Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் சுற்றுலா பயணிகளைக் கண்காணிக்க நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

111225164723_tangalle_murder_304x171_bbc

 

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கண்காணிப்பதற்கு அரசாங்கம் கொண்டுவந்துள்ள புதிய விதிகள் தொடர்பில் ஹோட்டல் தொழிற்துறை சார்ந்தவர்கள் பலதரப்பட்டக் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளனர்.
 
இலங்கையில் ஒரு வாரத்துக்கு அதிககாலம் தங்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வீசா மற்றும் கடவுச்சீட்டுத் தகவல்களை ஹோட்டல்களும் விருந்தினர்-ஓய்வு விடுதிகளும் அரசாங்கத்திடம் வழங்க வேண்டும் என்று புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
 
சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாப்பதற்கும் விடுமுறையை கழிப்பவர்கள் என்ற போர்வையில் இருப்போரால் புரியப்படும் குற்றச்செயல்களை தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
 
இப்படியான மேலதிக கண்காணிப்பு நடவடிக்கைகள் அவசியம் என்று இலங்கையில் ஹோட்டல்களை நடத்துவோரில் சிலர் கூறுகின்றனர்.
 
ஆனால் இப்படியான கட்டுப்பாடுகளால் வெளிநாட்டுப் பயணிகள் இலங்கைக்கு வரத் தயங்குவார்கள் என்று ஹோட்டல் தொழிற்துறை சார்ந்த மேலும் பலர் பிபிசியிடம் தெரிவித்தனர்.
 
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் வீசாக் கட்டணம் அறவிடும் நடைமுறையை 2011-ம் ஆண்டில் அரசாங்கம் தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/04/130419_lankatourist.shtml

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.