Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாகாணசபை சட்டவரைவு எதிர்ப்பினால் ஒத்திவைப்பு; அமைச்சரவையில் நீதியமைச்சர் ஹக்கீம் போர்க்கொடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13ஆவது திருத்தச்சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு முன்னோடியாக மாகாணசபைகள் திருத்த உத்தேச (விசேட ஏற்பாடுகள்) சட்டவரைவு கொண்டு வரப்படுவதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் கடுமையாக எதிர்த்ததையடுத்து, அதனை அடுத்தவார அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராய்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் நேற்றுக்காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் 13ஆவது அரசமைப்புத் திருத்தம் மற்றும் அந்தத் திருத்தத்தில் மாற்றங்களைச் செய்யும் முன்னோடியாகக் கொண்டுவரப்படும் அவசர சட்டவரைவு என்பவற்றை ஆராயவிருந்த காரணத்தால் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

13ஆவது அரசமைப்புத் திருத்தத்திலுள்ள இரண்டு விடயங்களை மாற்றுவது தொடர்பிலான உத்தேச சட்டவரைவை அமைச்சரவையில் சமர்ப்பித்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை வலுப்படுத்தும் வகையிலேயே மாகாணசபைகளின் அதிகாரங்களில் திருத்தங்கள் செய்யப்படுவதாகத் தெரிவித்து, அது தொடர்பில் நீண்ட விளக்கமொன்றையும் வழங்கியதாக அறியமுடிகின்றது.

இதனையடுத்து, மாகாணசபைகளின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு எடுக்கப்படும் அரசின் அவசர முயற்சிகளுக்கு அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, ரவூப் ஹக்கீம் ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றனர்.

அதேசமயம், அமைச்சர்களான விமல் வீரவன்ஸ, சம்பிக்க ரணவக்க, கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் மாகாணசபைகளின் அதிகாரங்கள் குறைக்கப்படவேண்டுமென வாதிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், அவசர அவசரமாக அரசு இப்படியான திருத்தங்களைச் செய்வது மாகாணசபைகளைக் கலைத்துவிடுவதற்கு ஒப்பானதென இங்கு கண்டனம் தெரிவித்திருக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்றத்த தெரிவுக்குழு ஒன்றை அமைத்தாவது முதலில் ஆராய்ந்திருக்கவேண்டுமெனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

"அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் 153/ஜீ என்ற சரத்தை திருத்துவது என்பது மாகாணசபைகளை இல்லாமல் செய்வதற்கான முன்னோடியாகவே கருதவேண்டியிருக்கிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது பேராளர் மாநாட்டில் 13ஆவது திருத்தத்தின் எந்த அதிகாரங்களையும் குறைக்கும் விடயங்களுக்கு யாரும் ஆதரவை வழங்கமுடியாதெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனவே, எனது கட்சியுடன் நான் இதனைப் பேசவேண்டும். இதில் உடன்படுவதில் கொள்கை அடிப்படையிலும் எமக்குப் பிரச்சினை உள்ளது.

எனவே, இதன் அவதானிப்புகளைத் தெரிவிக்க கால அவகாசம் வேண்டும்'' என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியதையடுத்து, இதனை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய கூட்டத்தின்போது நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், மாகாணசபைகளின் அதிகாரம் குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீமும் சில நிமிடங்கள் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டதாகவும் அறியமுடிந்தது.
 

http://onlineuthayan.com/News_More.php?id=418602087107387359

 

கக்கீம் இதில் வைத்து தனக்கு எதாவது கூடக்கறக்கலாமா என்று பார்க்கிறார். கூடக் கறப்பதற்காகவே தான் கிழுக்கு மாகாணத்தில் ஆட்சி அமைத்திருக்க் கூடிய சந்தைப்பத்தை அரசுக்கு கொடுத்தபோதும் செய்தது. ஆனால் இன்று பிரளிபேசு நடிக்கிறார். கிழக்கு மாகாணத்தில் கக்கீமை ஆட்சியை பொறுப்பெடுக்க கூட்டமைப்பு அழைத்த போது அதை வேண்டாம் என்று கூறிவிட்டார். அதை அரசுக்கு விட்டுக்கொடுத்தால் முஸ்லீம்களால் கூடக்கறக்க முடியும் என்று விளக்கமளித்து கூட்டமைப்பை உதைந்து தள்ளிவிட்டார். அலரிமாளிகையில் ஒழிந்திருந்து கொண்டு தான் சந்திக்க வருவத்தாக வாக்களித்த கூட்டத்திற்கு வந்து கூட்டமைப்பை சந்திக்க மறுத்தார்.

