Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நா. தீர்மானத்தின் கீழ் புலிகளுக்கு ஆயுத இறக்குமதி உரிமை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐ.நா. தீர்மானத்தின் கீழ் புலிகளுக்கு ஆயுத இறக்குமதி உரிமை உண்டு: வி.உருத்திரகுமாரன்

திங்கட்கிழமைஇ 10 யூலை 2006 19:56 ஈழம் ஜச.விமலராஜா

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஐ.நா. தீர்மானத்தின் கீழ் ஆயுத இறக்குமதிக்கான உரிமை உண்டு என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகர் விசுவலிங்கம் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான அமைப்பின் சார்பில் கடந்த ஏப்ரலில் சூரிச் நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் "தற்போதைய அமைதி முயற்சிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நெகிழ்வுப் போக்கு" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அந்த உரை நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

அதன் தமிழாக்கம்:

இலங்கையில் உள்ள தற்போதைய யுத்த நிறுத்தமானது கடந்த 2000 ஆம் ஆண்டு டிசம்பரில் ஒருதரப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்ட யுத்த நிறுத்தத்தின் மூலமாக முன்னெடுக்கப்பட்டது.

2001 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 11 ஆம் நாள் அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு 10 மாதங்களுக்கு முன்னமேயே விடுதலைப் புலிகளால் தற்போதைய யுத்த நிறுத்தமானது முன்னெடுக்கப்பட்டு விட்டது. இலங்கைத் தீவில் அமைதியையும் அரசியல் மாற்றத்தையும் உருவாக்க வேண்டும் என்பதில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உள்ள ஈடுபாட்டையே இது வெளிப்படுத்துகிறது.

அமைதிப் பேச்சுக்களுக்கு முன்னராக ஒரு இடைக்கால நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் பல முறை வலியுறுத்தினர். நீண்டகால போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மக்களினது அவசரமான மனிதாபிமான பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதற்காக இந்த இடைக்கால நிர்வாக அமைப்பு கோரப்பட்டது. இந்நிலையில் 2002 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சிங்கள அரசியல் கட்சியானது வடக்கு - கிழக்கில் ஒரு இடைக்கால நிர்வாக அமைப்பை உருவாக்குதற்கான தளத்தை அமைத்தது.

இருந்த போதும் தொடக்க நிலைகளில் பேச்சுக்களில் பங்கேற்ற சிறிலங்கா அரசாங்கமானது வடக்கு - கிழக்கின் இடைக்கால நிர்வாக அமைப்பு குறித்து தென்னிலங்கையில் ஒருமித்த கருத்தை உருவாக்கவில்லை. மேலும் இடைக்கால நிர்வாகம் தொடர்பான பேச்சுக்களில் பங்கேற்றால் அரச தலைவரால் தமது அரசாங்கம் கலைக்கப்பட்டுவிடக்கூடும் என்று சிறிலங்கா அரசாங்கம் அச்சப்பட்டது. இதற்கு எதிர்வினையாக தமிழீழ விடுதலைப் புலிகள் நெகிழ்வுத் தன்மையை வெளிப்படுத்தினர். இடைக்கால நிர்வாக அமைப்பினால் ஒட்டுமொத்த அமைதி முயற்சிகளுமே முறிந்துபோய்விடக் கூடாது என்பதற்காக தொடக்கத்தில் அதை விடுதலைப் புலிகள் கைவிட்டனர்.

