Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் எங்களை நாடு கடத்தலாம்!, ஆனல் எங்கள் தாய் தமிழீழத்தை எங்கள் மனதில் இருந்து நாடு கடத்த முடியாது!

Featured Replies

images-12.jpg

ஈழத்தமிழன் என்றாலே அவனை அடையாளப்படுத்தும் முக்கியமான ஒரு சொல் தான் அகதி. அவன் இல்லாத நாடு ஒன்று இந்த உலகத்தில் இல்லை.

ஏனோ ஈழத்தமிழர்களாகிய எஙகளை எவருக்கும் பிடிப்பதில்லை. நாங்கள் கதைத்தால் அது தீவிரவாதம் என்கிறார்கள். இதே எங்களை தினம் தினம் கொன்று குவித்தால் அது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்கிறார்கள்.

நாங்கள் என்ன பாவம் செய்தோம் இப்படி நாடு நாடாக அலைவதற்கு. நாங்களும் மனிதர்கள் தான் என்பதை இந்த உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் போலிருக்கிறது.

ஈழத்தமிழர் சிங்களவர் மீதுள்ள கோபம் அதே அளவு சர்வதேசத்தின் மத்தியில் வைத்திருக்கிறார்கள். உங்கள் பூகோள அரசியல் புண்ணாக்கு அரசியல் எதுவும் எங்களுக்கு தெரியாது. ஆனால் எங்களுக்கு எப்படி கேட்டால் நியாயம் கிடைக்கும் என்பது தெரியும்.

உலகமே போர்தான் ஓய்ந்திருக்கிறது போரட்டம் என்னும் ஓயவில்லை. நாங்கள் நீங்கள் செய்வதை எல்லாம் தாங்குவதற்கு காந்தியும் அல்ல, புத்தனும் அல்ல. நாங்கள் சாதரண மனிதர்கள் தான்.

நீ எங்களை நாடு கடத்து, இலங்கை அரசாங்கம் வெள்ளை வானில் எங்களை கடத்தும். பின் ஏதோ ஒரு கிணற்றில் சடலம் கிடக்கும்.சிங்கள பொலிஸ் விசாரணை நடத்தும் பின் சிங்களத்தில் ஒரு கடிதம் எழுதி கையெழுத்து வாங்குவார்கள். பின் சிறிது காலம் செல்ல மரண அறிக்கை நோயால் மரணம் என.

பின் ஒரு ஐநா மாநாடு வரும். அதில் தீர்மானம் எனும் பெயரில் ஒரு வாழ்த்து மடல் இலங்கை அரசுக்கு வாசிக்கப்படும். அதற்குள் எங்களை ஏமாற்றுவதற்கு இந்தியா எதிர்ப்பு அது இது என பத்து செய்தி. பின் மீண்டும் இந்த படலம் தொடரும்.

போர் நடந்த போது இவ்வளவு பேர் புலம் பெயரவில்லை என்கிறீர்களே. போர் நடந்த காலத்தில் எங்களுக்கு ஏதாவது நடந்தால் இயக்கம் கேட்டது. அதை விட போர் நடந்து கொண்டிருந்தாலும் நாங்கள் நிம்மதியாக இருந்தோம்.

ஆனால் இப்பொழுது அப்படியில்லை, அப்போது மரணபயம் தான், ஆனால் இப்பொழுது இராணுவத்திடம் படப்போகும் சித்திரவதையை நினைத்தே சாகவேண்டி உள்ளது.

உலக நியாயம் பேசம் நாடுகளே!

நீங்கள் ஒன்றை அறிந்து கொள்ளுங்கள் நாங்கள் நாதியற்றவர்கள் இல்லை, நாதியற்றவர்கள் ஆக்கப்பட்டவர்கள். நாங்கள் அகதிகள் இல்லை, அகதிகள் ஆக்கப்பட்டவர்கள். நாங்கள்

நாதியற்றவர்கள் ஆக இருக்கலாம், ஆனால் நாணமற்றவர்கள் அல்ல.

நாங்கள் எங்களை கொன்ற சிங்களவரை திருப்பி கொல்ல தெரியாது என்றும் இல்லை, அப்படி நாங்கள் நினைத்திருந்தால் இலங்கை எப்பொழுதொ சுடுகாடு ஆகியிருக்கும்.

எங்களுக்கு ஆயுதத்தில் எந்த விருப்பம் இல்லை, நீஙகள் ஆயுதம் ஏந்த வைத்தீர்கள். இப்பொழுதும் எங்களுக்கு ஆயுதம் ஏந்த தெரியாது என்றும் இல்லை.

முடிந்தால் நீங்கள் எங்கள் ஈழத்தை பெற்று தாருங்கள், இல்லையெனில் சொல்லி விடுங்கள், நாங்கள் ஈழத்தை பெற்று கொள்கிறோம்.

நீங்கள் எங்களை நாடு கடத்தலாம், ஆனால் எங்கள் தாய் தமிழீழத்தை எங்கள் மனதில் இருந்து நாடு கடத்த முடியாது.

-ஈழத்து நிலவன்-

http://eelampresse.com/?p=19763

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.