Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத் தலைவரைத் தவறாகப் புரிந்துகொண்ட வழி தவறிய ஆடுகள்!

Featured Replies

அதிவிவேக பூரண குருவும் சீடர்களும் என்ற குட்டிக் கதைத் தொகுப்பை எங்களில் பலரும் ஒரு தடவையாவது வாசித்திருக்கலாம், அல்லது கேட்டு அறிந்தும் இருக்கலாம். அதிலிருந்து சில குட்டிக் கதைகள் தமிழ்ச் சினிமாக்களில் காமடிக் காட்சிகளாக இடம் பிடித்ததும் உண்டு.

இந்தக் குட்டிக் கதைகளின் தொகுப்பில் மாடு கன்று போட்டதை சோகத்துடன் தன்னிடம் தெரிவித்த சீடனிடம், இதையெல்லாம் சோகமாகச் சொல்லக் கூடாது என்று குரு கண்டித்து அனுப்பினார். பின்னொரு நாளில், குருவினுடைய வீடு தீப்பிடித்து எரிந்ததை அந்த முட்டாள் சீடன் சுவாரசியமாக மகிழ்ச்சியுடன் குருவுக்குக் கூறியதால் குரு நொந்து போனதாக ஒரு கதை வருகின்றது.

தற்போது, பிரான்சில் நாடுகடந்த அரசும், நடுவமும் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவாக நடாத்தும் கரப் பந்தாட்டப் போட்டி இந்தக் கதையையே நினைவு படுத்துகின்றது. புலம்பெயர் தமிழர்களிடையே குழப்பங்களையும், பிளவுகளையும் உருவாக்குவதையே முதன்மைப் பணியாகக் கொண்ட இந்தக் குழுக்கள் ஒட்டுமொத்த தமிழ் மக்களது மனங்களையும் புரிந்து கொள்ள மறுக்கின்றார்கள்.

விடுதலைப் புலிகள் வன்னிப் பெரு நிலப் பரப்பில் பலமாக இருந்த காலத்திலும், அதன் பின்னரும் தமிழ்த் தேசிய தளங்கள் மாவீரர் தினத்தை ஒட்டிய காலங்களில் விளையாட்டுப் போட்டிகளை நடாத்தி, வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வருவது வழக்கம்.

எந்த இலட்சியத்திற்காக மாவீரர்கள் தங்களை முற்றாக அர்ப்பணித்து, அந்த மண்ணிலும், காற்றிலும், கடலிலும் கலந்து போனார்களோ, அந்த இலட்சியத்தை நோக்கிய மீள் எழுச்சி கொள்ளும் தினமாகவே மாவீரர் தினம் தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்டதனால், அந்தப் புனித நாட்களிலும் மக்களைச் சோர்ந்து விடாது தட்டி எழுப்பும் போட்டிகளுக்கும் தேசியத் தலைவர் அவர்களே வழிவகுத்துக் கொடுத்திருந்தார்.

ஆனால், மே மாதம் என்பது ஈகத்தின் நினைவானது அல்ல, அது தமிழின அழிப்பின் உச்சம். ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்ட பின்னரும், வெறி அடங்காத சிங்கள தேசம் எம் இனத்தையே அவமானத்திற்குள் புதைத்து, முள்வேலியினுள் அடைத்து மகிழ்ந்தது. அந்தக் கோரமான தினங்களை சிங்கள தேசம் வெற்றி விழாவாக இன்றும் கொண்டாடுகின்றது. இதனை, இந்தக் குழுக்களும் பிரதிபலிக்கலாமா…? இதைத் தமிழினம் ஏற்குமா…? என்பது பற்றி எல்லாம் கவலையே இல்லாமல், சிங்கள தேசத்திற்கு இணையாக விளையாட்டுப் போட்டிகளை நடாத்துகின்றது.

இதில், இன்னுமொரு சோகம் என்னவென்றால், இதற்கு ‘சுதந்திர சாசன வெற்றிக் கிண்ணம்’ என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது. விளையாட்டுப் போட்டிகளிலும், களியாட்ட விழாக்களிலும் சுதந்திரத்தை அடையாளப்படுத்தி திருப்தி அடைந்து விட முடிந்திருக்குமானால், எங்கள் தேசியத் தலைவர் படை நடாத்தி எதிரியுடன் களத்தில் வீரப் போர் புரிந்திருக்க வேண்டியதில்லை. தேசியத் தலைவர் பின்னால், தமிழினமே திரண்டிருந்த நிலையிலும் கனவுகளில் கற்பனை அரசு அமைக்கவில்லை. வெட்டி அறிக்கைகளுடன் அரசியல் நடாத்த முயற்சிக்கவில்லை.

தேசியத் தலைவர் அவர்கள் கட்டி எழுப்பியதெல்லாம் தமிழ் மக்களது ஒன்றுபட்ட தேசிய உணர்வினைத்தான். அந்த மக்கள் சக்தியே அடுத்த வரலாற்றையும் படைக்கும் வலிமை கொண்டது. தமிழ்த் தேசிய இலக்கு நோக்கிச் செயற்படும் எவனும், எந்தக் குழுவும் தேசியத் தலைவரால் உருவாக்கி வளர்க்கப்பட்ட இந்த மக்கள் பலத்தைச் சிதைப்பதற்கும், பிளப்பதற்கும் கனவிற்கூட நினைக்கமாட்டான். ஆனாலும், இந்தக் குழுக்கள் மாவீரர் தினத்தையும், முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும் குறி வைத்தே கல்லெறிகின்றது. குழப்பம் விளைவிக்கின்றது.

உலகம் எங்கும் மே 18-ம் நாளைப் பெருந் துயருடன் நினைவு கொள்ளத் தயாராகி வரும் நாட்களில், இதே குழுக்கள் போட்டி முள்ளிவாய்க்கால் நிகழ்வினை மே 17 இல் அறிவித்து இரவோடு இரவாகச் சுவரொட்டிகளை ஒட்டிவருகின்றது. அப்படியானால், இவர்களுக்கான நிகழ்ச்சி நிரல்களும், கட்டளைகளும் எங்கிருந்து கொடுக்கப்படுகின்றது? என்ற சந்தேகம் தமிழ் மக்களுக்கு எழுவதில் ஆச்சரியம் இருக்க முடியாது.

வரலாறு எத்தனையோ படிப்பினைகளை எமக்கு வழங்கியுள்ளது. அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள நாம் தவறுவோமாக இருந்தால் வரலாறே எம்மை விட்டு விலகிப் போய்விடும். வரலாறு தமிழினத்திற்கு ஒரு பிரபாகரனை வழங்கிக் கௌரவித்தது. அந்தக் களத்தியேயே ஒரு கருணாவையும், ஒரு கே.பி.யையும் எமக்கு அடையாளம் காட்டியது. அது போதும் சிங்கள ஆட்சியாளர்களின் குழிபறிப்புக்களை நாம் கற்றுக்கொள்வதற்கு.

தேசியத் தலைவரைத் தவறாகப் புரிந்துகொண்ட வழி தவறிய ஆடுகள் திருந்தி வரும் என்ற நம்பிக்கை இனி நமக்கு வேண்டாம்!

- சத்தியசீலன்

https://www.facebook.com/Andrewsuvan/posts/369287829859380

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.