Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூடக் கோரி மீண்டும் போராட்டம்.

Featured Replies

உயிர் காக்க..! ஒன்றிணைவோம்…!!
மனித இனம் காக்க… நிலம், நீர், காற்று
சூழலைப் பாதுகாத்து தலைமுறைகள் தளைத்திட
ஸ்டெர்லைட் நச்சு ஆலையை
நிரந்தரமாக இழுத்து மூடக் கோரி
08.04.2013 திங்கள்கிழமை
தூத்துக்குடியில் முழு அடைப்பு.
ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் ஓடாது
 

 

483775_4689789242384_747398308_n.jpg

 

(முகநூல்)

Edited by துளசி

  • தொடங்கியவர்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தர்மயுத்தம்... அனைவரும் பங்கேற்க வைகோ அழைப்பு!

 

06-vaiko91-300.jpg

 

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக் கோரி வரும் 8ம் தேதி தர்மயுத்தம் நடைபெறுவதாகவும் அதில் அனைத்துத் தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

 

இது குறித்து, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களின் உடல் நலனுக்குப் பெருங்கேடும், உயிருக்கு ஆபத்தும் விளைவிக்கக்கூடிய, ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடவும், மக்களின் நலன் காக்கவும், மக்களின் தர்மயுத்தம் தொடருகிறது.

 

குஜராத் மாநிலமும், கோவாவும் இந்த ஆலையை அனுமதிக்காத நிலையில், தமிழகத்தில் மட்டும் இந்த உயிர் குடிக்கும் எமன் உட்கார்ந்து இருக்கிறது. இந்த ஆலையை அகற்றக்கோரி, தூத்துக்குடியில் ஏப்ரல் 8 ஆம் தேதி பொது வேலை நிறுத்தம், முழு கடை அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. ஆட்டோ, வேன், கார், லாரி ஆகிய வாகனங்களும் அன்று இயங்காது என போராட்டக்குழு அறிவித்து உள்ளது.

 

மக்களுக்காக நடத்தப்படும் இந்தப் பொது வேலைநிறுத்தத்தில் தூத்துக்குடி நகர வர்த்தகர் சங்கம், மத்தியச் சங்கம், வியாபாரிகள் சங்கம், மீனவர் சங்கம், வணிகர்கள் சங்கம், அரிமா சங்கங்கள், வாகன ஓட்டுன‌ர் சங்கம், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என 60-க்கும் மேற்பட்ட பொதுநல அமைப்புகள் பங்கேற்கும் என அறிவித்துள்ளன.

 

ஸ்டெர்லைட் ஆலை இயங்குகிற ஒவ்வொரு நாளும், அங்கு வாழும் மக்களின் ஆரோக்கியத்துக்கும், உயிருக்கும் ஆபத்து என்பதாலும், ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ளவர்கள், தங்கள் உடல் நலனைக் காக்கவும், தங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அனைவரையும் பாதுகாப்புடன் வாழ வைக்கவும், ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்ற வேண்டியதே தலையாய கடமை என்பதால், இந்த‌ தர்ம யுத்தத்தில் அரசியல் கட்சிகள், சாதி, மதம் கடந்து அனைவரும் பங்கு ஏற்க வேண்டுகிறேன்" என்று வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

http://tamil.oneindia.in/news/2013/04/06/tamilnadu-day-long-stir-be-held-against-sterlite-plant-vaiko-172958.html

  • கருத்துக்கள உறவுகள்

தூத்துக்குடிதானே என்று மற்றவர்கள் தூங்கிவிடுவார்களோ என்று ஒரு ஐயம்..! :unsure:

  • தொடங்கியவர்

கையால் எழுதி கூட பிரச்சாரம் செய்கிறார்கள்.

 

8941_186742918139538_247343091_n.jpg

 

(முகநூல்)

Edited by துளசி

  • தொடங்கியவர்

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை விரட்டி அடிப்போம் என்று தூத்துக்குடி நகர் முழுதும் இன்று பந்த் அனுசரிக்கப்பட்டது.

காய்கனி மார்கெட் பகுதியில் கடைகள் அடைக்கபட்டிருந்த காட்சி..நகர் முழுதும் கடைகள் அடைக்கப்பட்டன...பந்த முழுமையான வெற்றி பெற்றது.

வெகுஜன போராட்டம் வெற்றியை நோக்கி.

