Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமது தற்போதைய அரசியல் அலசல்கள்

Featured Replies

  நமது தற்போதைய அரசியல் அலசல்கள்

 

 

 

புலிகள் தவிர தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் எந்த தனிநபரோ அமைப்போ கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்ததில்லை. பேரம் பேசும் வல்லமையை வளர்த்துக்கொண்டதும் இல்லை. சிங்கள அரசுடன் பேசும் போதும் தமிழீழம் என்ற கொள்கையை விட்டு புலிகள் இறங்கியதேயில்லை. முழுப்பேச்சுமேசைகளும் அதைச்சுற்றியதாகவே இருக்கும்.

'தேசிய நலனுடன் ஒத்துப்போகும் வரை உடன்படிக்கைகள் மதிக்கப்படுகின்றன" என்ற நெப்போலியனின் கூற்றையும் 'நான் எந்த உடன்படிக்கையிலும் கைச்சாத்திட எப்போதும் தயாராக உள்ளேன். ஏனென்றால்அதை முறிக்காமல் விலக எனக்குத் தெரியும்" என்ற கிட்லரின் கொள்கையையும் பிரபாகரன் இறுகப்பற்றியபடியே பேச்சு மேசைகளில் பங்கெடுத்தார்.

ஆனால் அன்றும் சரி இன்றும் சரி சிங்கள அரசுடன் பேசுபவர்கள் எல்லோருமே செய்யும் அரசியல் இதுதான். அவல, அடிபணிவு, ஒப்படைவு, சந்தர்ப்பவாத மற்றும் சரணாகதி அரசியல்.

யாருமே புலிகளைப்போல் எதிர்ப்பு அரசியல் செய்யத்தயாரில்லை. வேறு மொழியில் சொன்னால் எதிர்த்து அரசியல் செய்யப் பயம் அல்லது செய்யத் தெரியாது என்று சொல்லலாம். பிறகு எப்படி மக்கள் நம்புவார்கள்?

அதுதான் இன்னொரு பிரபாகரனுக்காக காத்திருக்கிறார்கள். அல்லது தாம் ஒவ்வொருவரும் பிரபாகரனாக மாறுவது குறித்து தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

------------------------------------------------------------------------------------------------------

 

 

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு அரசியல் செய்யும் ஒவ்வொரு தரப்பும் தம்மளவில் தாம் செய்ய முற்பட்டிருக்கும் அரசியலே சரியானது என்று எண்ணத் தலைப்பட்டிருக்கிறார்கள். மற்றவர்கள் இன்னொரு அழிவுக்குக் கொண்டே விட்டு விடுவார்கள் என்று நம்பவும் தொடங்கிவிட்டார்கள்.

சாத்தியம், பொருத்தப்பாடு, தர்க்கம், அறம் எதுவும் இவர்களை இயக்கவில்லை. சிதைந்துபோன உளவியலே இவர்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. இதை வேறு ஒரு மொழியில் கூறினால் முள்ளிவாய்க்காலில் வைத்துப் பேரழிவுடன் குருரமான முறையில் வீழத்தப்பட்ட எமது போராடத்தினது தோல்வியும் அவலமுமே இவர்களின் அரசியல் மையமாக இருக்கிறது.

சக அரசியல் செயற்பாட்டாளர்களின் மீதான சேறடிப்புக்களின் அவதூறுகளின் மையமாகவும் இந்த ஊனமுற்ற உளவியலே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஊனமுற்ற உளவியலிலிருந்து முழுமையான அரசியல் பிறக்க முடியாது. இது சந்தர்ப்பவாத, அடிபணிவு, அவல அரசியலின் ஒரு வடிவமாகவே இருக்க முடியும். இந்த அரசியல் ஆரோக்கியமானதல்ல.

நாங்கள் தோற்கடிக்கப்பட்டது உண்மை. பெரும் அவலம் நிகழ்ந்ததும் உண்மை. விளைவாக மக்கள் போராட்டத்திலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டதும் உண்மை. அதற்காக இவற்றை மையப்படுத்தி எமது எதிர்கால அரசியலைத் தீர்மானிக்க முடியாது. வரும்கால சந்ததிக்கு இந்த அவல அடிபணிவு அரசியலிலிருந்து எதுவுமே கிடைக்கப்போவதில்லை.

இது ஒரு வரலாற்றுத்தவறாக மாறிவிடும்.

இப் புற யதார்த்தத்தின் அடிப்படையில்தான் நாம் பூகோள – பிராந்திய அரசியலை மையப்படுத்திய ஒரு நகர்வினூடாக எமது அடுத்த கட்ட அரசியலை கொண்டு செலுத்த வேண்டும் என்றும் கூறி வருகிறோம்.

