Jump to content

மொகலாய மன்னர் பாபரும் , திமுக மன்னர் கருணாநிதியும் !


Recommended Posts

இந்தியாவில் மொஹாலாய பேரரசை நிறுவிய மன்னர் பாபர் , ஒரு முறை தமது மகனும் அடுத்த பட்டத்துக்கு உரியவருமான ஹூமாயூன் , கொடிய நோயினால் உடல் வெந்து சாவின் நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கும் வேளையில் ,

அல்லா ! என் உயிரை எடுத்து விட்டு எனது மகனின் உயிரை காப்பாற்றுங்கள் என்று வேண்டினாராம் , அல்லாவின் அதிசயமாக , ஹூமாயூன் உயிர் பிழைத்த அந்த வாரமே , பாபரும் அவர் வேண்டிகொண்டபடிக்கு உடல் நலிவுற்று , நோய்களை எதிர்கொண்டு இறந்தாராம் .

மக்காளாட்சி , ஜனநாயக கட்சி நடைமுறைகளில் முந்தைய மன்னர் நடைமுறைகள் தோற்கும் அளவிற்கு தமது குடும்ப நபர்களின் ஆட்சியை நிறுவியது இரு குடும்பங்கள் , ஒன்று நேரு குடும்பம் , மற்றொன்று கருணாநிதி குடும்பம் , இதை தொடர்ந்துதான் பல குடும்பங்கள் வந்தது .

அந்த இரு குடும்பங்களும் எப்போது வேண்டுமானாலும் எதை பேசி வேண்டுமானாலும் மக்களை குழப்புவார்கள் . அவர்களிற்கு தேவை பதவி , சொகுசு , காசு , பவிசுகள் ..

சரி எத்தகைய மன்னராக இருந்தாலும் இயற்கை என்று ஒன்று உண்டுதானே .. இந்தியாவில் மொகலாய பேரரசை தோற்றுவித்த பாபரின் வாரிசுகள் யார் இப்போது என்று யாரையும் சொல்ல முடியவில்லை .

இது உதாரணம்தான் , பாபரின் வாரிசுகள் இப்போது நம்மிடம் இல்லை , அக்பரின் வாரிசுகள் நம்மிடம் இல்லை ; ஹூமாயூனின் சொந்தகாரர்களாக அரண்மனையை அலங்கரித்த ஆயிரம் சொந்தங்களில் ஒருவரை கூட இப்போது இன்னார்தான் பாபரின் உறவினர் என்று யாரையும் சொல்ல கூட இயலாதபடிக்கு அடையாளம் அற்று போய்விட்டது.

ஆனால் ஆவர்கள் ஆட்சி செய்த பாங்கு இப்போதும் வரலாறுகளில் உள்ளது .

அக்பரின் தீன் இலாஹி இன்றளவும் பேசபடுகிறது.

சரி இன்றைய காட்சிக்கு வருவோம் ;

மொகலாய பேரரசை உருவாக்கிய பாபர் எப்போதும் அவரது பிள்ளைகளின் குடுமி படி சண்டைகளை கண்டு கொள்ளமாட்டாராம் , அதே போலவே திமுகவில் மன்னராட்சி நடைமுறையை உருவாக்கிய பேரரசர் , பெரும் பணக்காரர் , பெரியவர் கருணாநிதியும் இப்போது இப்படித்தான் மனதிற்குள் வேண்டி கொண்டு உள்ளாராம் , ஆண்டவா , எனக்கு இனி கிடைக்கும் என்று உள்ள அதிகாரங்கள் எதுவும் கிடைக்க வேண்டாம் , ஆனால் அதற்க்கு பதில் எப்படியாவது பட்டத்து அதிகாரம் வாங்க எனது மகள் கனிமொழிக்கு எப்படியாவது இந்த முறை உறுப்பினர் பதவியை வாங்கி கொடுத்து விடு என்று ;

கிட்டத்தட்ட பெரியவர் கருணாநிதியின் அழுகுரலை ஆண்டவன் கேட்டுவிட்டதாகவே தெரிகிறது ; ஆனால் ஆண்டவன் நேர்மையானவன் , கனிமொழிக்கு பதவி கிடைக்கும் , பெரியவருக்கு இனி பதவி என்பதே கிடையாது .

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.