Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாணசபைக்கான கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் - உள்ளிருந்தா அல்லது வெளியிலிருந்தா? - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாணசபைக்கான கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் - உள்ளிருந்தா அல்லது வெளியிலிருந்தா? - யதீந்திரா

வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் இவ்வாண்டு செப்டம்பரில் நடக்கக் கூடுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை ஆட்சியாளர்கள் மீதான சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வருகின்ற சூழலில், அதனை எதிர்கொள்ளும் ஓர் உபாயமாக இதனை அரசாங்கம் கையாளக் கூடும். குறிப்பாக, இந்தியாவை திருப்திப்படுத்தும் ஒரு நோக்கிலும், இத் தேர்தலை அரசாங்கம் கையாளக் கூடும். அமெரிக்காவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுவரும், ஜெனிவா அழுத்தங்களுக்கு இந்தியா ஆதரவளித்து வருகின்ற சூழலில், தொடர்ந்தும் அரசாங்கம் இறுக்கத்தை கடைப்பிடித்துக் கொண்டிருக்குமாயின், இந்தியாவும் அமெரிக்க அழுத்தங்களை வலுப்படுத்த வேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்படும் என்பதையும் அரசு கருத்தில் கொள்ளாமல் இருக்க வாய்ப்பில்லை. 13வது திருத்தச் சட்டம் குறித்து, இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்ற சூழலில், அரசால் வடக்கு மாகாணசபை தேர்தலை இனியும் தட்டிக் கழிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே! எனவே இத்தகைய நிலைமைகளை கருத்தில் கொண்டு சிந்தித்தால், அரசாங்கம் இவ்வருடம் வடக்கு மாகாணசபை தேர்தலை அறிவிப்பதற்கான சூழலே தெரிகிறது. ஒருவேளை கொரிய யுத்த பதட்டம் தீவிரமடைந்து, உலகின் கவனம் இலங்கையிலிருந்து அகலுமாயின் அரசாங்கம் வேறுவிதமாக யோசிக்கவும் வாய்ப்புண்டு.

 

இவற்றுக்கெல்லாம் அப்பால், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சனையோ வேறுவிதமாக இருக்கிறது. ஒருபுறம், மாகாணசபை தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டுமென்னும் கோரிக்கை வலுவடைந்திருக்கிறது. இதன் ஒரு அங்கமாக, கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் மூன்று கட்சிகளின் தலைவர்கள், மன்னார் ஆயர் இராயப்பு யோசப்பின் ஆதரவையும் கோரியிருக்கின்றனர். தமிழரசுக் கட்சியின் மீது, சமூக அழுத்தங்களை பிரயோகிக்கும் நோக்கிலேயே மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தற்போது மீண்டும் பிறிதொரு விவாதம் மெதுவாக மேலெழுந்திருக்கிறது. வடக்கு மாகாணசபைக்கான, கூட்டமைப்பின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதே அந்த விவாதம். உத்தியோகபூர்வமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படாத நிலையில், சிலரது பெயர்கள் உச்சரிக்கப்படுகின்றன. அதில் ஒரு சிலர் உள்ளிருப்பவர்கள், சிலரோ வெளியில் இருப்பவர்கள்.

 

இவ்வாறான விவாதங்களுக்கு மத்தியில், ஒரு நண்பர் சற்று மாறுபட்ட தெரிவு ஒன்று குறித்து பேசினார் - வடக்கு மாகாணசபையின் முதல்வராக ஏன் இரா.சம்பந்தன் அவர்கள் வரக்கூடாது? தற்போது இருக்கின்ற தலைவர்களில், சம்பந்தனுக்கு நிகரான ஒருவர் இல்லை. எனவே அவ்வாறான ஒருவர் வடக்கு மாகாணசபைக்கு முதல்வராகும் பட்சத்தில், சர்வதேசம் கொழும்பை கையாளுவதற்கான பிறிதொரு அரசியல் பீடமாக வடக்கு மாகாணசபையை கையாளுவதற்கான ஏதுநிலை உருவாகும். சம்பந்தன், இலங்கையின் ஜனாதிபதிக்கு நிகரான ஒருவராக நோக்கப்படுவதற்கான நிலைமையும் ஏற்படலாம். இது பற்றி நான் பிறிதொரு நண்பருடன் உரையாடியபோது, அவரது பார்வையோ வேறுவிதமாக இருந்தது - சம்பந்தன் இன்றைய நிலையில் தமிழ் மக்களின் தலைவராக இருக்கின்றார். அவர் வடக்கு மாகாணசபையில் போட்டியிட்டால், அவரால் வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்தி அரசியலை முன்னெடுக்க முடியாது போகும். தவிர, சம்பந்தன், ஒட்டுமொத்த தமிழ் மக்களின் அரசியல் தலைவரென்னும் தகுதிநிலையையும் இழந்துவிடுவார்.

