Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய உடைவிற்கான சூழ்நிலையை நிதியக் குமிழிகள் தோற்றுவிக்கின்றன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் முழுமையான நிலைமுறிவிற்கு உறுதியான அடையாளமாக நெருக்கடியை தடுக்க கொண்டுவரப்பட்ட அதே நடவடிக்கைகள்தாம் 2008 இன் அளவை விட அதிகமாக ஒரு நிதியக்கரைப்பிற்கான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளன.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக உலகின் பெரிய மத்திய வங்கிகள் 7 டிரில்லியன் டாலர்களை நிதியச் சந்தைகளில் உட்செலுத்தியுள்ளன. அதன் நோக்கம் பொருளாதார மீட்சிக்கு அது தூண்டுதல் கொடுக்கும் என்பதாகும். ஆனால் உலகெங்கிலும் இருந்து வரும் பொருளாதாரத் தரவுகள் இது ஒரு தோல்வி என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்பதை குறிக்கின்றன.

விலைவாசி அளவுகள் பற்றிய புள்ளிவிவரங்கள் மிகவும் முக்கியமானவை. இவை “சாதாரண” சூழலில் மீட்பிற்கு அடையாளமான விலை உயர்வு என்பதற்கு பதிலாக பண மந்த நிலைகளின் அழுத்தங்கள்தான் தீவிரமாக உள்ளன என்பதைக் காட்டுகின்றன.

அமெரிக்காவில் நுகர்வோர் விலைகள் மே மாதம் 0.4 சதவிகிதம் சரிந்தன. இது 2008 கடைசியில் இருந்து மிகப் பெரிய சரிவு ஆகும். ஏப்ரல் மாதம் 0.2 சதவிகிதத்தைப் பின்பற்றி இது நிகழ்ந்துள்ளது. ஐரோப்பாவில் 17 உறுப்பினர் கொண்ட யூரோப்பகுதியில் உணவு மற்றும் எரிசக்தி செலவுகளை தவிர நுகர்வோர் விலைகள் ஓராண்டிற்கு முன் இருந்ததை விட கடந்த ஏப்பிரல் மாதம் 1%தான் உயர்ந்தன.

இக் கீழ்நோக்கிய போக்கு நீண்டகால விளைவுடைய தாக்கங்களை கொண்டுள்ளது. தங்கள் பொருட்களுக்கு விலைச்சரிவை முகங்கொடுக்கும் பெரு நிறுவனங்கள் முதலீடு செய்து உற்பத்தியை அதிகரித்து இலாபம் அடைய முயலாமல்—அப்படித்தான் மீட்பு நடக்கிறது என்றால் அவை செய்யும்— நிதிய ஊகத்துடன் இணைத்து காட்டுமிராண்டித்தனச் செலவுக் குறைப்புகள் செய்ய முயல்கின்றன. ஊதியங்கள், வேலைகளில் இதனாலான வெட்டுக்கள் நுகர்வோர் தேவையை குறைத்து, பணமந்தநிலைப் போக்கிற்கு அதிக ஊக்கம் கொடுக்கின்றன.

ஏனைய பொருளாதார தகவல்களும் இந்த நிகழ்ச்சிப்போக்கை எடுத்துக்காட்டுகின்றன. கடந்த மாதம் அமெரிக்க தொழில்துறை உற்பத்தி 0.5% சரிந்தது. இது மதிப்பிடப்பட்டிருந்த 0.2% உடன் ஒப்பிடத்தக்கது. இது இரண்டாம் காலாண்டு விளைவுகள் அமெரிக்கப் பொருளாதாரம் கிட்டத்தட்ட எந்த விரிவாக்கத்தையும் காட்டாத 2012 கடைசிக் காலாண்டை விட மோசம் என்ற கணிப்புக்களை கொடுத்துள்ளது.

யூரோப் பகுதியின் வேலையின்மை தொடர்ந்த 23 வது மாதமாக உயர்ந்துள்ளது. இப்பொழுது ஓராண்டிற்கு முன் இருந்த தரத்தை விட 1.1 விகிதம் அதிகம் என 12.1 இல் உள்ளது. யூரோப் பகுதியின் பொருளாதாரம் முதல் காலாண்டில் 0.2% சுருக்கம் கண்டது. இதன் பொருள் தற்போதைய சுருக்கம் 2008-09 அனுபவிக்கப்பட்டதை விட நீண்டகாலம் இருந்துள்ளது என்பதாகும்.