 

602154_283029365165145_712896002_n.jpg

(முகநூல்)

  • தொடங்கியவர்

மண்ணை காக்க மக்கள் நடத்தும் தன்னெழுச்சி போராட்டத்தை சீர்குழைக்கும் நோக்கில் தூத்துக்குடியில் ஒட்டப்பட்ட சுவரொட்டி.

இவர்கள் கனவு பலித்ததா?????

 

17187_283028631831885_1225729591_n.jpg

 

(முகநூல்)

  • தொடங்கியவர்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்கள் போராட்டதிற்கு வெற்றி- வைகோ.

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டம் முழு வெற்றி அடைந்ததாக கூறியுள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தூத்துக்குடி மாநகரில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டக் குழு அறிவித்த முழு கடை அடைப்பு பொது வேலை நிறுத்தப் போராட்டம், அம்மாநகர வரலாற்றிலேயே, இதுவரை இல்லாத அளவுக்கு, பிரமிக்கத்தக்க வெற்றியைப் பெற்று உள்ளது.

20,000 க்கும் மேற்பட்ட கடைகளை, வணிகர்கள் தாங்களாவே அடைத்து விட்டனர். ஒருநாள் வருமானத்தைப் பொருட்படுத்தாமல், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், மினி பஸ்கள் எவையுமே ஓடவில்லை. வீதிகள் வெறிச்சோடி விட்டன. ஒவ்வொரு குடும்பத்திலும் தங்களின் உடல் நலனை, தங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் வாழ்வை, உயிரை, பாதுகாத்துக் கொள்வதற்கு ஸ்டெர்லைட் நாசகார ஆலையை, அகற்றியே தீர வேண்டும் என்று, மக்கள் முடிவு எடுத்து விட்டனர்.

நிலம், நீர், காற்று மண்டலம் அனைத்தையும் நச்சுமயமாக்கி, போபால் விஷவாயு அழிவைப் போல், உயிர் குடிக்கும் எமனாக அமைந்து உள்ள ஸ்டெர்லைட் ஆலையை அகற்றும் வரை, மக்களின் தர்ம யுத்தம் தொடரும். அரசியல் கட்சிகள், சாதி, மத எல்லைகள் அனைத்தையும் கடந்து, பொதுமக்கள் போர்க் கோலம் பூண்டு விட்டனர். வீட்டுக்கு ஒரு பிள்ளை, ஸ்டெர்லைட்டை அகற்றும் போர்க்களத்தில் பங்கு ஏற்கின்ற உன்னதமான நாளும் வரத்தான் போகிறது. மக்கள் சக்திதான், நீதியைத் தீர்மானிக்கும் என்பதை, கடந்த காலங்களில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து எரிமலையாகச் சீறிய தீராதி தீரர்கள் உலவிய வீர பூமிதான் தூத்துக்குடி என்பதை, மீண்டும் அம்மக்கள் நிரூபித்து விட்டனர். என்று கூறியுள்ளார்.
 

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1304/08/1130408018_1.htm

  • தொடங்கியவர்

9 ஏப்ரல், 2013

 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மனு

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து தொடர்ந்து சுற்றுச்சூழலைக் கடுமையாக மாசுபடுத்தும் சல்பர்டை ஆக்ஸைட் இரசாயனம் அதிக அளவில் வெளியாவதனால் அது இயங்க அனுமதிக்கப்படக்கூடாது என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் கோரியுள்ளது.

சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துவரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையில் கடந்த மாதம் நிகழ்ந்த வாயுக் கசிவினால் அண்டைப் பகுதி மக்கள் கண் மற்றும் தொண்டை எரிச்சலுக்குள்ளாகி சிகிச்சை பெற நேரிட்டது.

அதனை அடுத்து ஆலையை மூட மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவு பிறப்பித்தது.

அவ்வுத்திரவினை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னகப் பிரிவின் முன் மனுதாக்கல் செய்தது.

அவ்வழக்கு செவ்வாய்க்கிழமையன்று தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் "கடந்த ஆண்டு அக்டோபரிலிருந்து இந்த ஆண்டு மார்ச் வரையிலான காலகட்டத்திலேயே சுற்றுச்சூழலையும் பொதுமக்களையும் பாதிக்கக்கூடிய சல்பர் டை ஆக்ஸைட் பலமுறை அதிக அளவில் வெளியாகியிருக்கிறது. பொதுவாக ஸ்டெர்லைட் நிர்வாகம் பாதுகாப்பு விஷயங்களில் அலட்சியமாகவே இருந்திருக்கிறது. எனவே அதனை மூடவேண்டும் என்ற தனது ஆணை முறையான ஆய்விற்குப் பிறகே வெளியிடப்பட்டது. அதனைத் தள்ளுபடி செய்யக்கூடாது" என வாதிட்டது.

