Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மினி உலகக்கிண்ணம்: இந்தியாவின் வெற்றியும், இலங்கை மீதான கவனயீர்ப்பு போரும்… : – சாய்பிரசாத்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மினி உலகக்கிண்ணம்: இந்தியாவின் வெற்றியும், இலங்கை மீதான கவனயீர்ப்பு போரும்… : – சாய்பிரசாத்

922767_623453444333990_1992605605_n.jpg

 

By சாய்பிரசாத்

 

 

2013ன் மினி உலக கிண்ணதொடர் ஒரு சில முக்கிய சம்பவங்களுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தியா கிண்ணம் வென்றிருக்கிறது. இது இந்தியாவிற்கு இன்னொரு மைல்கல்.டோனியின் அணி, இரண்டாயிரங்களில் இருந்த வலிமை மிக்க அவுஸ்ரேலிய அணியினை நினைவுபடுத்துகிறது. கொஞ்சம் பந்துவீச்சினை மெருகேற்றினால் போதும் அடித்துக் கொள்ள யாராலும் முடியாது. பெரும்பாலான போட்டிகளில் மழை குறுக்கிட்டு கொண்டிருந்தது.

இலங்கையின் போட்டிகளில் மழையுடன், ஈழத்தமிழர்களும் குறுக்கிட்டார்கள். இலங்கை வீரர் டில்சானின் முன்னால் தனது எதிர்ப்பு அட்டையுடன் நிற்கும் ஈழத்தமிழனின் புகைப்படம் ஒன்று மட்டுமே ஆயிரம் கதை சொல்லும். இதை விட எப்படி எங்கள் எதிர்ப்பினை அகிம்சை முறையில் வெளிக்காட்டிட முடியும். மகிந்த அரசாங்கம் ஈழத்தமிழரின் மேல் ஏவியிருக்கும் உளவியல் போரிற்கு எதிராக புலம்பெயர் தமிழர்களின் உளவியல் போர் முறையிது.கைவிடப்பட்ட தேசத்தின் குரலாய் ஒலிக்கும் புலம் பெயர் தமிழர்களின் எழுச்சி. இதனை இலங்கை அரசாங்கம் புறம் கையால் தட்டிவிட்டு நகரலாம் , கண்டும் காணாததுபோல் இருந்துவிடலாம். ஆனால் இலங்கை சர்வதிகார அரசின் அடித்தளத்திலிருந்து ஒவ்வொரு செங்கல்லாக பிடுங்கப்பட்டுக் கொண்டிருக்கும் தருணமிது. இது கொஞ்சம் பெரிய செங்கல். இலங்கைக்கு வெளியில் செய்யப்பட்டிருக்கும் பெரிய கவனயீர்ப்பு.

இந்த தொடரின் பின்னர் பாகிஸ்தான், அவுஸ்ரேலிய அணிகள்,சுய பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்திலிருக்கின்றன. புதிய வீரர்களுடன் சோதனை முயற்சியாய் களமிறங்கி தோல்வியுடன் திரும்பியிருக்கிறார்கள். இவ்வணிகளில் அடுத்த தொடர்களில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்படலாம்.

01.பாகிஸ்தான்:

யுனிஸ்கான் , அப்ரடியை நீக்கிவிட்டு புதியவர்களோடு களம்புகுந்தது. மூன்று போட்டிகளிலுமே தோல்வி. பந்துவீச்சு அபாரமாக இருந்தும், துடுப்பாட்டத்தில் சாதிக்க தவறியதால் முதல் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறினார்கள். அப்ரடி , யுனிஸ்கான் திரும்ப வருவதற்கான சாத்தியங்களிருக்கின்றன. என்ன தான் மோசமாக ஆடினாலும் புதிய வீரர்கள் சாதிக்க தவறுவதால் அப்ரடி தொடர்ந்து வாய்ப்பு பெற்றுக் கொண்டேயிருக்கிறார்.

02.அவுஸ்த்ரேலியா:

