Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திட்டமிட்ட இன அழிப்பின் தொடர்ச்சியே அசாத் ஸாலியின் கைது நடவடிக்கை! - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டனம்!!

Featured Replies

 

திட்டமிட்ட இன அழிப்பின் தொடர்ச்சியே அசாத் ஸாலியின் கைது நடவடிக்கை! - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டனம்!!

95ce53eb-f945-4052-97fc-d05c606fb5b41.jp

தமிழ் தேசத்தின் மீது கடந்த 65 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள பௌத்த தேசத்தின் திட்டமிட்ட இன அழிப்பின் தொடர்ச்சியே முஸ்லிம் மக்கள் மீதும், தற்போது அஸாத் ஸாலி மீதும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மிக மோசமான நடவடிக்கைள் எனத் தெரிவித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அஸாத் ஸாலி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமது கடுமையான கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.

 

அஸாத் ஸாலி கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் நேற்று மாலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

 

'அஸாத் ஸாலியின் அரசியல் நடவடிக்கைகளில் கடந்த ஒரு வருடகாலத்தில் பல மாற்றங்களை நாங்கள் அவதானித்திருக்கின்றோம். குறிப்பாக தமிழ், முஸ்லிம் தேசங்களுக்கிடையில் இணக்கப்பாடு ஏற்படபவேண்டும், தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இணைந்து செயற்படவேண்டும் என மிக தீவிரமாக செயற்பட்டவர் அஸாத் ஸாலி. நாங்கள் அறிய எக்காரணம் கொண்டும், எந்தவொரு இடத்திலும் சிறிலங்கா அரசாங்கத்தை அவர் கேள்விக்குள்ளாக்கவில்லை.

எனினும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் வெளியாகும் ஜீனியர் விகடன் ஊடகத்திற்கு அவர் வழங்கியிருந்த செவ்வியில் குறிப்பிட்டிருக்கையில், தமிழ் மக்கள் எந்த அடிப்படைகளுடன் கடந்த காலங்களில் ஆயுதம் ஏந்திப் போராடினார்களோ அந்த அடிப்படைகளுடன் போராட வேண்டும். அந்தப் போராட்டம் தாமதப்படுவதற்கு காரணம் ஆயுதங்கள் கிடைக்கவில்லை என்பதே. ஆயுதங்கள் கிடைத்தவுடன் அவர்கள் போராடுவார்கள் என்று குறிப்பிட்டதாக மேற்குறித்த ஊடகம் குறிப்பிட்டிருக்கின்றது.

ஆனால் எமக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவல்களின் படி அந்த செவ்வி வெளியானவுடன் தன்னுடைய பெயரில் வெளியாகியிருக்கும் குறித்த செவ்வி பிழையானது எனவும் அதில் திருத்தங்கள் ஏற்படுத்தப்படவேண்டும் எனவும் அஸாத் ஸாலி  ஜீனியர் விகடனுக்கு பதில் எழுதியிருந்ததாக அறியமுடிகின்றது.

 

இந்நிலையிலேயே குறித்த செவ்வியை காரணம் காட்டி, விசாரணை என்ற பெயரில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அஸாத் ஸாலி   கைது செய்யப்பட்டிருக்கின்றார். இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது. அவருடைய கருத்துக்கள் நிச்சயமாக இனவாதத்தை தூண்டும் வகையில் அமைந்திருக்கவில்லை. அந்த ஊடகத்தில் வெளியான தகவல்கள் உன்மையல்ல என்பது ஒருபுறமிருக்க அது உண்மையாக இருந்திருந்தால் இந்த இடத்தில் அஸாத் ஸாலி ஏன் அவ்வாறு பேசினார் என்ற கேள்வியொன்று எழுப்பப்பட வேண்டும்.

அஸாத் ஸாலி கடந்த காலங்களில் ஜ.தே.கட்சியுடனும், அரசாங்கத்துடனும் இணைந்து இலங்கையர் என்ற அடிப்படையில் செயற்பட்டவர். எனவே ஏன் அவர் இவ்வாறு பேசுகின்றார் என்று அனைவரும் சிந்திக்கவேண்டும். அதற்காக அவரை பயங்கரவாதி என அடையாளப்படுத்தி கைது செய்வது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

 

எம்மைப் பொறுத்தவரையில் அஸாத் ஸாலி கைது, அல்லது அண்மைக்காலமாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சம்பவங்கள் கடந்த 65 வருடங்களாக தமிழ் தேசத்தை இல்லாதொழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் சம்பவங்களின் தொடர்ச்சியாகும். இதனை நாம் பிரித்துப் பார்க்கத் தயாராக இல்லை.

