Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நில அபகரிப்புக்கு எதிராக 29ம் திகதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் - கூட்டமைப்பு அழைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
north-seithy-2-20130423-150.jpg

வலி, வடக்கில் பொதுமக்களுடைய நிலம் படையினரால் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராக வலி, வடக்கு மீள்குடியேற்ற குழு, மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவில் எதிர்வரும் 29ம் திகதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. இன்று காலை 10 மணியளவில் வலி, வடக்கு பிரதேச சபையில் இடம்பெற்ற விசேட கூட்டமொன்றிலேயே இந்த தீர்மானம் வெளியிடப்பட்டிருக்கின்றது. இந்த கூட்டத்தில் வலி, வடக்கு மக்கள் பெருமளவில் கலந்துகொண்டு, படையினரின் நில ஆக்கிரமிப்பிற்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தனர். மேலும் ஓரிரு நாட்கள் போராட்டம் நடத்தியும், நீதிமன்றத்தை நாடியும் எவ்விதமான பலனும் கிடைக்காத நிலையில் தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும் எனவும், அந்தப் போராட்டங்கள் முழுதாக பிரதேச செயலகத்தினதும், மாவட்டச் செயலகத்தினதும் செயற்பாடுகளை முடக்கும் வகையில் அமைய வேண்டும் எனவும் கூறினர்.

  

இதற்கமைய 29ம் திகதி தொடக்கம் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளை முடக்கும், வகையில் பாரியளவு தொடர் போராட்டங்களை நடத்த வேண்டும் என மக்களும், கூட்டமைப்பினரும் ஒருங்கே குறிப்பிட்டதன் பின்னர் மக்கள் போராட்டத்திற்கான ஆதரவினை தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கலந்து கொண்டு போராட்டத்தின் தேவை குறித்து கருத்துத் தெரிவித்ததுடன், வடகிழக்கு தமிழர் தாயகத்தில் யுத்தத்தின் பின்னர் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இனச்சுத்திகரிப்புக்கு ஒரே தீர்வு தமிழர்கள் கிளர்ந்தெழுந்து ஜனநாயக வழியில் போராடுவதே எனவும் குறிப்பிட்டார். இதேபோல் நாளை புதன்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள போராட்டத்திலும் மக்கள் கலந்து கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டதுடன், அதில் தாமும் கலந்து கொள்வோம் எனவும், அனைத்துக் கட்சிகளினாலும் நடத்தப்படும் போராட்டங்களும், மக்களுக்கானவை எனவும், யாருடைய போராட்டத்தையும் மலினப்படுத்தாமல், குறைத்து மதிப்பிடாமல், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் மக்கள் அதில் கலந்து கொண்டு உங்கள் உரிமைகளுக்கான குரலை உரத்து எழுப்ப வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதுடன், தொடர் போராட்டங்களே இதற்கு தீர்வு எனவும் குறிப்பிட்டார்.

 

இந்தச் சந்திப்பில் மேலும் மக்கள் குறிப்பிடுகையில் ஈழத்தில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் போராட்டங்களுக்கு தமிழக மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் இதற்குச் சார்பான போராட்டங்களை தமிழகத்தில் முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். மேலும் இச்சந்திப்பில் பிரதேசசபையின் தலைவர் எஸ்.சுகிர்தன், உபதலைவர் எஸ்.சஜீவன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

north-seithy-1-20130423-374.jpg

 

 

north-seithy-2-20130423-374.jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=81109&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.