Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள யதார்த்தம் புரியாத விசைப்பலகை ‘வீரர்கள்’

Featured Replies

531935_468678713205086_271619221_n.jpg

 

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் முழுமையான வரலாற்றை எழுதும் தகுதி
அப்போராட்டத்தை தமிழீழ தாயகத்திலிருந்து முன்னெடுத்த தமிழீழ விடுதலைப்
புலிகள் இயக்கத்திற்கு மட்டுமே உரித்தானது.

ஆனால் இதுவிடயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை மௌனமாக இருப்பதை
சாக்காக வைத்துக் கொண்டு, காதிற்கு எட்டிய செய்திகளையும், மிதமிஞ்சிய
கற்பனைகளையும் இணைத்து உலகத் தமிழர்களின் காதில் பூச்சுற்றும் வேலையில் ஓர்
கும்பல் இறங்கியுள்ளது.

‘அமெரிக்காவில் ஆயுதம் வாங்கப் போய்
புலிகள் பிடிபட்டது எப்படி?’, ‘வன்னிக்கு பொட்டு அம்மான் கொண்டு வந்த
கப்பல்’, ‘இறந்த தாயிடம் பால் குடித்த குழந்தை’, என்றெல்லாம் கற்பனை
செய்திகளை வெளியிட்டு வந்த இக்கும்பல் உலகத் தமிழர்களிடையே அதிர்வலைகளை
ஏற்படுத்தும் நோக்கத்துடன் இப்பொழுது புதிய அண்டப்புழுகொன்றை அவிழ்த்து
விட்டுள்ளது.

‘புலிகளின் தளபதி சூசை அவர்களின் இறுதிநேரம்’ என்ற
தலைப்பில் வெளிவந்துள்ள இந்த அண்டப்புழுகு, 2009 மே 17 அன்று
முள்ளிவாய்க்காலில் நிலவிய கள யதார்த்தத்தைப் புறந்தள்ளிவிட்டு, மிதமிஞ்சிய
கற்பனைத் தகவல்களை தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது.

முள்ளிவாய்க்கால்
கள யதார்த்தம் பற்றிய தளபதி சூசை அவர்களின் செவ்வி 2009 மே 17 மதிய
வேளையில் உலகத் தமிழர்களை வந்தடைந்தது. இச்செவ்வியை நாம் தமிழர்
இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் உதவியாளரான
சந்தோ~; என்பவருக்கே தளபதி சூசை அவர்கள் வழங்கியிருந்தார்.

அப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியிருந்தது
நான்கு சதுரக் கிலோமீற்றர் பரப்பளவுடைய பகுதி மட்டுமே. அதாவது தலா இரண்டு
கிலோமீற்றர் நீள – அகலமுடைய சிறிய இடம் அது. தளபதி சூசை அவர்களின்
வார்த்தையில் கூறுவதாக இருந்தால் அது ஒரு ‘துண்டு’.

அங்கு
எஞ்சியிருந்த இருபத்தையாயிரம் வரையான மக்கள் தமது பெரும்பாலான பொழுதை
பதுங்கு குழிகளுக்குள்ளே கழித்துக் கொண்டிருந்தார்கள். இதனையும் தனது
செவ்வியில் தளபதி சூசை அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

சண்டை நடைபெறும் களமுனையில் சிங்கள வான்படையின் ஆளில்லா வேவு விமானங்களும்,
பீச்கிராப்ட் ரக வானூர்தியும் தொடர்ச்சியாக வேவு நடவடிக்கைகளில் ஈடுபடுவது
வழமை. ஆனால் முள்ளிவாய்க்கால் களத்தின் இறுதி நாட்களில் நிலைமை
அவ்வாறானதாக இருக்கவில்லை. ஒரு முனையில் இருந்து பார்த்தால் மறுமுனை
தென்படும் அளவிலான சிறிய பகுதியே தமிழீழ விடுதலைப் புலிகளிடம் எஞ்சியிருந்த
நிலையில் வேவு விமானங்களின் தேவை சிங்களப் படைகளைப் பொறுத்த வரை
பெரும்பாலும் அனாவசியமானதாகவே இருந்தது.

தவிர 2009 மே 17ஆம்
நாள் காலையிலேயே க.வே.பாலகுமாரன், இளங்குமரன் (பேபி சுப்ரமணியம்), புதுவை
இரத்தினதுரை, திலகர், எழிலன் போன்ற தமிழீழ விடுதலைப் புலிகளின்
அரசியல்துறையின் மூத்த உறுப்பினர்கள் பலர் சிங்களப் படைகளிடம் சரணடைந்து
விட்டார்கள். இவர்களை விட அன்று அதிகாலையிலேயே கேணல் ரமேஸ் உட்பட தமிழீழ
விடுதலைப் புலிகளின் தளபதிகள் சிலரும் சிங்களப் படைகளால்
சிறைப்பிடிக்கப்பட்டிருந்தன
ர்.

