமிழர்கள் உரிமை இழந்தனர். 

ஈழத் தமிழ் மக்களை சிங்கள ராஜபக்ஷ அரசு இனப்படுகொலை செய்வதற்கு, இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முழு உதவியும் தந்து உடந்தையாகச் செயல்பட்டது. 

ஈழத் தமிழருக்கு நீதி கேட்க, வீரமிக்க 22 தமிழ் இளைஞர்கள் நெருப்பில் குளித்து மரணத் தீயை அரவணைத்து உயிர்த் தியாகம் செய்து பற்ற வைத்தத் தணல் இன்று தமிழகத்தில் இலட்சோப இலட்சம் மாணவர்கள், இளைஞர்கள் நெஞ்சத்தில் அணைக்க முடியாத கிளர்ச்சித் தீயாகக் கொளுந்துவிட்டு எரிகிறது. 

சிங்கள மொழி, சமஸ்கிருதம் இந்தி மொழி வழி வந்தது என்றும், இந்த உறவோடு, இந்திய மக்கள் தமிழ்நாடு தமிழர் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட்டு, சிங்களருக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளார். எவ்வளவு அகம்பாவத்தோடும், திமிரோடும் இலங்கைத் தூதர், தமிழருக்கு எதிராக வட இந்திய மக்களைத் தூண்டிவிடப் பார்க்கிறார்? 

சிங்கள அரசு நடத்திய இனக்கொலை யுத்தத்துக்கு ஆயுத உதவி செய்ததை இந்தியப் பிரதமரே குறிப்பிட்டு, 2008 அக்டோபர் 2 இல் எனக்கு எழுதிய கடிதத்தில், இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க இந்திய அரசு, சிங்கள அரசுக்கு இராணுவ உதவி செய்தது என்று ஒப்புக்கொண்டு எழுதி இருந்தீர்கள் 

2004 ஆம் ஆண்டு முதல், உங்களிடம் நேரிலும், கடிதங்கள் மூலமாகவும் பலமுறை மிகுந்த கவலையோடும், அச்சத்தோடும் தெரிவித்ததை நான் இப்போது நினைவுபடுத்துகிறேன். சிங்களனுக்கு உதவியாக, ஈழத் தமிழருக்கு எதிராக இந்த இந்திய அரசு தொடர்ந்து துரோகம் செய்தால், தமிழகத்தின் இளைஞர்கள் அதனை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இந்திய ஒருமைப்பாடு உடைந்து சிதறும் விபரீதத்தைத் தடுக்கவே முடியாது. 

இன்று அத்தகைய நியாயமான கோபமும், ஆவேசமும்தான் தமிழக மக்கள், குறிப்பாக மாணவர்கள், இளம் தலைமுறையினர் இதயங்களில் நெருப்பைக் கக்கும் கேள்விகளாக ஒலித்துக்கொண்டு இருக்கின்றன. 

கேரளக் கடலில் இரண்டு இந்திய மீனவர்களைச் சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டுக்கு ஆளான, இரண்டு இத்தாலியக் கடற்படை வீரர்கள் இந்தியாவுக்குத் திரும்பி வரவில்லை என்பதற்காக, இத்தாலித் தூதர் டேனியல் மன்சினியை இந்தியாவுக்குள் சிறை வைப்பதுபோல் நடவடிக்கை எடுத்தீர்கள். 

ஏறத்தாழ 584 தமிழக மீனவர்களை நமது கடலிலும், பன்னாட்டுக் கடலிலும் தாக்கிப் படுகொலை செய்த சிங்களக் கடற்படையை, இலங்கை அரசைக் கண்டித்து, இந்திய அரசு ஒரு வார்த்தைகூட முனு முனுக்காதது ஏன்? 

தமிழக மீனவர்கள் இந்தியக் குடிமக்கள் இல்லையா? தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதியாக இன்னும் இருக்கிறதா? அல்லது இல்லையா? எனும் கேள்விகள் பூதாகாரமாக தமிழ் மக்கள் மனதில் எழுந்துவிட்டன. 

இந்திய ஒருமைப்பாட்டுக்கு இதனால் ஆபத்து தலைக்குமேல் கத்தியாகத் தொங்கிக்கொண்டு இருக்கிறது என்பதை உங்களுக்கு எச்சரிக்க வேண்டியது எனது கடமை ஆகும். 

இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் வேட்டு வைக்க முனைந்து உள்ளதால், இந்தியக் குற்றவியல் சட்டம் 124ஏ பிரிவின் கீழ் இலங்கைத் தூதர் மீது உடனடியாக வழக்குப்போட்டு கைது செய்து, சிறையில் அடைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதில், இந்திய அரசு மேற்கொள்ளும் செயல்பாடுதான், நாட்டின் ஒற்றுமைக்கு, காலம் விடுத்து உள்ள அறைகூவலுக்குப் பதிலாக அமையும் என்பதை வரலாறு பதிவு செய்யும். 

இவ்வாறு, வைகோ தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

(நக்கீரன்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.