தாங்களும் இவ்வழக்கில் கருத்து தெரிவிக்க அனுமதிக்கப்படவேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் வேறு இரண்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கேட்டுக்கொண்டனர்.

அவர்களது வேண்டுகோளை ஏற்ற நீதிபதி சொக்கலிங்கம் மற்றும் பேராசிரியர் தாமோதரன் ஆகியோர் அடங்கிய தென்னகத் தீர்ப்பாயம் வழக்கினை ஏப்ரல் 12ஆம் நாளுக்கு ஒத்திவைத்தது.

 

http://www.bbc.co.uk/tamil/india/2013/04/130409_sterlite.shtml

 

  • தொடங்கியவர்

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய நிபுணர் குழு: தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.

 

sterlite1.png

 

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்படும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

நான்கு பேர் கொண்ட குழுவில், சுற்றுச் சூழல் நிபுணர்கள் இருவரும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் தலா ஒருவரும் இடம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிபுணர் குழுவில் இடம் பெறுபவர்கள் குறித்து, வரும் 18 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தீர்ப்பாயம் கூறியுள்ளது. அந்தக் குழு, ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்து, வரும் 29-ஆம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.அதன் அடிப்படையில் ஆலையைத் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து, நச்சுவாயு வெளியானதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அந்த ஆலையை மூட தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த மாதம் 29 ஆம் தேதி உத்தரவிட்டது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நச்சுவாயு வெளியானதற்கான ஆவணங்கள், இன்றைய வழக்கு விசாரணையின் போது, பசுமைத் தீர்ப்பாயத்தின் முன் வைக்கப்பட்டதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தெரிவித்துள்ளார்.

 

http://puthiyathalaimurai.tv/4-member-panel-to-study-status-of-sterlite-industries-smelting-plant

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஸ்டெர்லைட்: புதிய நிபுணர்குழு அமைப்பு

 

18 ஏப்ரல், 2013

 

 

130402095229_sterlite_tuticorin_304x171_

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியாகும் நச்சு வாயுக்கள் அமலிலிருக்கும் வரையறைக்குள் இருக்கிறதா என்பதை ஆராய்வதற்காக நால்வர் அடங்கிய நிபுணர் குழு ஒன்றை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னகப் பிரிவு நியமித்திருக்கிறது.

இக் குழுவின் தலைவராக சென்னை இந்திய தொழில் நுட்பக் கழகம், ஐ.ஐ.டியில் பணியாற்றும் பேராசிரியர் பி.எஸ்.டி. சாய் செயல்படுவார் என்றும், பேராசிரியை லெஜி பிலிப், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரி மோகன்நாயுடு மற்றும் ஸ்டெர்லைட்டைச் சேர்ந்த சுமதி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த மார்ச் 23ஆம் தேதி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையில் இருந்து அளவுக்கு அதிகமாக வெளியேற்றப்பட்ட சல்பர் டை ஆக்ஸைடினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

ஆனால் இந்த புகார்களை மறுத்த ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், தங்களின் ஆலையிலிருந்து வெளியேறும் சல்பர் டை ஆக்ஸைடின் அளவு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்திருக்கும் அளவை விட குறைவாகவே இருந்ததாக தெரிவித்தது.

ஆலை நிர்வாகத்தின் பதிலால் திருப்தியடையாத தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து மார்ச் 30ஆம் தேதி ஆலையின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன.

இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை பசுமைத் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகிறது.

இப்போது அமைக்கப்பட்டிருக்கும் நிபுணர்குழு நேரடி ஆய்வு நடத்தி எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் தனது அறிக்கையினை தீர்ப்பாயத்திடம் சமர்ப்பிக்கவேண்டும்.

 

http://www.bbc.co.uk/tamil/india/2013/04/130418_sterlite.shtml

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் அந்த ஆலையை சேர்ந்தவர்களும் கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டி அதில் முதலீடு செய்து இருக்கின்றார்கள் அனைவருக்கும் ஏற்றவகையில் ஒரு சுமூக தீர்வு கொண்டுவரப்பட வேண்டும்....

