Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகளே பொறுப்பு; பவித்ரா வன்னியாரச்சி கூறுகிறார்

Featured Replies

மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகளே பொறுப்பு; பவித்ரா வன்னியாரச்சி கூறுகிறார்
pavithira.jpg

மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகளே பொறுப்புச் சொல்ல வேண்டும் என்று  மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியே தற்போதைய மின்சாரக் கட்டண உயர்வுக்கு பொறுப்பு சொல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

1993 ஆம் ஆண்டில் ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சி அரசு கொள்கை அடிப்படையில் தனியார் துறையினருக்கு மின்சார உற்பத்திக்கான சந்தர்ப்பத்தை வழங்கியது என்று  அவர் குறிப்பிட்டார்.

தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதனால் இலங்கை மின்சாரசபை நட்டத்தை எதிர்நோக்க நேரிட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

http://onlineuthayan.com/News_More.php?id=644092000728496765

 

யாழிலை ஒரு காலத்திலை மற்றுக்கருத்து எழுதியவ போலிருக்கு. நல்ல பேசிறா. சந்திரிக்கா இரண்டு முறை. மகிந்தா இரண்டு முறை முடிய போகுது.

நுரை சோலை மூன்றாவது ஆண்டாக இயங்க முடியாமல் இருக்கிறது. அங்கு சீனா கொண்டுவந்து போட்ட மெசின் எல்லாம் சீனாவிலை பாவிச்சு களட்டியவை என்று கேள்வி. 

  • கருத்துக்கள உறவுகள்
மாறி மாறி குற்றம் சாட்டுவதும் ஆட்சியில் இருக்கும் போது சுருட்டுவதும் எல்லா நாடுகளிலும் நடைபெற்றாலும் தெற்காசிய நாடுகளுக்கு நிகர் அவர்கள் தான். சிறிலங்கா முதல் ஐந்துக்குள் என்பது சொல்லாமல் புரிந்து விடும்.
 
அது சரி மரத்தோடு வாகனம் அடிபட்டு இறந்த அமைச்சரின்  கொலைக்கு யார் காரணம் என இது வரை ஏதாவது செய்யப்பட்டதா? அல்லது பத்தோடு பதினொன்றாக போய் விட்டதா?? அமைச்சரிடம் கேள்வி கேட்க சரத் முத்தேட்டுகம(முன்னாள் ஆனைமடுவ பாராளுமன்ற உறுப்பினர்) போன்றவர்கள் பாராளுமன்றத்தில் இல்லாது ஒரு காரணமாக இருக்கலாம்.
 
 

 

  • தொடங்கியவர்

மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பில் அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி, பிரச்சினையை திசை திருப்ப முயற்சி        

ஆளும் கட்சியினர் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி பிரச்சினைகளை திசை திருப்ப முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பில் ஆளும் கட்சி அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி, பிரச்சினையை திசை திருப்பி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு குற்றச்சாட்டுக்களை சுமத்துவதன் மூலம் ஊழல் மோசடிகள் மற்றும் ஏனைய குறைபாடுகளை மூடி மறைப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையில் நீர் மின் திட்டங்களை அறிமுகம் செய்த சேர் ஜோன் கொதலாவலவிற்கு எதிராகவும் அரசாங்கம் குற்றச்சாட்டுக்களை சுமத்தக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.

'இப்படியே போனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இழிவு படுத்தும் நோக்கில் தோமஸ் அல் எடிசனுடன் இணைந்து தமிழ்ப் புலம்பெயர் மக்கள் மின்குமிழைக் கண்டு பிடித்தனர்' என குற்றம் சுமத்தக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=4242

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.