Jump to content

நேசக்கரம் கணணிப்பயிற்சி முன்னேற்றம் எவ்வாறுள்ளது ?


Recommended Posts

பதியப்பட்டது

நேசக்கரம் கணணிப்பயிற்சி முன்னேற்றம் எவ்வாறுள்ளது ? 

நேசக்கரம் இலவச கணணிப்பயிற்சி நிலையமொன்றினை 15.12.2012நடராஜா ஆனந்தா வீதி  நாவற்குடா கிழக்கு மட்டக்களப்பில்  ஆரம்பித்திருந்தோம். நேசக்கரம் கணணிப்பயிற்சி நெறியினை நடாத்துவதற்கான கணணிகளுக்கான உதவியை அமெரிக்காவிலிருந்து தவேந்திரராஜா ஐயா அவர்கள் முன்வந்து வழங்கியிருந்தார்.

இம்மாதத்தோடு எமது கணணிப்பயிற்சி வகுப்புகள் ஆரம்பமாகி 4மாதங்களாகின்றது. எமது இலவச கணணிப்பயிற்சியை யுத்தத்தாலும் சுனாமியாலும் பாதிப்புற்ற குடும்பங்களிலிருந்து 75 மாணவர்களும் வேலை வாய்ப்புத் தேடும் 40 இளைஞர் யுவதிகளும் , தொழில் செய்து கொண்டிருக்கும் பெரியவர்கள் 10 பேரும்
பயிற்சியைப் பெற்று வருகின்றனர்.


DSCF3788_zps9c11dd8c.jpg

நிலையத்திற்கான பராமரிப்பு , மின்கட்டணம் போன்றவற்றை சமாளிக்கக் கூடிய பண
உதவி இல்லாமையால் தொழில் புரிந்து கொண்டு கணணிப்பயிற்சியைப் பெறுகின்ற
10பேரிடமும் மாதம் தலா ஆளுக்கு 150ரூபாவினை அறிவிடுகின்றோம்.

பயிற்சியை வழங்கும் ஆசியர்களுக்கான கொடுப்பனவு எதுவும் எம்மால்
வழங்கப்படுவதில்லை. தொண்டு அடிப்படையிலேயே இக்கற்பித்தலை செய்து
தருகிறார்கள்.

அதிகளவிலான ஏழை மாணவர்கள் கணணியைக்கற்க விண்ணப்பித்துள்ள போதிலும்
அதிகளவானவர்களை உள்வாங்கி மேலும் விரிவாக்கக் கூடிய நிதிவளம் போதாமையால்
தற்போது பயிற்சிபெறுவோர் கற்கையை முடிக்கும் வரையும் புதியவர்களை
உள்வாங்குவதை தவிர்த்துள்ளோம்.


கல்விப்பிரிவுப் பொறுப்பாளர் திவாகரன் எழுதியனுப்பிய முன்னேற்ற அறிக்கையின் முழுமையான வடிவம் கீழே :-
computercours_zpsba046e29.jpg

தொடர்புகளுக்கு


 


முகவரி:

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany


 


Shanthy Germany – 0049 6781 70723

Skype ID – Shanthyramesh


மின்னஞ்சல்: nesakkaram@gmail.com


தொடர்புபட்ட செய்தி இணைப்பு :-


நேசக்கரம் கணணி பயிற்சி நிலையம் நாவற்குடாவில் திறந்துவைப்பு.


 

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.