Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வரதட்சனைக்கு முன் வரையறைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனது கிறுக்கல் –( facebook இல் லொள்ளு விடும் ஆண்களுக்கு சமர்ப்பணம்)

 

வரதட்சனைக்கு முன் வரையறைகள்

 

ராத்திரி  நான்  படுக்க  போக முதல்  "நாளைக்கு எனக்கு ஒரு முக்கியமான  நாள் " எண்டு facebook  இல    message  ஒண்டு போட்டிட்டுத்தான்   படுத்தனான்  , என்ன காரணம் என்று போட  நிறையத்தயக்கம் அது என்னவாயிருக்கும்  எண்டது  உங்களுக்கு விளங்கும் எண்டு நினைக்கிறன் , சும்மா சொல்லகூடாது  பாருங்கோ நான்  “இனிய காலை வணக்கம்” எண்டு  ஒரு  மெசேஜ்  போட்டாலே  அதுக்கு குறைஞ்சது  நூ று  லைக்ஸ்  உம்  ஒரு  பத்து comments  உமாவது  வரும் , இன்றைய நாள்  இனிய  நாளாகட்டும் எண்ணுவினம்  , ரண்டு  வரிலை கவிதை எழுதுவினம் , சினிமப்பாட்டில இருந்து சில வரிகளை எடுத்து விடுவினம் ...அதுவும்  இரவில ‘குட் நைட்’ எண்டு போட்டிட்டு  படுத்திடுவன்  அதுக்கு வாற comments எண்டால் அது இன்னும் ஒருபடி மேல  .....தலையணை  ஆக நான் வரவா ,போர்வையாக இருக்கட்டுமா , கட்டிலாக .....மெத்தையாக எண்டு நீண்டு கொண்டே போகும் ....உப்பிடி comment  போட்டவையளை  அடுத்த  நாளே block பண்ணி தூக்கிப்போடுவன்....எனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது எண்டு என்ர  friends எல்லாருக்கும் தெரிய வைச்சிட்டன்...... எனக்கு கதை கவிதை இலக்கியம் பிடிக்கும் எண்டது எல்லாருக்கும் தெரியும்  , இது எல்லாம் சரியோ பிழையோ எண்டது  எனக்குத்தெரியாது  ஆனால் இப்பிடி எங்கட கருத்துக்களுக்கு  like போடிறது  comment  பண்ணிறது  எங்களை அறியாமலே ஒரு மகிழ்சியையும் புத்துணர்ச்சியையும்  நாலு  பேர் இருக்கினம் எண்ட ஒரு மன நம்பிக்கையையும் தருது , நான்  facebook பைத்தியம் எண்டெல்லாம் இல்லைப்பருங்கோ  ஆனால் அதுக்குள்ளதான் அடிக்கடி இருக்கிறன் , திருப்ப  விசயத்துக்கு வருவம் இண்டைக்கு  காலமை facebook க்கை  திறந்தால் நூறு  comments க்கு மேலை .....என்ன  கேட்டிருப்பினம் எண்டு உங்களுக்கு  விளங்கும்  தானே , ..........
 மேக்கப் ஒரு பக்கத்தாலை  நடந்து கொண்டிருக்குது  நான் comments ஐயும் கண்ணாடியையும்  மாறி  மாறி பத்துக்கொண்டிருக்கிறன்

 

