Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் நடந்தது என்ன? - நோர்வே தமிழ் திரைப்படக்குழு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் நடந்தது என்ன? - நோர்வே தமிழ் திரைப்படக்குழு

 

 ntff20131.jpgஅண்மையில் நோர்வேயில் நடந்த திரைப்படவிழா தொடர்பான விமர்சனங்கள் பல வந்துள்ளது. இவ்வகையான விமர்சனங்களுக்கு அடிப்படையாக இருப்பது இரு வேறு வகையான சமுதாயக் கட்டமைப்பு என்பதனைப் புரியக்கூடியதாகவுள்ளது.

நோர்வே தமிழ் திரைபட விழாவின் நோக்கம்

 
உலகத் தமிழர்களின் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், இசை ஒளிப்படங்கள் போன்றவற்றில் தரமானவைகளைத் தெரிந்து விருதுவழங்கி கௌரவிப்பது.
வளர்ந்துவரும் உலகத் தமிழர்களின் படைப்புகளை இனங்கண்டு, கலைஞர்களை கௌரவிப்பதன் மூலம் இளம் கலைஞர்களை ஊக்குவித்தல் மற்றும் கௌரவித்தல்.

நோர்வே திரைப்படவிழா எவ்வாறு இயங்குகின்றது

 
திரைப்பட துறைமீது உள்ள ஆர்வத்தால் இந்த விழாவை தனிப்பட்ட ரீதியில் ஆரம்பித்து இன்று வரை இவ்விழாவிற்கு தலைமை தாங்குபவர் திரு. வசீகரன். இவரின் தலைமையின் கீழ் ஒருங்கிணைப்பாளராக சென்னையில் ஒருவர் செயற்பட்டார். இன்நிகழ்வினை நடாத்துவதற்கு ஊதியமற்ற தன்னார்வ தொண்டர்களாக ஐந்து அங்கதவர்களைக் கொண்ட குழு நோர்வேயில் இயங்குகின்றது.

பெரும்பான்மையான முடிவுகள் வசீகரன் தலைமையிலான இந்தக்குழுவினால் ஜனநாயக முறையிலேயே எடுக்கப்படுகிறது. வசீகரனின் சொந்த உழைப்பே இதற்கு முழு மூலதனமாகப் பாவிக்கப்படுவதனால் முக்கியமான சில முடிவுகள் வசீகரினால் தீர்மானிக்கப்படுகின்றது.

சென்னை ஒருங்கிணைப்பாளரின் தலையீடு பெருமளவில் இவ்வருடத்தில் வளரத் தொடங்கியது. திரையுலகின் முன்னனி நட்சத்திரங்களை அழைத்துவருவதாக அதீதநம்பிக்கை ஊட்டப்பட்டதனால் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிக அளவில் எதிர்பார்க்கபட்டு பெரும் செலவில் Oslo Konserthus மண்டபம் எடுக்கப்பட்டது.

அதிமுன்னனி நட்சத்திரங்களும் கலைஞர்களும் வருவதனால், இந்நிகழ்வை தென்னிந்திய தொலைகாட்சிகளிற்கு விற்பனை செய்வதாகக் சென்னை ஒருங்கிணைப்பாளர் உறுதியளித்திருநந்தார். இதன் முலம் விழாவின் பட்ஜட் வழமையைவிட மூன்று மடங்காக அதிகரித்தது.

நோர்வேயைப் பொறுத்தவரையில் எல்லாமே சட்டதிட்டங்களுக் உட்பட்டே நடைபெறும். இங்கு வாழும் மக்களும் சரி, புலம்பெயர்ந்து வாழும் எம்மவரும் சரி சட்டங்களை இயல்பாகவே மதித்து நடக்கும் பழக்கத்திற்குட்பட்டவர்கள். இந்நிலை காரணமாகவும் மக்களின் பொருளாதார நிலை சீராணதாக இங்கு இருப்பதாலும் குறுக்குவழியை நோர்வே விழாக்குழுவினர் நாடவில்லை என்பதே யதார்த்தமாகும்.

