Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கையும் எதிர்கொள்ளும் சவால்களும்

Featured Replies

சிறிலங்கா தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கையும் எதிர்கொள்ளும் சவால்களும் [ செவ்வாய்க்கிழமை, 02 ஏப்ரல் 2013, 07:05 GMT ] [ நித்தியபாரதி ] Indo-Sri%20Lanka%20relations.jpgசிறிலங்கா மீது இந்தியா கடும்போக்கான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவில்லை என்பது உண்மையாகும். ஆனால் சிறிலங்காவின் சீனாவுடனான உறவானது எதிர்பார்ப்பது போல் அவ்வளவு காத்திரமானதல்ல. 

இவ்வாறு இந்தியாவின் ஜவாகலால் நேரு பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் பேராசிரியரான பி.சகாதேவன்* Deccan Herald ஆங்கில ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

தமிழ்நாட்டு அரசாங்கமும் அதன் எதிர்க்கட்சியும் சிறிலங்காத் தமிழர்களுக்கு நீதி மற்றும் உரிமையை அந்நாட்டு அரசாங்கம் வழங்க வேண்டும் என்பதை இந்திய மத்திய அரசிடம் வலியுறுத்தி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் சிறிலங்கா மீதான இந்திய வெளியுறவுக் கொள்கையானது தமிழ்நாட்டில் அக்னிப் பரீட்சையை எதிர்நோக்க வேண்டியேற்பட்டுள்ளது. 

சிறிலங்காவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான, நம்பகமான விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்கா தலைமையில் ஜெனீவாவில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை இந்தியா பல்வேறு அழுத்தங்களின் பின்னர் ஆதரித்து வாக்களித்தது. 

தமிழ் மக்களின் உணர்வுகளையும் அவர்களது நலன்கள் தொடர்பிலும் இந்திய மத்திய அரசாங்கம் கரிசனை காட்டவில்லை என தமிழ்நாட்டில் வாழும் மக்களின் ஒரு சாரார் கருதுகின்றனர். 

இந்திய மத்திய அரசாங்கம், தமிழ்நாட்டு சட்டசபைத் தீர்மானத்தை ஏற்க மறுத்தமையானது இவ்வாறான எண்ணக்கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது. தமிழ்நாட்டு மக்களை திருப்திப்படுத்தும் அதேவேளையில், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ளக் கூடிய வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதென்பது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவ்வளவு சுலபமான காரியமல்ல. 

சிறிலங்கா மீதான தமிழ்நாட்டின் தற்போதைய நிலைப்பாடானது அரசியல் மற்றும் இன உணர்வுகள் ஆகிய இரு காரணிகளை அடிப்படையாகக் கொண்டது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மக்களின் உணர்வுகளை அரசியல் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவ்விரு காரணிகளும் ஒன்றுடனொன்று தொடர்புபட்டதாகும். இவ்விரு காரணிகளும் சிங்களவர்களால் ஆளப்படும் சிறிலங்கா அரசாங்கத்தின் இனவெறிக் கொள்கையை எதிர்ப்பதற்கு வலுவூட்டுகின்றன. 

போரின் இறுதிக்கட்டத்தில் போர் வலயங்களில் அகப்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தால் தயவு தாட்சண்ணியமின்றி பல்வேறு மீறல்கள் மேற்கொள்ளப்பட்டன. இப்போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அனைத்துலக சமூகமானது ராஜபக்ச அரசாங்கம் மீது அழுத்தம் கொடுத்து வருகின்றன. 

அத்துடன் சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் மீது போருக்குப் பின்னர் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் பல்வேறு அடக்குமுறைகள் மற்றும் ஓரங்கட்டுதல்கள் தொடர்பாக அனைத்துலக சமூகம் தனது விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கமானது தமிழ் மக்கள் தொடர்பில் கைக்கொள்ளும் இனவெறிக் கொள்கையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என தமிழ்நாடு தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகிறது. 

