Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா பெளத்த பேரினவாதிகளின் தற்போதைய இலக்கு முஸ்லீம்கள் - பிறிதொரு இனப்போர் தோற்றம் பெறுமா?

Featured Replies

சிறிலங்கா பெளத்த பேரினவாதிகளின் தற்போதைய இலக்கு முஸ்லீம்கள் - பிறிதொரு இனப்போர் தோற்றம் பெறுமா? [ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 08:46 GMT ] [ நித்தியபாரதி ] Muslim%20mosque.JPG

சிறிலங்காவில் வாழும் சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கு எதிராக பௌத்த கடும்போக்காளர்களால் பல்வேறு வடிவங்களில் எதிர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவது தற்போது அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் கொழும்பிற்கு அருகில் உள்ள Fashion Bug மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை உள்ளுர் தொலைக்காட்சி நிலையம் ஒன்று ஒளிப்பதிவாக்கியுள்ளது. இதனை ஒளிப்பதிவாக்கிக் கொண்டிருந்த ஒளிப்படவியலாளர் மீது காடையர்கள் தாக்குதலை மேற்கொண்டனர். 

சிறிலங்கா வாழ் முஸ்லீம் மக்களுக்கு எதிராக பௌத்த தேசியவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் பங்குகொண்ட பௌத்த காடையர்கள் கற்களை வீசியதுடன், கண்காணிப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த ஒளிப்படக் கருவியையும் சேதமாக்கினர். 

சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழ்ப் புலிகளுக்கும் இடையில் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தொடரப்பட்ட யுத்தமானது முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, சிறிலங்கா போரின் வடுக்களிலிருந்து மீண்டு வரும் இந்நிலையில் இனவாதத்தை தூண்டும் விதமாக முஸ்லீம் மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் நாட்டில் பிறிதொரு இனப்போர் தோற்றம் பெறுமோ என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது. 

"எந்தவொரு தீர்வையும் எட்டாது இப்பொழுதுதான் தமிழர்களை வேட்டையாடி முடித்துள்ள சிங்கள தேசியவாதிகள் தற்போது முஸ்லீம்களை வேட்டையாடத் தொடங்கியுள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த நாட்டில் வாழும் அனைத்து சிறுபான்மை இனங்களும் அச்சுறுத்தப்படுகின்றனர்" என முஸ்லீம் அரசியற் தலைவர் அசாட் சலி சுட்டிக்காட்டியுள்ளார். 

தற்போது அதிகரித்து வரும் முஸ்லீம் எதிர்ப்பு நடவடிக்கைகள் பௌத்த பிக்குகளால் தலைமை தாங்கப்படுகின்றன. சமூக ஊடகங்கள் இது தொடர்பில் மேற்கொண்டு வரும் கவர்ச்சியான பரப்புரையால் இளைஞர்கள் இவ்வாறான முஸ்லீம் எதிர்ப்புணர்வைப் பெற்றுவருகின்றனர். 

சிறிலங்காவில் வாழும் ஒட்டுமொத்த 20 மில்லியன் மக்களில் 75 சதவீதமானவர்கள் பௌத்த சிங்களவர்களாவர். இவர்கள் நாட்டின் அரசாங்கம் மற்றும் இராணுவத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர். பெரும்பான்மை சிங்கள மக்கள் நாட்டின் சனத்தொகையில் 9 சதவீதத்தைக் கொண்ட முஸ்லீம்களை அச்சுறுத்தி வருகின்றனர். 

முஸ்லீம்கள் சிறிலங்காவின் வர்த்தக நடவடிக்கைகளில் பெரும் ஆதிக்கம் செலுத்துவதாக சிங்களவர்கள் கூறுகின்றனர். முஸ்லீம்கள் தமது இனத்தவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து சிங்களவர்களை அதிகாரம் செலுத்த முயல்வதாக சிங்கள தேசியவாதிகள் கூறுகின்றனர். 

செப்ரெம்பர் 2011 தொடக்கம் முஸ்லீம்களுக்கு எதிராக சிங்களவர்களால் மேற்கொள்ளப்பட்ட 33 சம்பவங்களை முஸ்லீம் அமைப்பொன்று பதிவுசெய்துள்ளது. இந்த அமைப்பு அச்சத்தின் காரணமாக தனது பெயரை வெளியிட விரும்பவில்லை. 

இந்த 33 தாக்குதல் சம்பவங்களில் குறைந்தது ஐந்து தாக்குதல் சம்பவங்கள் முஸ்லீம்களின் மதவழிபாட்டு இடங்களின் மீது மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் முஸ்லீம்களின் வர்த்தக நிலையங்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன. சிறிலங்கா அரசாங்க விவசாய கல்லூரி ஒன்றில் முஸ்லீம் மாணவர்களுக்கு பன்றி இறைச்சி பரிமாறப்பட்டபோது அதனை இஸ்லாமியக் கொள்கையில் குறிப்பிட்டது போன்று அந்த மாணவர்கள் பன்றி இறைச்சியை சாப்பிட மறுத்தனர். அந்தவேளையிலும் முஸ்லீம் மாணவர்களுக்கு எதிராக சிங்கள தேசியவாதிகளால் தாக்குதல் நடாத்தப்பட்டது. 