*************************************************************************************

யன்னல் கதவை மெதுவா நீக்கி வாறவயளை  வடிவா நோட் பண்ணினன்  , நிச்சயமா அவன் (ர் ) என்ர கனவுக்கண்ணனில்லை ஆனால் பாக்க வாட்ட சாட்டமாய்  இருந்தாலும் கருமாந்திரம் அந்த கறுத்த கூலிங் கிளாஸ்  கண்ணாடி முகத்தை வடிவா பாக்க விடாமல் முன்னுக்கு நிக்கிறமாதிரி கிடக்குது , தாயும் தகப்பனும் ரண்டு பக்கமும் உடையாரின்ர மிடுக்கில நடந்து வரினம் , ஆம்பிள பிள்ளைய பெத்தவயளல்லே  மிடுக்கு இருக்கத்தானே செய்யும் ,.....வந்திச்சினம் உள்ள இருந்து சம்பிருதாய பூர்வமான கதைகள் நடக்கிது ... அம்மா இரவிரவாய் ,எப்பிடி நடக்கோணும் , எப்பிடி கதைக்கோணும் எண்டொரு பெரிய லிஸ்ட் தந்தவ  , அதுமாதிரி நடிக்கிறது எப்பிடி எண்டு டென்சன்ல  இருக்கிறன்  'என்ன செய்யிறது  அப்பா  அம்மா கை காட்டிறவனுக்கு  கழுத்தை நீட்டிற கண்றாவியான கலாச்சாரத்தில அல்லே பிறந்திட்டம்.

பொம்பிளைய கூட்டி வாங்கோ,  யாரோ சொல்லிக் கேள்க்கிது  சித்தி வந்து என்னைக்  கூட்டிக்கொண்டு போய் ..............வழமையான  சம்பிருதாயங்கள்  நடந்து கொண்டிருக்குது ...நானும் அம்மா சொல்லித்தந்த  மாதிரியே நடந்து ,ச்சீ நடிச்சுக்கொண்டிருக்கிறன்  , குனிஞ்சு கொண்டே இருந்து  கழுத்து வலிக்குது.  சித்தி வந்து காதுக்கை  சொன்னா மாப்பிளை உன்னோட  தனியா கதைக்க  வேணுமாம்..... சினிமாப்படம் பாத்து வந்த புது வழக்கம், எதிர்பார்த்ததுதான்  ஓம் எண்டு தலையாட்டினன் ,
Hall இல எதிரும் புதிருமா நாங்கள் ரண்டு பேரும் மட்டும் தான் .....செருமிக்கொண்டு அவர் முதல் கேள்வியை  கேட்டார் ...சமைக்கத்தெரியுமே ....ம்    ....பாடத்தெரியுமே  ....கொஞ்சம் .....வேற என்ன இந்த  தமிழ் சினிமாவில வாற அதே கேள்வியள் .தான் .....சா  ஒரே குட்டையில ஊறின மட்டையள் தான் சினிமாக்கு வெளியில போய் நாலு சிந்தனையான விசயம் ஒண்டும்  தெரியாததுகள்  எண்டு என்ர  மனம் சொல்லிகொண்டிருக்க  திடீர் எண்டு ஒரு கேள்வி  .......உமக்கு  facebook இல account இருக்கே , ..... ஓம் எண்டு தலையாட்டினன் ......  இல்லை அந்த facebook  account  டை ...... close  பண்ண ஏலுமோ ........  நான் திகச்சுப்போனன் ,
ரண்டு கண்களையும் அகல விரிச்சுக் கொண்டு அவரின்ர முகத்தை ஒருக்கா  நிமிர்ந்து பார்த்தன் ....அப்ப தான் முகத்தையும் பாக்க சந்தர்ப்பம் கிடச்சுது , கண்றாவி அந்த கூலிங் கிளாஸ் தான் பளிச்செண்டு தெரியுது ....இல்லை  குறைஞ்சது  அதில  உள்ள  ஆம்பிளையளின்ர  contacts எல்லாத்தையும்  block பண்ண  ஏலுமோ .......ஒரு மாதிரி சமாளிச்சுக்கொண்டு ஓம் எண்டு தலையாட்டினன்   thanks என்றவர் சரி  நீங்கள்  போற எண்டால் போங்கோ எண்டார் ...என்னைப்பிடிச்சிருக்கோ ...என்னட்டை  ஏதும் கேக்க இருக்கோ என்று கேப்பார் என்று எதிர்பார்த்திருந்த  எனக்கு  கொஞ்சம்  ஏமாற்றம் தான் ஆணாதிக்க பரம்பரையில் இருந்து வந்த இதுகளுக்கு பொம்பிளையளுக்கும் மனசு எண்டு ஒண்டு இருக்கு எண்டு எங்கை விளங்கப்போவுது , பேசாமல் என்ர அறைக்கு போட்டன் ....கண்ணைக்கட்டி  காட்டில விட்டதுபோல ஒரு உணர்ச்சி ......இந்த  இடவெளிக்குள்ள இன்னும் பத்துக்கு  மேல  comments ,........... இந்த facebook கை எப்பிடி close பண்ணிறது ....தலையே  வெடிச்சுடும் போல  கிடக்கு .......