சிறிலங்கா அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய துணைக் குழுக்களை இடைக்கால நிர்வாக அமைப்புக்கு பதிலாக உருவாக்கலாம் என்ற மாற்று யோசனை முன்வைக்கப்பட்டது. இந்த துணைக் குழுக்களானது வடக்கு - கிழக்கிற்கானது. தமிழர்களின் பாரம்பரிய தாயகப் பிரதேசத்திற்கானது. இருந்தபோதும் சிறிலங்கா அரசாங்கப் பிரதிநிதிகளையும் சரி அளவில் இணைத்துக் கொண்டு வடக்கு - கிழக்கு விவகாரங்களில் மேலதிக அதிகாரத்தையும் அவர்களுக்குக் கொடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது பெருந்தன்மையை வெளிப்படுத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சிறிலங்கா அரசாங்கமானது அரசியல் யாப்புத் தடைகள் உள்ளிட்டவைகளைச் சுட்டிக்காட்டி அனைத்து துணைக் குழுக்களுமே இயங்க முடியாமலும் துணைக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படாமலும் போனது. இதன் மூலமாக சிறிலங்காவின் நடைமுறையில் உள்ள அரசியல் யாப்பின் கீழ் தற்போதைய இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண முடியாது என்பது சர்வதேச அரசாங்கத்தின் சாட்சியாக வெளிப்பட்டது.

இந்த நிலைமைகளால் இலங்கைத் தீவில் அமைதியானது சிக்கலுக்குரியதானது. அமைதிக்காலத்தின் பலன்களை தென்னிலங்கை அனுபவித்துக் கொண்டிருக்க போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கிலோ இன்னமும் இயல்பு நிலைமை திரும்பவில்லை. போரினால் உள்நாட்டிலேயே அகதிகளாக இடம்பெயர்ந்த மக்களினது மீளக் குடியேற்றம்இ மீள் கட்டுமானம்இ அபிவிருத்திஇ நிவாரணம் எதுவும் தமிழர் பகுதிகளில் நடைபெறவில்லை.

துணைக் குழுக்கள் தோல்வியடைந்தமையால் வடக்கு - கிழக்கு மக்களின் அவசர மனிதாபிமான உதவிகளுக்கான இடைக்கால நிர்வாக அமைப்பை விடுதலைப் புலிகள் மீண்டும் வலியுறுத்தினர். 2003 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் நாள் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை என்ற வரைவை தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைத்தனர். இந்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபையானது காலவரையறையின்றி நீடிக்கும் வகையிலான ஒரு நிர்வாக அமைப்பாக எதிர்பார்க்கப்படவில்லை. குறைந்தபட்சகாலமான 5 ஆண்டுகாலத்துக்கு இந்த நிர்வாக அமைப்பு முன்வைக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் கோரிய 5 ஆண்டுகாலத்தில் பகுதிக் கால அளவில் நிர்வாக அமைப்பை விடுதலைப் புலிகள் நடத்தலாம் என்று ரைம் சஞ்சிகைக்கு அளித்த நேர்காணலில் சிறிலங்கா அரச தலைவர் யோசனை தெரிவித்திருந்தார். வடக்கு - கிழக்கில் வாழும் முஸ்லிம் சகோதரஇ சகோதரின் நலன்களையும் பாதுகாக்கக் கூடியதாகவும் சர்வதேச மனித உரிமை சட்டங்களையும் உள்ளடக்கியதாக விடுதலைப் புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை இருந்தது.

இடைக்கால தன்னாட்சி அதிகாரசபையைத் தாக்கல் செய்த பின்னர் அதன் மீது பேச்சுக்கள் நடத்த வருமாறு விடுதலைப் புலிகள் அழைப்பு விடுத்தனர். இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை விடுதலைப் புலிகள் முன் வைத்தபோதும் அதை அப்படியே ஏற்கவேண்டும் இல்லையெனில் விட்டுவிட வேண்டும் என்று அவர்கள் கோரவில்லை. அதன் மீது விவாதம் நடத்தி மாற்றியமைக்கவும் விடுதலைப் புலிகள் தயாராக இருந்தனர் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