  • தொடங்கியவர்

உண்மையில் அந்த ஆலையை சேர்ந்தவர்களும் கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டி அதில் முதலீடு செய்து இருக்கின்றார்கள் அனைவருக்கும் ஏற்றவகையில் ஒரு சுமூக தீர்வு கொண்டுவரப்பட வேண்டும்....

 

அந்த ஆலையால் பாதிப்பு இருப்பதால் தான் மக்கள் அதை எதிர்க்கிறார்கள்.

 

ஆலைக்கு அருகிலுள்ள பகுதிகளில் நிலம், நீர்,காற்று போன்றன நச்சு தன்மையாகி விவசாய நிலங்கள் இதனால் பாதிக்கப்பட்டதாகவும் கால்நடைகள் நச்சுத் தண்ணீரைப் பருகி இறந்து போனதாகவும் கடல்வாழ் உரியினங்களுக்கும் அழிவு ஏற்பட்டதாகவும் முன்னர் வாசித்தேன்..

 

23.03.2013 அன்றும் விஷவாயு கசிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான தூத்துக்குடி பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், சுவாசக் கோளாறு ஏற்பட்டது என்றும் செய்திகளில் வாசித்தேன்.

 

எனவே சரியான பாதுகாப்பு அற்ற ஆலையால் மக்களுக்கு தீமை என்பது ஏற்புடையது. அவர்கள் போராட்டமும் நியாயமானது என நினைக்கிறேன்.

Edited by துளசி

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு இடமாற்றம்

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் சிக்கியுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கடந்த மார்ச் 23ம் நாள் வெளியேறிய சல்ஃபர் டை ஆக்சைடு வாயு காரணமாக அண்டைப் பகுதி மக்கள் கண் மற்றும் தொண்டை எரிச்சலுக்குள்ளாக தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அந்த ஆலையினை மூடிவிடுமாறு மார்ச் 30ம் நாள் உத்தரவிட்டது.

அவ்வுத்திரவினை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து ஆலையை ஆய்வு செய்ய மூன்று நபர் கொண்ட நிபுணர் குழுவை பசுமைத் தீர்ப்பாயம் அமைத்தது.

நிபுணர் குழுவின் அறிக்கை திங்கள் காலை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கை நடத்த உகந்த சூழ்நிலை இல்லை எனக் கூறி, வழக்கை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு மாற்றி தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

 

 

ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை

 

130402095229_sterlite_tuticorin_304x171_

 

http://www.bbc.co.uk/tamil/india/2013/04/130429_sterlite.shtml

 

Edited by துளசி

  • 1 month later...
  • தொடங்கியவர்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும்: பசுமை தீர்ப்பாயத்தில் வைகோ

30th May 2013

 

ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலையை மூடுமாறு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மார்ச் 29 ஆம் தேதி ஆணை பிறப்பித்ததால், ஆலை மூடப்பட்டது. அந்த ஆணையை இரத்து செய்யக்கோரி, Þடெர்லைட் நிர்வாகம்,  தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் தொடுத்த வழக்கு மீதான விசாரணை, டெல்லி முதன்மைத் தீர்ப்பு ஆயத்தில் நடைபெற்று வருகின்றன. நிறைவுக் கட்ட வாதங்கள் இன்று முன்வைக்கப்பட்டன.
 
இந்த வழக்கில் வைகோ பின்வருமாறு வாதத்தை எடுத்து வைத்தார்:
 
ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலையை குஜராத் மாநிலத்தில் நிறுவ, ஸ்டெர்லைட் முயன்றபோது, குஜராத் மாநில அரசு, சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருதி அனுமதி தரவில்லை. பின்னர் கோவா மாநிலத்தில் ஆலையை நிறுவ முயன்று அங்கும் அனுமதி கிடைக்காத நிலையில், மராட்டிய மாநில அரசின் அனுமதியைப் பெற்று, அங்கு இரத்தினகிரி மாவட்டத்தில்ஸ்டெர்லைட் ஆலையை நிறுவியது. கட்டடங்கள் கட்டப்பட்டன. இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. 300 கோடி ரூபாய்க்கு மேல் இதற்காக செலவழிக்கப்பட்டது.
 