2008 சரிவிற்குப் பின், சீனா, நீண்டகால உலகப் பொருளாதார விரிவாக்கத்திற்கு ஒரு அடித்தளத்தைத் தரும் என்று கூறப்பட்டது. ஆனால் தொழில்துறை உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை இரண்டும் கடந்த மாதம் கணிசமான ஏற்றத்தைக் காட்டினாலும், பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டும் கிட்டத்தட்ட 7.5% இருக்கும் என்ற இந்த நம்பிக்கைகள் சிதைந்து போயின.

உலகப் பொருளாதராத்தில் எந்த இடத்திலும் “ஒரு வலுவான தேவை வளர்ச்சிக்கான ஆதாரம்” இல்லாத நிலையை சுட்டிகாட்டிய கட்டுரை ஒன்றில் பைனான்சியல் டைம்ஸ் சீனப் பொருளாதாரம் பற்றிய “கவலைகள்” பரந்த அளவில் உள்ளன என்று குறிப்பிடுகிறது. நீண்டகால அடிப்படையில், கடந்த தசாப்தத்தின் இரட்டை இலக்க வளர்ச்சி கடந்த காலத்திற்கானதாக போய்விடும் எனத் தெளிவாயிற்று. குறுகிய காலத்தை பொறுத்தவரை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் விரிவாக்க ஏற்றம் இருந்தாலும், இது ஒரு தசாப்தத்தில் மிகக்குறைவு என்றுதான் உள்ளது.

உண்மையான பொருளாதாரத்தில் இருக்கும் போக்குகளுக்கு முற்றிலும் மாறாக, நிதியச் சந்தைகள் முன்னோடியில்லாத பெரும் ஏற்றத்தை கொண்டுள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் பணப்புழக்கத்தை தளர்த்தும் மூன்று சுற்றை மத்திய வங்கிக்கூட்டமைப்பு ஆரம்பித்ததில் இருந்து டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 15% உயர்ந்துள்ளது. ஜப்பானில் நிக்கேய் குறியீடு கடந்த டிசம்பரில் இருந்தும் ஏப் இன் அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தும் 44% உயர்ந்துள்ளது. ஏப், ஜப்பானிய வங்கி பொருளாதாரத்தில் பண அளவிற்கு ஏற்றம் தருமாறு கோரியிருந்தது. ஐக்கிய இராச்சியத்தில் FTSE குறியீடு கடந்த ஆறு மாதங்களில் பாங்க் ஆப் இங்கிலாந்தின் பணப் புழக்கத்தை அதிகரித்த அடிப்படையில் 20% உயர்ந்துள்ளது. பிரித்தானியாவின் “மீட்பு” என்பது பெருமந்த நிலைக்குப் பின் அனுபவித்ததைவிடக் குறைவுதான் என்றாலும். அதே நேரத்தில் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் கடந்த ஜூலையில் இருந்து 30% ஆதாயம் அடைந்துள்ளன.

இந்த ஏற்றங்களுக்கு எரியூட்டுவது முக்கிய மத்திய வங்கிகள் நிதிய அமைப்புமுறைக்குள் டிரில்லியன் கணக்கான டாலர்களை உட்செலுத்துவதுதான் .

ஆனால் ஒரு “மீட்பு” என்பதை வெளிப்படுத்துவதைவிட, பங்குச் சந்தைகளின் ஏற்றம் முதலாளித்துவ அமைப்புமுறையின் ஆழ்ந்த நெருக்கடியின் வரைவை பதிவு செய்துள்ள அட்டவணைதான். உலக முதலாளித்துவத்தின் வரலாற்றில் ஒருபொழுதும் நிதியச் சந்தைகள் அடித்தள பொருளதார நிகழ்ச்சிப்போக்குகளில் இருந்து இந்த அளவு பிரிந்திருந்தது இல்லை.

