Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர்கள் மீண்டும் நாடு திரும்ப முடியும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
reporters-210413-seithy-150.jpg

உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகத் தெரிவித்து நாட்டை விட்டுத் வெளியேறிய ஊடகவியலாளர்கள் மீளவும் நாடு திரும்ப முடியும் என ஊடக அமைச்சின் செயலாளர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது எவ்வித அச்சுறுத்தல்களும கிடையாது எனவும் இதனால் ஊடகவியலாளர்கள் நாடு திரும்ப முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்ட ஊடகவியலாளர்கள் நாடு திரும்பக் கூடிய சூழ்நிலையே காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தவோ அல்லது அழுத்தங்களை பிரயோகிக்கவோ இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

  

எந்தவொரு ஊடகவியலாளரையும் அரசாங்கம் கறுப்புப் பட்டியலிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடக நிறுவனங்களோ அல்லது ஊடகவியலாளர்களோ அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருவதாக தமக்கு இதுவரையில் தகவல்கள் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களில் உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகத் தெரிவித்து இரண்டு ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதேவேளை, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கூடிய நிலையில் ஊடக அமைச்சு இல்லை என சுதந்திர ஊடக அமைப்பின் அழைப்பாளர் சுனில் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

 

சுனந்த தேசப்பிரிய, உபாலி தென்னக்கோன், போத்தல ஜயந்த, பிரசன்ன பொன்சேகா மற்றும் சனத் பாலசூரிய போன்ற ஊடகவியலாளர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார். வெறும் வார்த்தைகளுக்கு மட்டும் இந்த உறுதி மொழி வழங்காது ஊடகவியலளார்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் நாட்டை வெளியேறிய ஊடகவியலளார்கள் நாடு திரும்புவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=80932&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.