 

இதில் ஒரு தர்க்கம் இருப்பதாகவே இப்பத்தி கருதுகின்றது. மேலும், சம்பந்தன், பெரும்பான்மையான தமிழ் மக்களின் ஆதரவை பெற்றிருக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருப்பதன் மூலமே, தமிழ் மக்களின் தலைவர் என்னும் தகுதிநிலையை பெற்றிருக்கின்றார். அதிலிருந்து அவர் கீழிறங்கும் பட்சத்தில், அவரது அரசியல் செயற்பாடுகள், தேசிய மட்டத்திலிருந்து, மாகாண மட்டத்திற்கு கீழறங்கிவிடும். ஆனால் முதலாவது நண்பரின் ஆதங்கமும் சரியானதே! அதாவது, சம்பந்தன் போன்றளவிற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒருவர், வடக்கு மாகாணசபையின் முதல்வராக இருக்கும் போது, அதன் பெறுமதி வித்தியாசமானதாக அமையும் என்னும் கருத்தையும் இப்பத்தி ஏற்றுக் கொள்கின்றது ஆனால், அவ்விடத்தில் சம்பந்தனையே அமர்த்துவதிலுள்ள சிக்கல்களை, இரண்டாவது நண்பரின் அபிப்பிராயங்களிலிருந்து இப்பத்தி நியாயப்படுத்துகின்றது.

 

ஆனால் இப்பத்தி இரா.சம்பந்தனை தமிழ் மக்களின் தேசியத் தலைவராக கருதவில்லை. தவிர சம்பந்தனும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அத்தகையதொரு பார்வையில் தன்னை வெளிக்காட்டியதும் இல்லை. ஆழ்ந்த மீள்பரிசீலனை ஒன்றின் பின்னரே, இப்பத்தி இதனை பதிவு செய்கிறது. ஆனால் இவ்வாறான விவாதங்களுக்கு அப்பால், கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் கருத்தொருமித்து, ஆளுமையான நபரொருவரை முன்னிறுத்த வேண்டிய தேவை உண்டு. அவர் உள்ளுக்குள் இருக்கின்றாரா அல்லது வெளியில் இருக்கின்றாரா என்பதே தற்போது மேலெழுந்துள்ள கேள்வியாகும். உள்ளுக்குள் இருந்தாயின், அது தற்போது தமிழரசுக் கட்சியின் செயலாளராக இருக்கின்ற மாவை சேனாதிராஜாவாக இருக்கக் கூடும் என்றவாறான கதையொன்றும் உலவுகின்றது. வெளியில் இருந்தாயின், அது சிலவேளை ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரனாக இருக்கக் கூடுமென்றும் பிறிதொரு கதை உலவுகிறது.

 

இவைகள் வெறும் உலவும் தகவல்கள் மட்டுமே. இதனை இப்பத்தி, ஒரு வாதத்திற்காகவே எடுத்தாளுகின்றது. சமீபத்தில், கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் ஒரு விடயத்தை பகிர்ந்து கொண்டார். வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவர் அவரிடம் இவ்வாறு கூறியிருக்கின்றார் - நீங்கள் வெளியிலிருந்து ஒருவரை கொண்டுவருவதன் மூலம், இரண்டு செய்திகளை எங்களுக்கு சொல்கின்றீர்கள் - ஒன்று, ஐந்து கட்சிகள் சேர்ந்திருக்கின்ற கூட்டமைப்பிற்குள் வடக்கு மாகாணசபைக்கு முதல்வராகக் கூடியளவிற்கு தகுதியானவர் ஒருவர்கூட இல்லை என்பதைச் சொல்கின்றீர்கள். இரண்டாவது, உங்களால் ஒற்றுமையாக ஒரு வேட்பாளரை நிறுத்த முடியவில்லை என்னும் செய்தியையும் வெளிப்படுத்துகின்றீர்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு வெளியிலுள்ளவர்களால் நோக்கப்படுகின்றது என்பதற்கு, இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஆகும்.