இரத்தினகிரி மாவட்டத்தில்தான் புகழ்பெற்ற அல்போன்சா மாம்பழங்கள் விழைகின்றன.  அங்குள்ள விவசாயிகள், Þடெர்லைட் ஆலையின் நச்சுக் காற்றால் பாதிப்பு ஏற்படும் என்று ஆலையை மூடக்கோரி பெரும் போராட்டம் நடத்தினார்கள். கடப்பாறை சம்மட்டிகளோடு போய் ஆலையை உடைத்து நொறுக்கினார்கள். உடனடியாக மராட்டிய மாநில அரசு ஆலை லைசென்சை இரத்து செய்தது.
 
அதன்பின், ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றத்திற்குச் செல்லாமல், தூத்துக்குடியில் வந்து ஆலையை நிறுவியது.
 
தேசிய கடல் பூங்கா தூத்துக்குடியில் உள்ளது. தூத்துக்குடி மாநகரம், சுற்றுப்புறத்தில் வாழும் மக்களுக்கு, இந்த ஆலையால் பேராபத்து ஏற்படும் என்பதனால், தொடக்கத்தில் இருந்து நான் எதிர்த்து வருகிறேன்.
 
1995 ஆம் ஆண்டில் ஆலையை எதிர்த்து பிரச்சாரக் கூட்டங்கள், 1996 இல் மார்ச் 5 இல் உண்ணாவிரதப் போராட்டம், மார்ச் 12 இல் கருப்புக்கொடி போராட்டம், ஏப்ரல் 1 இல் மக்கள் பேரணி, டிசம்பர் 9 இல் உண்ணாவிரதப் போராட்டம்,
 
1997 பிப்ரவரி 24 இல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மறியல், ஜூன் 3, 4, 5 தேதிகளில் பாத யாத்திரை, ஆகஸ்டு 30 ஆம் தேதி அன்று ஸ்டெர்லைட் ஆலை முற்றுகை என, என் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றன. சிறு வன்முறை சம்பவம் கூட நடக்கவில்லை.
 
ஆலையில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிர் இழந்ததற்கு எங்கள் போராட்டமே காரணம் என்றும், சதி வேலை என்றும்ஸ்டெர்லைட் நிர்வாகம் பொய்ப்பழி சுமத்தியது. எனவே, இனி போராட்டத்தை நீதிமன்றத்தின் மூலம் நடத்துவோம் என்று, உயர்நீதிமன்றத்தில் 1997 நவம்பரில் ரிட் மனு தாக்கல் செய்தேன். ஆலையை மூட வேண்டும் என உயர்நீதிமன்றம் 2010 இல் தீர்ப்பு அளித்தது.
 
பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு நடந்தது. உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை இரத்து செய்த போதும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஆலையை மூட அதிகாரம் உண்டு எனக் கூறியது.
 
இந்தப் பின்னணியில் மார்ச் 23 ஆம் தேதி அன்று அதிகாலையில்,ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுப் புகையால் தூத்துக்குடி மாநகரத்தின் பல பகுதிகளிலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் மூச்சுத் திணறல், தொண்டை அடைப்பு, கண் எரிச்சல் போன்ற உடல்நலக் கேடுகளுக்கு ஆளானார்கள். மக்கள் போராட்டம் வெடித்தது. 20 ஆயிரம் கடைகளை வியாபாரிகள் மூடினார்கள்.
 
29 ஆம் தேதி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது.
 
இந்த ஆலையின் நச்சுக் காற்றால், இப்பகுதி வாழ் மக்களுக்கு புற்று நோய் போன்ற கொடிய நோய்கள் ஏற்படுகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில், 2552 பேர் புற்று நோயாளிகளாக பதிவாகி உள்ளனர்.
 
போபாலில் ஏற்பட்ட விஷவாயு அழிவைப் போல, தூத்துக்குடியிலும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று போராடுகிறோம்.
 
ஆÞதிரேலியாவில் இருந்து ஸ்டெர்லைட் ஆலை இறக்குமதி செய்கின்ற தாமிர அடர்த்தியில், யுரேனியம், ஆர்சனிக் போன்ற கொடிய நச்சு உலோகங்கள் இருக்கின்றன. தூத்துக்குடி  நகரத்தில் மக்கள் வசிக்கும் தெருக்கள் வழியாகத்தான் இந்தத் தாமிர அடர்த்தி எடுத்துச் செல்லப்படுகிறது. பொதுமக்களின் உடல்நிலை பற்றியோ, உயிரைப் பற்றியோ இந்த ஆலைக்கு எந்த அக்கறையும் கிடையாது.
 