அவை எல்லாம் போனாப்பிறகு அம்மா அறைக்க வந்து சொன்னா ,     உடனடியா உந்த  பேசுப்புக்காம் அதை மூடிப்போடு , அதை அவை கட்டாயம் எண்டு சொல்லிப்போட்டினம் ...சரியே  ..சீதனம்  தான் கொஞ்சம் கூடக்  கேக்கினம் ,இறங்குவினம்  போல கிடக்கு
சரியே .......  நான் ஓமம்மா அதை மூட ரண்டு நாள் எடுக்கும் எண்டு சொல்லி சம்மளிச்சு போட்டன் ....

**********************************************************************************************************

 

என்ர facebook கதையை நான் சொல்லித்தான் ஆகோணும் பாருங்கோ , நான் A/L படிக்கும் போதே தெரியும் கன பேர் கதைப்பினம் ஆனால் எனக்கு அதில அக்கறையில்ல படிப்பு படிப்பு இதுதான் முருகேசு வாத்தியாரின்ர மோளுக்கு எண்டுசொல்லிற அளவுக்கு படிச்சன். ஒரு மாதிரி arts இல entrance கிடைச்சிட்டுது , campus ராக்கிங் timeல அண்ணாமார் என்னடி உன்ர facebook id எண்டு கேட்டாங்கள். சத்தியமாய் அண்ணை எனக்கு அப்பிடி ஒண்டுமில்லை எண்டதுக்கு அவங்கள் என்னை கம்ப்யூட்டர் room க்கு கூட்டிபோய் ஒரு ஈமெயில் address ம் திறந்து Facebook id யும் create பண்ணி தந்திட்டாங்கள் ,. அவங்களே தங்கடை friends எல்லாரையும் recommend பண்ணி ஒரு கிளமேயிலையே நூறுக்கு மேல friends  ...( அதுக்கு பிறகு அவையள் கதை வளர்ப்பினம் அப்பிடியே என்னைப்பிடிச்சிருக்கா அவனைப்பிடிச்சிருக்கா எண்டு கேட்பினம், நான் எனக்கு ஒரு சீனியர் அக்கா ஒராள் சொல்லித்தந்த technic ஒண்டை use பண்ணினன் , எனக்கு கனடாவில முறை மச்சான் இருக்கிறான் எப்பவோ fix பண்ணியாச்சு எண்டு சொல்லி chapter இனை close பண்ணிடுவன் , சரி facebook கதைக்கு வாங்கோ) .நான் இதை என்ர friends க்கு சொன்னன் அவளுகள் ஒரு நக்கல் சிரிப்பு சிரிச்சுப்போட்டு எனக்கு இரண்டாயிரம் அவளுக்கு மூவாயிரம் friends உனக்கு நூறோ , எனக்கு ஒரு அவமானம் மாதிரி கிடந்துது , தன்மானப்பிரச்சனை மாதிரியாப்போட்டுது... என்ர Facebook தொடங்கேக்குள்ள ஒரு பூவின்ர படம் தான் போட்டு திறந்தவை.அப்பதான் எனக்கு சொந்தமா ஒரு போட்டோ எடுத்து அதில போடவேணும் எண்டு ஒரு ஆசை வந்துது ,....மாமா கனடாவில இருந்து அனுப்பின கமெராவில தம்பியைக்கொண்டு ஒரு நூறு shots க்கு மேல எடுதிருப்பன் அதில எங்கட பூந்தோட்டத்தில நிண்ட செவ்வரத்தம் பூவுக்கு முன்னுக்கு நின்டு பூவைக்கையால பிடிசுக்குகொண்டு அதை பார்த்துக்கொண்டு எடுத்த site போஸ் ஒண்டு அந்த மாதிரி வந்துது ,சொன்னா நம்ப மாட்டீங்கள் பாருங்கோ சிவப்பு கலர் சட்டையில வந்த அந்த போட்டோ நடிகையள் மாதிரி இருந்துது , நானும் சராசரி பொப்பிளை தானே அழகாக காட்டிறது ஆருக்குத்தான் விருப்பமில்லை.......அவளவள் நடிகையளின்ர படத்தைப் போட்டு காட்டுகிறாகள் நான் சொந்தப்படத்தை வடிவா போடிறதில என்ன தப்பு .......அந்தப்படத்துக்கு பிறகு எனக்கு ஒவ்வொருநாளும் புதுப்புது நண்பர்கள் , தினசரி ஒரு சின்ன கவிதை ஒரு தத்துவம் இப்பிடி .......அதை எப்பிடி சொல்லிறது எண்டு தெரியல  ........சொன்னா நம்புவீங்களோ எனக்கு இப்ப மூவாயிரம் friends ..........இப்ப இந்த facebook account இனை close பண்ணிறது என்றால் ....கலியாணம் கூட வேணாம் போல்..... சே கலியாணம் இல்லையெண்டால் பிறகு...........
என்ர facebook இனை மூடப்போறன் எண்டு ஒரு மெசேஜ் போட்டிட்டு நித்திரைக்கு போகிறன் .... அடுத்த நாள் அம்மா சொல்லிக்கேட்குது கலியாணம் குளம்ம்பிப் போச்சுதாம் உந்த பேசுப்புக்குதான் எல்லாத்தையும் கெடுத்துப் போட்டுதாம் எண்டு புலம்பிக்கொண்டிருக்கிரா  ....காணாத குறைக்கு என்ர சித்தியும் தன்ர ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில anounce பண்ணிட்டா போல ஊரெல்லாம் இதுதான் பேச்சு......

