Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

க்ரிஃபித் எக்ஸ்பெரிமெண்ட்! பகுதி 1- அறிவியல் பகுதி-6

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மரபுகுணம் தாய் தந்தையரிடம் இருந்து குழந்தைக்குப் போகிறது என்பதை ஓரளவுக்கு புரிந்துகொண்டாலும், அது எப்படி, அது எந்த மூலக்குறுமூலம் செல்கிறது (டி என் எ அல்லது ப்ரோட்டீன்) என்பது சரியாக விளங்காத காலம், அது.

அந்த கால கட்டத்தில் ஃப்ரெட்ரிக் கிரிஃபித் னு ஒரு ஆராய்ச்சியாளர்.நிம்மோனியா என்கிற வியாதியை உருவாக்கும் பாக்டீரியா பத்தி ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்தாராம். அப்போ அவரிடம் ரெண்டு விதமான நிம்மோனியா உருவாக்கும் பாக்டிரியா இருந்ததாம்.

அது ரெண்டும் எப்படி வேறுபடுதுனு பார்ப்போம்..

நிம்மோனியா-பாக்டீரியல் ஸ்ட்ரைன் ஒண்ணு:

 இந்த பாக்டீரியல் ஸ்ட்ரைனை  மைக்ராஸ்கோப் மூலம் பார்த்தால், இது கொஞ்சம்  கரடு முரடாத் தெரியுமாம். 

He called this as ROUGH STRAIN. 

கரடுமுரடா இருந்தாலும், இந்த பாக்டீரியல் ஸ்ட்ரெயினால், அது உட்செல்லும்  விலங்கை கொல்ல முடியாது!!! அதற்கு காரணம் என்னனா.. அந்த பாக்டீரியா இன்னொரு விலங்கின் உடம்பில் சென்று, அதன் ரத்தத்தில் கலந்த உடன், பாக்டீரியா தன் இனத்தை இனப்பெருக்கம் மூலம் பெருக்கமுடியாமல் அதனை அந்த விலங்கின் எதிர்ப்பு சக்தி, அடித்து நொறுக்கி கொல்ல முடியும். அதாவது நம் உடம்பில் உள்ள எதிர்ப்பு சக்தி இந்த பாக்டிரியல் ஸ்ட்ரைன், நம் செல்லுக்குச் சென்று, தன் வேலையை ஆரம்பிக்குமுன்னே, எளிதில் கொன்றுவிட முடியும்.சரியா? இந்த பாக்டீரியல் ஸ்ட்ரெய்ன்  பார்க்க கரடு முரடா இருந்தாலும், இந்த பாக்டீரியல் ஸ்ட்ரெயினால் அது உள்நுழையும் விலங்கை கொல்ல முடியாது.

இன்னும் புரியலையா?

பொதுவாக பாக்டீரியா, வைரஸ் எல்லாம் என்ன செய்யும்னா...

 நம்ம உடம்புக்குள்ள போயி ரத்தத்தில் கலக்கும். கலந்து நம்ம செல் க்கு உள்ள போயி, அவைகளுக்கு, அவைகளுடைய செல்லுக்குத்தேவையான எல்லா மூலக்கூறுகளையும் நம்ம செல்லை வச்சே உருவாக்கும்! அப்படி உருவாக்கிய அதையெல்லாம் வச்சு அதைப்போல இன்னொரு பாக்டீரியாவை உருவாக்கும். மேலும் எந்த செல்லில் இதை எல்லாம் செய்ததோ அந்த செல்லையும் கொன்றுவிடும். இதுபோல் பல ஆயிரக்கணக்கான பாக்டீரியாக்களை உருவாக்கி, நம்ம செல்களைஎல்லாம் கொன்னுடும், கடைசியில் நம்ம செல் எல்லா செத்ததனால் நம்மளயும் கொன்னுபுடும்.

ஆனால் அது போல் பாக்டீரியா உள்ள நுழைந்து இனப்பெருக்கம் செய்ய முயலும்போது..அதை நம்ம உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி தடுக்க முயலும். எப்படி? 

அதுக்கு தேவையான மூலக்குறுகளை உருவாக்க தடைகள் ஏற்படுத்தி! அப்படி நம்ம எதிர்ப்பு சக்தியால் முடியலைனா, நம்ம ஏதாவது ஆண்ட்டிபயாட்டிக் எல்லாம் சாப்பிட்டு அதை கொல்ல முயலுவோம். நம் எதிர்ப்பு சக்தியால் முடியாததை நம்ம சாப்பிடுற ஆண்ட்டி பயாட்டிக் செய்து சாதிக்கும். அதுவும் நம்ம உடம்பில் உள்ள எதிர்ப்பு சக்தி செல்களால் முடியலைனா, நம்ம கடவுளைப் போயி பார்க்க வேண்டியதுதான்- செத்தபிறகு!

