Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த்தேசிய இனம் ஒன்றில்லை எனும் நிகழ்ச்சி நிரல் அரசினால் முன்னெடுக்கப்படுகிறது: மாவை சேனாதிராஜா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழ் இன அடையாளங்கள் அழிக்கப்பட்டு, தமிழ்த்தேசிய இனம் ஒன்றில்லை எனும் நிகழ்ச்சி நிரல்  அரசினால் முன்னெடுக்கப்படுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

"மே" தின நிகழ்வையொட்டி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 உலகத் தொழிலாளர் விடுதலை பெற்ற நாளாக உலகம்  முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ‘மே’ 1ம் நாள் தொழிலாளர் விழாவாகக் கொண்டாடுவது வழமையானதே. பலநாடுகளில் தொழிலாளர் வர்க்கத்தின்  போராட்டங்கள், புரட்சி நடவடிக்கைகள் காரணமாக ஆட்சிகளே மாற்றியமைக்கக்கப்பட்டுள்ளமையும் வரலாறுகளாகும்.

இலங்கையிலும்  தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களை பெரும்பாலும் இடதுசாரி அரசியல் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளும் நடாத்தி வந்துள்ளன.  அந்நாளில் ஒரு சதத்தால் பாண் விலை அதிகரித்தாலும் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இப்பொழுது இன்றைய அரசாங்கத்திலே இடதுசாரிக் கட்சிகள் அமைச்சர்களாகிவிட்டனர்.  பாண் விலை 100 ரூபா அதிகரித்தாலும், விலைவாசி மலையென உயர்ந்தாலும் அன்றைய போராட்டங்கள் இன்று ஏற்படுவதாயில்லை. அவை நியாயப்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் நீண்ட கால யுத்தம், போராட்டங்கள் காரணமாக அப்பிரதேசமும் மக்களும் அரசியல் உரிமை அற்றவர்களாக மட்டுமல்ல பொருளாதார ரீதியில்  மிகமோசமாக   வீழ்ந்து கிடக்கிறார்கள். அவர்களில் பல இலட்சம் மக்கள் நிலமற்ற, வீடற்ற, வேலையற்ற, உழைப்பற்ற ஏதிலிகளாகப் பேரவலத்தில் வீழ்ந்து  கிடக்கிறார்கள். விவசாய நிலங்கள், மீன் பிடிக்கக்கூடிய வளமுள்ள கடல் பகுதிகள், குடியிருப்பு  நிலங்களிலிருந்து அந்த நிலங்களுக்கும், கடலுக்கும் சொந்தக்காரர்கள் அகற்றப்பட்டு, குறிப்பாக வலி-வடக்கிலிருந்து 23 ஆண்டுகளாகியும் அந்த மக்கள் பூரணமாக மீளக்குடியேற்றப்படவில்லை.

வடபகுதியிலே, கிழக்கு மாநிலத்திலே நூற்றுக்கணக்கான காணிகள், பல ஆயிரம் ஏக்கர் தமிழ்மக்களின் நிலம்; இராணுவத் தேவைக்களுக்காக சுவீகரிக்கப்படுவதற்கு என அறிவித்தல் கொடுத்திருக்கிறது அரசு. அந்த நிலங்களில் இராணுவ முகாம்களும், இராணுவக் குடியிருப்புக்களும் கட்டப்படுகின்றன.  பௌத்த குடிமக்களே இல்லாத இடங்களில் புத்தர் சிலைகளும், விகாரைகளும் கட்டப்படுகின்றன. தமிழ் இன அடையாளங்கள் அழிக்கப்பட்டு, தமிழ்த்தேசிய இனம் ஒன்றில்லை எனும் நிகழ்ச்சி நிரல்  அரசினால் முன்னெடுக்கப்படுகிறது. தமிழ்த் தேசிய இனக் கட்டமைப்பையும், ஒரு தேசிய இனத்துக்குரிய  சுயநிர்ணய உரிமைத் தத்தவத்தையும் அழித்துவிட்டு இனப்பிரச்சினையே இல்லை என்று சொல்லவே  அரசு திட்டமிடப்பட்டு செயலாற்றுகிறது. அதற்காக தமிழ் விவசாயிகளை அவர் நிலத்திலிருந்து வெளியேற்றி விட்டு  சிங்கள விவசாயிகளின் குடியேற்றமும், தமிழ் மீனவர்களைக் கடல் பிரதேசத்திலிருந்து வெளியேற்றிவிட்டு  சிங்கள மீனவர்கள்;  குடியேற்றமும் நடக்கின்றது. தமிழர் பிரதேசங்களை இராணுவ மயமாக்கி, சிங்கள மயமாக்கி, பௌத்த மயமாக்கும் நிகழ்ச்சி நிரலே  அரசினால் திட்டமிடப்பட்டுள்ளது.  இத்தனை செயற்பாடுகளும் முஸ்லீம் மக்களுக்கும் பொருத்தமானதே.