இஸ்லாமிய மதத்தின் படி 'கலால்' முத்திரை குத்தப்பட்ட உணவுகளை விற்பனை செய்வதற்கு தடைவிதிக்கப்பட வேண்டும் என சிங்கள தேசியவாதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். முஸ்லீம்கள் அல்லாதவர்கள் பள்ளிவாசல்களை கட்டும் பணியில் ஈடுபடும் போது இந்த கலால் உணவுகளையே உண்ணவேண்டும் என இஸ்லாமில் போதிக்கப்பட்டுள்ளது. இதனால் முஸ்லீம்கள் அல்லாதவர்களும் கலால் உணவு வகைகளுக்கு மேலதிக பணத்தை செலுத்த வேண்டியிருப்பதால் இந்த முறைமையைத் தடைசெய்ய வேண்டும் என கடந்த மாதம் பௌத்த தேசியவாதிகள் கோரியிருந்தனர். 

சிங்கள தேசியவாதிகள், முஸ்லீம் சமுதாயத்தின் சில சட்டங்களை விமர்சனம் செய்துள்ளனர். அதாவது முஸ்லீம் பெண்கள் முக்காடு (முகத்திரை) அணிவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளனர். 

"நான் தெருவில் செல்லும்போது அங்குள்ளவர்களின் முகங்களைப் பார்க்க வேண்டும் என்பது எனக்குள்ள அடிப்படை உரிமையாகும்" என பொடு பால சேன [bodu Bala Sena] என்கின்ற முதனிலையில் செயற்படும் பௌத்த தேசியவாதிகளின் அமைப்பைச் சேர்ந்த டிலந்த விதனேஜ் தெரிவித்துள்ளார். 

நான்கு பெண்களை முஸ்லீம் ஆண்கள் திருமணம் செய்ய முடியும் என்ற சட்டம் நீக்கப்பட வேண்டும் எனவும் இவர் கோரியுள்ளார். 

"இந்த நாட்டில் தனித்துவமான சட்ட முறைமை பேணப்பட வேண்டும் என்பதே எமது போராட்டத்தின் நோக்கமாகும். முஸ்லீம் ஆண் ஒருவர் நான்கு பெண்களை திருமணம் செய்வதற்கான உரிமையைக் கொண்டிருந்தால் பௌத்தர்களுக்கும் இதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்" என டிலந்த விதனேஜ் மேலும் தெரிவித்துள்ளார். 

சிறிலங்காவானது தனது நாட்டில் பின்பற்றப்படும் பௌத்த மதம், இந்துமதம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத மரபுகள் மற்றும் வழக்காறுகளின் அடிப்படையில் அந்தந்த மதத்தவர்கள் திருமணம் செய்வதற்கு அனுமதித்துள்ளது. 

சிங்களப் பெண் பணியாளர்களை பலவந்தமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி அவர்களைத் திருமணம் செய்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக Fashion Bug என்கின்ற வர்த்தக கம்பனி மீதும் ஏனைய முஸ்லீம் வர்த்தக நிலையங்கள் மீதும் பௌத்த பிக்குகள் குற்றம் சாட்டி ஒரு வாரத்தின் பின்னர் இவ்வர்த்தக நிலையம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே. வர்த்தக நிலையத்தில் 15 வயதான சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக பௌத்த தேசியவாதிகள் பரப்புரை செய்த போதிலும் அது மிகப் பொய்யான செய்தி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

முஸ்லீம் ஒருவருக்குச் சொந்தமான புடைவை வர்த்தக நிலையம் ஒன்றில் உடைகளை வாங்கச் செல்லும் சிங்களப் பெண்களுக்கு இலவசமாக இனிப்புக்கள் வழங்கப்பட்டதாகவும் அந்த இனிப்புக்கள் பெண்கள் கருவுறுவதைத் தடுக்கின்றவையாகக் காணப்பட்டதாகவும் பிறிதொரு பௌத்த பிக்கு ஒருவர் ஆர்ப்பாட்டப் பேரணியில் சுட்டிக்காட்டியிருந்தார். முஸ்லீம் வர்த்தக நிலையங்களில் விற்கப்படும் ஆண்களின் இடுப்புப் பட்டிகளை அணிவதால் சிறுநீரக நோய்கள் ஏற்படுவதாகவும் குறித்த பிக்கு தெரிவித்திருந்தார். 

இதேபோன்று பெண்களுக்கான சுகாதார நப்கின்களை உற்பத்தி செய்யும் முஸ்லீம் நிறுவனம் ஒன்று பெண்களை கர்ப்பமுறாது தடுப்பதை நோக்காகக் கொண்டு தனது உற்பத்திகளை மேற்கொள்வதாக பௌத்த தேசியவாதிகளால் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்தச் செய்தியானது 'Facebook மற்றும் Twitter' போன்ற வலைத்தளங்களில் பிரசுரிக்கப்பட்டது. 