சரி, இந்த கரடுமுரடான பாக்டீரியாவை எளிதில் நம்ம உடம்பு கொன்னுபுடும்.

ஒரு எலிக்கு இந்த பாக்டிரியாவைக் கொடுத்தால் என்ன ஆகுதுனு கீழே பாருங்க!

கீழே உள்ள எலி படத்தில் இடது கோடியில் உள்ளதைப் பாருங்க!  எலி இன்னும் உயிரோட இருக்கு! சரியா? 
450px-Griffith_experiment.svg.png

நிம்மோனியா-பாக்டிரியல் ஸ்ட்ரைன் ரெண்டு!

இது என்னனா, நிம்மோனியாவை நமக்குக் கொடுக்கும் இன்னொரு வகை பாக்டீரியா. இது பார்க்க ரொம்ப அழகா, சாஃப்ட்டா இருக்குமாம் (மைக்ராஸ்கோப்ல பார்க்கும்போது). 

He called this as SMOOTH STRAIN! 

ஆனால், இந்த பாக்டீரியா செல்லுக்கு ஒரு "பாதுகாப்புக் கவசம்" ஒண்ணு இருக்குமாம்! 

அது என்ன அது "பாதுகாப்புக் கவசம்"? 

இந்த பாக்டீரியல் டி என் எ மற்றும் ப்ரோட்டின்களை வைத்திருக்கும் செல்களை ஒரு "பாலி சாக்கர்ரைட்" "என்வெலப்" சுத்தி இருக்குமாம். அப்படி இருப்பதால், நம்ம எதிர்ப்பு சக்தி இந்த பாக்டிரியா செய்கிற இனப்பெருக்கத்தை தடுக்க முடியாதாம். ஆகையால், இந்த பாக்டீரியாவுக்குத் தேவையான, டி என் எ, ப்ரோட்டீன் எல்லாவற்றையும் நம்ம செல்லை பயன்படுத்தி தயாரிச்சு, நம்ம செல்லை எளிதில் கொன்னுபுடுமாம்! அப்படி இனப்பெருக்கம் செய்து நம்ம செல்லை எல்லாத்தையும் அழிச்சு நம்மளயும் கொன்னுபுடுமாம்! 

ஒரு எலிக்கு இந்த பாக்டிரியாவைக் கொடுத்தால் என்ன ஆகுதுனு கீழே பாருங்க!


கீழே உள்ள எலி படத்தில் இடது கோடியில் இருந்து ரெண்டாவது உள்ளதைப் பாருங்க! அந்த எலி இறந்து விடுகிறது! சரியா?

450px-Griffith_experiment.svg.png

 இப்போ இதுவரை என்ன ஃப்ரெட்ரிக் க்ரிஃபித் எக்ஸ்பெரிமெண்ட்ல இருந்து  கத்து இருக்கோம்?

ஒரு முறை விவியூ பண்னுவோம்.. 

* நிம்மோனியா உருவாக்கும் ரெண்டு பாக்டீரியா வைத்திருந்தார் நம்ம க்ரிஃபித்.

அதில்  பாக்டீரியா ஒண்ணு... பார்க்க கரடுமுரடா இருக்கும். ஆனால் அதை எலியோ, நாமோ எளிதில் "டாக்கிள்" செய்து நம் உடம்பில் உள்ள எதிர்ப்பு சக்தியை வச்சு ஒழிச்சுடலாம். அதனால் அந்த பாக்டீரியல் ஸ்ட்ரெய்ன் ஹார்ம்லெஸ்!


* இன்னொரு வகை பாக்டீரியா ரெண்டு, பார்க்க அழகா சாஃப்ட்டா இருக்கும். அதுமட்டுமல்ல, இந்த பாக்ட்டீரியா செல்களை சுத்தி ஒரு "பாலிசாக்கரைட்" (கார்போஹைட்ரேட், க்ளுக்கோஸ்மாரி பல மூலக்கூறு ஒண்ணு சேர்ந்த) "கவசம்" இருக்கும். அதனால, இந்த பாக்டீரியா நம்ம எதிர்ப்பு சக்தியை எல்லாம் கடந்து போயி, நம்ம செல்லில் நுழைந்து, நம்ம செல்லை பயன்படுத்தி, தன் சந்ததிகளை உட்ருவாகி நம் செல்களை கொன்னுபுடும். கடைசியில் நம்மளும் போய் சேர்ந்துவிடுவாம்! இது ஒரு ஹார்ம்ஃபுள் பாக்டீரியா!