 
 
நம்பிக்கைத்துரோகமும் பணமோசடியும்
 
அனைத்துக் கலைஞர்களையும் இந்நிகழ்வுக்கு அழைத்துவரும் பொறுப்பு சென்னை ஒருங்கிணைப்பாளரிடமே ஒப்படைக்கப்பட்டிருந்த பட்சத்தில் திரையுலகின் நகைசுவைக்கலைஞர் விவேக் அவர்களை அழைத்துவரும் பொறுப்பும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. நடிகர் விவேக் எம்மிடம் பல லட்சங்கள் கேட்டதாக கூறி சென்னை ஒருங்கிணைப்பாளர் எம்மிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டதற்கான ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன. ஆனால் நடிகர் விவேக் தமிழர்களுக்காக நடாத்தப்படும் இவ்விழாவிற்கு பெருந்தன்மையோடு இலவசமாகவே சமூகமளித்துள்ளார். நடிகர் விவேக் மூலமாகவே இதை நாம் அறிந்ததுகொண்டது எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதன் காரணமாக ஏனைய கலைஞர்களுடனும் பணவிடயமாக நாம் அறிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். நாம் கலைஞர்களுக்கென கொடுத்த பணம் அவர்களிடம் போய்ச் சேர்ந்ததா என்பது எம்மிடமும் இருக்கும் கேள்வி.

அதனால் எமக்கும் அவருக்கும் இடையில் முரண்பாடுகள் வளர்ந்து அவரை மன்னிப்புக்கோரும் படி கேட்டோம், அதிலிருந்து அவர் எம்முடனான தொடர்பை துண்டித்துக்கொண்டார். இதைவிடவும் பல அநாகரீகமான செயல்களிலும் இறங்கிய சென்னை ஒருங்கிணைப்பாளர் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் எம்மிடம் இருக்கின்றன. தேவைப்படுமாயின் சமர்பிக்கப்படும்.

ஆதாரமற்று குற்றம் சுமத்தும் பத்திரிகைகள் தமது ஆதாரத்தை வசீகரன் மற்றும் நோர்வே தமிழ் திரைப்பட விழா குழுவிடம்  முன்வைக்க வேண்டும் எனவும், முடியாத பட்சத்தில் நோர்வே தமிழ் திரைப்பட விழாகுழுவிடம் தமது தவறை ஒத்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

தனிநபரின் நம்பிக்கைத் துரோகத்தினாலும் பணமோசடியாலும் நோர்வே திரைப்பட விழாக்குழு பெரும் சவால்களை எதிர்நோக்கியிருக்கின்றது. நடந்தது நடந்துவிட்டது. தவிர்த்திருக்க வேண்டியவை எவை? இனி தவிர்க்கப்பட வேண்டியவை எவை? இதை எவ்வாறு சீராக்குவது என்பதே இப்போது நம்மிடமுள்ள கேள்வி.

எமது பக்க நியாயங்கள் என்று இல்லாது, நோர்வே தமிழ் திரைப்பட விழா, தமிழர் விருதின் வளர்ச்சிக்காகவும், தொடர்ச்சிக்காகவும் இந்திய சினிமா உலகிற்கு ஒரு வேண்டுகோளாக இதை முன் வைக்கின்றோம்.

நோர்வே தமிழ்த்திரைபடவிழா சிறப்புற அமையாதமைக்கு காரணங்களாக நாம் கருதுவது.

 
சென்னை ஒருங்கிணைப்பாளர் முன்னணி நட்சதிரங்களைக் கொண்டு வருவதாக எமக்குச் சொன்னது. முன்னணிக்கலைஞர்கள் வரமுடியாது என அறிவித்துள்ளார்கள் என்பதை இறுதிவரையிலும் எமக்கு அவர் தெரியப்படுத்தவில்லை.
ஓளிப்பதிவை தொலைக்காட்சிகளுக்கு விற்பதற்காக event managemaent குழுவினைத் தான் அழைத்து வருவதாகவும் அவர்களுக்கான பயணச்செலவு, கலைஞர்களுக்கான ஊதியச்செலவை event management பொறுப்பெடுப்பதாகவும் சென்னை ஒருங்கிணைப்பாளரால் சொல்லப்பட்டது.