இவ்வாறான சூழலில் முள்ளிவாய்க்கால் களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின்
ஒரு சில மூத்த உறுப்பினர்கள் மட்டுமே எஞ்சியிருந்தார்கள். அவர்களில் ஒருவர்
தளபதி சூசை. மற்றையவர் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன்.
காயமடைந்த நிலையிலும், உயிருக்கு உத்தரவாதம் அற்ற நிலையில்
முள்ளிவாய்க்காலில் எஞ்சியிருந்த இருபத்தையாயிரம் மக்களையும்,
போராளிகளையும் பாதுகாக்கும் நோக்கத்துடனேயே இவர்கள் இருவரும் களத்தில்
நின்றார்கள்.

இதில் தளபதி சூசை அவர்களுடனான வெளித்தொடர்புகள் அனைத்தும் 17ஆம் நாள் மாலையுடன் (இரவு அல்ல) இல்லாது போனது.

அதேநேரத்தில் மறுநாள் (18.05.2009) அதிகாலை சிங்களப் படைகளால் படுகொலை
செய்யப்படுவதற்கு முன்னரான சில மணித்துளிகள் வரை வெளிநாட்டுத் தொடர்புகளை
பா.நடேசன் அவர்களை பேணியே வந்தார்.

சிங்களப் படைகளின் எறிகணை மழைக்கு மத்தியில் மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதே மிகப்பிரச்சினையாக இருந்த வேளை அது.

அந்த வேளையில் இரண்டாயிரம் பேரை அணிதிரட்டுவது என்பது கள யதார்த்தத்திற்கு ஒவ்வாத ஒன்று.

அப்படியிருக்க தனது இறுதிக் கணத்தில் இரண்டாயிரம் கடற்தொழிலாளர்களை தளபதி
சூசை அணிதிரட்டினார் என்று இப்பொழுது அண்டப்புழுகு விசைப்பலகை வீரர்கள்
கூறுவது நகைப்புக்கிடமானது.

மிதமிஞ்சிய கற்பனையின் அடிப்படையில்
எழுதப்பட்ட இச்செய்தி மக்களைப் பாதுகாப்பதற்காக இறுதிவரை
முள்ளிவாய்க்காலில் நின்ற தளபதி சூசை அவர்களையும், தமது உயிருக்காகப்
போராடிக் கொண்டிருந்த மக்களையும் கொச்சைப்படுத்தும் ஓர் செய்கையேயன்றி
வேறேதுமல்ல.

இதனையும், இது போன்ற கற்பனைச் செய்திகளையும்
வெளியிடும் விசைப்பலகை வீரர்கள் ஒரு கணம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்
வரலாற்றை எழுத முற்படுவதற்கு முன்னர் அதற்கான தமது தகமையைப் பற்றி ஒரு கணம்
சிந்திப்பது நல்லது.

சுனாமிக்குப் பின்னர் வன்னிக்கு சென்று
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைக்கு அன்பளிப்பாக இரண்டு கணினிகளை
வழங்கியதாலோ, அல்லது சில நாட்கள் அங்கு தங்கியிருந்து பிரிகேடியர்
சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை சந்தித்து அவருடன் படம் எடுத்துவிட்டு
வெளிநாட்டில் இணையத் தளம் தொடங்கியதாலோ தமிழீழ தேசிய விடுதலைப்
போராட்டத்தின் வரலாற்றை எழுதும் தகைமையைப் பெற்றுவிட முடியாது.

கள அனுபவம் என்பது பட்டறிவிலிருந்து வருவது: கற்பனையிலிருந்து வருவது அல்ல.

வன்னிப் போர் முடிவுக்கு வருவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் சேலத்தில்
செல்வி ஜெயலலிதா ஆற்றிய உரையை தமிழீழ தேசியத் தலைவரும் தளபதிகளும்
பார்த்திருப்பது சாத்தியம்தானா? என்று முட்டாள்தனமாக கேள்வியெழுப்புவோர்
முதலில் தலைவரின் பண்பியல்புகள் பற்றி அறிந்திருப்பது நல்லது.

1997ஆம் ஆண்டு சிற்றலை வரிசையூடாக ஐ.பி.சி வானொலி ஒலிபரப்பாகிய நாள் முதல்
அதன் அதிகாலை ஒலிப்பரப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசறைகளில்
ஒலித்த வண்ணம் இருக்கும். அதிகாலை 5:30 மணிக்கு நிகழும் இவ் ஒலிபரப்புகளை
தவறாது தலைவர் அவர்களும் செவிமடுப்பார். வேலைப்பளு காரணமாக ஐ.பி.சியின்
ஒலிபரப்புக்களை தலைவரால் செவிமடுக்க முடியாத தருணங்களில் அதனை அவரது
மெய்ப்பாதுகாவலர்கள் ஒலிப்பதிவு செய்து பின்னர் அவர் செவிமடுப்பதற்கு
கொடுப்பார்கள். இதனைத் தொடர்ந்து புலிகளின் குரல் வானொலியின்
ஒலிபரப்புக்களையும் தவறாது தலைவர் அவர்கள் செவிமடுப்பார். இதே அணுகுமுறையை
வெரித்தாஸ், பி.பி.சி தமிழோசை போன்ற வானொலிகளின் விடயத்திலும் தலைவர்
அவர்கள் பின்பற்றி வந்தார்.