இருந்தபோதும் சிறிலங்கா அரச தலைவர் தனது அதிகாரத்தின் மூலம் அமைதிப் பேச்சுக்களை தடம்புரளச் செய்தார். அமைதி முயற்சிகளில் பங்கேற்ற சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சுப் பொறுப்புகளை அரச தலைவர் கைப்பற்றினார். அமைச்சர்களை நீக்கினார். இதனால் குழப்பமான நிலை ஏற்பட்டு தனது அனுசரணைப் பணியை நோர்வே இடை நிறுத்தும் நிலைமைக்கு இட்டுச் சென்றது. கடந்த 5 ஆண்டுகால அமைதி முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கத்தின் சிறிதும் விட்டுக் கொடுக்காத போக்கினால் நோர்வே தனது அனுசரணைப் பணிகளை இடைநிறுத்தும் நிலைமை ஏற்பட்டது என்பதை குறிப்பிடுகிறோம்.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கைத் தீவு ஆழிப்பேரலையால் பாதிப்புக்குள்ளானது. இந்த இயற்கைச் சீற்றத்தினூடாக இனப்பிரச்சனையின் பகைமை மறந்து இருதரப்பும் இணைந்து செயற்படுவதற்கான ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பலரும் கருதினர்.

ஆனால் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒரு கட்டமைப்பை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து உருவாக்க இந்தக் கொடூரமான அவசரமான சூழ்நிலையிலும் கூட சிறிலங்கா அரசாங்கம் தயாராக இல்லை. இருப்பினும் சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தில் ஆழிப்பேரலை மீளமைப்புக்கான நிர்வாகாமைப்பு முன்வைக்கப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது எதுவித அரசியல் அதிகாரமும் இல்லாத ஒரு அமைப்பு. இதுவிடயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய நெகிழ்வுத் தன்மையை வெளிப்படுத்தி இணைந்து செயற்பட தயாராயினர். இந்த கட்டமைப்புக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பின்னர் சிங்களப் பேரினவாதத்தின் கோர முகத்தை சர்வதேசம் கண்டுகொண்டது. சிங்களப் பேரினவாதிகள் வீதிகளில் இறங்கி இந்த அமைப்புக்கு எதிராகப் போராட்டங்களை நடதினர். மேலும் சிங்களவர் பெரும்பான்மையாக உள்ள சிறிலங்கா அரசாங்கத்தின் நீதிமன்றத்தால் இந்தக் கட்டமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டது.

சிறிலங்காவின் நீதித்துறையானது அரசாங்கத்தின் மூன்று பிரிவுகளில் ஒன்று என்று அமெரிக்க காங்கிரஸ் மான் குறிப்பிட்டிருந்தார்.

இதில் மிக முக்கியமானது என்னவெனில் இந்த நிலைமைகளிலும் கூட தமிழீழ விடுதலைப் புலிகள் பொறுமை காத்தனர். மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான ஒப்பந்தங்களை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தத் தவறிய நிலையிலும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் விடுதலைப் புலிகள் ஈடுபாட்டுடன் இருந்தனர்.

இலங்கைப் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் யுத்த நிறுத்த மீறல்கள் குறித்து கூறுவது பொருத்தமற்றதாக உள்ளது.

ஒரு கட்டடத்திலிருந்து சிறிலங்கா அரசாங்கத்தின் கொடியை அகற்றுவதையும்

தமிழர்கள் வீடுகளில் தொடர்ந்து சிறிலங்கா இராணுவத்தினர் ஆக்கிரமித்து நிற்பதால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளமையையும்-

மீன்பிடி மற்றும் விவசாய செயற்பாடுகளுக்குத் தடை விதித்து தமிழ் மக்களின் வாழ்வாதார உரிமையை மறுப்பதையும்-

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரின் படுகொலைகளையும் சமமாக ஒப்பிடக் கூடாது.

தமிழீழ விடுதலைப் புலிகள்தான் அரசாங்கத்தைவிட அதிக யுத்த நிறுத்த மீறல்களில் ஈடுபட்டிருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. 4 ஆண்டுகாலமாக 1இ460 நாட்களாக தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கை மறுக்கப்பட்டுள்ளமையை எப்படி இவர்கள் கணக்கிடுவர்? ஒவ்வொரு நாளையும் நீங்கள் கணக்கில் சேர்த்தாலே பெருந்தொகையான யுத்த நிறுத்த மீறல்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்டிருப்பது வெளிப்படும்.