 

மாகாண ஆட்சியை முஸ்லீம்களின் கட்சி பாதுகாக்க ஒரு காரணம் இருந்தால், அது சிங்கள மத்திய அரசிடமிருந்து முஸ்லீம்கள் அதிகாரத்தை பங்கிட்டுக்கொள்வதற்காக மட்டுமாகத்தான் இருக்கமுடியும். அதாவது ஒருமாகாணத்தில் தன்னும் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும்.  அதை விடுத்து கக்கீம் வைப்பது போல, அதை பயன் படுத்தி ஒரு சிறுபான்மை இனமான முஸ்லீம்கள் இன்னொரு சிறுபான்மை இனமான தமிழர்களின் இழப்பில் கூடக் கறக்கலாம் என்று  விளக்கம் அளிப்பது, ஜனநாய அரசியலில் சுத்த ஈனத்தனம்.

 

ஜனநாயக முறையில் பார்த்தால் சாதாரண ஒரு சந்தர்ப்பத்தில் முஸ்லீம்கள் ஒரு மாகாணத்தை ஆழுவதாயின் அது கிழக்காகத்தான் இருக்க முடியும். ஆனால் கிழக்கில் வெற்றியடைந்த கூட்டமைப்பு அந்த அதிகாரத்தை முஸ்லீம்களுக்கு கொடுக்க,   கக்கீம் தனது கட்சியின் முடிவுகளுக்கு எதிராக செயல் பட்டு அந்த அதிகாரத்தை மத்திக்கு திருப்பி அனுப்பினார். தான் அமெரிக்காவிலிருந்துகொண்டு திவினெகும சட்டத்திற்கு கை ஒப்பம் இடும்படி தனது கட்சியின் கிழக்குமாகாண அங்கத்தவர்களைப் பணித்து, மாகாண சபையின் அதிகாரங்களை நீர்த்துப்போகச் செய்தார். அந்த அதிகார திருப்பலை நிரந்தரமாக்க ,தனது மந்திரி சபையான நீதி அமைச்சின் கீழ் வந்த நீதி அரசரை, அந்த அதிகார திருப்பலுக்கு ஒத்துப்போகவில்லை என்ற காரணத்துக்காக  பதவி நீக்க ஒத்துழைத்தார். அவர் தனி அலகு என்ற போர்வையில், தனது தனி முயற்சியாக இணைந்திருந்த வடக்கு-கிழக்கை உடைக்கவும் முயன்றவர் எனபதும் உண்மை. அதாவது, இவ்வளவு கஸ்டப்பட்டு மாகாண சபைகளின் அதிகாரங்களை அழித்து, அழிக்க உதவி புரிந்து வரும்  கக்கீமின் மனத்தில் மாகாண சபைகள் பற்றி அக்கறை இம்மியளவும் இல்லை என்பதே உண்மை.

 

அவர் இங்கே பார்ப்பது மாகாண சபை சட்ட மூலத்தை மத்திய திருப்பி எடுக்க ஒத்துழைத்தால்  தனக்கும், மு.காவுக்கும் எவ்வளவு பேரம் பேசும் சந்தர்ப்பம் அளிக்கபடும் என்பதே. இதுவே கிழக்கு மாகாண மக்கள் வாக்கு போட்டு தமிழர்களை கிழக்கு மாகாணத்தை ஆழும்படி ஆணைகொடுத்த போது அந்த ஆழும் அதிகாரத்தை அரசுக்கு தாரை வார்த்துக்கொடுத்து கக்கீம் செய்தற்கு சமாந்தரமானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.