 உள்நாட்டிலும், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் மீளக்குடியேறும் அவாவுடன்  பல இலட்சம் தமிழ் மக்கள் அகதிகளாய் உள்ளனர். அரசு  எல்லோரையும் மீள்குடியேற்றிவிட்டோமென சர்வதேசத்திற்குப் பொய்ப்பிரசாரம் செய்கிறது. இந்த நிலையில் பெரும்பான்மைத்துவ ஐனநாயக அரசு என்ற பெயரில் மத்தியில் அதிகாரங்களைக் குவித்தலும், நிதி அதிகாரங்கள் உட்பட தேர்தல் ஆணையம், பொதுச்சேவை ஆணையம், பொலிஸ் ஆணையம் அனைத்தினதும்  சுதந்திர தத்தவங்கள் 18ஆவது திருத்தத்தினால்  ஐனாதிபதியிடம் குவிக்கப்படடுள்ளது.  இந்த நிலையில் அரசு ஒரு சர்வாதிகார ஆட்சிபீடமாகவும் ஊழல்களின் உறைவிடமாகவும் செயல்படுகிறது.

இஇதனால் விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காத அளவுக்கு   உயர்ந்து விட்டது.  சாதாரண மக்கள் உயர்ந்து வரும் விலைவாசியினால் வறுமை, ஏழ்மை பட்டினி;க்குள் தள்ளப்பட்டு வருகின்றார்கள். குறிப்பாக வடக்கு, கிழக்கு மாநிலங்களில் தொழில்துறை அபிவிருத்தியில்லை, உற்பத்தியில்லை, வேளாண்மை அபிவிருத்தியில்லை. அகதிகளாய் உள்ளோர், மீளக்குடியேற்றப்பட்டோர், குடியேற்றப்பட வேண்டியோரும் வாழ்வாதாரமின்றி வேலைவாய்ப்பின்றி, உழைப்பின்றி வாங்கும் சக்தியற்றவர்களாய்  உழல்கின்றனர். போர் காரணமாய் காணாமல்போன, கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் குடும்பங்களும,; அங்கவீனர்களும், வாழ்விழந்த பெண்களுமாய் உழைப்பின்றி, வாங்கும் சக்தியற்ற, ஒருவேளை உணவு கூடஇன்றியும் வலுவிழந்து வருகின்றனர். 70மூ முதல் 80மூ வரை வறுமைக்கோட்டின் கீழுள்ள மக்கள், தாய்மார், குழந்தைகள் ஊட்டச்சத்தற்றவர்களாய் வளர்ச்சியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கு மக்கள் எதிர்காலத்தில் முழுவளர்ச்சியற்ற மனிதர்களாகவே நடமாடுவர்.

 

எனவே இம் மேதினத்தில்

1.   அரச, அரச சார்பற்ற, தனியார்  ஊழியர் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் சம்பளம் விலைவாசியேற்றத்திற்கு ஏற்ப உயர்த்தப்படவேண்டும் என்பதுடன் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் அடித்தட்டு மக்களின் வருமானத்திற்கும், வாங்கும் சக்திக்கும் ஏற்ப குறைக்கப்படவேண்டும்.

2.   போர் காரணமாகவும், இராணுவ ஆக்கிமிப்புக் காரணமாகவும் அகதிகளாய், அனாதரவாய் வாழ்விழந்தோருக்கு நட்டஈடும் , நிவாரணமும் வழங்கவேண்டும் என்பதுடன் தமிழர்களையும் மனிதர்களாக மதிக்கின்ற பண்பு உருவாக்கப்பட்டு, முழுமனித வளர்ச்சிக்குரிய ஊட்டச்சத்து வழங்கவும் வேண்டும்.