உலகச் சந்தைகளில் முன்னோடியில்லாத ஏற்றம் ஒரு சரிவிற்கு சூழ்நிலைகளை ஏற்படுத்தியுள்ளது என்ற கவலைகளை தூண்டியுள்ளது. பைனான்ஸியல் டைம்ஸ் கட்டுரையாளர் கில்லியன் டெட் குறிப்பிட்டுள்ளபடி, “மத்திய வங்கியின் வெள்ளம்போன்று விற்றுவாங்கக்கூடிய தன்மை இவ்வமைப்புமுறை சிறு அதிர்வுகளை உள்வாங்கிக்கொள்ள உதவியிருக்கையில், அது “எதிர்காலத்தில் பாரிய உறுதியற்றை தன்மை வேகமாக உயர்வதற்கான சாத்தியப்பாட்டையும்”  ஒரு தொகை ஏராளமான உள் முரண்பாடுகளையும் ஸ்திரமற்றதன்மையும் வெளிப்படுத்துகின்றது.”

எந்த பகுத்தறிவார்ந்த பகுப்பாய்வும் தற்போதைய நிலைமைகள் பேரழிவிற்கு வகை செய்கின்றன என்னும் உண்மையை சுட்டிக்காட்டுகையில், ஊகப் பரபரப்பு அதன் கிறுக்குத்தன தர்க்கத்தில் தொடர்கிறது. அப்பொழுது அமெரிக்க வங்கிப் பெருநிறுவனமான சிட்டி குரூப்பின் தலைமை நிர்வாகி சக் பிரின்ஸ் நன்கு அறியும் வகையில் ஜூலை 2007 குறித்தபடி: “இசை நடக்கும்வரை, நாம் எழுந்து நடனமாடத்தான் வேண்டும்”. கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பின் உலக நிதியமுறை 1930களுக்கு பின் காணப்படாத மோசமான நெருக்கடியில் சரிந்தது.

இன்று நிலைமை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட வெடிப்புத் திறனைக் கொண்டுள்ளது. இதற்குக் காரணம் 2008 ஐப் போல் அன்றி, மத்திய வங்கிகள், டிரில்லியன் டாலர்கள் மதிப்புடை அரசாங்க, பிற நிதியச் சொத்துக்களை வாங்கியிருக்கையில், அவையே முக்கிய சந்தை நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். எனவே நிதியச் சந்தைகளின் வீழ்ச்சியில் இவை நேரடிப் பாதிப்பிற்கு உட்படும்.

அதிகரித்தளவில், இவர்கள் தாங்களே உருவாக்கிய பொறியிலேயே அகப்பட்டுக் கொள்கின்றனர். நிதிய ஊக்க நடவடிக்கைகளை திரும்பப் பெற்றுக் கொள்வது என்பது குமிழி உடையலாம் என அச்சுறுத்துகிறது. அதே நேரத்தில், இன்னும் கூடுதல் நிதி உட்செலுத்தப்படுதல் அவற்றை இன்னும் ஆழ்ந்த சகதியில் தள்ளும்.

கடந்த வாரம் சர்வதேச நாணய நிதியத்தில் இருக்கும் பொருளாதார வல்லுனர்கள ஒரு பகுப்பாய்வை வெளியிட்டு, குறைந்த வட்டியில் கூடுதல் நிதிவழங்கும் கொள்கைகளை நிறுத்துவது வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டு, பங்குப்பத்திர விலைகள் குறைந்து மத்திய வங்கிகள் கடும் நஷ்டங்களை அடையும் என்ற நிலைமையை ஏற்படுத்தலாம் என்று எச்சரித்துள்ளனர். இதனால் மத்திய வங்கிக்கூட்டமைப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% க்கு சமமான நஷ்டத்தை அடையலாம் ($628 பில்லியன்), பாங்க் ஆப் ஜப்பான் 7.5% இழப்புக்களை அடையலாம், பாங்க் ஆப் இங்கிலாந்து கிட்டத்தட்ட 6% நஷ்டம் அடையலாம்.

வேறுவிதமாகக் கூறினால், ஒரு புதிய நிதிய அதிர்ச்சி மத்திய வங்கிகளின் ஸ்திரப்பாட்டையே கேள்விக்கு உட்படுத்தும். 2008-09 நிலைமையை போல் இல்லாமல், அவையும் மீட்புச் செயலில் ஈடுபட இயலாது.