இவ்வாறான எதிர்ப்புச் சம்பவங்களால் முஸ்லீம் மக்கள் பீதியடைந்துள்ளனர். சிறிலங்காவில் தற்போது இவ்வாறான நடவடிக்கைகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும் இந்நாட்டு அரசாங்கம் இவ்வாறான குற்றச்சாட்டை மறுத்துள்ளது. 

சிங்கள தேசியவாத இயக்கமான பொட்டு பால சேனவுக்கு நிதியை சேகரித்து வழங்கும் முகமாக தற்போது சிறிலங்கா தேசிய தொலைத் தொடர்பு வழங்குனர் சேவை இந்த அமைப்பின் பாடலை தொலைபேசிகளின் 'அழைப்பொலியாக' மாற்றுவதற்காக விற்பனை செய்கிறது. இதன் பின்னர் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்ட போதும் தொலைத் தொடர்பாடல் நிறுவனமானது இவ்வாறான 'உணர்வுகளைத் தூண்டும்' நடவடிக்கைக்கு மன்னிப்புக் கோரிய போதும் இந்த அழைப்பொலியை நிறுத்த மறுத்துவிட்டது. 

முஸ்லீம் தொடர் வர்த்தக நிலையம் மீதான தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று பௌத்த பிக்குகள் உள்ளடங்கலாக 17 பேரை காவற்துறையினர் நீதிமன்றின் முன் நிறுத்தியிருந்த போதும் பின்னர் இவர்கள் விடுவிக்கப்பட்டனர். இத்தாக்குதலில் காயமடைந்த ஒளிப்படவியலாளர் தனது முறைப்பாட்டை விலக்கிக் கொண்டுள்ளார். தன் மீதான தாக்குதல் சமூகங்களின் மத்தியில் குழப்பத்தை உருவாக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக தான் தனது முறைப்பாட்டை விலக்கிக் கொண்டதாக காயமடைந்த ஒளிப்படவியலாளர் தெரிவித்துள்ளார். 

பொடு பால சேனவால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வொன்றுக்கு சிறிலங்கா அதிபரின் சகோதரரும் அதிகாரம் மிக்க பாதுகாப்புச் செயலருமான கோத்தபாய ராஜபக்ச பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். 

"எமது நாடு, இனம், மதம், கலாசாரம் போன்றவற்றைப் பாதுகாப்பதற்கு வணக்கத்திற்குரிய பௌத்த பிக்குகள் எப்போதும் முன்வருகின்றனர். இவர்களின் இந்த நடவடிக்கையானது நல்ல நோக்கைக் கொண்டதே அன்றி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக அல்ல" என கோத்தபாய ராஜபக்ச தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். 

இவ்வாறு பௌத்த கடும்போக்கு அமைப்பின் நிகழ்வில் கலந்து கொண்டு பாதுகாப்புச் செயலர் உரைநிகழ்த்தியதை நினைத்து கவலையடைவதாக கொழும்பிலுள்ள முஸ்லீம் சமூகப் பணியாளரான மொகமட் சலீம் கூறியிருந்தார். 

"முஸ்லீம்கள் இந்த நாட்டில் சமமாக வாழவேண்டிய சமூகத்தவர்கள் இல்லையா?" என அவர் கேள்வியெழுப்பினார். 

சிறிலங்கா அரசாங்கம் முஸ்லீம் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்குகொள்ளவில்லை என வழமைபோன்று சிறிலங்கா அதிபர் செயலகப் பேச்சாளர் மோகன் சமரநாயக்க கூறியுள்ளார். 

"ஆரம்பத்திலிருந்து சிறிலங்கா அரசாங்கம் நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களையும் சமமாகவே நடாத்தி வருகின்றது" என மோகன் சமரநாயக்க அழுத்திக் கூறியுள்ளார். சிறிலங்கா அரசாங்கமானது மற்றையவர்களின் கருத்து வெளிப்படுத்தல் சுதந்திரத்தில் தலையிடமாட்டாது எனவும் சட்டத்தை மீறுகின்ற எவரையும் தண்டிப்பதற்கான நடவடிக்கையை எடுக்கும் எனவும் மோகன் சமரநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

"முஸ்லீம் மக்கள் தமக்கெதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளை பொறுத்து வருகின்றனர். ஆனால் இந்த நிலை தொடர்ந்தால் அவர்களது பொறுமையும் முடிந்து விடும். இதனால் நாட்டில் மிகப்பெரிய மோதல் வெடிப்பதற்கான ஆபத்து ஏற்படலாம்" என சிறிலங்காவின் எதிர்க்கட்சி அரசியல்வாதியான முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

செய்திக்கட்டுரையின் வழிமூலம் : By AP News 

மொழியாக்கம் : நித்தியபாரதி

http://www.puthinappalakai.com/view.php?20130410108081

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.