Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் சர்வதேச விசாரணை, 13 தீர்வல்ல முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

Featured Replies

வட மாகாணசபைத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்படுகொலை குறித்த சர்வதேச விசாரணை, 13 தீர்வல்ல என்பன உள்ளிட்ட விடயங்கள் முக்கியத்துவம் கொடுத்துச் சேர்க்கப்பட வேண்டுமென கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், பொதுச் செயலாளர் மாவை.சேனாதிராசா, முதலமைச்சர் வேட்பாளர் சீ.வீ.விக்னேஸ்வரன் ஆகியோரிடம் கிளிநொச்சி மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சிக் கிளை வேண்டுகோள் விடுத்துள்ளது.

வட மாகாண சபைத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலான தமது முன்மொழிவுகளை தமிழரசுக்கட்சி கிளிநொச்சி கிளை வலியுறுத்தியுள்ளது. அவையாவன,

இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் தொடர்பான முழுமையான சர்வதேச விசாரணையைத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றனர். வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுகின்றமைக்கும் சர்வதேச விசாரணையை நோக்கிய நகர்விற்கும் எந்த விதத்திலும் தொடர்பில்லை என்பது தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடு.

பிரிக்கப்பட முடியாத வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகமே எமது தேவை. பிரிந்த வடக்கு மாகாணத்தில் போட்டியிடுவதன் மூலம் பிரிந்த வடக்குக் கிழக்கைத் தமிழர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் எனப் பொருள் கொள்ளலாகாது.

தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் தீர்வைத் தமிழர்கள் வலியுறுத்துகின்றனர். இவற்றை அங்கீகரித்து வரும் தீர்வே (அது சமஷ்டித் தீர்வாக இருந்தால் கூட) நிலையான தீர்வாக இருக்கும்.

13ஆவது திருத்தம் அரசியல் தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியல்ல. வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது 13ஆவது திருத்தத்தைத் தமிழர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் அல்லது தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என அர்த்தப்படுத்தப்படக் கூடாது.

ஆயுதமேந்திய அரசியல் போராட்டம் எமது போராட்ட வரலாற்றின் முக்கியவொரு காலகட்டம். அது எமது போராட்டத்தின் ,யல்பான ,யங்கியல் வள்ர்ச்சியின் முக்கிய கட்டம். அது தொடர்பிலான நினைவுகளைப் பேணுவதற்கு தமிழர்களுக்கு முழுமையான உரிமையுள்ளது.

பொதுவான குறிப்பு: வட மாகாண சபையைக் கைப்பற்றுவதன் மூலம் வடக்கில் புரட்சியை ஏற்படுத்தி விடலாம் என்ற தோரைணயில் தேர்தல் விஞ்ஞாபனம் அமையப் பெறக் கூடாது. மாகாண சபை முறைமையில் உள்ள அடிப்படைப் பலவீனங்கள் மக்கள் பணியாற்ற தடையாகவிருக்கும் என்பதனைத் தெளிவுபடுத்த வேண்டும்.

 

http://www.sankathi24.com/news/31796/64/13/d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.