அத்தோடு, கிடைக்கும் தருணங்களில் சண்,
ஜெயா, பி.பி.சி உலகச் சேவை உட்பட வெளிநாட்டுத் தொலைக்காட்சிகளின்
செய்திகளையும், தமிழீழ தேசியத் தொலைக்காட்சியின் செய்திகளையும் தலைவர்
அவர்கள் உன்னிப்பாக அவதானிப்பார். வேலைப்பளு காரணமாக பார்க்க முடியாத
தருணங்களில் அவற்றை அவரது மெய்ப்பாதுகாவலர்கள் பதிவு செய்து வைப்பார்கள்.
இதனை விட தமிழ் - ஆங்கில ஊடகங்களின் ஒலிபரப்புக்களை அவதானிப்பதற்கு என்று
தலைவர் அவர்களின் பணிப்புரைக்கு அமைய போராளிகளையும், விமர்சகர்களையும்
கொண்ட இரண்டு குழுக்களை அனைத்துலக தொடர்பகப் பொறுப்பாளர் வீ.மணிவண்ணன்,
தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆகியோர்
நியமித்திருந்தனர்.

 

களமுனையின் எந்த இடத்தில் நின்றாலும் உலக
நடப்புக்களை துல்லியமாக அறிந்து வைத்திருக்கும் தலைவர், தனது
விமர்சனங்களையும், பாராட்டுக்களையும் ஊடகப் போராளிகளுக்கும், தமிழ்த் தேசிய
ஊடகவியலாளர்களுக்கும், அரசியல் ஆய்வாளர்களுக்கும் தேவையேற்படும்
தருணங்களில் நேரடியாகவோ அல்லது தனது தொடர்பாளர்கள் மூலமாகவோ
தெரியப்படுத்தத் தவறுவதில்லை.

சுனாமிக்காக வன்னிக்கு சென்று சில
நாட்கள் தங்கியிருந்தவர்களுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால்
தமிழீழ விடுதலைப் புலிகளின் வழிகாட்டலில் புலம்பெயர் தேசங்களில் செயற்பட்ட
ஊடகவியலாளர்களுக்கும், அரசியல் ஆய்வாளர்கள் சிலருக்கும் இது தெரியும்.

பதின்மூன்றாம் திருத்தச்சட்டம் என்பது என்ன என்று தெரியாமல் அதற்கு
விளக்கம் கேட்பதற்காக வெளிநாடுகளுக்கு தொலைபேசி அழைப்புக்களை
எடுப்பவர்களும், கலைஞர் கருணாநிதியின் காலில் மண்டியிடுவதன் மூலம் தமிழீழ
விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை எழுதும் தகுதியைப் பெறலாம் என்ற கனவில்
மிதக்கும் விசைப்பலகை வீரர்களும் இதனை முதலில் புரிந்து கொள்வது நல்லது.

- போராளி மலரவன்

http://www.sankathi24.com/news/28803/64//d,fullart.aspx

 

https://www.facebook.com/photo.php?fbid=468678713205086&set=a.468364469903177.1073741828.468294273243530&type=1&theater

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த தாயிடம் பால் குடித்த குழந்தை’, என்றெல்லாம் கற்பனை

செய்தி

 

 

 

இப்படி எழுதுவது முன்பு வெளிவந்த வன்னியில் நடந்ததாக எழுதப்பட்ட பல செய்திகளில் நம்பிக்கையை இழக்க வைப்பதாக அமையாதா ?

இன்றைய காலகட்டத்தில் மக்களின் எழுச்சிக்கு வன்னியில் நிகழ்ந்த இப்படியான சம்பவங்களே வித்திட்டது என்பதனை மலரவன் எழுதும்போது கருத்தில் கொண்டிருக்கலாம்.  

 

சில எமது இராணுவ விற்பன்னர்களின் கட்டுரைகளை வாசிக்கும் போது மிகவும் கோவம் வரும். கவிதைகளிலேயே மிகைப்படுத்தல் அழகு கட்டுரைகளில் அல்ல. உண்மையை உண்மையாக கூறுங்கள் ஏற்றுக்கொள்வதும் விடுவதும் வாசகனின் விருப்பம், உங்கள் எழுத்தின் புலமையை காட்டுவதற்கான இடம் தமிழ் மக்களின் வாழ்க்கையோ அல்லது தமிழ் தேசியமோ அல்ல.

 

  • கருத்துக்கள உறவுகள்

விசைப்பலகை வீரர்களினால்தான் போராட்டத்தில் நம்பகத்தன்மை குறைந்தது. ஆனால் அது இன்றும் தொடர்கின்றது.

நான் இந்த விசைப்பலகை வீரர்களையெல்லாம் கணக்கிலெடுப்பதே இல்லை.  செயற்பாட்டாளர்களாக இருப்பவர்களால் விசைப்பலகை வீரர்களாக இருக்கமுடியாது.  அதேபோல் விசைப்பலகை வீரர்களாலும் செயற்பாட்டாளர்களாக இருக்க முடியாது.  யதார்த்தத்திற்கும் விசைப்பலகை வீரர்களுக்கும் வெகுதூரம்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.