 

கூட்டமைப்பிற்குள் ஐந்து கட்சிகள் இருந்தாலும், முக்கியமான முடிவுகள் அனைத்தும் தமிழரசுக் கட்சியினாலேயே எடுக்கப்படுகின்றன. எனவே, வடக்கு மாகாணசபைக்காக முன்மொழியப்படும் முதன்மை வேட்பாளர், தங்களது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருக்கக்கூடிய ஒருவராக இருக்கவேண்டும் என்பதிலேயே தமிழரசுக் கட்சி கவனம் செலுத்தும். ஆனால் இதனை ஏனைய கட்சிகள் எவ்வாறு பார்க்கும் என்பது வேறு விடயம். வடக்கு தேர்தலுக்கு முன்னர், கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்யவேண்டும் என்னும் வாதம் வலுவடைந்திருக்கின்ற சூழலில், ஏனைய கட்சிகளின் ஆதரவின்றி ஒரு வேட்பாளரை தமிழரசுக் கட்சியால் நிறுத்த முடியுமா என்பது அடுத்த கேள்வி. சில வேளைகளில், அவ்வாறு தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக முடிவுகளை எடுக்குமாயின், கூட்டமைப்பு உடைவதற்கான வாய்ப்பும் இருக்கின்றது. கூட்டமைப்பு ஏலவே எண்ணவோட்டத்தில் ஒரு பிளவுற்ற அமைப்பாகவே இருக்கிறதென்பது அனைவரும் அறிந்ததே!

 

மக்களின் நலனை முன்னிறுத்தி சிந்தித்தால் மேற்படி விடயங்களை கையாளுவது மிகவும் இலகு. ஆனால் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக பெருவாரியான மக்களால் அங்கீகரிக்கப்பட்ட காலத்திலிருந்து, தங்களது முரண்பாடுகளுக்கே அதிக முக்கியத்துவத்தை கொடுத்துவரும் அமைப்பாகவே தங்களை வெளியுலகிற்கு இனம்காட்டியிருக்கிறது. இதன் காரணமே, தங்களுக்குள் தீர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு பிரச்சனையை கையாளுவதற்கு மன்னார் ஆயரிடம் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

 

சமீபத்தில் ஒரு உயர் சிங்கள அதிகாரி, தனது தமிழ் நண்பர் ஒருவரிடம், இவ்வாறு கூறிச் சிரித்திருக்கின்றார் - நாங்கள் எங்கட விடயங்களில் கவனமாக இருக்கிறம், (அருகில் இருந்த முஸ்லிம் அதிகாரியை காட்டி) இவங்களும் தங்கட விடயங்களில் கவனமாக இருக்கிறாங்க, ஆனால் நீங்கள் சதா உங்களுக்குள் அடிபடுறதிலேயே குறியா இருக்கிறீங்கள். நீங்கள் எப்படி உருப்படப் போறிங்க? கூட்டமைப்பில் உள்ள முரண்பாட்டை சுட்டிக்காட்டியே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் இது குறித்து எவ்வளவுதான் எழுதினாலும், பேசினாலும் அனைத்துமே செவிடன் காதில் சங்கூதும் முயற்சியாகவே இருக்கிறது. வடக்கு மாகாணசபை தொடர்பான அறிவுரைகளும், இறுதியில் செவிடர்கள் காதில் சங்கூதும் முயற்சியாகத்தான் முடியுமா? வடக்கு மாகாணசபைக்கு கூட்டமைப்பின் சார்பில் நிறுத்தப்படும் முதன்மை வேட்பாளரது ஆளுமையை மற்றவர்கள் வியக்க வேண்டும், மாறாக சிரிக்கக் கூடாது. அவ்வாறானதொரு வேட்பாளரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கருத்தொருமிப்புடன் தீர்மானிக்க வேண்டும். ஆனால் அது கூட்டமைப்பால் முடியுமா?

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=b39899d4-a192-4850-ad66-8f74001834c5

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குட்டைய குழப்பி போட்டு மீன் பிடிக்கிற முயற்சி தான் ....

விக்கினேஸ்வரனுக் கும் ஆப்பு போல இருக்கு ..... :lol:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.