Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாணத்தின் கலாசார முகத்தினை மாற்ற சிறிலங்கா அரசாங்கம் முயற்சி! - சுரேஸ் குற்றச்சாட்டு!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணத்தின் கலாசார முகத்தினை மாற்ற சிறிலங்கா அரசாங்கம் முயற்சி! - சுரேஸ் குற்றச்சாட்டு!!

வடமாகாணத்தின் குடிசனப் பரம்பலையும், கலாசார முகத்தினையும் மாற்றி அமைக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'வடமாகாணத்தின் குடிசனப் பரம்பலையும், கலாசார முகத்தினையும் மாற்றி அமைக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்நடவடிக்கை சிறிலங்கா அரசாங்கத்தால் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மையில் 3 அல்லது 4 பிரதேசங்களில் 800 ஏக்கருக்கு மேற்பட்ட காடுகளை அழித்து, அவற்றில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை குடியேற்ற சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ் மண் என்ற பெயர் மாற்றப்பட்டு அங்கு பௌத்தத் தலங்களும் ஏனைய மதத்தலங்களும் அமைக்கப்படுகின்றன. அத்துடன் பௌத்த கலாசார விடயங்களைக் கொண்டு வருவதன் மூலம் அது தமிழ் பிரதேசம் அல்ல என்பதனை கொண்டு வருவதற்கான முயற்சியும் வடமாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

ஒருபுறம் சிறிலங்கா படைத்தரப்பினரால் காணிகள் சுவீகரிக்கப்படுவது தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. மறுபுறம் இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேற்றப்படவில்லை. இவ்வாறான சூழ்நிலையில், தேர்தலுக்கு முன்பாக பல்வேறுபட்ட மாற்றங்களை உருவாக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

வடமாகாணத்தில் குவிக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் படைத்தரப்பினர் அரசாங்கத்துக்கு சார்பான போராட்டங்களை ஏற்பாடு செய்வதுடன் அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். வடமாகாண மக்களுடன் அரசியல் கட்சிகளோ, தொண்டு நிறுவனங்களோ தாம் விரும்பியவாறு பேசமுடியாத சூழலே இங்கு காணப்படுகின்றது.

வடமாகாணத்தில் குடியியல் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால் இங்கு குடியியல் நிர்வாகத்துக்கு பதிலாக இராணுவ நிர்வாகமே காணப்படுகின்றது. இவர்கள் சிறிலங்கா அரசாங்கத்திற்கான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களாக இருக்கின்றனர்.

இனப்பிரச்சினைக்கு ஒரு நீதியான ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தீர்வு காணப்பட வேண்டுமாயிருந்தால் சிறிலங்கா அரசாங்கம் நிச்சயமாக செய்து கொண்டிருக்கும் இத்தகைய நடவடிக்கைகளை முற்றுமுழுதாக நிறுத்த வேண்டும்.

போர் முடிவடைந்து மக்கள் சுதந்திரமாக வாழ்ந்து வரும் நிலையில், அதிகாரப் பகிர்வு தேவையில்லை என்று சிறிலங்கா படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறியிருந்தார். ஆனால் தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களினால் அதிகாரப் பகிர்வு பாதிக்கப்படும் என அவர் இன்று கூறுகின்றார். ஆகவே இவர்கள் எவ்விதமான சிந்தனையில் செயற்படுகின்றார்கள் என்பதை மக்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

சிறிலங்கா ஜனாதிபதியும் இதே கருத்தை வெளியிட்டுள்ளார். இது அரசியல் தீர்வு தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் எத்தகைய மனநிலையில் இருக்கின்றது என்பதை தெளிவாக வெளிப்படுத்துகின்றது.

மாணவர்களினதும், ஏனையோரினதும் போராட்டங்களின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தான் இன்று தமிழக சட்டசபையில் அனைத்துக்கட்சி கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழீழம் தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பலதரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

போர்க்குற்றங்களை விசாரணை செய்ய மறுப்பதும், காணாமல் போனோர்களை கண்டுபிடிக்க மறுப்பதும், நடவடிக்கைகளை எடுக்க மறுப்பதும் அல்லது மனித உரிமை மீறல்களையும் அது தொடர்பான விசாரணைகளைச் செய்ய மறுப்பதும் தான் சர்வதேச ரீதியர்க சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றது என்பதை கூட இன்னும் இந்த அரசாங்கத்திற்கு புரியமால் இருப்பது ஒரு வருந்தத்தக்க விடயம்.

இத்தகைய பிரச்சினைகள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் ஆரோக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது இருந்தால், சர்வதேச சமூகம் மேலும் அது மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும். இத்தகைய பிரச்சினைகள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் இதுவரை எந்தவிதமான காத்திரமான முன்மொழிவுகளையும் முன்வைக்கவில்லை.

அரசியல் தீர்வு தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு வருடமாக பேச்சுவார்த்தை நடத்தியும் கூட ஒரு அங்குலம் கூட நகர முடியவில்லை. இதுவரை சிறிலங்கா அரசாங்கம் எந்தவித காத்திரமான பேச்சுவார்த்தை நடாத்தாமல் இருந்து கொண்டு, வெறுமனவே நாடாளுமன்ற தெரிவுக்குழு என்ற உப்புச்சப்பற்ற விடயங்களை பேசுவது எந்தவித பிரச்சினைகளையும் தீர்காது.

இந்நாட்டு மக்களின் நலன்களின் அடிப்படையில், தமிழ் மக்களாக இருக்கட்டும், சிங்கள மக்களாக இருக்கட்டும், முஸ்லிம் மக்களாக இருக்கட்டும், சிறிலங்கா அரசாங்கம் மேற்சொன்ன பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமாக இருந்தால், அது இந்நாடு பௌத்த சிங்கள நாடு என்ற அடிப்படையில் இருந்து கொண்டு பிரச்சினைகளை அணுகாது, ஏனையோரும் இந்நாட்டு குடிமக்கள் என்ற அடிப்படையில் பிரச்சினைகளைக் கையாள முன்வர வேண்டும்' என சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=b1d41fa2-93c1-4ca3-bf29-9ad102d99824

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.