Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டவிரோத கடல் பயணம்: 24 மணிநேரத்தில் 105 பேர் கைது

Featured Replies

19 ஏப்ரல், 2013

 

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்ட விரோத பயணம் மேற்கொள்ள முயன்றதாக கூறப்படும் 105 பேர் 24 மணிநேரத்திற்குள் இரண்டு வெவ்வேறு இடங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

5 பெண்கள், 4 சிறுவர்கள் உட்பட 44 பேர் களுத்துறை மாவட்டம் அளுத்கம பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இவர்கள் கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்குப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

ஆஸ்திரேலியாவிற்கான பயண ஏற்பாடுகளுடன் காணப்பட்டவேளை இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கின்றது.

மற்றுமோர் சம்பவத்தில், கிழக்கு கடலில் மீன் படகொன்றில் பயணம் செய்து கொண்டிருந்த 8 பெண்கள், 10 சிறுவர்கள் அடங்கலாக 61 பேர் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம், வாகரை பிரதேசத்திலிருந்து இவர்கள் புறப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள இலங்கை கடற்படை, கைதானவர்களில் 60 பேர் தமிழர்கள் ஒருவர் சிங்களவர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையிருந்து ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோத பயணம் மேற்கொள்ள முன்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில், இலங்கை காவல்துறை மற்றும் கடற்படையினரின் தகவல்களின் படி இந்த ஆண்டில் சுமார் 500 பேர் உள்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதுபோன்ற மற்றுமொரு தொகுதியினர், இலங்கையிலிருந்து புறப்பட்டு ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமது நாட்டிற்குள் கடல் வழியாக வர வேண்டாம், இது சட்டவிரோத பயணம், அப்படி வருபவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் இலங்கையில் பகிரங்கமாக பொதுமக்களுக்கு அறிவித்து வருகின்றது.

விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடந்துவந்தாலும், அந்நாட்டிலிருந்து புகலிடம்கோர தகுதியற்றவர்கள எனக் கருதப்படுவோர் கட்டம் கட்டமாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டாலும் இந்த சட்ட விரோத பயணங்கள் தொடர்ந்தவாறே உள்ளன.

வியாழக்கிழமை 39 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய தகவலின்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் தொடக்கம் இதுவரை 1004 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/04/130419_aussielanka.shtml

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.