இதுவரைகாலமும் விழாவினை திட்டமிடுதலும், நெறிப்படுத்துதலும் நோர்வே விழாகுழுவினராலேயே செய்ற்படுத்தப்பட்டது. இவ்வருடம் தொலைக்காட்சிக்கு விற்கப்பட இருப்பதானால், அது தொடர்பான அனுபவங்கள் நோர்வே விழாகுழாவினருக்கு இல்லை எனச் சொல்லி சென்னை ஒருங்கிணைப்பாளர் தானே முன்னின்று செய்வதாக உறுதியளித்தார்.

ஓஸ்லோவின் சிறந்த தொழில்நுட்ப மண்டபத்தை நாம் எடுத்திருந்ததால் எமது ஒப்பந்தத்தின்படி நோர்வேஜிய தொழிநுட்பக் கலைஞர்களுக்கு எமது நிகழ்வுபற்றிய அனைத்து தகவல்களும் (நேரம், ஒலி, ஒளி, அமைப்பு, பாதுகாப்பு விபரங்கள்) கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிகழ்வின் விபரங்கள் எமக்கு ஒரு சில மணித்தியாலங்களுக்கு முன்புதான் சென்னை ஒருங்கிணைப்பாளர் கையளித்தார். அதனால் சென்னை ஒருங்கிணைப்பாளருக்கும் மண்டப தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் அற்றுபோக நிகழ்வு நோர்வே இரசிகர்களின் இரசனைக்கு ஏற்ப அமையவில்லை.

எமது நிகழ்வு மாலை 5 மணிக்குத் தொடங்குவதாக அறிவிக்கபட்டு 3 மணிக்கே கலைஞர்களுக்கு வாகனம் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால்; சென்னை ஒருங்கிணைப்பாளரினாலும் அவரது உதவியாளர்களாலும் 7 மணிக்கு வந்தால் போதும் என கலைஞர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக கலைஞர்கள் எங்களுக்கு ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர். அதுபோலவே நிகழ்வை பொறுப்பெடுத்த சென்னை ஒருங்கிணைப்பாளர் ஒத்திகைக்குக்கூட சமூகமளிக்கவில்லை.

சென்னை ஒருங்கிணைப்பாளர் தம்மோடு இரண்டு உதவியாளர்களை நிர்பந்தித்து அழைத்து வந்ததன் காரணம் என்ன? எமது அழைப்பு இல்லாமலேயே சிலர் தமது சொந்த பணத்தில் சமூகமளித்தது மட்டுமல்லாமல் கலைஞர்களிடம் பல குழப்பங்களையும் ஏற்படுத்தியது விழாகுழுவினக்கு சினத்தையும், சிரமத்தையும், பொருட்செலவையும் ஏற்படுத்தியது.

சென்னையில் ஒரு தனியார் திரைப்பட கல்லூரி ஒன்றுடன் நோர்வே விழாக்குழுவின் ஒருவர் நேரடியாகக் தொடர்புகொண்டு எமது விழாவின் வீடியோ பதிவு செய்ய அவர்களுடைய சம்மதத்தையும் பெற்றார். இதனை அறிந்த சென்னை ஒருங்கிணைப்பாளர் கல்லூரியுடன் அவரது தனிப்பட்ட பகை காரணமாக அவர்கள் இந்நிகழ்வினை தயாரிப்பதாக இருந்தால் தான் விலகிக்கொள்வதாக மிரட்டினார். தானே ஒலிப்பதிவு செய்து தருவதாகவும் ஏற்றுக்கொண்டார். ஆனால் உறுதியளித்த ஏதுவும் நடைபெறவில்லை.

சென்னை ஒருங்கிணைப்பாளர் தவறான நடவடிக்கைகளையும், மோசடிகளை, அத்துமீறிய தலையீடுகளையும் விழா சிறப்புறுவதை வேண்டும் என்றே தடுக்க முனைந்த சென்னை ஒருங்கிணைப்பாளரின் நடவடிக்கைகளையும், தொடர்ந்து நோர்வே குழுவினரை அவமதித்ததையும் ஏற்காத எங்கள் விழா உறுப்பினர் ஒருவர், அவற்றைச் சுட்டிக்காட்ட முனைந்த போது, கருத்து முரண்பாடு ஏற்பட்டு வெளியேற்றப்பட்டார். இதன்; காரணமாக விழாவில் கலந்துகொள்ளாமல் தனது எதிர்ப்பையும், தனது கோபத்தையும் கடைசிவரை தெரிவித்துக்கொண்டிருந்தார். சென்னை ஒருங்கிணைப்பாளரின் குறுக்கீடுகளினால் எம் குழுவில் இருந்து அவர் வெளியேறியது விழாக்குழுவினருக்கு பெரும் இழப்பாகும்.