சிங்கள பௌத்த தேசியவாதத்தை பொறுத்தவரை முழு இலங்கையும், சிங்கள பௌத்த தேசமாக இருக்க வேண்டுமே தவிர, வேறு எந்த தரப்புக்களும் எந்தவொரு இடத்திலும் உரிமைகோர முடியாது என்பதே அவர்களுடைய திட்டம். இதற்கு முதலாவது எதிர்ப்பு தமிழ் தேசம், இரண்டாவது எதிர்ப்பு முஸ்லிம் தேசம். இன்று முஸ்லிம் தேசத்தை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டம் உச்சக்கட்டத்தை அடைந்து தடைகள் இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சிங்கள பௌத்த தேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு இடையூறு இல்லையென்ற நிலையில் சிங்கள பௌத்த தேசத்தின் நிகழ்ச்சி நிரல் தமிழ் தேசத்தை தாண்டி இப்போது  முஸ்லிம் தேசத்தை அழிக்க நகர்த்தப்பட்டிருக்கின்றது.

சிங்கள தேசத்துடன், தமிழ் தேசம், முஸ்லிம் தேசம், மலையக மக்களுடைய தேசம் அனைவரும் இணைந்து சமாதானமாக வாழ்வதற்கு அந்தந்த தேசங்களுடைய அங்கீகாரம் பெறப்பட்ட நிலையில் புரிந்துணர்வை ஏற்படுத்தி உருவாக்கப்படும் நாடு என்ற அடிப்படையிலேயே இந்த நாட்டில் சிங்கள பௌத்த மக்கள் மட்டுமல்லாமல், ஏனைய மக்களும், அல்லது தேசங்களும் நின்மதியானதும், பாதுகாப்பானதுமான வாழ்வை எதிர்பார்க்க முடியும்.

 

அண்மைக்காலமாக அஸாத் ஸாலியின் குரல் மற்றும் அவரது நடவடிக்கைள் வரவேற்கத்தக்கதாக உள்ளது. முஸ்லிம் தேசத்திற்கும் பாதுகாப்பை நிரந்தரமாக ஏற்படுத்தும் வiயில் அவரது செயற்பாடுகள் அமையவேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பாகும். அப்போது அஸாத் ஸாலிக்கும், அவரது கட்சிக்;கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமது முழுமையான ஆதரவினை வழங்கும். முதலில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் ஒரு புரிந்துணர்வு வரவேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். அந்தப் புரிந்துணர்வு தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் ஏற்பட்டுவிடக்கூடாது. அவ்வாறு ஏற்பட்டால் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றாக திரண்டாலும் சிங்கள பௌத்த மக்களின் எண்ணிக்;கை அடிப்படையிலான பெரும்பான்மைக்கு சமத்துவப்பட முடியாது.

 

அதனை நாங்கள் நன்றாகவே அறிந்திருக்கின்றோம். தமிழர்களைப் பொறுத்தவரையில் நாம் ஒரு போதும் சிறுபான்மையினர் அல்ல. சரித்திர ரீதியாக எமக்கு ஒரு தேசம் என்ற அந்தஸ்த்தும், அங்கீகாரமும் காலணித்துவ ஆட்சிக்கு முன்னர் இருந்தது. பிரித்தானியர் ஆட்சியின்போதே எங்கள் தேசம் என்ற அந்தஸ்த்து பறிக்கப்பட்டு, அங்கீகாரம் அழிக்கப்பட்டு நாங்கள் அடிமைகளாக்கப்பட்டோம்.

 

எண்ணிக்கை அடிப்படையில் நாம் குறைந்திருந்தாலும், தேசங்கள் என்ற அடிப்படையில் நாங்கள் சமத்துவம் பேணும் திர்வொன்றினை எதிர்பார்க்கிறோம். அந்த ஒரு தீர்வே சிங்கள தேசம் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக உள்ளபோது தமிழ் தேசத்தையும் அழிக்கும் செயற்பாடுகளை முறியடிப்பதற்கான ஒரே வழி, தேசத்திற்கென்று நாம் முன்வைக்கும் கொள்கை தமிழர்களுக்கு மட்டுமல்லாமல்;, முஸ்லிம்களும், மலையக மக்களும் உணர்ந்து கொள்ளாத வரையில் அஸாத் ஸாலி போன்ற பலரின் கைதுகளையும், முஸ்லிம்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களையும் ஒருபோதும் தடுக்க முடியாது; என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

இப்பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் சர்வதேச அமைப்பாளர் விசுவலிங்கம் மணிவண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=95ce53eb-f945-4052-97fc-d05c606fb5b4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.