3.   இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளான மக்கள் நிலங்களும், கடலும் உடனடியாக விடுவிக்கப்பட்டு அப்பிரதேசமக்கள், அக்காணிகளுக்குச் சொந்தமான மக்கள் மீளக்குடியேற்றப்படவேண்டும்.

4.   தமிழர் தாயகப் பிரதேசத்தில் தனியார், பொது நிலங்களை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தும் அரச படைகள் வெளியேற்றப்படவேண்டும்.

5.   இலங்கையில் தமிழினப் பிரச்சினைக்கு அம்மக்கள் தாயகத்தில் ஆளும் உரிமை அங்கீகரிக்கப்பட்டு சிறந்த அரசியல் தீர்வு உறுதிப்படுத்தப்படவேண்டும்.

6.   அரசின் சிறந்த முகாமைத்துவமின்மையாலும், திட்டமிடலில்லாமையாலும் அரச திணைக்களங்களிலும் பொதுத்துறைகளிலும் ஊழல் நிறைந்து விட்டதாலும், ஊதாரித்தனமான செயல்களினாலும்  பெற்றோல,; டீசல், மண்ணெய் மற்றும் மின்சாரம் பெறுவதில் வரிச்சுமை அதிகரித்தும், உற்பத்தி குன்றியும,; கடன்கள் அதிகரித்தும் மக்கள் வரிச்சுமையால்  வதைக்கப்படுவதற்கு எதிராக மக்கள் போராட வேண்டியுள்ளனர். வரிச்சுமையிலிருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். வேலையற்று, நிலமற்று எதிர்காலமற்றுள்ள மக்களுக்கும் நிலமும், நிவாரணமும் வழங்கப்பட வேண்டும்.

7.   போர் காலத்தில் கொல்லப்பட்டோர், காணமல் போனோர் தொடர்பில் சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளக் கூடிய விசாரணை நடத்தப்பட்டு அதனடிப்படையில் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

8.    வேலையற்ற இளைஞர், யுவதிகள், பட்டதாரிகள்,  தொண்டர் ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

9.   கல்வித்துறையில் அரசியல் மற்றும் இராணுவத் தலையீடற்ற நிர்வாகமும், மொத்தநிதி ஒதுக்கீட்டில் 6வீதத்திற்கும் மேலான நிதி ஒதுக்கீடும் வேண்டும்.

10.  தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் குடிப்பரம்பலைக் குலைத்துவரும் நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்படவேண்டும்  என்பதுடன்  தேசிய இனங்களின் சுயநிர்ணய  உரிமை  அங்கீகரிக்கப்பட வேண்டும்.

11.  ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் பெரும்பாலான அங்கத்தவ நாடுகளினால்; (2012லும்,2013லும்) இரண்டு தடவைகளும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை  நடைமுறைப்படுத்தவும், பொறுப்புக் கூறும் கடப்பாட்டை நிறைவேற்றவும் வேண்டுமெனவும் வற்புறுத்துகிறோம்.

12.  சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக தத்துவங்களையும், கருத்தியல் சுதந்திரத்தையும் அரசு அங்கீகரிப்பதுடன் ஊடகத்துறைக்கும், ஊடகவியலாளல்களுக்கும் தகுந்த பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்.

மனிதஉரிமைகளுக்கெதிரானதும், மனிதாபிமான சட்டதிட்டங்களிற்கு எதிரானதுமான ஜனநாயக விரோத ஆட்சிக்கெதிராக ஒருமித்து குரல் கொடுக்கவும் ஜனநாயக வழிகளில் அணிதிரண்டு வருமாறு அழைக்கிறது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=4307

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் பூர்வீகமாக வடக்குக் கிழக்கில் வாழவில்லை என்று நிறுவுவதே அவர்களுக்கு இப்போது முக்கியம்.. அதன் பிறகு எல்லோருமே சிறீலங்கன் தேசியம் என்று கதையைத் திரித்து அங்கே நடந்தது ஒரு இனத்துக்கிடையேயான உள்நாட்டுப்போரே அல்லாமல் இன அழிப்பு அல்ல என்று முடித்துவிடலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.