Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்தார் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் - பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

Featured Replies

  மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்தார் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் - பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

[Monday, 2013-04-22 18:49:18]
rape-090213-seithy-150.jpg

காத்தான்குடி நகர சபை உறுப்பினரொருவர் மாணவியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்துள்ள சம்பவம் ஒன்று இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் பொலிஸில் இன்று திங்கட்கிழமை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓட்டமாவடி பிரதேசத்தை சேர்ந்த இந்த மாணவி காத்தான்குடி பிரதேசத்தில் தங்கி கல்வி பயின்று வருகின்றார். குறித்த மாணவியை நகர சபை உறுப்பின் தனது காரில் கல்முனை பிரதேசத்திலுள்ள தனியார் கல்வி நிலையமொன்றுக்கு இன்று அழைத்துக் சென்றுள்ளார். அங்கிருந்து காத்தான்குடிக்கு திரும்பி வரும்போதே அம்மாணவி மீது பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்துள்ளார்.

  

இந்நிலையில், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வைத்து காரை விட்டு இறங்கி அந்த மாணவி இது தொடர்பில் பிரதேசவாசிகளிடம் முறையிட்டுள்ளார். இதனையடுத்து அந்த மாணவியை பிரதேசவாசிகள் காத்தான்குடி அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் காரியாலயத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த அலுவலகம் மூடப்பட்டிருந்தமையினால் அந்த மாணவியை பிரதேசவாசிகள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனையடுத்து குறித்த மாணவி மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான சந்தேகநபரான காத்தான்குடி நகர சபை உறுப்பினர் கைது செய்யப்படுவார் என தெரிவித்த காத்தான்குடி பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

http://www.seithy.com/listAllNews.php?newsID=81037&category=TamilNews&language=tamil

 

  • தொடங்கியவர்
துஷ்பிரயோகக் குற்றச்சாட்டை முன்வைத்த மாணவி மட்டு. ஆஸ்பத்திரியில்! பாக்கீர் ஆசிரியர் பொலிசில் ஆஜாரகவில்லையாம்!! முன்னாள் மாகாண உறுப்பினரும் மறுப்பு தெரிவிப்பு!!!

bakir-sir1.gif?w=108&h=150இன்று மதியம் காத்தான்குடி நகர சபையின் ஆளுந்தரப்பு உறுப்பினரான எச்.எம்.எம். பாக்கீர் ஆசிரியரால் அவரது காரில் வைத்து காத்தான்குடிக்கு அப்பாலுள்ள தமிழ்ப் பிரதேசமொன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முயற்சிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும் ஓட்டமாவடிப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மாணவியை காத்தான்குடி பொலிசார் வைத்திய பரிசோதனைக்காக சற்று முன்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 7ம் வார்டில் அனுமதித்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை எமது 2ம் பதிவேற்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தவாறு குற்றச்சாட்டுக்குள்ளான நகர சபை உறுப்பினர் பாக்கீர் ஆசிரியர் பொலீசாரால் அழைத்துச் செல்லப்படவில்லையென்றும், அவர் இச்செய்தி எழுதப்படும் இரவு 07:30 மணி வரை பொலிஸ் நிலையத்திற்குச் செல்லாமல் தலைமறைவாகி இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

http://vaarauraikal.wordpress.com/

 

 

  • தொடங்கியவர்
 
மாணவியை பாலியல் சேஷ்டை செய்ய முயற்சித்ததாக காத்தான்குடி நகரசபை உறுப்பினர் மீது குற்றச்சாட்டு lg-share-en.gif face.jpg By General
2013-04-22 20:23:13  

காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பிரபல பொருளியல் பாட ஆசிரியருமான எச்.எம்.எம்.பாக்கீர் மாணவியொருவரை பாலியல் சேஷ்டை செய்ய முயற்சித்ததாக அம் மாணவி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடியைச் சேர்ந்த குறித்த மாணவி காத்தான்குடியிலுள்ள பாக்கீர் ஆசிரியரின் மதினியின் வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வந்துள்ளார்.

இன்றை தினம் இம் மாணவி பாக்கீர் ஆசியரின் தனியார் கல்வி நிலையத்திற்கு கல்வி கற்க சென்ற போது அம் மாணவியை பாக்கீர் ஆசிரியர் தனது காரில் கல்முனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

காரில் பின் ஆசனத்தில் இருந்து சென்ற இம் மாணவியை முன்னால் வந்து அமருமாறு வற்புறுத்தவே குறித்த மாணவி முன் ஆசனத்தில் வந்து அமர்ந்துள்ளார். அவ் வேளை இம் மாணவியுடன் பாலியல் ஷேட்டை செய்ய முற்பட்ட வேளை மாணவி இடம் கொடுக்கவில்லையென பொலிசாரிடம் மாணவி தெரிவித்துள்ளார்.

கல்முனைக்கு சென்று விட்டு மீள காத்தான்குடிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது இதேவாறு இம் மாணவியை முன் ஆசனத்தில் அமர்த்தி துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.

இந்த மாணவி காரை விட்டு பாயப் போவதாக எச்சரித்தவுடன் புதுக்குடியிருப்பு எனுமிடத்தில் காரை நிறுத்தியுள்ளார்.

காரை விட்டு இறங்கிய இம் மாணவி தனிமையில் அழுது கொண்டு புதுக்குடியிருப்பு வீதியினால் செல்வதை அவதானித்த அந்த வழியால் சென்ற வெளியூரைச் சேர்ந்த சிலர் குறித்த மாணவியை அணுகி விடயத்தை கேட்டுள்ளனர்.

அவ்வேளை பாக்கீர் ஆசிரியர் குறித்து அந்த வெளியூர் வாசிகளிடம் இது எங்களின் குடும்ப பிரச்சினை இது மருமகள் என்று கூறியவுடன் அந்த மாணவி இல்லை, இவரை போகச் சொல்லுங்கள் என இவர் என்னை துஷ்பிரயோகம் செய்ய முனைகின்றார் என கூறியுள்ளார்.

இதையடுத்து இம் மாணவியை சம்மேளனத்திற்கு கொண்டு வந்த இவர்கள் பின்னர் இம் மாணவி தங்கியிருந்த காத்தான்குடியிலுள்ள அவ் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் விடயம் பொலிசாருக்கு தெரியப் படுத்தியதையடுத்து இம் மாணவி தங்கியிருந்த வீட்டுக்கு வந்த பொலிசார் இம் மாணவியை காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

குறித்த மாணவி மேலே குறிப்பிட்டுள்ள தனது வாக்கு மூலத்தை பொலிசருக்கு தெரிவித்துள்ளதுடன் தன்னை பாக்கீர் ஆசிரியர் பாலியல் சேஷ்டை செய்ய முற்பட்டதாகவும் முறைப்பாடு செய்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணை செய்து வருவதுடன் பொலிசார் குறித்த மாணவி காரை விட்டு இறங்கிய அந்த இடத்தையும் மாணவி மற்றும் மாணவியின் தாயுடன் சென்று பார்வையிட்டனர்.

இதுதொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை நடாத்தி வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=4131

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆட்சி மாற்றம் தேவை ..... :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.