******************************************************************************************************************

(இதோட கதைய முடிச்சால் facebook வைச்சிருக்கிற பெட்டையளின்ர அம்மா மார் எல்லாரும் சேர்ந்து சங்கம் அமைச்சு சமாதி கட்டிப்போடுவினம் facebook க்கு , கதையை வேற மாதிரி திருப்புவம்)

 

*************************************************************************************************

 

முக்கியமான  நாள்  எண்டு போட்டதுக்கே  அண்டைக்கு  அத்தினை  comments  எண்டால் facebook மூடப்போறனென்ண்டால்  எத்தினை  comments  வந்திருக்கும் எண்டு சொல்லவே  வேணும் .........ஏன்  எதுக்கு எண்டு  ஆயிரக் கணக்கில   கேள்விக்கு மேல கேள்விகள்  ........என்னை  மறந்திடாதையுங்கோ  எப்பவேணும்  எண்டாலும்  இந்த  ஈமெயில் இலையோ  அல்லது இந்த  போன் நம்பர் இலையோ  தொடர்பு  கொள்ளுங்கோ ...........எதுக்கும்  சலிக்காமல்  முடிஞ்சளவு  எல்லாத்தையும்  வாசிச்சுக்கொண்டு  போனன் ...அதில  ஒண்டு  personal message தவறாமல் வாசிக்கவும்  எண்டு ஒரு நீளக்கட்டுரை  மாதிரி கிடந்துது ..இதை விட்டிட்டு சின்னனாய் எழுதின message சுகளை  பாப்பம்  எண்டு  அடுத்துக்கு போவம் எண்டு நினைக் கேக்கை ஏதோ உள்மனம்  அதை  வாசிச்சு பார் எண்டுது .........சரி  ஒருக்கால் வாசிச்சுத்  தான் பாத்திடுவமே  எண்டு போய் வாசிச்சன் ..............

