Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் மற்றும் ஆனந்தபுரத் தளபதிகளின் நினைவு வணக்க நிகழ்வு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
veeravanakkam-seithy-6-20130422-150.jpg

1988 ம் ஆண்டு சித்திரை மாதம் 19ம் நாள் உலக வரலாற்றில் ஒரு தமிழ் தாய் நான்காவது வல்லரசு நாட்டுக்கு எதிராக உண்ணா நோண்பிருந்து சாவைத்தழுவிக்கொண்டார். இந்நிகழ்வு உலகத் தமிழர்களையும் தமிழீழ மக்களையும் சாத்வீகப் போராட்டத்தை கற்றுத்தந்த தேசத்திற்கு எதிராக மீண்டும் ஒருமுறை கிழர்ந்தெழ வைத்தது. ஏப்ரல் 19 தென் தமிழீழ அன்னையர் முன்னணியின் போராட்டத்தை உலகறியச் செய்தநாள். உலகத் தமிழ் மக்களுக்கு அன்னை பூபதி என்கின்ற தியாகச் செம்மலை அறிமுகப்படுத்திய நாள் இந் நாளையே தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தேசிய நாட்டுப்பற்றாளர் நாளாக பிரகடனம் செய்து மகிமைப்படுத்தினார்.

  

2009 ம் ஆண்டு எமது விடுதலைப் போராட்டம் மிக இக்கட்டான நிலையை சந்தித்து நின்றவேளை இறுதிக்கட்ட முறியடிப்பிற்கு தயார் படுத்தப்பட்டிருந்ததளமே ஆனந்தபுரம். இதை நன்கு உணர்ந்திருந்தஎதிரியும் அன்னிய சக்திகளும். சர்வதேச சட்ட போர் விதிமுறைகளை மீறி திட்டமிட்டு செயற்பட்டதாலேயே, நாம் எமது வீரத் தளபதிகளையும் ஆயிரக்கணக்கான போராளிகளையும். இழந்து நிற்கின்றோம். மீண்டும் வேர் விடுவோம் விழுதெறிவோம் அவர்களின் நினைவுகளுடன் போராடுவோம்.

 

அந்தவகையில் அன்னை பூபதி உட்பட அனைத்துநாட்டுப்பற்றாளர்கள் மாமனிதர்கள் மற்றும் ஆனந்தபுரத்தில்காவியமான வீரத் தளபதிகள், இம்மாதத்தில் வீரச்சாவடைந்தஅனைத்து மாவீரர்களுக்குமான வீரவணக்க நினைவேந்தல்நிகழ்வு நேற்று மாலை (21/04/2013) 6.00 மணிக்கு Brookeside Road,Hayes, Middlesex, UB4 0PL எனும் முகவரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் தலைவியும் மூன்றுமாவீரர்களின் தாயுமான திருமதி இரத்தினேஸ்வரி அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

 

அன்னை பூபதி, உட்பட நாட்டுப்பற்றாளர்கள் மாமனிதர்கள் மற்றும் மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கான ஈகச்சுடர்களை மாவீரர்ஜீவனின் சகோதரி திருமதி சபாரட்ணம் மாவீரர் சங்கரின் சகோதரி, கேதீஸ்வரி மாவீரர் கோமகனின் தாயார் மற்றும் நாடு கடந்த அரசாங்கத்தின் அரசபை உறுப்பினர் நிமலன்சீவரத்திணம் ஆகியோர் ஏற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து திருவுருவப் படங்களுக்கான மலர்மாலைகளை மாவீரர் இளையவள் அவர்களின் சகோதரன்குமார். மாவீரர் துவாரகனின் சகோதரன் நவம். தேசியச்செயற்பாட்டாளர்களான திரு ரவி. மற்றும் அமர்நாத்ஆகியோர் அணிவித்தனர்.

 

நினைவுரையினை நாட்டுப்பற்றாளர் அழகராச, அவர்களின்மகனும் மாவீரர் பரந்தாமனின் சகோதரனுமாகிய திருதும்பன் அவர்களும். சிறப்புரையினை தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மூத்த உறுப்பினர் திரு மாறன் அவர்களும்நிகழ்த்தினர். இறுதியாக உறுதியுரையுடன் நிகழ்வுநிறைவடைந்தது.

 

veeravanakkam-seithy-1-20130422-400.jpg

 

 

veeravanakkam-seithy-2-20130422-400.jpg

 

 

veeravanakkam-seithy-3-20130422-400.jpg

 

 

veeravanakkam-seithy-4-20130422-400.jpg

 

 

veeravanakkam-seithy-5-20130422-400.jpg

 

 

veeravanakkam-seithy-6-20130422-400.jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=80997&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.