Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று பொருட்கள் மீதான சுங்க வரியை பாக். தளர்த்தியது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

01MAY2(1).jpg
தற்போது இலங்கைக்கு நேரடியாக இறக்குமதி செய்யப்படும் மூன்று பொருட்கள் மீதான தீர்வைகளை பாகிஸ்தான் தளர்த்தியுள்ளது  என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ  பாகிஸ்தான் அரசாங்த்திடம் கேட்டுக்கொண்டதையடுத்து இப்பொருட்கள் மீதான தீர்வைகள் தளர்த்தப்பட்டது'என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை  தெரிவித்தார்.

தேங்காய் எண்ணெய், வெற்றிலை, மற்றும் குப்பி போத்தல்கள் குளிரூட்டும் இயந்திரங்கள் மீதான சுங்க வரிகளையே பாக்கிஸ்தான் நீக்கியுள்ளது என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

இதனால் 'இலங்கை, பாக்கிஸ்தான் இருதரப்பு வர்த்தக உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகள் எதிர்வரும் 11 ஆவது கூட்டுப் பொருளாதார ஆணைக்குழு கூட்டத்தொடரில் திருப்தியாக இருக்கும் என்று அமைச்சர் ரிஷாட் தெரிவித்துள்ளார்.

எமது இரு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் கீழ் பல வாய்ப்புகள் இருக்கின்றதை நான் ஒப்புக்கொள்கிறேன். எனினும், அதனை நாம் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. இந்த தருணத்தில் அதனையும் ஏற்படுத்த முயலவேண்டும் இதன் அடிப்படையாக  இரு நாடுகளிற்கும் இடையில் வர்த்தக ஒப்பந்தம் மேலும் பலப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.    

இலங்கைக்கான பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் காசிம் குரேஷிக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் இடையில் இடம்டிபெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் எமக்கு பல சந்தர்பங்கள் இருக்கின்றன. எனினும், நாம் அதனை முழுமையாக பயன்படுத்தவில்லை. தற்போது இதனை பயன்படுத்திக்கொள்வது எமக்கு நல்ல தருணமாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 எமது பலதரப்பட்ட வர்த்தகம் மேலும் விரிவுபடுத்தப்படவேண்டும். எடுத்துக்காட்டாக 4 - 5 வரையிலுள்ள முக்கிய பொருட்கள் மீதான வரி தளர்வை  மேலும் கவனத்திற்கொள்ள முடியும். 

உதாரணமாக பாகிஸ்தானில் பாரிய சீனி தொழிற்சாலைகள் இருக்கின்றன. ஆனால் இலங்கை சீனியினை இங்கிருந்து இறக்குமதி செய்வதில்லை. அத்துடன், வர்த்தக சம்மேளனம் இருதரப்பு வர்த்தகம் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு பல முதலீட்டு ஏற்பாடுகளை செய்கின்றது'என பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் காசிம் குரேஷி  மேலும் தெரிவித்தார். 

'இலங்கையின் 25 முதலீட்டு சபை திட்டங்களை தற்போது பாகிஸ்தானிய முதலீட்டாளர்கள் எடுத்துள்ளனர். அவை ஆடைகள், இரசாயனங்கள், பெற்ரோலியம், ரப்பர், பிளாஸ்டிக், தோல் பொருட்கள் உற்பத்தி,; உணவு ,  பானங்கள், மற்றும் புகையிலை என்;பனவாகும். பாகிஸ்தானூடாக இறக்குமதி வரி தொடர்பில் இலங்கை பல இடர்களை எதிர்நோக்குன்றது. 

ஆனால், நாம் இலங்கைக்கு மூன்று முக்கிய பொருட்களான தேங்காய் எண்ணெய், வெற்றிலை, மற்றும் குப்பி போத்தல்கள்;குளிரூட்டும் இயந்திரங்கள் மீதான வரி தளர்வினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம் என பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் குரேஷி மேலும் தெரிவித்தார். 

வர்த்தக திணைக்களத்தின் புள்ளிவிபர அடிப்படையில் பாகிஸ்தான் 5000 - 6000 (மெ.தொ) வெற்றிலையை இலங்கைக்கு வருடாந்தம் இறக்குமதி செய்கின்றது. அதனை தொடர்ந்து இலங்கை அதனை தாய்லாந்து, இந்தியா, பங்களாதேஷி ஆகிய நாடுகளுக்கு ஏக வழங்குனராக ஈடுபடுகின்றது.

பாகிஸ்தான் வெற்றிலைக்கான இறக்குமதி இறக்குமதி தீர்வினை 35 வீதமாக குறைத்துள்ளது. 2010ஆம் ஆண்டு அமெரிக்க டொலர் 5.77 மில்லியன் வெகுமதியான வெற்றிலையினை பாகிஸ்தான் இலங்கைக்கு இறக்குமதி செய்தது.

அத்துடன் தேங்காங் எண்ணெக்கான வரியினை 50 வீதமாகவும் குறைத்துள்ளதுடன், அது ஜுலை மாதத்திலிருந்து அமுலுக்கு வருவதற்கான ஏற்பாடுளையும் செய்துள்ளது.

இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 10 வீதம் இந்தியா பாகிஸ்தான்   பங்களிக்கிறது, சார்க் பிராந்தியத்தில் இரண்டாவது பெரிய வாங்குபவராக இலங்கை தயாரிப்புகள் இருக்கின்றன.

2005ஆம் ஆண்டு வர்த்தக ஒப்பந்தம் அமுலாக்கியதிலிருந்து எமது இரு நாடுகளுக்கான வர்த்தக உறவு பாரிய அனுபவத்துடன் வளர்ச்சியுற்றது. 2005ஆம் ஆண்டு எமது மொத்த வர்த்தகம் அமெரிக்க டொலர் 158 மில்லியனாக அதிகரித்ததுடன், 174 வீத வளர்ச்சியினை காட்டுகின்றது என அமைச்சர் ரிஷாட் சுட்டிக்காட்டினார்.

வர்த்தக சமநிலை எப்போதும் பாக்கிஸ்தானுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. பாக்கிஸ்தானுக்கு இயற்கை ரப்பர், காய்கறி பொருட்கள், தேங்காய், பிரேசில் கொட்டைகள், தேயிலை, மரம், புண்ணாக்கு, புதிய வாயு டயர்கள் (ரப்பர்), தேங்காய் (கொப்பரை) எண்ணெய்  ஆகியன இலங்கையின் முக்கிய ஏற்றுமதி ஆகின்றன.

2013 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் நடைபெறவுள்ள 11ஆவது கூட்டுப் பொருளாதார ஆணைக்குழு தொடரில் அமைச்சர் ரிஷாத் மற்றும் பாகிஸ்தானிய உயர் ஆணையாளர் கலந்துகொள்ளவுள்ளனர்.

 கூட்டுப் பொருளாதார ஆணைக்குழு தொடர் கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 29 - 30 வரை இஸ்லாமாபாத்தில் இடம்பெற்றது. இதற்கு முதல் 2011ஆம் ஆண்டு  இஸ்லாமாபாத்தல் வெற்றிகரமாக முடிவுற்றது. இவ் கூட்டத்தொடரில் ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பில் பொருட்கள், சேவைகள், விவசாயம், சுற்றுலா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி மற்றும் விமான சேவைகள், மற்றும் தொழில்நுட்ப உதவி வர்த்தகம் உள்ளிட்டவிடங்கள் கலந்துரையாடப்பட்டது என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/65878-2013-05-03-08-51-04.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.