யுத்த நிறுத்த ஒப்பந்தமானது பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்று இருதரப்பையும் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்காக பாடசாலைகள்இ வழிபாட்டுத் தலங்கள்இ பொதுக்கட்டடங்கள் ஆகியவற்றில் உள்ள முட்டுக்கட்டைகள் குறித்து தெளிவாக சரத்து 2 இல் கூறப்பட்டுள்ளது. இப்போது வரைஇ யாழ்ப்பாண குடாநாட்டில் மக்களின் வாழ்விடங்களில் பெரும்பகுதியை சிறிலங்கா இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். இராணுவம் தங்களது வீடுகளில் ஆக்கிரமித்து நிற்கும் போது அந்த மக்களால் எளிதாக இயல்பு வாழ்க்கைத் திரும்பிவிடமுடியாது. இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள இருப்பிடங்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பல்வேறு மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

இராணுவச் சமநிலையை பாதுகாப்பதற்கு பொதுமக்களின் வீடுகளையா ஆக்கிரமிப்பது.?

ஜெனீவா மாநாடுகளின் சரத்து 17 இல் பொதுமக்களின் கட்டாய வெளியேற்றம் தடை செய்யப்பட்டுள்ளது. "பிரச்சனைகளுக்காக பொதுமக்களை இடம்பெயருமாறு உத்தரவிடக் கூடாது. பொதுமக்களின் பாதுகாப்பு பிரச்சனை அல்லது அவசியமான இராணுவ காரணங்களுக்காகத்தான் அதைச் செய்யலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டு யுத்த நிறுத்த காலத்தில் பொதுமக்களின் வீடுகளை தொடர்ந்து ஆக்கிரமித்து நிற்பதற்கான அவசியமான காரணம் எதனையும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவிக்கவில்லை.

மேலும் 1907 ஆம் ஆண்டு தரைவழி யுத்தம் தொடர்பான திகேக் மாநாட்டின் சரத்து 46 இல் 2 ஆம் பத்தியில்இ தனிநபர் சொத்துகளைப் பறித்துக் கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

அமைதி ஒப்பந்தம் இல்லாதிருக்கும் புரூண்டிஇ ஜோர்ஜியாஇ பொஸ்னியாஇ கம்போடியாஇ கொசாவோஇ கௌதெமாலாஇ எல் சல்வடோர்இ மாசிடோனியாஇ சியரா லியோன் மற்றும் லைபீரியாவில் இந்த இடப்பெயர்வு மற்றும் அகதிகள் பிரச்சனையானது பாரிய கவலைக்குரியாத சுட்டிக்காட்டப்படுகிறது.

அமைதி முயற்சிகளைத் தொடருவதில் மற்றொரு பாரிய முட்டுக்கட்டையானது துணை இராணுவக் குழுவினருக்கு சிறிலங்கா அரசாங்கம் ஆதரவளிப்பதாகும்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்து 1.8-இல்