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நச்சுப் புகை வந்ததால்தான் பூக்களின் நிறம் மாறின. மரங்கள் செடிகளின் இலைகளின் நிறம் மாறின, இலைகள் உதிர்ந்தன. அந்தப் புகைப்பட ஆல்பத்தை, தீர்ப்பு ஆய நீதிபதியும், நிபுணர்களும் பார்வையிட இதோ முன் வைக்கிறேன். 
 
பல்லாயிரம் கோடி கொள்ளை இலாபம் சம்பாதித்துள்ள ஆலை நிர்வாகம், இங்குள்ள தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை கொடுக்க வேண்டும். இந்தப் பகுதி வாழ் மக்களைப் பாதுகாக்க, ஆலையை நிரந்தரமாக மூட, ஸ்டெர்லைட் முறையீட்டு மனுவை, இந்தத் தீர்ப்பு ஆயம் தள்ளுபடி செய்ய வேண்டுகிறேன்.”
 
இவ்வாறு வைகோ தமது வாதத்தை எடுத்து வைத்தார். 
 
கழகப் பொதுச்செயலாளர் வைகோவோடு, சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி.தேவதாஸ் அவர்களும் இந்த விசாரணையில் பங்கு ஏற்றார்.

 

http://www.newsalai.com/details/Vaiko-argues-at-green-tribunal-to-close-down-sterlite.html

 

  • தொடங்கியவர்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு ~ இன்றுடன் விசாரணை முடிவு

31st May 2013

 

டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கின் விசாரணை இன்று முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

நேற்று, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கடந்த ஆண்டு மட்டும் 134 முறை வாயுக் கசிவு ஏற்பட்டதாக தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. இதில் 14 முறை அபாயகரமானதாக இருந்தது எனவும், அதன் காரணமாகவே ஆலை மூடப்பட்டதாகவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்டது.

 

இந்த வழக்கில் ஆஜரான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, வாயுக் கசிவு காரணமாக தூத்துக்குடியில் ஏராளமானோருக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாக வாதிட்டார்.இந்த புகார்களை ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகத் தரப்பு மறுத்தது.

 

கடந்த மார்ச் 23 ஆம் தேதி, ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக டை ஆக்சைடு என்ற நச்சு வாயு வெளியேறியதை அடுத்து, ஆலையை மூடும்படி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.

 

http://www.newsalai.com/details/sterlite-power-plant-enquiry-today-ends.html

 

Edited by துளசி

  • தொடங்கியவர்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி!

May 31, 2013

 

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நச்சு வாயு வெளியேறியதற்கான அறிவியல் ஆதாரம் இல்லாததால் அந்த ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.
 
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடுமாறு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மார்ச் 29-ந்தேதி ஆணை பிறப்பித்தது. இதனால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இந்த ஆணையை ரத்து செய்யக்கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. இதன் மீதான விசாரணை டெல்லி பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வந்தது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாதிட்டார்.
 
இருப்பினும் தூத்துக்குடி பொதுமக்கள் பாதிக்கப்பட்டது ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவினாலா? அல்லது தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இருக்கும் பிற தொழிற்சாலையின் நச்சு வாயுவாலா? என்ற கேள்வியை பசுமை தீர்ப்பாயம் எழுப்பியிருந்தது. இதற்கு உறுதியான பதிலை தமிழக அரசு அளிக்கவில்லை. இதனால் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. அத்துடன் ஆலையைத் தொடர்ந்து கண்காணிக்க 5 நபர் கண்காணிப்புக் குழுவையும் தீர்ப்பாயம் அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

 

  • தொடங்கியவர்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வழக்கு:உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

ஜூன் 07, 2013

 

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்துள்ள அனுமதியை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

 

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நச்சுப்புகை வெளியேறுவதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அந்த ஆலையை மூட கடந்த மார்ச் 23ம் தேதி உத்தரவிட்டது.

 

இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரித்தது. இதன் முடிவில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சில நிபந்தனைகளுடன் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த 30ம் தேதி அனுமதி அளித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு தற்போது உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

 

http://puthiyathalaimurai.tv/sterlite-case-hearing-today-in-sc

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.