அதன் முதற்படி முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய இனப்படுகொலைகளிலேயே மையங்கொண்டுள்ளது. எமது அடுத்த கட்ட அரசியல் என்பதே இந்த இனப்படுகொலையை அம்பலப்படுத்துவதும் அதன் மூலம் எமக்கான நியாயத்தை சர்வதேசத்திடம் கோருவதுமாகும்.

 

------------------------------------------------------------------------------------------------------------------------

 

"பிரபாகரன் சிறந்த போராளி, மாவீரன். அவர் தன் மண் மீதும் மக்கள் மீதும் பாசம்கொண்டவர். ஆனால்இ அவர் ஓர் நல்ல அரசியல்வாதி அல்ல" என்று ஒருமுறை சிங்கள இடதுர்சரி ஒருத்தர் கூறினார்.

உண்மைதான்..அவர் ஒரு அரசியல்வாதி இல்லைத்தான்.. ஏனென்றால் அவருக்கு நடிக்கத்தெரியாது. உள்ளொன்று வைத்து வெளியாக ஒன்று பேசத்தெரியாது. எதையும் நேர்பட பேசவே தெரியும்.

கியூபா விடுதலை அடைந்தபோது கஸ்ரோ சேகுவேராவை பெரும் பொறுப்பில் அமர்த்த முற்பட்டபோது சே கூறியது இது " நான் போராளி. எனக்கு அரசியல்வாதியாக இருக்க தெரியாது".

மே 16 ம் திகதி நள்ளிரவு கடைசி நேர தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைத்து தலைவரை வற்புறுத்திய போது தலைவர் நந்திக்டலை நோக்கி செல்லமுன்பு சக போராளிகளுக்கு கூறிய வாசகமும் இதுதான். "நான் போராளி. அரசியல்வாதி இல்லை"

சேகுவேரைவைப்போல் தலைவரை வரலாற்றில் நிறுத்திய வாசகம் இதுதான்.

இப்போது சம்பந்தர் கும்பல் பண்ணுகிற அலப்பறைகளை பார்க்கும்போது தலைவரின் வெற்றிடம் எற்படுத்துகிற யதார்த்தம் பேயாய் அறைகிறது.

--------------------------------------------------------------------------------------------------------------

 

கிழக்கு மகாணசபை தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு போட்டியிடுவது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற கோட்பாட்டை நீர்த்து போகச்செய்யும் என்பதுடன் சிறீலங்கா இந்திய நிகழ்ச்சி நிரலுக்குள் செல்லும் அபாயம் இருப்பதாகவும் பலரும் சுட்டிக்காட்டிய பின்னரும் சிழக்கு தேர்தலில் பல காரணங்களை சொல்லி களமிறங்கியது கூட்டமைப்பு.

தற்போது வடக்கு மகாணசபை தேர்தல். இதிலும் தமிழ்சிவில் சமூகம் மற்றும் புலம்பெயர் பிரதிநிதிகள் பல விடயங்களை சுட்டிக்காட்டியும் அதை கணக்கிலெடுக்காமல் தன்னிச்சையாக இயங்குகிறார் சம்பந்தர்.

கட்டமைக்கப்ட்ட இன அழிப்பை தடுக்க வேண்டும் என்ற ஒற்றை காரணத்திற்காகவே அரைகுறை மனதுடன் அதற்கு பலரும் உடன்பட்டுள்ள சூழலில் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த கணத்தில் கூட்மைப்பினர் தமக்குள்ளாக ஆசனங்களை பங்கிடுவதற்காக குடுமி சண்டைபோட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழீழ விடுதலையை "வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் யார் ?" என்று தமக்குள்ளேயே குடுமி சண்டை போடும் அளவிற்கு குறுக்கிவிட்டிருக்கிறார் சம்பந்தர்.

இவர்களை நம்பி நாம் எப்படி மக்களின் விடுதலையை வென்றெடுக்கப்போகிறோம்?

ஒன்று மட்டும் புரிகிறது. தேர்தல் அரசியலை தாண்டி மாணவர்களிடம் இருந்தும் மக்களிடம் இருந்தும் ஒரு தலைமை உடனடியாக உருவாக்கப்பட வேண்டும். அதுவே மக்கள் விடுதலையை சாத்தியப்படுத்தும்..

 

----------------------------------------------------------------------------------------------------------------------

"புலிகளின் போர்க்குற்றம்"

எங்கெல்லாhம் நாம போய் நடந்த இன அழிப்பை பேசுகிறோமோ அங்கு எம்மிடம் இறுதியாக கேட்கப்படும் கேள்விகள், "புலிகள்கட்டாய ஆட்சேர்ப்பு செய்யவில்லையா? மக்களை பணய கைதிகளாக வைத்திருக்கவில்லையா? தப்பியோடிய மக்களை புலிகள் சுடவில்லையா?" என்பவைதான்..