இப்போ பாக்டீரியா ஒண்ணு எப்படி இருக்கு பாருங்க!

 கீழே இடதுபக்கம் உள்ளது (அதனுடைய மேல்ப் பகுதி கரடுமுரட்ட இருக்கா? ஆனால் இது ஹார்ம்லெஸ்)

பாக்டீரியா ரெண்டு எப்படி இருக்குனு பாருங்க!

VLObject-3754-080904100945.jpg

கவசம் போட்டது எப்படி இருக்கும்னு பாருங்க.! வலது பக்கம் உள்ளது. இது ஹார்ம்ஃபுள்)

 

 

கிரிஃபித் எக்ஸ்பெரிமெண்ட், முதல்ப்பகுதிதான் பார்த்து இருக்கோம். ரெண்டாவது பகுதியை அடுத்த பதிவில் பார்ப்போம்.

-தொடரும்

http://timeforsomelove.blogspot.co.uk/2013/06/1-6.html

 

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

க்ரிஃபித் எக்ஸ்பெரிமெண்ட்! பகுதி 2- அறிவியல் பகுதி-7

 
க்ரிஃபித் எக்ஸ்பெரிமெண்ட்! பகுதி ஒண்ணைப் பற்றிப் பார்த்தோம். இப்போ ரெண்டாவது பகுதியைப் பார்ப்போம்.

ஒண்ணு தெரிந்துகொள்ளுங்கள்! க்ரிஃபித் இதுபோல் ஒரு ஆராய்ச்சி செய்யும்போது,ப்ரோட்டீன் என்கிற மூலக்கூறுதான் மரபுகுணங்களை சந்ததிகளுக்கு எடுத்துச் செல்கிறது என்று பரவலாக விஞ்ஞானிகளால் நம்பப்பட்டது. மேலும் டி என் எ வின் கட்டமைப்பு, வடிவமைப்பு, அதாவது டபுள் ஹெலிக்கல் கட்டமைப்பு அறிவியளாலன் யாருக்கும்  தெரியாது. வாட்சன் மற்றும் க்ரிக், டி என் எ டபுள் ஹெலிக்கல் கட்டமைப்பை கண்டுபிடிக்கும் முன்னால நடந்த ஆராய்ச்சி, விளக்கம் இது!

நான் இங்கே பேசுவது அறிவிலாளன் உலகைப் பற்றி! ஒரு வேளை எல்லாம் தெரிந்த மேதாவி ஜெயமோஹன் மாதிரி பண்டாரங்களுக்கு, குறி சொல்றவனுக்கு, நம்ம ஊரு பூசாரிகளுக்கு, அப்புறம் ஆன்மீகவாதிகளுக்கு, பகவத்கீதை படிக்கிறவாளுக்கு, அந்தக்காலத்து க்ரியேஷனிஸ்ட்களுக்கு, பரிணாமத்தை இஷ்டத்துக்கு விமர்சிக்கும் அரைவேக்காடு களுக்கெல்லாம் டி என் எ பற்றி அப்போவே தெரிந்து இருக்கலாம்.

 நான் இங்கே பேசுவது, "எனக்கு எதுவுமே சரியாகப் புரியவில்லை. நான் புரிந்துகொள்ளணும்"னு எண்ணுகிற சாதாரண அறிவியளாலன் பற்றி! நாலெழுத்துப் பிழை இல்லாமல் தமிழ் எழுதக் கற்றுக்கொண்டவுடன், "தாந்தான் பெரிய மேதை! எனக்கு எல்லாம் தெரியும்" என்று பிரபஞ்சம் பற்றி வியாக்யாணம் பேசிப் பிதற்றும் பண்டாரங்கள் பற்றி அல்ல!  

****************************** 

அடுத்து க்ரிஃபித் என்ன செய்தார் என்றால்..

எக்ஸ்பெரிமெண்ட் மூனு: 

நிம்மோனியா உருவாக்கும் பாக்டீரியாக்களை நாம் உயர் வெப்பநிலைக்கு கொண்டு சென்று அவைகளை கொன்றுவிடலாம். அதன் காரணமாகவே நாம் உணவுகள் பலவற்றையும் வேகவைத்து சாப்பிடுறோம் னுகூட சொல்லலாம்.

