Jump to content

இளம் விஞ்ஞானிகளை இந்தியா ஊக்குவிப்பதில்லை! - இ-மெயிலைக் கண்டுபிடித்த சிவா அய்யாத்துரை காட்டம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Siva-Iyathurai-28713-150.gif

இந்தியாவில், இளம் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை ஊக்கப்படுத்தவோ, சுதந்திரம் கொடுப்பதோ இல்லை என, இ-மெயிலை கண்டுபிடித்த, விருதுநகர், முகவூரை சேர்ந்த சிவா அய்யாதுரை கூறினார். சிவகாசி பி.எஸ்.ஆர்., இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த விழாவில், அவர் பேசியதாவது: இன்னும் 10 ஆண்டுகளில், உலக அளவில் 1.8 பில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்தியாவில் உள்ள தற்போதைய பாடத்திட்டம், மாணவர்களை வேலை தேடுபவர்களாக உருவாக்குமே தவிர, வேலை கொடுப்பவர்களாக உருவாக்காது. அமெரிக்க மாணவர்கள், பெரிய கண்டுபிடிப்பாளர்களையும், விஞ்ஞானிகளையும், தங்களது முன்மாதிரியாக வைத்துள்ளனர். ஆனால் இந்திய மாணவர்கள், சினிமா நடிகர்களைத்தான், தங்களுடைய முன்மாதிரியாக வைத்துள்ளனர்.

  

அமெரிக்காவில் நான், 1978ல், இ-மெயிலை கண்டுபிடித்து போது, எனக்கு வயது 14. அப்போது எனது ஆசிரியர்களும், விஞ்ஞானிகளும் எனது வயதை பார்க்கவில்லை. கண்டுபிடிப்பை பார்த்து ஊக்கப்படுத்தினர். பின், 1981 ல், இ-மெயில் காப்புரிமை (பேடன்ட்) பெற்றேன். டில்லியில் உள்ள மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர்.ல், பல கோடி ரூபாய் புழங்குகிறது. ஆனால், அங்குள்ள தலைமை விஞ்ஞானிகள், இளம் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை ஊக்கப்படுத்தவோ, சுதந்திரம் கொடுப்பதோ இல்லை.

 

ஆங்கிலேயர் ஆட்சியில், இந்தியாவைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகள், நோபல் பரிசு பெற்றனர். சுதந்திரத்திற்கு பின், இந்தியாவில் ஆராய்ச்சி செய்த எந்த விஞ்ஞானியும், நோபல் பரிசு பெறவில்லை. கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள், சித்த மருத்துவம், கட்டுமரம் போன்றவற்றை கண்டுபிடித்தனர். தற்போது, வெளிநாட்டு கண்டுபிடிப்புகளை, உபயோகப்படுத்துபவர்களாக உள்ளனர், என்றார்.

 

கலசலிங்கம் பல்கலையில்,"தொழில் நுட்பத்தில் தேவை புதுமை' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், சிவா அய்யாதுரை பேசியதாவது: நான், எனது குடும்பத்தாருடன், ஏழு வயதில் அமெரிக்கா சென்று, ஏழைகள் வாழும் பகுதியில் தங்கிப் படித்தேன். டெலிகிராம், போன் மட்டுமே இருந்த காலத்தில், இ-மெயிலை கண்டுபிடித்தேன். நான் இந்தியன் என்பதால், அதை அமெரிக்கர்கள் நம்பவில்லை. மேலும், எக்கோ மெயில், ஈ மெடிக்ஸ் போன்றவற்றையும் கண்டுபிடித்துள்ளேன். "இந்தியாவில் ஊழல் பெருத்து விட்டது' போன்ற குறைகளை' கூற வேண்டாம். இந்தியாவில் எல்லா வளமும் உள்ளது. இந்தியாவிலிருந்து, சித்தா, யோகாவை வெளிநாட்டினர் கற்று, பயன்படுத்துகின்றனர், என்றார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=88622&category=IndianNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.