தற்போதும் ஒரு இக்கட்டான சூழலில் இந்த கேள்விகளை நாம் எதிர்கொள்ள நேர்ந்தது.

அது குற்றங்கள் அல்ல. அது ஒரு சூழலின் விளைவுகள். அதிலிருக்கும் தர்க்கங்கள் தெளிவற்றவை. ஒரு இன அழிப்பு நோக்குடன் ஆக்கிரமிக்கும் அந்நிய படையின் செயல்களையும் அந்த மக்களை காக்க அந்த அந்நிய படைகளை எதிர்த்து ஆயுதம் எந்திய பிரதிநிதிகளையும் சமப்படுத்தி ஆராய்வதே அடிப்படை தவறு.

தூரத்தில் இருந்தாலும் அந்த களச்செயற்பாடுகளுடன் மிக நெருக்கமாக உறவைப்பேணியவன் என்ற முறையில் பல விடயங்கள் எனக்கு தெரியும். எமது பின்னடைவு எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் நடந்த நிகழ்வுகளை திரிப்பதற்கு வசதியாக மாறிவிட்டிருக்கிறது.

எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் மத்தியில் சிறீலங்கா, இநதியா அமெரிக்கா உட்பட பெரும் இராணுவ - அரசியல் வலையமைப்புக்கு எதிராக போராட வேண்டியிருப்பதை உணர்ந்து யாரும் தமக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள் என்பதை கண்டறிந்து எதிரிகளை மக்களின் பலத்துடன் தமது மண்ணில் வைத்து அழித்தொழிப்பு செய்து ஒரு இராணுவ வெற்றியை அடைவதுதான் ஒரே தீர்வு என்பதை உணர்ந்து முன்பு கிளிநொச்சியையும் பின்பு அனந்தபுரத்தையும் ஒரு ஸ்ராலின்கிராட்டாக மாற்ற புலிகள் முயன்றார்கள்.

அதன் பின்புலம்தான் காலத்தின் தேவை கருதி கட்டாய ஆட்சேர்ப்புக்களாகவும் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய குறைவான பயிற்சிகளுடன் களமுனைக்கு ஆட்கள் அனுப்பட்டதும் அதில் சில அசம்பாவிதங்களும் இதன் வழியேதான் நிறைவேறியது.

ஆனால் உள்ளிருந்து வேரறுத்த துரோகங்களும் சர்வதேச படைவலு கட்டமைப்புக்களின் இராணுவ- ராஜதந்திர- தொழில்நுட்ப உதவிகளும் சிறீலங்கா படுகொலை அரசிற்கு பெரும் பக்கபலமாக ஒன்றிணைந்து நின்று தமிழர் சேனையை எதிர்த்து போரிட்டன.. அந்த சின்னஞ்சிறிய படை இதற்கு மேல் என்ன செய்ய முடியும்.?

விளைவாக "செய் அல்லது செத்துமடி" என்ற ஓர்மத்துடன் இறுதிவரை போராடி வீழ்ந்தார்கள் அந்த மண்ணில் புலிகள்..

ஆனால் மனித உரிமை, போர்க்குற்றம் தொடர்பான இடங்களில் இதை பேச முடியாது. அதற்கு வேறு மொழியும் வேறு வகையான தர்க்கங்களும் வைக்கப்பட வேண்டும். நாம் அதை வைப்போம் - பேசுவோம். நீதி கிடைக்கும் வரை பேசிக் கொண்டேயிருப்போம். ஏனென்றால் ஒரு மக்கள் விடுதலை அமைப்பையும் ஒரு இன அழிப்பு அரசையும் ஒரே தராசில் வைத்து மதிப்பிட முடியாது.

புலிகள் போராட்டத்தின் தேவையையும் நீதியையும் நிலைநிறுத்துவதுதன் மறுவளமான உண்மை என்பது அங்கு நடந்தது ஒரு இனஅழிப்பு என்பதாகவே இருக்கும். அதைவிடுத்து புலிகளின் குற்றங்களையும் இன அழிப்பு அரசின் குற்றங்களையும் சமப்படுத்தினால் அது எமக்கு பாரிய பின்னடைவை தரும். சில தமிழர்கள் இந்த அயோக்கியத்தனத்தை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

மற்றவர்களுக்கு புரிய வைக்க முன்பாக நாம் எமக்காக போராடியவர்களின் நியாயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

இது குறித்து முகநூலில் முன்பு Enemy at the Gates படத்தை முன்வைத்து ஒரு பதிவை எழுதியிருக்கிறேன்.