சென்னை ஒருங்கிணைப்பாளர் காரணமாக ஏற்பட்ட குழப்பங்களினால் எம்மால் அழைக்கப்பட்ட பலர் சிரமங்களுக்கு உள்ளாகினர். முக்கியமாக ஆஸ்ரேலியாவில் இருந்து வருகைதந்த இயக்குனரிடமும், மலேசியாவில் இருந்து வந்தருந்த கலைஞர்களிடமும் எமது வருத்தத்தைத் தெரிவிப்பதோடு மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறோம்.

சென்ற ஆண்டினைவிட இவ்வருட நிகழ்வு தரம் குறைந்து  இருந்ததை ஏற்றுக் கொள்வதோடு, சென்னை ஒருங்கிணைப்பாளரிடம் நோர்வே திரைப்படவிழாக்குழு வைத்த அதீதநம்பிக்கையினால் ஏற்பட்ட பெரும் சிரமங்களுக்காகவும், எம்மால் தரமானதாக தரமுடியாது போன கலை நிகழ்வுக்காகவும் பார்வையாளர்களிடமும், கலைஞர்களிடமும் நோர்வே திரைப்படவிழாக்குழு முழுமனதோடு மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றது.

 

http://www.nortamil.no/index.php?option=com_content&view=article&id=575%3A2013-05-02-21-34-29&catid=34%3A2011-03-23-12-37-36&Itemid=55

  • கருத்துக்கள உறவுகள்

இது போன்ற  நிகழ்வுகளை செய்கின்றவன் என்ற ரீதியில் தனிப்பட்ட நபர்கள் இது  போன்ற பெரும் நிகழ்வுகளை  குறையின்றி செய்து முடிப்பது என்பது கடினமான பணி.

அந்தவகையில்

எனக்கு இது பற்றி  சில குறைகள் தெரிய  வந்தபோதும்  அவை பற்றி  இங்கு எழுதுவது  சரியாகப்படவில்லை.

 

இருந்தாலும் நானறிந்தவரையில்

அடுத்த வருடம் தமிழகத்திலிருந்து பிரமுகர்கள் எவரும் வரத்தயங்கும் அளவுக்கு

நோர்வேயில் இடவசதி

சாப்பாட்டுவசதி

மற்றும் பயண வசதிகள் ஒழுங்கு செய்யப்படாதது வருத்தத்துக்குரியது.

(தமிழக  ஒழுங்கமைப்பாளரால்தான் இவை  ஏற்பட்டன என்பதை நம்பமுடியாதபடி நோர்வேயில் இவை நடந்தேறியுள்ளன)

 

நிகழ்வின் அடுத்தநாள்   வசீகரன் யேர்மனிக்குப்போய்விட்டதால் மேலும் சிரமங்களை அனுபவித்திருக்கிறார்கள் பிரமுகர்கள்.

ஈழத்தமிழருக்கு ஒரு கரும் புள்ளியை தமிழக சினிமா பிரமுகர்களிடையே  இந்நிகழ்வு ஏற்படுத்திவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை ஒருங்கமப்பாளர் அவர் யார்? நேரடியாக பெயர் சொல்லி அறிக்கையைத் தயாரிக்கலாமே! இது ஏதோ மொட்டைக்கடிதம் எழுதினமாதிரி இருக்கு.



தவிர சினிமா விழா போன்ற விடையங்களைத்தவிர நான் வேறு விடயங்களுக்காக (தனிப்பட்ட விடையங்களுக்ககவில்லை) நோர்வேக்குப் போய்வருவது வழக்கம், அப்போது அங்குள்ள நோர்வேவாழ் புலம்பெயர் தமிழர்களது உபசரிப்பு மேன்மையானது, விசுகு தங்கள் தகவலை இரண்டுக்கு மூன்றுதடவை ஊர்ஜிதம் செய்யவும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.