அந்த ஹார்ம்ஃபுள், அழகான, கவசம் போட்ட பாக்டீரியல் ஸ்ட்ரெயினை (smooth strain) ஆட்டோக்லேவ் ல போட்டு பெப்பப்படுத்தி கொன்றுவிட்டார், கிரிஃபித்.

அப்படி இறந்த அந்த பாக்டீரியாவை, ஒரு எலிக்கு ஊசியின்மூலம் இன்ஞெக்ட் செய்து  கொடுத்தார், க்ரிஃபித்.

கீழே உள்ள படத்தில் இடது பக்கம் உள்ள படத்தை இப்போப் பாருங்க! அவர் எதிர்பார்த்தது போலவே
 
எலி உயிருடன் இருக்கு!


அந்த  அந்த ஹார்ம்ஃபுள், அழகான, கவசம் போட்ட பாக்டீரியல் ஸ்ட்ரெயினைவெப்பத்தால் கொன்று அதை எலிக்கு கொடுத்ததால், அந்த  பாக்டிரியா ஏற்கனவே செத்துவிட்டதால், அதால் இனப்பெருக்கம் செய்ய முடியாமல், எலி உயிருடன் இருக்கிறது! 


அவர் எதிர்பார்த்தது போலவே, அந்த ஹார்ம்ஃபுள் பாக்டீரியா, ஏற்கனவே வெப்பத்தால்  இறந்துபோய் விட்டதால், எலி உயிருடன் இருந்தது.


********************************* 

எக்ஸ்பெரிமெண்ட் 4:

அதுக்கப்புறம் இன்னொரு எக்ஸ்பெரிமெண்ட் செய்கிறார், க்ரிஃபித்.

இதை ஏன் செய்றார்னு பலருக்குப் புரியாது, விளங்காது. ஆனால் அறிவியலாளன் எதையாவது இதுபோல் செய்வதால்தான் அவனால் இன்று இந்த அளவுக்கு அறிவியலில் முன்னேற்றமடைய முடிந்தது!

அப்படி என்ன செய்றார், க்ரிஃபித்?

கரடுமுரடான, ஆனால் ஹார்ம்லெஸ் பாக்டீரியா யும், செத்துப்போன (வெப்பத்தால் கொன்று), அந்த ஹார்ம்ஃபுள்ளான், அழகான, கவசம் போட்ட பாக்டீரியல் ஸ்ட்ரெயினையும் சேர்த்து எலிக்கு கொடுக்கிறார்.

இப்போ என்ன எதிர்பார்ப்பீங்க?

* கரடு முரடான ஹார்மெல்ஸ் பாக்டீரியாவை நம்ம உடல் (எலியின் உடலில் உள்ள) எதிர்ப்பு சக்தி கொன்னுடும். 


   

* அழகான கவசமணிந்த ஹார்ம்புள் பாக்டீரியாவைத் தான் ஏற்கனவே வெப்பம் கொன்னுபுடுச்சே? 

* இப்போ எலி உயிருடன்தான் இருக்கும் ??

க்ரிஃபித் என்ன நெனச்சாருனு எனக்குத் தெரியலை! நான் மேலே சொன்னதுபோல்தான் நெனைப்பேன். அதாவது, எலி நிச்சயம் உயிருடன் இருக்கும் என்று. ஆனால் நடந்தது வேற!

கீழே உள்ள படத்தில் வலது பக்கம் உள்ள படத்தை இப்போப் பாருங்க!



 

எலி செத்துருச்சு!!!

 

இது எப்படிங்க சாத்தியம்?? 


   

 

அறிவியல்ல என்ன செய்வாங்கனா.. ஒரு முறை அதுபோல் ஏதாவது ஏடாகூடமாக ரிசல்ட் வந்தால், மறுமுறை கவனமாக அதே எக்ஸ்பெரிமெண்ட்டை செய்வார்கள். அப்படி  பல முறை செய்தாலும் எலி சாகிறது என்பதை அறிந்தார் க்ரிஃபித்.


 

கிரிஃபித், ஆனஸ்டாக , தனக்கு வந்த ரிசல்ட்டை, அவர் எப்படி எக்ஸ்பெரிமெண்ட் செய்தார் என்பதையும் சொல்லி, எதையும்  மறைக்காமல் உலகுக்கு சொல்லி விட்டாரு (அறிவியல் ஆராய்ச்சி பத்திரிக்கைகள் மூலம்). (எனக்குத் தெரிய ஒரு சில மாணவர்கள் இதுபோல் ஏடாகூடமா ரிசல்ட் வந்தால் அதை மறைத்து விடுவார்கள்! :)).

