Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராட்சி கிழக்கில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் சங்கு பிடிப்பதால் மீனினம் அழிந்து வருகிறது

Featured Replies

 

aliyawalai-2-150x150.jpgமணற்காடு தொடக்கம் சுண்டிக்குளம் வரைக்கும் நீண்டு செல்கின்ற வடமராட்சிக்கிழக்கு பெருங்கடல் ஏறக்குறைய 30 கீலோமிற்றர் ஆகும். இந்தக் கடலை நம்பி சுமார் 4000 மீனவக் குடும்பங்கள் வாழ்கின்றனர். தற்போது நாளாந்த உணவைக்கூட பெறுவதில் கடும் கஸ்ரப்படுகின்றனர். பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே தமது ஐPவனோய தொழிலை மேற்கொள்ளவேண்டிய நிலை உள்ளது.

தைமாதம் தொடக்கம் மார்கழி மாதம் வரைக்கும் எந்தெந்த மீன் எந்த மாதத்தில் அதிகளவில் பிடிபடும் என தொழிலாளர்கள் தெரிந்து அதற்கேற்றவாறு தொழிலை மேற்கொண்டு வந்தார்கள்.  ஆனால் யுத்தம் முற்று முழுதாக முடிவடைந்து இலங்கை பாதுகாப்பு படையினர் இலங்கையின் அனைத்து இடங்களையும் கைக்கொண்டபின்னர் தென்னிலங்கையை சேர்ந்த சிங்கள முஸ்லீம் மீனவர்கள் வடமராட்சி கிழக்கு கடல் பகுதியில் அட்டை, சங்கு, மற்றும் ஏனைய பலதொழில்களில் இரவு பகலாக ஆயிரத்திற்கு மேற்பட்ட படகுகளும் பல ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றார்.

முன்னைய காலத்தில் இரவு அல்லது பகல் கடல் ஒய்வாக இருக்கும் இதன் காரணமாக மீன்கள் கரையை நாடிவருவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் காணப்பட்டது. ஆனால் தென்னிலங்கை மீனவர்கள் பகல் வேலைகளில் சங்கு,அட்டை போன்றவை பிடிக்கப்படாவிட்டால்; இரவு வேலைகளில் வெளிச்சம் கொண்டு கடலுக்கு அடியில் இவ்வாறான தொழிலை மேற்கொள்ளுகின்றார்கள். இவர்கள் தொழிலில் பயன்படுத்தப்படும் கடற் கலங்கள் நாள் முழுவதும் கடலில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இதனால் ஆழ்கடலில் இருக்கும் மீன்கள் கரையைநாடி வருவது குறைந்துள்ளது.

யுத்தத்தின் வடுக்களை சுமந்த மக்கள் தம்மிடம் ஏஞ்சிய தமது உடமைகளை விற்றுறே அல்லது அடைவுவைத்தோ பெற்ற பணத்தின் மூலமும், மற்றும் அரசசார்பற்ற சர்வதேச தொண்டு நிறுவனங்கள் கொடுத்த உதவிகளைக் கொண்டு தமது தொழில்களை மீளவும் ஆரம்பித்த நிலையில் மீண்டும் ஒரு துன்பம் அவர்களை சூள ஆரம்பித்தது.

உண்மையில் வடமராட்சி கிழக்கைப் பொறுத்த வரையில் நாளாந்தம் தமது ஐPவனோபாயத்தை ஈடுசெய்யக்கூடிய சூடவலை தொழிலையே பெரும்பாலானவர்கள் மேற்கொள்கின்றார்கள். ஒரு படகு இரவு தொழிலுக்குச் சென்று காலையில் கரைக்கு வருமானால் அதில் பத்திற்கு மேற்பட்டவர்கள் தமது நாளாந்த உழைப்பைப்பெற்று தமது தேவைகளை பூர்த்தி செய்கின்றார்கள் ஆனால் இப்போது கட்டுக்கடங்காத அளவுக்கு வந்துள்ள கணவாய் தொழிலால் இவர்கள் கடுமையாக பாதிப்படைகின்றார்கள்.  எவ்வாறு என்றால் கணவாய் பிடிப்பதற்காக சில வசதி படைத்த தொழிலாளர்கள் பிற இடங்களிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டுவந்து இங்கு வைத்துள்ளார்கள் இவர்கள் கணவாய் பிடிப்பதற்காக காட்டிலுள்ள மிகப்பெரிய மரக்கொப்புகளை வெட்டி அதனை கடலில்போடுகின்றார்கள்

கடலுக்கு அடியில் உர பைகளில் மண் நிரப்பப்பட்டு அதனுடன் கயிராலும் மரக்கொப்புக்களை இனைத்து கொப்புக்கள் கடல் மேல் மட்டத்தில் இருந்து ஒர் இருபாகம் தாழ்வாக கொப்புக்கள் மிதப்பதற்காக மிதப்புக்கள் போடப்பட்டிருக்கின்றன. இவ்வாறு போடப்படும் குழைக்கொப்புக்களால் தான் கணவாய் பிடிக்கப்படுகின்றது

வடமராட்சி கிழக்குக் கடல் நீர் ஒட்டம் கூடிய கடல் சூடவலை போன்ற வலைகளை தொழிலாளர்கள் கடலில் போட்டுவிடும்போது அவ் வலைகள் நீரோட்டத்தின் மூலம் கொண்டு செல்லப்பட்டு நிலையாக உள்ள கணவாய்க் குழையில் சாய்ந்து வலைகள் அறுந்து இல்லாமல் போகின்றது அல்லது சேதமாக்கப்படுகின்றது.  இப்போது ஒவ்வொரு நாளும் கடலுக்குச் சென்றுவரும் தொழிலாளர்களின் அவலக்குரல் இதுவாகவே இருக்கின்றது.

சில தொழிலாளர்கள் முற்று முழுதாக வலைகளை இழந்தும் உள்ளார்கள் மீண்டும் தொழிலை மேற்கொள்ளமுடியாது துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.தொழில்களை ஆரம்பிப்பதற்காக வங்கிகளிடம் கடன்களைப் பெற்றவர்கள் கடனைத் திருப்ப செலுத்தமுடியாது துன்பப்படுகின்றார்கள். கடனாளர்களைத்தேடி கிராமங்களுக்கு வங்கி ஊழியர்கள் வந்து போகிறார்கள் இந்த கட்டுக்கடங்காத கணவாய் குழைவைப்பை கடற்றொழில் சார்ந்த சமூக மட்ட அமைப்புக்களோ அரசாங்க தினைக்களங்களே இது வரை மக்களிடம் கருத்து பல முறைப்பாடுகள் கிடைத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றார்கள்.

கணவாய் தொழிலால் உண்மையில் ஒர் குடும்பம் அல்லது இரண்டு குடும்பங்கள் தான் பயன்பெறுகின்றார்கள். எனவே வடமராட்சி கிழக்கு மக்களுக்கு வந்துள்ள இந்த சாபக்கேடான கணவாய் குழைவைப்பை உரியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி உடன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டுமென்பதுதான் இப்பிரதேச மக்களின் வேண்டுகோள்.

http://www.thinakkathir.com/?p=51405#sthash.rrz3xzPO.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.