Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசு அச்சப்படுகின்ற ஓர் சக்தியாக புலம்பெயர் தமிழர்கள் உள்ளனர் - செல்வம் அடைக்கலநாதன்

Featured Replies

இலங்கையில் தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாகியிருப்பதோடு பல அழுத்தங்களை சந்தித்து வரும் நிலையில் தாயகத் தமிழர்களின் குரலாக புலம்பெயர் மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் உற்சாகமளிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் புலம்பெயர் தமிழர்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அனைவரினதும் பங்கெடுப்புடன் உருவாகி வரும் தமிழீழ சுதந்திர சாசனம் குறித்து கருத்துரைக்கும் போதே இக்கூற்றினை அவர் தெரிவித்துள்ளார். விடுதலையினை நோக்கிய செயற்பாட்டை மிகத்திறமையாக புலம்பெயர் உறவுகள் முழுமூச்சாக செய்து கொண்டிருக்கின்றார்கள் எனத் தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் சிறிலங்கா அரசு அச்சப்படுகின்ற ஓர் சக்தியாக புலம்பெயர் தமிழர்கள் உள்ளனர் என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை நினைவேந்தும் தமிழீழத் தேசிய துக்க நாளான மே-18ம் நாளன்று தமிழீழ சுதந்திர சுதந்திர சாசனம் முரசறையப்பட இருக்கின்ற நிலையில் இக்கருத்து வெளிவந்துள்ளது. சுயநிர்ணய கோட்பாட்டின் அடிப்படையில் தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆளுகின்ற வகையிலான அரசியல் அபிலாசையினை வென்றடைவதற்கான வழிமுறையாக புலம்பெயர் வாழ் தமிழர் சக்தியே அழுத்தங்களை சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ள செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தமிழகம் - மலேசியா என உலகத் தமிழர்களின் சக்திகள் ஒன்றிணையும் போது விடுதலையினை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதென தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சுயநிர்ணய கோட்பாட்டு அடிப்படையில் உரிமையினை நிலைநாட்டுவதற்கான புலம்பெயர் தமிழ் மக்களின் முயற்சிக்கு பாராட்டுதல்களை தெரிவிப்பதோடு இம்முன்னெடுப்புகள் வெற்றிபெற தனது வாழ்த்துகளையும் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார். இலங்கைத்தீவில் தமிழீழம் என்ற சொல்லினையே வெளிப்டையாக சொல்லவோ அல்லது எழுதவோ முடியதாக சிங்கள பேரினவாக அரசின் இறுக்கமான நிலைக்குள் நின்று கொண்டு தமிழீழ சுதந்திர சாசனம் குறித்து இக்கருத்து வெளிவந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=81951&category=TamilNews&language=tamil

 

அடைக்கலநாதன் அவசரப்படத்தேவை இல்லை.  

 

கோத்தா பிரதமரை தான் நாடு கடத்தி இலங்கைக்கு எடுப்பன் என்று வீரம் பேசிய பின்னர் அமெரிக்க போவதை 

நிறுத்தியிருக்குகிறார்.  அது கோத்தாவின் ஒரு பலே பலே பாண்டியாத்தான்.

 

நாடுகடந்த அரசு நிகழ்சிநிரல்களை சரியாக போட்டு முன்னால் போகிறது. 

 

புலத்தில் காகங்கள் திட்டித்தான் பார்க்கின்றன. மாடு சாகாமல் போராட்டம் தொடர்கிறது. 

 

அரசு கைது செய்யத்தக்க அடைக்கல நாதன் பேசாமல் இருக்க முடியும் என்று கூஅ முடியாது. ஆனல் சர்வதேசம் வந்து கைகொடுக்கத்த பாணியில் அர்சுக்கு எதிராக ஆர்பட்டங்களை செய்ய வேண்டும்.

 

நாடுகடந்த அரசு சர்வதேச சாட்டங்களை மீறாது. அடக்கலநாந்தன் தான் இலங்கையில் எழுத்தில் உள்ள சட்டங்களை மீறும் போது தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

 

அசாத் சாலி சரியான பதையால் போனதால் வெளிநாட்டு நெருக்குவாரங்கள ஆரம்பிக்கின்றன. இலங்கை அரசு பொன்சேக்காவின் கைதை விட பாரிய தோல்வியை அசாத் சாலியின் கைதில் சந்திக்கப் போகிறது.

 

அடக்கலநாதன் அரசுக்கு எதிரிரக போகும் போது வெளிநாடுகளையும் ஒரு கையில் பிடித்துக்கொள்ள வேண்டும்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.