பாண்டிங், ஹசி ஓய்வின் பின்னர் தள்ளாடிக் கொண்டிருக்கும் கிழட்டுக் கங்காருகளின் மற்றுமொரு தோல்வித் தொடர். இரண்டு போட்டிகளில் தோல்வி, ஒரு போட்டி மழையினால் கைவிடப்பட்டது. எந்தவொரு போட்டியிலும் வெற்றியில்லாமல் இரு தொடரில் தோல்வி. அனுவப வீரர் & அணித்தலைவர் கிளார்க் காயமடைந்ததும் , வார்னர் விளையாட முடியாமல் தடைசெய்யப்பட்டதும் தோல்வியின் மிக முக்கிய காரணங்கள். இதிலிருந்து வெளிவருவதற்கான முதற் படியாக பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் அப்பதவியிலிருந்து நீக்கப்படிருக்கிறார். இனி சுதந்திரமாக தாக்கியாடும் அவுஸ்த்ரேலியர்களின் அதிரடியை ரசிக்கலாம். அவுஸ்த்ரேலியா தன்னை மீழுருவாக்கம் செய்யத் தொடங்கிவிட்டது. ஒரு புள்ளியில் சுருங்கிப் போயிருந்த அவுஸ்த்ரேலியர்களுக்கு இனி விடிவுகாலம். இன்னும் இரண்டு வாரங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆஷஷ் தொடரும் ஆரம்பிக்கவுள்ளது.

இலங்கை ,இந்தியா , தெ.ஆ , இங்கிலாந்து , மே.இந்திய தீவுகள் , நியூசிலாந்து அணிகள் தமது பரிசோதனை முயற்சியில் கொஞ்சம் வெற்றியடைந்திருக்கின்றன. இந்தியா அதிகமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது.

03.நியூசிலாந்து:

இங்கிலாந்துடன் தொடரில் விளையாடிய சூட்டுடன் இந்த தொடரிற்கு வந்தார்கள். இலங்கையுடன் போராடி வெற்றி. அவுஸ்ரேலியாவுடன் மழையினால் சமநிலை . இங்கிலாந்துடன் தோல்வி. அவுஸ் & இங்கிலாந்துடனான போட்டிகளில் மழையும் விளையாடியதால் நியூசிலாந்து சாதிக்க முடியவில்லை. குப்லி, ரோஸ் ரெயிலரின் மீள்வருகையுடன் பலமாகியிருக்கிறது. இங்கிலாந்துடன் டெஸ்தொடரில் தோல்வி , ஒருநாள் தொடரில் வெற்றி. அடுத்து டி20 தொடரில் வென்றால் தொடர் இவர்கள் வசமாகும்.

04.மேற்கிந்திய தீவுகள்:

பலமானதொரு தாக்கியாடும் அணி.எல்லோருமே தாக்கியாடும் அபயகரமான துடுப்பாட்டக்காரர்கள். ஐபிஎல் ல் பிரகாசித்த கெயில், பிரவோ, சமி, நரேன் என திறமையான வீரர்கள். மிதவேக பந்து வீச்சுதான் இவர்களின் பலவீனம். ஒரு காலத்தில் மே.தீவுகளில் ஒரு மரத்தினை உலுப்பினால் உதிர்பவர்கள் எல்லாம் வேகப்பந்து வீச்சர்களாக இருப்பார்கள். அது ஒரு காலாம். இப்போது எல்லாம் அதிரடியர்களாகவே இருக்கிறார்கள். மழையும் கொஞ்சம் இவர்களுடன் விளையாடியதில் முதற் சுற்றுடன் வெளியேறி விட்டார்கள். அடுத்து சொந்த மண்ணில் இலங்கை, இந்தியாவை சந்திக்க இருக்கிறார்கள் சாதிப்பர்களா பார்க்கலாம்.

05.தென்ஆபிரிக்கா:

சிமித் ,கலிஸின் & ஸ்டைனின் காயம் இவர்களுக்கு கிடைத்த பின்னடைவு, ஐபிஎல் லினால் கிடைத்த மில்லர் & டி புளுஸ் மீது அதீத எதிர்பார்ப்புமிருந்தது. இவர்களைத்தான் துரதிஸ்டம் துரத்தும் ஆனால் இம்முறை மே.தீ வுகளை மயிரிழையில் வீழ்த்தி அரையிறுதியில் இங்கிலாந்துடன் தோற்றுவிட்டார்கள். முக்கியமான போட்டிகளில் இவர்களிடமிருக்கும் அஸ்திரங்கள் செயலிழந்து விடும். இதுவே இவர்களின் பலவீனம்.இதுவே இத் தொடரிலும் தொடர்ந்தது.