சிறிலங்கா அதிபர் ஏமாற்றக் கூடிய மூலோபாயங்களில் நம்பிக்கை கொண்டுள்ளார். இவ்வாறான நயவஞ்சகமான சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்பைப் பேணுவதென்பது மிகக் கடினமானது என்பதை இந்தியா கண்டுணர்ந்துள்ளது. குறிப்பாக, அரசியல் தீர்வு விவாகரம் தொடர்பில் சிறிலங்காவின் ராஜபக்ச அரசாங்கமானது இந்தியாவால் முன்வைக்கப்பட்ட அதிகாரப் பகிர்வு உடன்படிக்கையை ஏற்று நடப்பதை விரும்பவில்லை என்பது இந்தியாவுக்கு வருத்தமளித்தது. ஆனால் அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்தியாவிடம் சிறிலங்கா பல வாக்குறுதிகளை வழங்கியும் அவற்றை மேற்கொள்ளவில்லை. சிறிலங்காவின் வெறுமையான இராஜதந்திர வாக்குறுதிகள் தொடர்பில் இந்தியா மேலும் ஆர்வம் காண்பிக்கவில்லை. 

இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்ததை, அதன் உள்நாட்டு அரசியல் சக்திகளைத் திருப்திப்படுத்துவதற்கும் அவர்களின் அழுத்தங்களுக்கு பதிலளிப்பதற்கும் அப்பால் பார்க்கப்பட வேண்டும். 

சிறிலங்காவை எதிர்த்து இந்தியா வாக்களித்ததானது, சிறிலங்கா பல ஆண்டுகளாக தனது நாட்டில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் இதயசுத்தியுடன் செயற்படத் தவறியதன் விளைவாக இந்தியா, சிறிலங்கா மீது அதிருப்தி அடைந்ததன் வெளிப்பாடாகவும் பார்க்கலாம். சிறிலங்காவில் அனைத்துலக சமூகத்தின் அழுத்தமானது உடனடி மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதை நம்பமுடியாவிட்டாலும் கூட, சிறிலங்காவானது அனைத்துலக சமூகத்தின் நம்பகத்தை இழந்துவிட்டது என்பதும் உண்மையாகும். 

ஜெனீவாத் தீர்மானத்தின் பின்னான காலத்தில், சிறிலங்காத் தீவிலுள்ள கடும்போக்காளர்களிடமிருந்து இந்தியா மிகப் பெரிய எதிர்ப்புக்கு முகங்கொடுத்து வருகிறது. சிறிலங்காத் தீவில் வாழும் சிங்களத் தேசியவாதிகள், சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்தவர்களை எதிர்த்து வீதிகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். 

தமிழ்நாடு சிறிலங்காவின் நிலைப்பாடு தொடர்பில் மேற்குலகுடன் இணைந்து நிற்கும் அதேவேளையில், இந்தியாவும் மேற்குலகுடன் இணைந்து சிறிலங்காவுக்கு எதிராகச் செயற்படுவது போன்ற எதிர்மறை எண்ணக்கருத்து சிறிலங்காவில் நிலவுகிறது. இவ்வாறான ஒரு இக்கட்டான சூழ்நிலையில், ராஜபக்ச அரசாங்கத்துடன் இந்தியா இணைந்து செயற்படுவதைத் தவிர வேறு தெரிவுகள் காணப்படவில்லை. 

ஆனால் நயவஞ்சகமான சிறிலங்கா அரசாங்கம் நீதியுடன் நேர்மையுடனும் நடக்கும் என எதிர்பார்க்க முடியாது. இதேவேளையில் இந்தியாவானது சிறிலங்கா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்கின்ற அடிப்படைக் காரணியை கவனத்தில் எடுக்காதிருக்க முடியாது. குறைந்தது அடுத்த பொதுத் தேர்தல்கள் வரை சிறிலங்கா விடயத்தை தமிழ்நாடு அவ்வளவு இலகுவில் கைவிடாது. 