தமிழ் துணை இராணுவக் குழுக்களினது ஆயுதங்களை சிறிலங்கா அரசாங்கம் 30 நாட்களுக்குள் களைய வேண்டும். துணை இராணுவக் குழுவினரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அல்லாது இதர பகுதிகளில் தங்களது இராணுவத்தின் கீழ் சிறிலங்கா அரசாங்கம் இணைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் 2006 ஆம் ஆண்டைய இராஜாங்க திணைக்கள அறிக்கைஇ கண்காணிப்புக் குழுவின் அவதானிப்புகள் மற்றும் ஊடகங்களின் அறிக்கைகளின் படி துணை இராணுவக் குழுவினரின் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான பேச்சுக்கள் நீதிமன்றின் முன்பாக நடைபெறவில்லை. இருதரப்பும் நல்லெண்ண அடிப்படையில் பிரச்சனையை தீர்க்க முன்வந்துள்ளனர். இந்த நிலையில் துணை இராணுவக் குழுவினரது நடமாட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் மறுத்து வருவதானது நம்பிக்கையை சீர்குலைப்பதும் சர்வதேச சமூகத்தின் பொது அறிவை அவமதிப்பதுமாகும்.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது இருந்த துணை இராணுவக் குழுவினரைத்தான் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கட்டுப்படுத்தும் என்று சிறிலங்கா அரசாங்கம் வாதிடுகிறது. இருந்தபோதும் யுத்த நிறுத்த ஒப்பந்தமானது நடைமுறையில் உள்ளது. புதிய சூழ்நிலைகளுக்கு முகம் கொடுத்து யுத்த நிறுத்தத்தை உறுதிப்படுத்த வேண்டும். யுத்த நிறுத்த ஒப்பந்தங்கள் அனைத்துமே அப்போது நடைமுறையில் உள்ளவற்றைத்தான் குறிப்பிடும். யுத்த நிறுத்தம் கைச்சாத்திட்ட பின்னர் இருதரப்பினரும் புதிய அமைப்புகளை உருவாக்கி தாக்குதல் மேற்கொள்ளும்.

யுத்த நிறுத்த ஒப்பந்த சரத்து 1.3 ஆனது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை சிறிலங்கா அரச படைகள் மேற்கொள்வதை தடை செய்கிறது. ஆகையால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் நடத்தும் அமைப்புகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் இராணுவ உதவி வழங்குகிறது. துணை இராணுவக் குழுவினரை ஆதரிக்கவில்லை என்றும் துணை இராணுவக்குழுவினர் இல்லை என்றும் சிறிலங்கா அரசாங்கம் கூறினாலும்இ தாக்குதல் நடவடிக்கைகளை எந்த பகுதியிலும் மேற்கொள்வதை சிறிலங்கா அரசாங்கம் தடுக்க வேண்டும் என்று யுத்த நிறுத்த ஒப்பந்தம் கூறுகிறது.

2003 ஆம் ஆண்டு கடற்பகுதியில் நடந்த 3 வெவ்வேறு சம்பவங்களில் 26 விடுதலைப் போராளிகள் வீரச்சாவடைந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் வர்த்தக கப்பலை சிறிலங்கா கடற்படை சர்வதேச கடற்பரப்பில் மூழ்கடித்தது. இருந்தபோதும் தமிழீழ விடுதலைப் புலிகள் பொறுமை காத்திருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல் ஆயுதங்களை எடுத்து வந்ததாக சிறிலங்கா கடற்படை குற்றம்சாட்டியது. வாதத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல் ஆயுதங்கள் எடுத்து வந்தால் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அந்தக் கப்பல்களைத் தாக்கும் உரிமை இல்லை.

யுத்த நிறுத்த ஒப்பந்த சரத்து 1.2 இன் கீழ் எந்த ஒருதரப்பும் இராணுவ தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது. அனைத்து வகையான இராணுவ நடவடிக்கைகளையுமே மேற்கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளது. நேரடியாக அல்லது மறைமுகமாக ஆயுதங்களால் சுடுதல்இ ஆயுத சோதனைஇ தாக்குதல்கள்இ படுகொலைகள்இ கடத்தல்கள்இ பொதுமக்கள் அல்லது இராணுவ சொத்துகளை நாசமாக்குதல்இ பாதிப்பு உருவாக்குதல் மற்றும் தற்கொலை நடவடிக்கைகள்இ ஆழ ஊடுருவும் அணியினரது நடவடிக்கைகள் என அதில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுதங்களை இறக்குமதி செய்வது ஒரு இராணுவ ரீதியான தாக்குதல் நடவடிக்கை அல்ல. அதற்கு யுத்த நிறுத்த ஒப்பந்தம் தடையும் விதிக்கவில்லை. ஆயுதக் கொள்வனவைத் தடுப்பது ஒரு அரசாங்கத்தின் பொது நடவடிக்கை.