உலக சரித்திரத்தையே மாற்றியமைத்த வரலாறு Stalingrad நிலத்தில் வைத்து எழுதப்பட்டது நாம் அறிந்ததே.. இந்த பின்புலத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் அது. என்ன செய்வது சினிமாவை உதாரணமாகக் காட்டினால்தான் சிலருக்கு விளக்கமே கிடைக்கிறது.

ஆக்கிரமிப்பாளர்களை என்ன விலை கொடுத்தாவது துரத்தியடிக்க வேண்டும் என்பதற்காக பெரும் அழிவுக்கு மத்தியிலும் போராட முற்படும் ரஸ்யா தனது நாடு முழுவதிலிருந்தும் ஆட்களை வலுக்கட்டாயமாக போர் முனைக்கு கொண்டுவருவதும் எந்த பயிற்சியுமில்லாமல் போதிய ஆயுதங்கள் கூட இல்லாமல் அவர்களை கள முனையில் இறக்குவதும் மிகவும் தத்ருபமாக காட்சிப்படுத்தப்ட்டடுள்ளது. மீறி தப்பி ஓடுபவர்களை ரஸ்ய வீரர்கள் "தாய்நாட்டை காக்காமல் ஓடும் நீ வாழத் தகுதியற்றவன்" என்று சுட்டுக்கொல்லும் காட்சிகளும் நேர்மையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி சோர்க்கப்பட்ட ஒரு இளைஞன் காலத்தின் தேவை கருதி போர் முனையில் ஆக்கிரமிப்பாளர்களை துரத்தியடிக்க துணிச்சலுடனும் அhப்பணிப்புடனும் செயற்படுவதை விபரிப்பதே இத் திரைப்படத்தின் மையக்கதை.. வெற்றியின் பின்னால் இத்தகைய கதைகள் ஏராளமாக இருப்பதை உணர முடிகிறது.

வன்னி இறுதிப்போரிலும் புலிகள் குறித்து இங்கு வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் "stalingrad" இல் ரஸ்ய வீரர்களின் செயற்பாட்டிற்கு ஒப்பானது. வெற்றி பெற்றதால் அது வரலாறாகியது. இங்கு தோற்றுப்போனதால் குற்றங்களாக மாற்றப்பட்டுள்ளன.

இறுதிக்காலத்தில் புலிகள் மீது வைக்கப்படும் குற்றங்களின் உளவியல் இந்த பின்புலத்திலேயே ஆராயப்பட வேண்டும். நாம் ஏற்கனவே தெளிவாக இந்த உளவியலை ஆய்வு செய்திருக்கிறோம். அதை வரலாற்றில் பதிவாக்குவோம். எமக்காக போராடியவர்கள் மீதான குற்றங்களை களைய வேண்டியது நமது கடமை. நிச்சயம் அதைச் செய்வோம்.

இது புலிகளைப் புனிதப்படுத்துவதற்காக அல்ல - எமக்கான நீதியை பெற நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய தார்மீக கடமை இது.

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------

 

நுட்பமான கணிப்பு..

ஒரு சிங்கள நணபர் சில மாதங்களுக்கு முன்பு சொன்ன கதை இது.

வன்னிப்போரின் இறுதிநாட்களில் தமிழக எழுச்சி சிங்கள ஆட்சியாளர்களை ஏகத்திற்கும் பயத்திற்குள் தள்ளியிருக்கிறது. உடனே டெல்லிக்கு தொடர்பு கொண்டு இந்த அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

அதற்கு டெல்லியில் விழுந்து விழுந்து சிரித்தார்களாம். " யாரு தமிழக தமிழர்களை நினைத்தா பயப்படுகிறீர்கள்? இந்த ஆர்ப்பாட்டங்களை நாங்கள்தான் அனுமதித்திருக்கிறோம். ஒரு கல் போதும் இந்தக் கூட்டத்தை கலைக்கிறதற்கு.. ஒரு சாதிக்காரனை கொண்டு இன்னொரு சாதிக்காரனுக்கு கல்லெறிய வைக்க இந்தக்கூட்டம் தானா கலையும் " என்று சொல்லி சிரித்தார்களாம்.. எவ்வளவு நுட்பமான கணிப்பு.. இதை நான் முன்பு நம்பவில்லை ..

தற்போது தமிழகத்தில் நடக்கும் கூத்துக்களைப் பார்த்தால் முழு உலகமுமே நம்பும்..

 

பரணி கிருஸ்ணரஜனி

முகநூலில் இருந்து எடுக்கப்பட்டவை

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.