என்னை உங்களுக்கு ஒரு facebook நண்பராக மட்டும்தான் தெரியும் ஆனால் எனக்கு உம்மை உங்கடை குடும்பத்தோடை  முழுமையா  தெரியும். நான்  உங்கட அல்பங்களை  பார்க்கும் போது நீர்   முருகேசு மாஸ்றரின்ர மகள் எண்டு தெரிஞ்சுது ..ஆனால்  நான் உடனை அதை உமக்கு காடிக்கொள்ளவில்லை , facebook  இல மிகவும் புர்ந்துணர்வுடன்  கருத்துப் பரிமாரிகொண்டிருந்தன் ...மற்றவையை மதிக்குற உம்மட குணம் கருத்தைக்  கருத்தால் கருத்தாடும் உமது திறமை புதுமைபெண்ணாக இருக்க வேண்டும் என்ற உமது முனைப்பு ...இப்படி எனக்குப் பிடித்த பல குண ங்கள் உம்மட்ட இருக்குது. நானும் உங்கடை ஊர் தான் சிவசம்பு மாஸ்டரின்ர மகன் , உங்கடை  அப்பாவும்  என்ர அப்பாவும் அந்தக் காலத்து நண்பர்கள். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே அப்பாவுக்கு கண்டிக்கு  மாற்றல் கிடைச்சு அங்கையே நிரந்தரமா இருந்திட்டம். எனக்கு பெரதேனியா campus கிடைச்சு படிச்சு முடிச்சதுக்குப்  பிறகு migrate பண்ணி  கனடாவுக்கு  வந்திட்டன்.

உம்மை  எனக்கு நல்லாய்  பிடிச்சிருக்கு ஆனால் உமக்கு  என்னை  பிடிச்சிருக்குமோ  எண்டது  தெரியேல்லை ........யோசிச்சுப்போட்டு  சொல்லும் .....அதோட  உம்மட எதிர்பார்ப்புகள் என்ன .......கனடாவுக்கு  வர்றதுக்கு  சம்மதமா ...விபரமாக நான் கீழே கொடுத்துள்ள ஈமெயிலுக்கு  பதில் போடும் .......உமக்கு எல்லாம் ஓகே எண்டால் நான் என்ர அப்பா அம்மவையைக்கொண்டு  உங்கட அப்பா அம்மவையோட பேசச்  சொல்லிறன் ...நீர் ஓம்  எண்டு  சொன்னீர் எண்டால்  உம்மைப்போல  ஒரு  girl  கிடைக்க நான் அதிஸ்டசாலி எண்டு தான் சொல்ல வேணும் ..

உமது முடிவை எதிர்பார்த்து

இளங்கோ

அட பாவி மகனே என்ரை எதிர்பார்ப்பு என்ன ,எனக்குப் பிடிச்சிருக்கே எண்ட கேள்வியளுக் காவது நாயா பேயா இருந்தாலும் உன்னை கட்டிபோடலாமடா .......சிவசம்பு  மாஸ்டர் எப்பிடி ஒரு உத்தமர் எண்டு அடிக்கடி அப்பா சொல்லிறவர்  ..............இளங்கோ என்னோட  facebook இல எவ்வளவு பண்பாடா கதைக்கிறவர்  நான் அவரில வச்சிருந்த மதிப்பு ...........இல்லை எண்டா சொல்லுவன்  எண்டு  நினைக்கிறியள் ..............................................

அடுத்த ஆவணிக்கு நாள்க்  குறிச்சாச்சு .......facebook கையும்  மூட வேண்டி  வரேல்லை ....இப்ப எனக்கு  கல்யாணக் கல்யாணக் கனவு எண்டு வாற  நெஞ்சினிலே  நெஞ்சினிலே எண்ட ரஹ்மானிண்ட பாட்டுத்தான் ஒலிச்சுக்கொண்டிருக்கு ....என்ன ஒரு  அருமையான இசையைப் போட்டிருக்கிறார்  எண்டது  இப்பதான் விளங்குது ..............................Rahman you are Great , Face book you too………

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.