பொதுவில் இறுதியான அமைதி ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுஇ ஆயுதக் களைவு என்றெல்லாம் வருகின்றபோது இத்தகைய ஆயுதக் கொள்வனவுக்கு தடை விதிக்கப்படும். யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான இராஜதந்திர பேச்சுக்களில் இது இடம்பெறும். கடல்சார் ஆயுத இறக்குமதி நடவடிக்கைகள் குறித்த சட்டங்களை பிரச்சனையில் தொடர்புபட்ட தரப்பினர் நன்கு அறிந்தே வைத்திருப்பர்.

தமிழீழ விடுதலைப் புலிகள்- ஒரு தேச விடுதலைப் போராட்ட இயக்கம். ஐ.நா. சபையின் தீர்மானங்கள் 3034 மற்றும் 3314 இன் கீழ் சுய நிர்ணய உரிமைக்காக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுத இறக்குமதி செய்யும் உரிமை உண்டு. சர்வதேச சட்ட விதிகளின் படி சுய பாதுகாப்புஇ சுய உதவி ஆகியவற்றுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை இறக்குமதி செய்ய முடியும்.

தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை "சர்வதேச வலைப் பின்னலில்" சிக்க வைத்திருக்கிறோம் என்று சிறிலங்கா தலைவர்கள் கூறிவரும் போது அமைதி முயற்சிகளில் சர்வதேச சமூகத்தினது செயற்பாடுகளானது நடுநிலைத்தன்மையோடு இல்லை என்ற உணர்வை ஏற்படுத்தும். சிறிலங்காவின் இத்தகைய கருத்துகளைத் தடுக்கவும் மறுக்கவும் சர்வதேச சமூகம் தவறிவிட்டது. மேலும் இனப்பிரச்சனைக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண வேண்டும் என்று சர்வதேச சமூகமானது அழுத்தம் கொடுப்பது என்பது ஒரு மோசமான கருத்தாகும். அத்தகைய நிலைப்பாடானது சுய நிர்ணய உரிமைச் சட்டங்களுக்கு எதிரானது.

மேலும் உலகம் முழுமைக்கும் தற்போது நடைபெற்று வருகின்ற தேசிய இனப்பிரச்சனைகளில் சர்வதேச சமூகம் கடைபிடித்து வரும் அணுகுமுறைகளுக்கும் முரணானது அது.

தென் சூடான் பிரச்சனையில் மாக்கோஸ் ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவின் அனுசரணையுடன் இங்கிலாந்துஇ நோர்வே மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் தென் சூடான் மக்கள் தனியரசு அமைப்பதை அங்கீகரித்துள்ளன. தென் சூடான் மக்கள் 6 ஆண்டுகளுக்குப் பின்னர் சூடானுடன் இருப்பதா அல்லது தனியரசை அமைப்பதா என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தவும் இந்த ஒப்பந்தம் வழி செய்துள்ளது.

அதேபோல் புனிதவெள்ளி ஒப்பந்தத்தின் கீழ் வட அயர்லாந்து தனது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 7 ஆண்டுகளுக்குப் பின்னரும் வட அயர்லாந்தில் வாக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவகையில்தான் சேர்பிய- மொண்டெநீக்ரோ ஒப்பந்தமும் மொண்டெநீக்ரோ மக்கள் தனியரசு அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. மூன்று ஆண்டுகாலத்துக்குப் பின்னர் வாக்கெடுப்பு நடத்தவும் வகை செய்துள்ளது.

பாப்புவ நியூ கினியா-பௌகன்வில்லெ ஒப்பந்தத்தின் கீழ் பௌகன்வில்லெ 10 அல்லது 15 ஆண்டுகளுக்குள் வாக்கெடுப்பு நடத்தி அந்நாட்டு மக்களின் அரசியல் அபிலாசைகளை அறிந்து கொள்ளலாம்.