06.இலங்கை:

அனுபவவீரர்கள், இளையவர்கள் என கலந்துகட்டி களமிறங்கியது. ஆரம்பத்தில் நியூசிலாந்துடன் தடுமாறினார்கள். பின்னர் இங்கிலாந்தின் கடின இலக்கை துரத்தி அடித்தார்கள். அவுஸ்ரேலியாவுடனான மிக முக்கிய போட்டியில் வென்று அரையிறுதியில் இந்தியாவுடன் மந்தமான ஆட்டத்தினால் தோற்றார்கள். மழையும், புலம் பெயர் தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டங்களும் அவர்களின் ஆட்டத்தில் கனிசமான தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குசல் பெராரா சொதப்பினார். சங்கா , ஜெயவர்தனே பிரகாசித்ததும். திரிமனேயின் பொறுப்பான ஆட்டமும் அரையிறுதிவரை கொண்டுவந்தது. இளையவர்கள் திரிமனே, சந்திமல் , குசல் பெரேரா இன்னும் நிரூபிக்க வேண்டியுள்ளது. அடுத்த மே.தீவுகளில் நடக்கும் முத்தரப்பில் சாதிக்கிறார்களா பார்க்கலாம். டில்சான் காயம் காரணமாக விலகியதும். திசார பெரேரா காரணமில்லாமலும் விலக்கப்பட்டுள்ளார். மோசமன ஆட்டநிலையிலிருந்த தரங்க அணிக்கு திரும்பியிருக்கிறார்.

07.இங்கிலாந்து:

காயம் காரணமாக நட்சத்திர வீரர் பிற்றர்சனில்லாமல் விளையாடியது. ஆனாலும் சொந்த மண்ணில் எதிர்பார்த்ததிலும் சாதித்தார்கள். அன்டர்சனின் அபாரமான திரும்பும் பந்துகளும், ரூட் , ரோட் , போப்றா வின் அபாரமான அதிரடியும் கைகொடுக்க இறுதி வரை வந்தார்கள். மழையின் காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டது இங்கிலாந்திற்கு சாதகமில்லாமல் போனது. இங்கிலாந்தின் ஒரு நாள் போட்டியணியை இருபது ஓவர்கள் விளையாட சொன்னால் என்ன செய்வார்கள். போராடித் தோற்றார்கள். நியூசிலாந்துடன் ஒருநாள் போட்டியில் சொதப்பினாலும் மினி உ.கிண்ணத்தில் சாதித்தார்கள்.

08.இந்தியா:

இது முழுவதும் இந்தியா ஆதிக்கம் செலுத்திய தொடர். எல்லா போட்டிகளும் வெற்றி. இரண்டாயிரங்களின் பின்னரான அபாயகரமான துவக்க ஆட்ட ஜோடியான சேவாக் & கம்பீர் ஜோடி இருவருமில்லாமல் களமிறங்கி வெற்றி பெற்றுள்ளது. சொந்த மண்ணில் இங்கிலாந்துடன் தோல்வி. பாகிஸ்தானுடன் ஒருநாள் போட்டித் தொடர் தோல்வி. பின்னர் பெருங்காய டப்பாக்களை வீசி எறிந்து விட்டு புதியவர்களிற்கு வாய்ப்பு கொடுத்ததில் அவுஸ்ரேலியாவுடன் அபார வெற்றி. பின்னர் ஐபிஎல் கோலாகலம் , சூதாட்ட சர்ச்சை என தொடர்ந்த சோதனைகளை சாதனைகளாக்கியிருக்கிறார்கள். புதிய தொடக்க ஜோடியையும் கண்டடைந்துள்ளது. இத் தொடரில் பவர் பிளே முழுவதும் ஆட்டமிழக்காமலிருந்த ஜோடி தவான்& ரோகித் சர்மா ஜோடிதான். மத்திய வரிசையில் சொதப்பிய ரொகித், தொடக்க ஆட்டகாரராக சாதித்திருக்கிறார். இரண்டு சதம் ஒரு அரைச்சதம் என இது தாவானின் ஆதிக்கம் நிறைந்த தொடர். இந்திய ஊடகங்கள் இனி சேவக்கினை மறந்து போகும். இந்த குழந்தைச் சிரிப்பு மீசைக்கார இளைஞர் தன்னை முழுவதுமாக நிரூபித்திருக்கிறார். அடுத்த மே.தீவு தொடரிலும் இவரின் அதிரடியை ரசிக்கலாம்.

 

இப்படியாக இந்த மினி உலக கிண்ண இறுதித் தொடர் இந்தியாவின் வெற்றியுடன் முடிவிற்கு வந்த்திருக்கிறது. இத் தொடர் இந்தியாவிற்கும், இலங்கைக்கும், கூடவே நமக்கும் ஒரு மிக முக்கிய தொடராக வரலாற்றில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளுகிறது.

 

http://www.ampalam.com/2013/06/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

ஆடத் தெரியாதவலுக்கு மேடை சரி இல்லை என்ற மாரி தான் இந்த விளையாட்டு கட்டுரை ஒரு சில இடத்தில் எழுத பட்டு இருக்கு.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.