முதலாளித்துவத்தின் ஆழ்ந்த உலக நெருக்கடி நீண்டகால விளைவுகள் உடைய அரசியல் தாக்கங்ளையும் கொண்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகள் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை வங்கிகள், ஊக வணிகர்களிடம் செலுத்தப்பட்டதை கண்டன. மற்றும் இவற்றின் செயல்களால் நலனடையும் நிதிய உயரடுக்கையும் கண்டது. அதே நேரத்தில் மக்களின் பரந்த பிரிவுகள் வறுமையில் தள்ளப்படுவது குறைவின்றித் தொடர்கிறது.

 இந்த நடவடிக்கைகள் ஒரு பொருளாதார “மீட்பை” ஏற்படுத்துவதற்குப் பதிலாக, இன்னும் பெரிய பேரழிவுகளுக்குத்தான் வழிவகுக்கின்றன.

சர்வதேச தொழிலாள வர்க்கம் அதன் சொந்தப் பதிலை தயாரிக்க வேண்டும். தோற்றுவிட்ட முதலாளித்துவ அமைப்புமுறையை அகற்ற, சோசலிச அடித்தளங்களில் சமூகத்தை மறுகட்டமைப்பதற்கானதும் மற்றும் அரசியல் அதிகாரத்திற்குமான ஒரு புரட்சிகரப் போராட்டம் தேவை.

 

http://advancedworkers.blogspot.co.uk/2013/05/blog-post_26.html

 

ஆய்வு முதலாளித்துவத்தை விட்டுவிட வேண்டும் என்ற நோக்கில் தயாரைக்கபட்டது. பங்கு சந்தை புள்ளிகள் சிலரை சிந்திக்க வைக்கின்ற்ன. உ+ம். 2009 மே மாத்தைல் 6000 கணக்கைல் இருந்த பங்கு சந்தை டவ் யோன் 2013 முடியில் 18,000 ஆயிரமாகலாம். என்கிறார்கள். இது பலரை பீதி கொள்ள் வைக்கும். இதன் வரததாக பின்னடைவுகளை பிஸ்கால், மொனிரறி முறைகளாள் தூண்ட இயலாது. நாடுகள் பண்டமாற்றுக்கு திரும்பி எல்லவ்ற்றையும் மீளக் கட்டமைக்க வேண்டுமா என்ற கேள்வி எழும். ஆனால் உண்மை 1999 முடிவுகளின் கிளிண்டன் விட்டுப்போகும் பொது 13,000 இந்த சுட்டெண்கள் இருந்தன. அவை இன்று 18,000 போகின்றன அவ்வளவுதான். இதே நிலமைதான் யப்பனுக்கு. அதன் சுடெண்கள் பலகாலம் கீழே நோக்கி சென்றுவிட்டிருந்தது.

 

உலகம் முழுவதும் பொதுவாக ஒரேநிலையாக இருந்தாலும் அமெரிக்காவில் சிறு முன்னேற்றம் காட்டப்படுகிறது. சீன, ரஸ்சியா போன்ற சோசலிச நாடுகளும் முன்னேற்றம் காட்ட வில்லை. இதில் சீனா முன்னேற்றம் கட்ட வேண்டுமாயின் பாரிய உள் கொள்வனவு வேண்டும். ஆனால் சீனா நாணய மாற்றில் தில்லு முல்லுகள் செய்து  ஏற்றுமதியில் தங்க  ஐரோப்பாவின் பின்னடிப்பு சீனா பாதிக்கிறது. அதாவது இப்போது ஐரோப்பா திருந்தினாலும் சீனா இனி கீழ் நோக்கிய வளர்ச்சி வீதத்தை தான் காணும் என்கிறது கட்டுரை. இதுவல்லவா தொழிலாளி பொருளாதாரத்தில் காணப்படும் குறைபாடு. சீன சோசலிசஅரசாங்கம் திறந்த நாணயக் கொள்கைக்கு திரும்பினால் சீனாவில் உள் நுகர்வு கூடினால், ஐரோப்பா புதிய ஏற்றுமதிகளை கண்டுபிடித்து அங்கே ஏற்றுமதி செய்தால்... உலக பொருளாதாரத்தில் முன்னேற்றம் வரும்.

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.