அவர் என்ன சொன்னாருனா??

இந்த உயிருடன் உள்ள பாக்டீரியா எப்படியோ, செத்த பாக்டீரியாவுக்கு உயிர் வர வைத்துவிட்டது. ஹார்ம்ஃபுள் ஆன உயிரற்ற பாக்டீரியாவுக்கு உயிர் வந்ததால், அதுதான் எலியை கொன்னுடுச்சுனு!
  
இவருடைய இந்த ஆராய்ச்சிக்குறிப்பை, பெரிய பெரிய அறிவியல் மேதைகளெல்லாம், சாத்தியமில்லை என்பதுபோல்  பலவாறு விமர்சிச்சு, க்ரிஃபித் ஏதோ கவனக்குறைவாக எக்ஸ்பெரிமெண்ட் செய்துள்ளார்னுகூடஎன்றெல்லாம் சொல்லி  இருக்காங்க!

ஆனால் க்ரிஃபித் செய்த எக்ஸ்பரிமெண்ட்ல பிழை இல்லை என்பதே உண்மை. இருந்தாலும் அவர் ரிசல்ட் சரி என  நிரூபணம் ஆக பல ஆண்டுகள் ஆச்சு!

In English..



Griffith concluded that the type II-R (கரடு முரடான, ஹார்ம்லெஸ் பாக்டீரியா) had been "transformed" into the lethal III-S strain (அழகான, கவசம் போட்டு இருக்கும், ஹார்ம்ஃபுள் பாக்டீரியா) by a "transforming principle" that was somehow part of the dead III-S strain bacteria.

க்ரிஃபித்  எக்ஸ்பெரிமெண்ட் 4 விளைவை எப்படி நாம் இன்னைக்கு விளக்குவது? 

இன்றைய அறிவியல் வளர்ச்சிக்குப் பிறகு, டி என் எ தான் மரபு குணத்தை குழந்தைகளுக்கு எடுத்துட்டுப் போகுதுனு தெரிந்த காலகட்டத்தில், க்ரிஃபித் எக்ஸ்பெரிமஎண்டில் உண்மையிலே என்ன நடநததுனு சொல்லு! அப்படினு நீங்க கேட்டால்..

* அந்த "கவசத்துடன் உள்ள ஹார்ம்புள் பாக்டீரியா" வெப்பத்தால் இறந்தது என்பது உண்மைதான்.

* அந்த "கரடு முரடான, ஹார்ம்லெஸ் பாக்டீரியாவை" எலியின் எதிர்ப்பு சக்தி கொன்னுடும் என்பது உண்மைதான்.

ஆனால்..

* கவசமணிந்த இறந்த பாக்டீரியா, இறந்தாலும் அதன் இறந்த செல்லில் உள்ள டி என் எ (ஜீன்கள்) எல்லாம் இன்னும் அழியாமல் இருக்கு! சரியா?

* அதேபோல் கரடு முரடான "கவசம் அணியாத" பாக்டீரியா எல்லாம் எதிர்ப்பு சக்தியால் கொல்லப்படுவதற்கு கொஞ்ச நேரம் எடுக்கும். அந்த நேரத்தில்,கரடுமுரடான பாக்டீரியா,  தன் சகோதரரான கவசமணிந்த பாக்டீரியாவின் "டி என் எ" வை, தன் டி என் எ போல பாவித்து, தன் செல்லுக்கு உள் எடுத்து, அதில் உள்ள "மரபு குணத்தை, ஜெனட்டிக் கோட்" டை வைத்து அந்த "கவசமணிந்த பாக்டீரியாவை"  தன் செல்லில் உருவாக்கி, அதன் சந்ததிகளை உருவாக்கி விடுகிறது! இப்போ செத்துப்போன பாக்டீரியாவின் "டி என் எ" மற்றும் ப்ரோட்டின்களால், உயிருடன் இருக்கும் சகோதர டி என் எ உதவியுடன்,"கவசம் அணிந்த, எலியைக் கொல்லும் வலிமைமிக்க  பாக்டீரியாக்கள்"உருவாக்கப்படுகிறது. அந்த பாக்டீரியாக்கள், எலியின் செல்களை பயன்படுத்தி இனப்பெருக்கம் செய்து, எலியின் செல்களை கொன்று, பிறகு எலியையும் கொன்னுபுடுது! :) 


-தொடரும்

நன்றி http://timeforsomelove.blogspot.co.uk/2013/06/2-7.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.