சிறிலங்கா மீது பொருளாதாரத் தடையை விதித்தல், தமிழீழத்திற்கான கருத்துவாக்கெடுப்பை நடாத்துதல் போன்றன தொடர்பில் இந்தியா, ஐ.நாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் இயற்றப்பட்டது. சிறிலங்காவானது தன்மீதான வெளித்தரப்பின் அழுத்தங்களை உணர்ந்து அதிகாரப் பகிர்வை அடிப்படையாகக் கொண்டு அரசியற் தீர்வொன்றை எட்ட வேண்டும். இதேவேளையில், தன் மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைக்கு அனுமதி வழங்க வேண்டும். ஆனால் கெட்ட வாய்ப்பாக, சிறிலங்கா அரசாங்கமானது இவ்வாறான எதனையும் விரைந்து செய்ய முன்வரவில்லை. இந்தச் சூழ்நிலையில், சிறிலங்கா மீதான மேற்குலக நாடுகளுடன் இணைந்து இந்தியாவால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பயனற்றுப் போய்விடும். 

சிறிலங்கா மீது இந்தியா கடும்போக்கான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவில்லை என்பது உண்மையாகும். ஆனால் சிறிலங்காவின் சீனாவுடனான உறவானது எதிர்பார்ப்பது போல் அவ்வளவு காத்திரமானதல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கும் அனைத்துலக சமூகத்தின் அழுத்தத்திற்கு முகங்கொடுப்பதற்காகவும் சிறிலங்கா, சீனாவுடன் நட்புறவைப் பேணிவருகிறது. இதேபோன்று சீனாவும் சிறிலங்காவில் கேந்திர முக்கியத்துவம் மிக்க மூலோபாய நலன்களை அடைந்து கொள்வதற்காக நட்பைப் பேணிவருகிறது. 

இவ்விரு நாடுகள் தமது வரையறைகளை நன்கு புரிந்து வைத்திருக்கின்றனர். சீனாவானது சிறிலங்காவுக்கு பொருளாதார மற்றும் இராணுவ ஆதரவுகளை வழங்குவதற்கான நம்பகமான ஒன்றாக உள்ளபோதிலும், தேசிய உறுதிப்பாடு மற்றும் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதில் சீனா, சிறிலங்காவுக்கு பயனற்றதாக இருக்கலாம். 

உள்ளக அரசியல் நடவடிக்கைகள் மூலம் மட்டுமே நாட்டில் சமாதானத்தையும் ஒழுங்கையும் ஏற்படுத்த முடியும். இந்நிலையில், இந்து மாக்கடல் பிராந்தியத்தில் அதிகாரம் மற்றும் செல்வாக்கை நிலைநிறுத்தி இந்தியாவுடன் சீனா போட்டி போடுவதற்கான மூலோபாய இடைவெளியை சிறிலங்கா வழங்குவதற்கு முன்னர், இதன் பலவீனத்தையும், வலுவின்மையையும் சிறிலங்கா புரிந்துகொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது. 

*The writer is Professor of South Asian Studies, School of International Studies, Jawaharlal Nehru University, New Delhi.

http://www.puthinappalakai.com/view.php?20130402108040

 சிறிலங்கா மீது இந்தியா கடும்போக்கான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவில்லை என்பது உண்மையாகும். ஆனால் சிறிலங்காவின் சீனாவுடனான உறவானது எதிர்பார்ப்பது போல் அவ்வளவு காத்திரமானதல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கும் அனைத்துலக சமூகத்தின் அழுத்தத்திற்கு முகங்கொடுப்பதற்காகவும் சிறிலங்கா, சீனாவுடன் நட்புறவைப் பேணிவருகிறது. இதேபோன்று சீனாவும் சிறிலங்காவில் கேந்திர முக்கியத்துவம் மிக்க மூலோபாய நலன்களை அடைந்து கொள்வதற்காக நட்பைப் பேணிவருகிறது.

 

 

கிட்டத்தட்ட நாற்பது பில்லியன்கள் டாலர் அளவில் மொத்த தேசிய உறபத்தியை கொண்ட இலங்கையில் கிட்டத்தட்ட பத்து  பில்லியன்கள் அளவில் சீனா முதலீடு செய்துள்ளது பெரிய விடயமே.

 

அத்துடன் அம்பாந்தோட்டை துறைமுகம் 72 மணித்தியாலங்களுக்குள் ஒரு கடற்படை முகாமாக மாற்றப்படலாம் எனவும் முன்னை நாள் இந்திய இராணுவ அதிகாரி கூறி இருந்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.