தென்சூடான்

வட அயர்லாந்து

மொண்டெநீக்ரோ

பௌகன்வில்லெ ஆகியவை காலனித்துவத்தின் எஞ்சியவை அல்ல.

இவை அனைத்துமே காலனித்துவமற்ற நாடுகளின் பிரச்சனை.

தென் சூடானின் மாக்கோஸ் ஒப்பந்தத்தை சர்வதேச சமூகம் உருவாக்கும்போது ஐக்கிய இராச்சியத்தின் (இங்கிலாந்து) இறையாண்மை அல்லது பிரதேச ஒருமைப்பாட்டை மீறுவதாகக் கூறி எதிர்க்கவில்லை.

சேர்பிய-மொண்டெநீக்ரோ ஒப்பந்தத்தை உருவாக்கும்போது சேர்பியாவின் பிரதேச ஒற்றுமையை மீறுவதாகக் கூறி எதிர்க்கவில்லை.

பாப்புவ நியூ கினியா-பௌகன்வில்லெ ஒப்பந்தத்தை உருவாக்கும்போது பாப்புவ நியூ கினியாவின் இறையாண்மையையும் பிரதேச ஒற்றுமையையும் மீறுவதாகக் கூறி எதிர்க்கவில்லை.

மேற்கூறிய இனப்பிரச்சனைகளின் போது தலையிட்ட சர்வதேச சமூகம் என்ன வகையான அமைதித் தீர்வு உருவாக்கப்பட வேண்டும் என்று அந்த அளவுகோலையும் முன்னரே வைத்திருக்கவில்லை.

அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் கொபி அனான்இ கொசாவோவானது சேர்பியாவுடன் இருக்க வேண்டுமா அல்லது சுதந்திரம் அளிக்கப்பட வேண்டுமா என்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும்" என்றார்.

இந்த இனப்பிரச்சனைகளில் எல்லாம் இத்தகைய நிலைப்பாட்டை மேற்கொண்ட சர்வதேச சமூகமானது இலங்கைத் தீவில் தமிழ்-சிங்கள இனங்களுக்கு இடையேயான பிரச்சனையில் மட்டும் ஐக்கிய நாடு என்ற கட்டமைப்பில்தான் தீர்வு உருவாக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதானது சர்வதேச சமூகத்தின் இரட்டை நிலைப்பாட்டையே வெளிப்படுத்துகிறது.

இறையாண்மை குறித்த நிபந்தனைகளுடன் அமைதிப் பேச்சுக்களை நடத்தும்போதுதான் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கு சிங்கள தேசம் முன்வரும். அல்லது அமைதி முயற்சிகள் உரிய முறைகளில் முன்னெடுக்கப்படும். அதே நேரத்தில் தற்போதைய அமைதி முயற்சிகளுக்கு தமிழ் மக்கள் மீது நம்பிக்கையும் அதிகரிக்கும். அரெண்ட் லிப்கர் வாதிடுவதைப் போல்இ பிரிவினையைத் தவிர்ப்பதற்கு சிறந்த வழி இல்லையெனில் தடுக்க முடியாது என்று அதில் விசுவலிங்கம் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

http://www.eelampage.com/?cn=27441

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்தமனிசன் வாயத்திறக்கத்தான் அட இப்பிடியெல்லாம் இருக்கெண்டு எங்களுக்கே உறைக்கிது. தொடர்க அவர் பணி.

அதுசரி இவ்வளவுநாளும் ஒவ்வொண்டும் நடக்கேக்கை ஏனாக்கும் வாயைப்பொத்திக்கொண்டு இருந்தவர்? நானறிஞ்சவரை இதுதான் முதன்முதலில் இவரிடமிருந்து வரும் பிரசுரிக்கப்பட்ட உரை/அறிக்கை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.